Categories
மதுரை மாவட்ட செய்திகள்

படியில் பயணம் செய்யக்கூடாது… மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்… அமைச்சரின் அதிரடி உத்தரவு…!!

பேருந்து படிகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துதுறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மதுரை  மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சரான ராஜகண்ணப்பன் சென்னை செல்வதற்காக வந்துள்ளார். அப்போது அவர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் பேருந்துகளின் படிகளில் நின்று பயணிக்கும் மாணவர்கள் குறித்து இணையதளங்களில் வீடியோ வருவதாகவும்,  இதனைதடுக்க  காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  அவர்  கூறினார். மேலும் படிக்கட்டில்  பயணம் செய்யும்  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி… ஜல்லிக்கட்டுக்கு புதிகட்டுப்பாடு… அறிக்கை வெளியிட்டு அமைச்சர்…!!

பொங்கலை ஒட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு நாட்டு மாடுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்துள்ளார். அப்போது அவர் நிபுணர்களிடம் பதிவு ஒன்றை அளித்திருந்தார். அதில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆரம்பநிலையில் கல்வி படிக்கக்கூடிய மாணவர்களுக்கு வீடு தேடி கல்வி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திதோடு மட்டுமல்லாமல் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பழமையான கட்டடம் இடிந்து விபத்து…. இறந்த காவலர் குடும்பத்திற்கு 25 லட்சம் நிதியுதவி… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

மதுரையில் கட்டடம் இடிந்ததில் இறந்த காவலர் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மதுரை விளக்குத்தூண் காவல் நிலையதில் காவலராக சரவணன், கண்ணன் ஆகிய இருவரும் பணிபுரிந்து வருகின்றனர்.. இவர்கள் இருவரும் மதுரை கீழவெளியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போது, திடீரென பழைமையான கட்டிடத்தின் முதல் மாடி சுவர் இடிந்து விழுந்ததில் காவலர் சரவணன் உயிரிழந்தார்.. மேலும் படுகாயமடைந்த காவலர் கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா….! வைரம் பதித்த சேவல் கொடி…. 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள காணிக்கை…. சிறப்பு வழிபாடு…!!

70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரம் பதித்த சேவல் கொடி காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர்மலையில் புகழ்பெற்ற 6-வது படைவீடான சோலைமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முருக பக்தரான சுப்பையா செட்டியார்- சரோஜா தம்பதியினர் சென்றுள்ளனர். இவர்கள் 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள புதிய வைர சேவல் கொடியை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளனர். இந்நிலையில் யாக சாலையில் அமைக்கப்பட்ட பூ மேடையில் சேவல் கொடியை வைத்து சிவாச்சாரியார்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வழி தெரியாமல் சென்ற டிரைவர்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் லாரி டிரைவரான ஜம்பு என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு லாரியில் தர்மபுரி நோக்கி சென்றுள்ளார். அப்போது வழிதெரியாமல் ஜம்பு தேனூர் சாலை வழியாக சென்றுள்ளார். இந்நிலையில் 3 மர்ம நபர்கள் லாரியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ஜம்புவிடம் இருந்த 1000 ரூபாயை பறித்தனர். இதனை தடுக்க முயன்ற […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த மூதாட்டி…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. மதுரையில் சோகம்…!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆழ்வார்புரம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகிழம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் மகிழம்மாள் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் சுவர் எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கி மகிழம்மாள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காரை உரசி சென்ற பேருந்து…. துரத்தி சென்ற மருத்துவர்…. நொடியில் நடந்த விபரீதம்…..!!!!

அரசு மருத்துவர் ஒருவர் தன்னுடைய காரில் நெல்லையில் இருந்து மதுரைக்கு வந்துள்ளார். அப்போது கப்பலூர் மதுரை சுற்று சாலையில் பரம்புப்பட்டி அருகே வந்த போது, அரசு பேருந்து ஒன்று மருத்துவரின் காரில் உரசி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர் பேருந்தை துரத்திச் சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்ப்புறம் சென்ற அரசு பேருந்து மீது மோதியது. இதில் பேருந்துக்கு அடியில் கார் சென்ற நிலையில், கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருட்டு வழக்கில் கைதான மகன்…. 5 லட்சம் இழப்பீடு கேட்ட தாய்…. போலீஸ் விசாரணை…!!

தனது மகனை கொன்றதற்காக 5 லட்சம் இழப்பீடு கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள கொச்சடை கிராமத்தில் ஜெயா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயா மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தனது மகன் கார்த்திக்கை பொய்யான திருட்டு வழக்கில் எஸ்.எஸ் காலனி காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு எனது மகனை அடித்து கொடுமைபடுத்தியதால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆஹா…! மதுரையின் அழகை சுற்றி பார்க்க…. ஹெலிகாப்டர் சேவை…. செம சூப்பர்…!!!!

ஹெலிகாப்டர் மூலமாக மதுரையை சுற்றி பார்க்கும் வசதி நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டதையடுத்து மதுரையை சுற்றி பார்ப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வசதியானது டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தொடங்கி வைத்துள்ளார். ஹெலிகாப்டர் மூலமாக மதுரை சுற்றிப் பார்ப்பதற்கு சுமார் 30 நிமிடங்கள் சுற்றிபார்க்க ஒரு நபருக்கு 5,000 ரூபாய் கட்டணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வயலுக்கு சென்ற தம்பதியினர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் விவசாயியான கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அக்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் வயலுக்கு களை எடுப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது தொடர் மழையால் அறுந்து கீழே விழுந்து துருபிடித்த மின்சார வயரை கிருஷ்ணன் எதிர்பாராதவிதமாக மிதித்துவிட்டார். இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி கிருஷ்ணன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற உரிமையாளர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

கடையில் இருந்த 8 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எழுகடல் அக்ரஹாரம் பகுதியில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் பிரவீன் குமாரின் கடைக்குள் நுழைந்துவிட்டனர். இதனையடுத்து மர்மநபர்கள் கடையில் இருந்த 8 லட்ச ரூபாயை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அதன்பின் மறுநாள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பிரசாந்த் மாமா ஐ லவ் யூ” துக்கத்தில் காதல் மனைவி செய்த செயல்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

காதல் கணவர் இறந்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பெருங்குடி பகுதியில் முத்துமாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த பெண் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் என்ற வாலிபரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 5 மாத பெண் குழந்தை இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்ற பிரசாந்த் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய போது தங்கைக்கு திருமணம் செய்வதற்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடப்பாவிங்களா!…. போதை ஏறிட்டா எதுவுமே கண்ணுக்கு தெரியாதா?…. இளைஞர்களின் அட்டூழியத்தால் பரபரப்பு….!!!!

மதுரை மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்த நண்பனின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸின் மீது ஏறி நின்று போதையில் குத்தாட்டம் போட்டுக் கொண்டும், நெடுஞ்சாலையில் நின்ற வாகனங்களை மறித்து பைக்குகளில் வீலிங் செய்தும், இளைஞர்கள் அட்டகாசம் செய்த காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த இளைஞர்கள் இவ்வாறு ஆடிக்கொண்டு செல்லும் ஆம்புலன்சுக்குள் அவர்களது நண்பனின் சடலம் உள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் இவர்கள் குத்தாட்டம் போட்டுள்ளனர். மதுரை மாவட்டம் தனக்கன்குளம் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் அபி கண்ணன். இவர் தனியார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாபஸ் பெற வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு…. ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஜல்லிக்கட்டு போராட்டம் முறியடிப்பு குழுவினர்  மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 2017-ஆம் ஆண்டு அரசு ஜல்லிக்கட்டு நடத்த கூடாது என்று அறிவித்தது. இதனை எதிர்த்து சென்னை, துரை, திருச்சி, மற்றும் கோவை போன்ற மாவட்டங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அரசு தனிச் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நேர்த்திக்கடன் செலுத்த சென்ற பக்தர்…. கோவிலில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பூச்சம்பட்டியில் லிங்கம்மாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ரங்கசாமி என்பவர் பூசாரியாக இருக்கிறார். இந்நிலையில் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சரவணன் என்பவர் சென்றுள்ளார். அப்போது கோவிலின் பூட்டு உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரவணன் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது மர்ம […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. கணவரின் கொடூர செயல்…. மதுரையில் பரபரப்பு…!!

மனைவியின் கழுத்தை நெரித்து கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கீரைத்துறை பகுதியில் ஆட்டோ டிரைவரான மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த மூர்த்தி முனீஸ்வரியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாடையில் குத்திய இரும்பு கம்பி…. வலியில் துடித்த தொழிலாளி…. மதுரையில் சோகம்…!!

இரும்பு கம்பி குத்தியதால் தொழிலாளி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் தென்னை மரம் ஏறும் தொழிலாளியான நாகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வலிப்பு நோய் இருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகேந்திரன் குட்லாடம்பட்டி மந்தையில் இருக்கும் ஜெயம் என்பவரது கறிக்கடைக்கு அருகில் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென வலிப்பு ஏற்பட்டதால் நாகேந்திரன் தனது இருசக்கர வாகனத்தில் இருந்த இரும்பு கம்பியின் ஒரு பகுதியை பிடித்துள்ளார். அப்போது இருசக்கர வாகனம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற எலக்ட்ரீசியன்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர் …!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி கிராமத்தில் நாகூர்அனிபா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகனான ராஜாமுகமது எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் குன்னங்குடிபட்டியில் உள்ள நான்குவழிசாலையில் நடந்து  சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராஜா முகமது மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு ராஜாமுகமது  படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த  கொட்டாம்பட்டி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“என் பணத்தை திரும்ப தா ” பெண்ணிற்கு கொலை மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை …!!

கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண்ணிற்கு  கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள தாசில்தார் நகரில் பாக்கியலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஹரிதாஸ் என்பவருக்கு 60 ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். இந்நிலையில் தான் கொடுத்த பணத்தைதிருப்பிதா என  பாக்கியலட்சுமி ஹரிதாஸ்யிடம் கேட்டுள்ளார். அதற்கு ஹரிதாஸ் பாக்கியலட்சுமியை  தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவருக்கு  கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுக்குறித்து  பாக்கியலட்சுமி அண்ணாநகர் காவல் நிலையத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஓய்வு எடுத்த டிரைவர்…. மர்ம நபர்களின் செயல் … விசாரணையில் வெளிவந்த உண்மை …!!

லாரி டிரைவரிடம் திருட முயன்ற மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான லாரியில் சென்னையிலிருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு பள்ளப்பட்டி நான்குவழிச் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது  சாலையின்  ஓரமாக  லாரியை நிறுத்திவிட்டு முருகன்  ஓய்வு எடுத்துள்ளார். இந்நிலையில் அவ்வழியாக வந்த 3 வாலிபர்கள் முருகனிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்து செல்ல  முயன்றுயுள்ளனர் . இதனால் முருகன்  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு மாரடைப்பு…. உயிர் தப்பிய பயணிகள்…. பெரும் சோகம்….!!!

அரசுப் பேருந்தை ஓட்டி சென்ற டிரைவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு 43 பயணிகளுடன் புறப்பட்ட அரசு பேருந்து காளவாசல் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து  டிரைவர் ஆறுமுகத்திற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஆறுமுகம் பேருந்தை சாமர்த்தியமாக சாலையின் ஓரமாக நிறுத்தினார். இந்நிலையில் ஓட்டுநர் ஆறுமுகம் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“என்னடா நடக்குது”… தாலியுடன் வந்த 9-ம் வகுப்பு மாணவி…. பள்ளியில் பெரும் பரபரப்பு….!!!

தனியார் பள்ளிக்கூடத்துக்கு தாலியுடன் வந்திருந்த மாணவியை சமூக நலத்துறை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர். மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 17 வயதுள்ள மாணவி தாலியுடன் வந்திருப்பதாக சமூக நலத்துறை பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் காவல்துறையினரிடம் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில் மாணவியின் பெற்றோர், அவருக்கு தாலிகட்டிய அருண் பிரகாஷ் மற்றும் அருண் பிரகாஷின் பெற்றோர் ஆகியோர் மீது காவல்துறையினர் குழந்தை திருமண […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எங்களை ஏமாத்திட்டாங்க…. தீக்குளிக்க முயன்ற தம்பதியினர்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

ஆட்சியரின் காரை வழிமறித்து தம்பதியினர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டம் முடிந்த பிறகு மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென ஆட்சியரின் காரை தம்பதி வழிமறித்தனர். அதன் பிறகு அவர்கள் மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்வதை பார்த்து ஆட்சியர் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கி உள்ளார். இதனை அடுத்து பாதுகாப்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திண்ணையில் அமர்ந்திருந்த கணவர்…. திடீரென கேட்ட பயங்கர சத்தம்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

வீடு இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வெங்கடாசலபுரம் பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ராஜாமணி சமையல் வேலை செய்து கொண்டிருந்த போது கருப்பையா வீட்டு திண்ணையில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வீடு இடிந்து விழுந்துவிட்டது. இதனால் சமையல் செய்து கொண்டிருந்த ராஜாமணி கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிவிட்டார். இதனையடுத்து படுகாயமடைந்த ராஜாமணியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கல்வீசி தாக்கிய வாலிபர்…. லாரி ஓட்டுநர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

குப்பை லாரி மீது கற்களை வீசிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள எம்.கே புரம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை மாநகராட்சி குப்பை லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் முத்துப்பட்டி மெயின் ரோட்டில் குப்பை லாரியை ஓட்டி சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற வாலிபர் கற்களை எடுத்து லாரி கண்ணாடி மீது வீசியுள்ளார். இதுகுறித்து சரவணன் சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

19 லட்சம் ரூபாய் மதிப்பு…. மீனாட்சி அம்மன் கோவிலில் வெள்ளி தகடுகள்…. நிறைவடைந்த பணிகள்…!!

படிகளுக்கு மேல் 19 லட்ச ரூபாய் மதிப்பிலான வெள்ளி தகடுகள் பதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் பிரதித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மூலவர் பள்ளியறைக்கு செல்லும் படிகள் மற்றும் கல்பீடங்கள்  உள்ளிட்டவை சேதமடைந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் சேதமடைந்த படிகட்டுகள் மற்றும் கல் பீடங்களை அகற்றி வெள்ளி தகடுகளை பதிப்பதற்கு உபயதாரர் ஒருவர் முன்வந்துள்ளார். அதன்படி சேதமடைந்த கல் பீடங்கள் மற்றும் படிகளை அகற்றிவிட்டு அதில் 29 கிலோ வெள்ளி தகடுகள் பதிக்கும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்…. சப்- இன்ஸ்பெக்டரின் செயல்…. நீதிபதியின் உத்தரவு…!!

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரை தாக்கிய குற்றத்திற்காக சப்- இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் 10,000 ரூபாய்  அபராதம் விதித்து உத்தரவிட்டது.  மதுரை மாவட்டத்தில் உள்ள கூடல்நகர் பகுதியில்  ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர்  மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சப்- இன்ஸ்பெக்டர் சகிலாவின் மீது மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கடந்த 2007-ஆம் ஆண்டு நாராயணசாமி தனது வீட்டு வாசலில் நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா நாராயணசாமியின் வீட்டிற்கு முன்பு […]

Categories
தூத்துக்குடி நாமக்கல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

சற்றுமுன்…. தூத்துக்குடி உட்பட 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விருதுநகர், மதுரை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (4ஆம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டது.. அதேபோல நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.. இந்த நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்..

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போடாதவர்கள்….. பொது இடங்களுக்கு செல்ல தடை…. ஆட்சியர் அதிரடி.!!

மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தடை விதித்துள்ளார். கொரோனாவை கட்டுபடுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியை அரசு செயல்படுத்தி வருகிறது.. ஆனால் சில மாவட்டங்களில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.. அதில் குறிப்பாக மதுரை மிகவும் மோசமாக உள்ளது.. அதாவது, மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி முதல் டோஸ் 71% பேரும் இரண்டாம் டோஸ்  32% பேரும் செலுத்தி கொண்டுள்ளனர்.. மருத்துவ துறை அமைச்சர் சுப்பிரமணியன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம்…. 30 ஆண்டுகளாக ஆக்கிரமித்த நபர்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

10 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் பொன்மேனி காளிமுத்து நகர் பகுதியில் உள்ளது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவுடைய கோவில் நிலத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் ஆக்கிரமித்துள்ளனர். இதன் மதிப்பு 10 கோடி ரூபாய் ஆகும். இதுதொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளது.  இந்நிலையில் கோவில் இணை கமிஷனர் செல்லதுரையின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முழுவதும் நிரம்பாத கண்மாய்….. விவசாயிகளின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

ஏர் கலப்பையுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனில் நிலையூர் கண்மாய் அமைந்துள்ளது. வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் சமயத்தில் இந்த கால்வாய் வழியாக ஆலங்குளம், கருவேலம்பட்டி, சூரக்குளம் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறும். தற்போது கனமழை பெய்தும் இந்த கண்மாயில் 60 சதவீதம் மட்டுமே தண்ணீர் இருக்கிறது. இதனால் வைகை அணையிலிருந்து தண்ணீரை திறக்க வேண்டும் மற்றும் நீர்ப்பிடிப்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சடலத்தை வீசி சென்ற மர்ம நபர்கள்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கார் ஓட்டுனரை கொலை செய்து சடலத்தை மர்மநபர்கள் வயலில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மெய்யப்பன்பட்டி- கோட்டைமேடு சாலையோரம் இருக்கும் வயலில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் இல்லை…. அதிரடி அறிவிப்பு!!

கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் இல்லை என மின்வாரிய ஊழியர்களுக்கு மதுரை மண்டல பொறியாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட மின்பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் ஊழியர்கள் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.. டிசம்பர் 7க்குள் கொரோனா முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தாத அலுவலர், பணியாளரின் டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார். மதுரை மண்டலத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.. […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இளம்பெண் பாலியல் வன்கொடுமை… காவலர் முருகன் சஸ்பெண்ட்!!

மதுரையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதல் நிலை காவலர் முருகன்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மதுரையில் சினிமாவுக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பி கொண்டிருந்த இளம் பெண்ணை மிரட்டி முதல் நிலை காவலர் முருகன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது.. இவ்வழக்கில் முதல் நிலை காவலர் முருகன் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், மதுரை திலகர்திடல் காவல்நிலைய குற்ற பிரிவு முதல் நிலை காவலர் முருகனை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வாலிபர்… இரவில் நடந்த சம்பவம் … அதிர்ச்சியில் குடும்பத்தினர் …!!

பாதாள சாக்கடையில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள நேரு நகரில் ரெங்கசாமி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு ஜெகநாதபாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெகநாதபாண்டி இரவு நேரத்தில் பாதாள சாக்கடையில் தவறி விழுந்து இறந்துவிட்டார். இதனை அடுத்து மறுநாள் காலை ஜெகநாதபாண்டி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன் இன்னும் வரவில்லை….? மாணவனை தேடிய உறவினர்கள்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மின்வேலியில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சாத்தங்குடி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பசாமி தனது வீட்டில் வளர்க்கும் மாடுகளுக்கு தீவனம் பறிப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது மக்காச்சோளத்தை காட்டு பன்றிகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக விவசாயி ஒருவர் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி கருப்பசாமி மயங்கி கீழே விழுந்து விட்டார். இதனை அடுத்து நீண்ட நேரமாகியும் கருப்பசாமி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

யார் முதலில் முடிப்பது….? விவசாயிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வயலூர் பகுதியில் விவசாயியான மருதுபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவர் அங்கு சென்றுள்ளார். இந்நிலையில்  வயலுக்கு முதலில் யார் தண்ணீர் பாய்ச்சுவது என்பது தொடர்பாக சுரேசுக்கும் மருதுபாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சுரேஷ் அங்கிருந்த மரக்கட்டையால் மருதுபாண்டியை சரமாரியாக தாக்கியுள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தகராறு செய்த கணவன்…. அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி…. மதுரையில் பரபரப்பு…!!

மது குடித்துவிட்டு தகராறு செய்ததால் கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஷீலா என்ற மனைவி உள்ளார்.இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டன் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். வழக்கம்போல மணிகண்டன் மது குடித்துவிட்டு தகராறு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு உட்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததால் சதீஷ்குமாரின் பெற்றோர் கதவை தட்டி உள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் சதீஷ்குமார் கதவை திறக்கவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள புதுவிளாங்குடி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூரில் இருக்கும் உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார். அதன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“இன்சூரன்ஸ் நிறுவனம் தான் காரணம்” புதுமாப்பிள்ளையின் விபரீத முடிவு…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

விபத்தில் சேதமடைந்த காருக்கு இன்சூரன்ஸ் தொகையை தர மறுத்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அம்பட்டையன்பட்டி கிராமத்தில் தங்கராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கராமனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் தனது உறவினர்களுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரில் வெளியே சென்றுள்ளார். அப்போது கார் விபத்தில் சிக்கியதால் தங்கராமனும், அவரது உறவினர்களும் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தள்ளுவண்டியில் பாஸ்ட்புட் கடை…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ராமநாயக்கன்பட்டி பகுதியில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் மாதா கோவில் அருகில் தள்ளுவண்டியில் பாஸ்ட்புட் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வியாபாரம் முடிந்த பிறகு ரஞ்சித்குமார் கடையில் உள்ள பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பேட்டரியில் இருந்த மின்சார வயரில் ரஞ்சித்குமாரின் கை உரசியது. இதனால் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்த ரஞ்சித்குமாரை அருகில் உள்ளவர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு கொரோனா…. 1 வாரம் விடுமுறை அறிவிப்பு….!!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வேதியியல் துறையில் பயிலும் மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டதால், இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இரு மாணவர்களுக்கும் தொற்று பாதிப்பு உறுதியானது. இதையடுத்து 7 நாட்கள் பல்கலைக்கழக விடுதிக்கு விடுமுறை அளித்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இரு மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்கள் இருவரும் விடுதியில் தங்கிப் பயின்று வரும் நிலையில், அங்குள்ள இதர 247 […]

Categories
சற்றுமுன் மதுரை மாவட்ட செய்திகள்

நாளை இந்த மாவட்டத்தில்…. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு…!!!!

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை குறிப்பாக திருநெல்வேலி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விழுப்புரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பேருந்தை முந்தி செல்வதில் தகராறு…. கார் ஓட்டுனரின் மூர்க்கத்தனமாக செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஓட்டுநரை தாக்கியதோடு, அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று திருப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முத்து கிருஷ்ணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்து காளவாசல் வழியாக திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் பேருந்தை முந்தி செல்ல முயன்றுள்ளது. ஆனால் சாலை குறுகியதாக இருந்ததால் பேருந்து ஓட்டுனரால் காருக்கு வழிவிட முடியவில்லை. இதனால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையில் கொட்டிய அரிசி…. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

தரமற்ற ரேஷன் அரிசி வழங்கப்படுவதை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் 170-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் அமைந்துள்ளது. இந்த ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கும் அரிசி துர்நாற்றம் வீசுவதோடு, தரமற்றதாக இருக்கிறது. இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும், தொடர்ந்து தரமற்ற அரிசியே பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் மேலூர்-அழகர்கோவில் சாலையில் இருக்கும் கிடாரிபட்டி ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கியதை கண்டித்து பெண்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காவலாளி போல் உடையணிந்த நபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

காவலாளி போல் உடையணிந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் படி காவல்துறையினர் குற்றவாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவலாளி உடையுடன் இரவு நேரத்தில் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த ஒரு நபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையில் சுற்றித்திரிந்த 85 மாடுகள்…. ரூ.1 லட்சம் அபராதம்…. மாநகராட்சி அதிரடி நடவடிக்கை….!!!!

மதுரையில் சாலையில் சுற்றித்திரிந்த 85 மாடுகளை பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. நகரப்பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. அதனால் சாலையில் மாடுகள் சுற்றி திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று அவற்றின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பதற்காக தனி குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களில் மட்டும் சாலையில் சுற்றித்திரிந்த 85 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வழிவிடாத அரசுப்பேருந்து ஓட்டுநர்…. கையை வெட்டிய கார் உரிமையாளர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மதுரையில் இருந்து திருப்பூர் நோக்கி திங்கட்கிழமை மாலை ஒரு அரசுப் பேருந்து சென்று கொண்டிந்தது. மதுரை காளவாசல் கோச்சடை வழியாக திருப்பூர் செல்வதற்காக காளவாசலை அடுத்த பாண்டியன் பல்பொருள் கூட்டுறவு அங்காடி முன்பு பேருந்து சென்றுகொண்டிருந்த போது, பின்னால் வந்த சொகுசு காரை ஓட்டி வந்தவர் விரைவாக செல்வதற்காக பலமுறை ஒலி எழுப்பியுள்ளார் ஆனால், சாலை குறுகலாகவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவும் இருந்ததால் பேருந்து மெதுவாக சென்றதால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் சிறிது துாரத்தில், பேருந்தை முந்திச் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

JUST IN: டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 7 வயது சிறுமி பலி…. பெரும் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் சுகாதார சீர்கேடு காரணமாக டெங்கு காய்ச்சல் தற்போது அதிக அளவு பரவ தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் தங்கள் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. […]

Categories

Tech |