செல்போனிற்கு சார்ஜ் ஏற்ற முயன்றபோது மின்சாரம் பாய்ந்து மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் முடுவார்பட்டி கிராமத்தில் கண்ணன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருடைய மகன் கருபண்ண குமார் என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் சம்பவம் நடந்த அன்று இரவு தனது வீட்டில் செல்போனிற்கு சார்ஜ் ஏற்ற முயன்றுள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் […]
