மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஆசிரியை பலியான நிலையில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பசுமலை ஜோன்ஸ்புரம் 4-வது தெருவில் சாமுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லெனிட்டா ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சாமுவேல் தனது மனைவியை டெட் தேர்வு பயிற்சிக்கு கருமாத்தூரில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். […]
