வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேல பொன்னகரம் கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் சங்கரபாண்டி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் வெளியூர் சென்று உள்ளார். பின்னர் அவர் நேற்று காலை வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவர் உள்ளே சென்று […]
