மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மத்திய அரசு 2015-16 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை சார்ந்த அதிகாரிகள் தமிழகம் வந்து இடங்களை ஆய்வு செய்தனர். இறுதியாக மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 1,264 கோடி ரூபாய் செலவில் […]
