Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சான்றிதழும் அதோட போச்சு…. பற்றி எரிந்த குடிசை வீடு…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

குடிசை வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர். மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பகுதியில் மருதம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மருதனின் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குடிசை வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் அந்த வீட்டில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா….? வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்ட விரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் முன்பாக சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பதும், சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ய முயன்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அருள்தாஸ்புரம் பகுதியில் முத்து பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் ஆதிலட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த ஆதிலட்சுமி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“நான் சும்மா தானே இருந்தேன்” வாலிபர் செய்த செயல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள உலகநேரி பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் வெங்கட்ராமன் தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் என்பவர் மது போதையில் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த வெங்கடேசன் கத்தியை காட்டி வெங்கட்ராமனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து வெங்கட்ராமன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அப்பா என்னை திட்டிட்டாரு” சிறுவன் செய்த செயல்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தந்தை கண்டித்ததால் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டை பகுதியில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஜெயா பிரசாத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெய பிரசாத் ஆன்லைன் வகுப்பில் சரியாக கவனம் செலுத்தாமல் இருந்ததால் ரஞ்சித்குமார் அவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நீயா இப்படி பண்ணுன….? அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. சிசிடிவி கேமராவால் வெளிவந்த உண்மை…!!

கடையில் தங்க நகைகளை திருடிச் சென்ற பெண் ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சிக்கந்தர் சாவடி பகுதியில் ரகு என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு நகை கடையில் மேலாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடையில் இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் காணாமல் போனதாக ரகு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் கடையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்…. தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த விபத்தில் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் கூலி தொழிலாளியான வீரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீரன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து ஆவாரம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக வீரனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விட்டது. இதனால் படுகாயமடைந்த வீரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“இவனை தான் நம்பினோம்” அதிர்ச்சியடைந்த மூதாட்டி…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மூதாட்டி வீட்டில் தங்க நகை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஆரப்பாளையம் பகுதியில் ஸ்டெல்லா என்ற மூதாட்டி வசித்து வருகின்றார். இந்நிலையில் மூதாட்டியின் வீட்டு பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகை திடீரென காணாமல் போனது. இது குறித்து ஸ்டெல்லா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஸ்டெல்லா வெளியூர் செல்லும் சமயத்தில் தனது வீட்டு சாவியை அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீநாத் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற தொழிலாளி…. சட்டென நடந்த விபரீதம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கார் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் கட்டிட தொழிலாளியான சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் சங்கர் தனது தோட்டத்திற்கு நடந்து சென்றுள்ளார். இதனை அடுத்து அவர் நான்கு வழிச் சாலையை கடக்க முயற்சி செய்த போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் சங்கரின் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தட்டி கேட்டது குத்தமா….? உரிமையாளருக்கு நடந்த கொடுமை…. சுற்றி வளைத்த காவல்துறையினர்….!!

வாலிபர்கள் இணைந்து இறைச்சி கடை உரிமையாளரை கடத்தி சென்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பகுதியில் சுந்தரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மது போதையில் தெருவில் நின்று கொண்டு சுந்தரபாண்டி ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வரும் அருள் தவசி என்பவர் சுந்தரபாண்டியை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அருள் தவசியை சுந்தரபாண்டி தனது நண்பர்களான பாண்டி, முருகன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“காசு கொடுத்து வாங்குறோம்” கோபத்தில் கொந்தளித்த பெண்கள்…. காவல்துறையினரின் பேச்சுவார்த்தை…!!

குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள விளாச்சேரி, கலைஞர் நகர், மொட்டமலை போன்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த இரண்டு மாதமாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் காசு கொடுத்து லாரிகளில் விற்கப்படும் தண்ணீரை வாங்குகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடடே செம ஆடி ஆஃபர்…. ஒரு கிலோ இறைச்சி வாங்கினால்…. ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்….!!!!!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது பொதுமக்களை கவலை அடைய செய்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்துள்ளதால் சாமானிய மக்கள் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தான் ஒருகிலோ இறைச்சி வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பை மதுரையைச் சேர்ந்த இறைச்சிக்காரர் ஒருவர் அறிவித்துள்ளார். திருமங்கலத்தில் மகிழ் என்ற பெயரில்  இறைச்சிக் கடையை நடத்திவரும் சந்திரன்,  தனது கடையில் ஒரு கிலோ இறைச்சி வாங்குவோருக்கு ஒரு லிட்டர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மனதை உருக்கும் அதிர்ச்சி சம்பவம்… So Sad…!!!

மதுரை முத்துப்பட்டி பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவரின் மகன் ஜெய்பிரகாஷ். இவருக்கு 10 வயது ஆகிறது. இவர் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காலத்தில் பள்ளிகள் திறந்த நிலையில் ஆன்லைன் மூலமாக படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதற்காக ஜெய்பிரகாஷ்க்கு ஸ்மார்ட்போன் ஒன்றை அவரது தந்தை ரஞ்சித் குமார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த போனில் ஜெய் பிரகாஷ் பாடம் படிக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் அதிகமாக விளையாட்டுகளை விளையாடி வந்துள்ளார். இதனால் அவரது தந்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. மதுரையில் நடந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரரான முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்து தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக சென்ற கார் இவரின் மீது பலமாக வந்து விட்டது. இதனால் படுகாயமடைந்த முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இந்த வயசுலயே குழந்தையா….? சிறுமிக்கு நடந்த கொடுமை…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஆனையூர் கிராமத்தில் பாரதி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு வேலைக்கு சென்ற 17 வயது சிறுமிக்கும், பாரதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கர்ப்பமான அந்த சிறுமியுடன் பாரதிக்கு அவரது உறவினர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் மதுரை மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“விளக்கு போடாம இருந்துருக்காங்க” விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் ராமசாமி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசாமி தனது உறவினரான முனியாண்டி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து கொட்டாம்பட்டி நத்தம் பிரிவு சாலையில் சென்று கொண்டிருக்கும் போது விளக்கு போடாமல் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் இவர்களின் மோட்டார் சைக்கிள் பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராமசாமி சம்பவ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“என்னை அடிச்சிட்டாரு” பெண் அளித்த புகார்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை கணவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கருப்பட்டி கிராமத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபமடைந்த செல்வகுமார் காமாட்சியை சரமாரியாக அடித்துள்ளார். இதனால் காயமடைந்த காமாட்சி காவல் நிலையத்தில் புகார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பணம் வசூலிக்க சென்ற இடத்தில்…. ஊழியருக்கு நடந்த கொடுமை…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பணம் வசூலிக்க சென்ற நிதி நிறுவன ஊழியரை தந்தை, மகன் இருவரும் இணைந்து மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மாணிக்கம்பட்டி கிராமத்தில் சூர்யா என்ற தனியார் நிதி நிறுவன ஊழியர் வசித்து வருகின்றார். இந்நிலையில் பணம் வசூல் செய்வதற்காக சூர்யா புதுப்பட்டி பகுதிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பணம் கேட்டு சென்ற சூர்யாவிடம் ஆலடி என்பவரும், அவரது மகன் மாதவனும் சேர்ந்து தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் சூர்யாவை மரத்தில் கட்டி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்டவர்கள்…. இன்று முதல் முன்பதிவு செய்யலாம்…. மதுரை மாநகராட்சி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்புசி செலுத்திக்கொள்ள http://www.maduraicorporation.co.in/ என்ற இணையதளத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்னால சமாளிக்க முடியல…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கடன் சுமை அதிகமானதால் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் குமார் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குமார் புதிதாக வீடு கட்டுவதற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை அவர் திருப்பி செலுத்த இயலவில்லை.இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“இங்க இருந்த நாயை காணும்” நண்பர் தெரிவித்த தகவல்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

நாயை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேலமடை பகுதியில் சரவண குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் புறா மற்றும் நாய் போன்ற செல்ல பிராணிகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் இவரின் வீட்டிற்கு முன்பு கட்டி வைத்திருந்த நாய் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து சரவணகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் காணாமல் போன […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குழந்தையும் பிறந்திருச்சு…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

17 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் மதுரைவீரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. இது குறித்து அறிந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அவ எனக்கு ஓகே சொல்லல” வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவரின் காதலுக்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோதுற மாதிரி வந்தாங்க…. வாலிபர்கள் செய்த செயல்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் கேமரா போன்றவற்றை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் விஜயபாண்டி என்ற போட்டோகிராஃபர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜயபாண்டி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இரண்டு பேர் அவரின் மீது மற்றொரு மோட்டார் சைக்கிளில் மோதுவது போல் சென்றுள்ளனர். இதனை அடுத்து திடீரென அந்த மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் கத்தியை காட்டி விஜயபாண்டியிடம் இருந்த கேமரா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

5 பைசா பிரியாணி கடைக்கு சீல்…. மதுரை மாநகராட்சி உத்தரவு…!!!

மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு பகுதியில் தெற்குவாசல் சுகன்யா பிரியாணி என்று புதிதாக கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த கடை திறப்பு விழாவிற்கு முன்னதாக கடை சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் பழைய செல்லாத ஐந்து பைசா 5 பைசா கொண்டு வருபவர்களுக்கு வேறு எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக பிரியாணி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் திறப்பு விழாவை முன்னிட்டு நேற்று மக்கள் கடையின் முன்பு 5 பைசாவை வைத்துக் கொண்டு பிரியாணி வாங்குவதற்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் கட்டப்பட்ட கூடு…. குட்டிகளுடன் வசிக்கும் அணில்…. மகிழ்ச்சியடைந்த மருத்துவர்….!!

பயன்படுத்தாத மோட்டார் சைக்கிளில் அணில் தனது குட்டிகளுடன் வசித்து வருகிறது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆனையூர் பகுதியில் கால்நடை மருத்துவரான மெரில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக பயன்படுத்தாத இவரது மோட்டார் சைக்கிளின் பின் பகுதி இருக்கைக்கு அடிக்கடி ஒரு அணில் வந்து சென்றதை மெரில் ராஜ் கவனித்துள்ளார். அதன்பிறகு மெரில் ராஜ் அங்கு சென்று பார்த்த போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் விக்னேஷ் மற்றும் வெள்ளைச்சாமி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் அப் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அப்பாவுடன் சென்ற சிறுவன்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உத்தங்குடி பகுதியில் வழக்கறிஞரான சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதுடைய அனிருத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சிவா தென்னந்தோப்பில் காவலாளியாக வேலை பார்க்கும் தனது தந்தை மலைச்சாமியை பார்ப்பதற்காக அனிருத்தை அழைத்து சென்றுள்ளார். இதனை அடுத்து சிறுவன் அனிருத் அங்கிருந்த மின்மோட்டார் அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின் ஒயரை மிதித்து விட்டான். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

யாரு இப்படி பண்ணிருப்பா….? ஜவுளி கடையில் நடந்த சம்பவம்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

மர்ம நபர்கள் ஜவுளி கடைக்குள் புகுந்து 3 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் கோபிநாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் ஜவுளி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் இரவு நேரத்தில் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் காலை சென்று பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து கோபிநாத் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுனீங்க…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பரபரப்பு…!!

வாலிபர் மதுபோதையில் இன்ஜினியரை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சின்னகட்டளை பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துராஜா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் என்ஜினீயரான முத்துராஜா மும்பையில் இருக்கும் எண்ணெய் ஏற்றுமதி கப்பலில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது விடுமுறை காரணமாக முத்துராஜா தனது ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் முத்துராஜாவிற்கும் அதே பகுதியில் வசிக்கும் ராஜா என்ற வாலிபருக்கும் இடையே மது போதையில் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போயிருக்கலாம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் பகுதியில் பெரிய கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட தொழிலாளியான முனிசாமி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முனிசாமி தனது மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் இரவு நேரத்தில் வீடு திரும்பியுள்ளார். இதனை அடுத்து முனிசாமி கொட்டானிபட்டி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, குறுக்கே நின்ற வைக்கோல் ஏற்றிய வேன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அதை விட அதிகமா கேட்கிறான்” பாதிக்கப்பட்டவரின் புகார்…. கைது செய்த காவல்துறையினர்…!!

அதிக பணம் கேட்டு தொந்தரவு செய்தவர் மீது காவல்துறையினர் கந்துவட்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கணினி வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா பாலமுருகன் என்பவரிடம் இருந்து 80 ஆயிரம் ரூபாயை கடனாக வாங்கி உள்ளார். இந்நிலையில் பாலமுருகன் அதிக வட்டி தொகை கேட்டு ராஜாவை அவதூறாக பேசி மிரட்டியுள்ளார். இதுகுறித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பின்னாடியே போயிருக்காங்க…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மர்ம நபர்கள் பெண்ணிடம் தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வண்டியூர் பகுதியில் அருண் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சினேகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சினேகா அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இதனை அடுத்து சினேகாவை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் அவர் எதிர்பாராத சமயத்தில் திடீரென அவரின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்த நபர்…. அறிக்கையில் வெளிவந்த உண்மை…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் இணைந்து தொழிலாளியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி பகுதியில் ஆண்டிச்சாமி என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆண்டிச்சாமி தனது நண்பர்களான பாண்டீஸ்வரன், பெரியசாமி போன்றோருடன் ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு இடத்தில் அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது நண்பர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன்பிறகு மூன்று பேரும் அவரவர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ஆண்டிச்சாமி மறுநாள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

18 வயதிற்கு மேற்பட்டோர்…. தடுப்பூசி செலுத்திக்கொள்ள…. ஜூலை-23 முதல் முன்பதிவு செய்யலாம்…!!!

தமிழகம் முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்புசி செலுத்திக்கொள்ள http://www.maduraicorporation.co.in/ என்ற இணையதளத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கெட்டுப்போனதை விக்குறாங்களா….? மொத்தம் 200 கிலோ பறிமுதல்…. மதுரையில் பரபரப்பு…!!

விற்பனைக்காக வைக்கப்பட்ட சுமார் 200 கிலோ கெட்டுப்போன மீன் மற்றும் இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் இருக்கும் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் கெட்டுப்போன மீன் மற்றும் பழைய இறைச்சிகளை விற்பனை செய்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் சுமார் 200 கிலோ கெட்டுப்போன இறைச்சி மற்றும் மீன்களை பறிமுதல் செய்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளிய போனது தப்பா…? தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சலுப்பட்டி பகுதியில் முத்து ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் தங்களது வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

யாரு இப்படி பண்ணிருப்பா….? அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!

வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் காமராஜ் தனது குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு காமராஜ் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“நான் தரவே மாட்டேன்” மகனின் கொடூர செயல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மது குடிக்க பணம் தராததால் மகன் தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூமயில் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு செந்தில் என்ற மகன் உள்ளார். இவர் மது குடித்து விட்டு பணம் கேட்டு தனது குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில் தாய்க்கும் மகனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது பூமயில் பணம் கொடுக்க மறுப்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கவனமா இருக்க கூடாதா….? விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் பகுதியில் செல்லதுரை என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்லதுரை வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுதற்காக மின் மோட்டாரை இயக்குவதற்கு சென்றுள்ளார். அப்போது மின்மோட்டார் சுவிட்சை போடும் போது எதிர்பாராதவிதமாக செல்லதுரையின் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த செல்லதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது சடலத்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மலை உச்சியில் மாட்டிகிச்சு…. சிக்கி தவித்த வாயில்லா ஜீவன்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

மலை உச்சியில் சிக்கிய ஆணை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். மதுரை மாவட்டத்திலுள்ள தனக்கன்குளம் பகுதியில் பொன்னுத்தாய் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பொன்னுத்தாய் அப்பகுதியில் இருக்கும் மலையடிவாரத்தில் தனது ஆடுகளை மெய்த்துள்ளார். அப்போது இரையைத் தேடி இவருக்கு சொந்தமான இரண்டு ஆடுகள் மலை உச்சிக்கு சென்றுள்ளது. இதனை அடுத்து பொன்னுத்தாய் மலை உச்சிக்கு சென்ற ஆடுகளை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். அப்போது மலையிலிருந்து கீழே இறங்க முடியாமல் அந்த இரண்டு ஆடுகளும் கத்தியுள்ளது. இதுகுறித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேகமா வந்து இடிச்சிட்டு…. பேருந்து ஓட்டுனர் மீது தாக்குதல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பாலை பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பணியில் இருந்த போது இவர் ஓட்டிச் சென்ற பேருந்தின் மீது அவ்வழியாக வந்த தண்ணீர் லாரி மோதி விட்டது. இதனால் லாரி டிரைவருக்கு, ஜெயகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த லாரி டிரைவர் ஜெயக்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அங்கிருந்த இரும்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளியூருக்கு கூட்டிட்டு போயிருக்கான்…. அதிர்ச்சியடைந்த தாயார்…. கைது செய்த காவல்துறையினர்…!!

17 வயது சிறுமியை எஞ்சினியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் கிருஷ்ணன் என்ற என்ஜினியர் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் கிருஷ்ணன் 17 வயது சிறுமியிடம் பேசி வந்துள்ளார். இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்து சென்று அந்த சிறுமியை கிருஷ்ணன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் தாயார் கிருஷ்ணன் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொஞ்ச நேரத்தில் என்ன ஆகிருக்கும்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

வைக்கோல் படப்பில் பற்றி எரிந்த தீயை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர். மதுரை மாவட்டத்திலுள்ள காமராஜபுரம் கீழ் மதுரை பகுதியில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ரயில் நிலையத்திற்கு அருகே இருந்த வைக்கோல் போர் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வைக்கோல் போரில் பற்றி எரிந்த தீயை அணைத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாகனங்களின் அலட்சியம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள நரசிங்கம்பட்டி பகுதியில் குமார் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குமார் தனது மோட்டார் சைக்கிளில் மேலூர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வேகமாக வந்த கார் இவரின் வாகனத்தின் மீது மோதி விட்டது. இதனால் படுகாயமடைந்த குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே குமார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எப்போதும் சண்டை தான்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் மதன் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு மாலதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மதன் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது மன உளைச்சலில் இருந்த மதன் தனது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காலம் மாறிப்போச்சு…. பெண்களே இப்படி செய்யலாமா…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஜெயா என்பதும், சட்டவிரோதமாக அங்கு கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக ஜெயாவை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இங்க கட்டியிருந்ததை காணும்…. வசமாக சிக்கிய இருவர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

கன்று குட்டிகளை திருடிச் சென்ற இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் பிச்சை என்ற முதியவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிச்சைக்கு சொந்தமான இரண்டு கன்று குட்டிகளை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் ஆட்டோவில் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து பிச்சை வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையின் பின்புறம்…. பெண் செய்த செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியவண்டாரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் ரேஷன் கடையின் பின்புறம் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குமாரி என்பதும், சட்டவிரோதமாக அப்பகுதியில் இந்த பெண் மது பாட்டில்களை விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. மதுரையில் பரபரப்பு….!!

அடையாளம் தெரியாத வாகனம் மினி வேன் மீது மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 8 பேரை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஓன்று மதுரைக்கு புறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மினி வேன் மதுரை மாவட்டத்திலுள்ள சத்தியபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் வேனின் பின்புறம் மோதி விட்டது. இதனால் நிலைதடுமாறிய வேன் சாலையோரம் இருந்த பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த […]

Categories

Tech |