Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அண்ணா நகரில் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் குமார் மற்றும் அருண் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடப்பாவி…. நல்லா இருக்குடா உங்க ஆன்லைன் டீலிங்…. நா என்ன கேட்டா நீ என்ன கொண்டு வந்துருக்க?….!!!!

மதுரையில் சர்க்கரை அளவை பரிசோதனை செய்யும் கருவியை அமேசானில் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு சாக்லேட் டெலிவரி ஆன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பசுமலை பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெய்சிங் ராசையா வசித்து வருகிறார். இவருடைய மகன் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது தந்தைக்காக வீட்டிலிருந்தபடியே ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை பரிசோதிக்கும் கருவியை அமேசான் ஆன்லைன் விற்பனை தளத்தில் 930 ரூபாய்க்கு ஆர்டர் செய்துள்ளார். இந்த ஆர்டர் நேற்று முந்தைய தினம் டெலிவரி […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தலைநகர் டெல்லிக்கு செல்ல முடியாது ? விமான போக்குவரத்து நிறுத்தம் …!!

கொரோனா பரவலின் காரணமாக டெல்லிக்கும், மதுரைக்கும் இடையேயான விமான போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து டெல்லிக்கு செல்லும் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் விமான போக்குவரத்து சேவை  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிற்பகல்,மாலை என இரண்டு நேரங்களிலும் மதுரையில் டெல்லிக்கு செல்லும் விமான போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டத்தைப் போல  பெங்களூரு, ஹைதராபாத்திற்கு காலை மற்றும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தந்தையுடன் ஏற்பட்ட தகராறு…. 17 வயது சிறுவனின் வெறிச்செயல்…. மதுரையில் பரபரப்பு…!!

மகன் தந்தையை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கச்சைகட்டி பகுதியில் 43 வயதுடைய விவசாயி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 21 மற்றும் 17 வயதுடைய இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயியின் மனைவி தனது 2 மகன்களுடன் திருப்பூரில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தாய் மற்றும் மகன்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 5 பேர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அண்ணா நகரில் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த 5 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ராம்குமார், மாரிமுத்து, முருகன், பிரதாப் மற்றும் அருண் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வயரிங் வேலை நடந்த போது…. போலீஸ்காரருக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் செல்ல மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேந்திரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கு திவ்யா என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மகேந்திரனின் வீட்டில் வயரிங் வேலை நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்துவிட்டது. இதனால் படுகாயமடைந்த மகேந்திரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
அரசியல் மதுரை

திருமலை நாயக்கரா? திருவள்ளுவரா?…. “பாவம் அவரே கன்ஃபியூஸன் ஆயிட்டாரு!”…. பிரஸ் மீட்டில் கலகல….!!!!

மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் பல கட்சியினரும் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு திருமலை நாயக்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு “உலக தமிழ் மாநாடு மதுரையில் நடத்தப்பட்ட வேளையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் இந்த மஹாலை பார்வையிட்டார். அப்போது இவ்ளோ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீரைத்துறை புது மாகாளிப்பட்டி பகுதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சாந்தி அப்பகுதியில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் சாந்தியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“நிச்சயித்த தேதியில் நடக்கவில்லை” இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அர்ச்சனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நிச்சயிக்கப்பட்ட தேதியில் அர்ச்சனாவின் திருமணம் நடைபெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அர்ச்சனா மணிகண்டனின் வீட்டிற்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக அர்ச்சனாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. மதுரையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரை-விருதுநகர் நான்கு வழி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து சாலையை கடக்க முயன்ற போது காளிமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த காளிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மார்க்கெட் பகுதியில் கிடந்த சடலம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் பகுதியில் தொழிலாளியான கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் காய்கறி மார்க்கெட் வளாகத்தில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணனின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. மதுரையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் பிரபாகரன் சசிகலா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு பிரபா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் பிரபாகரன் தனது மனைவி மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் மதுரை மாவட்டத்தில் வசிக்கும் உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இவர்கள் கிளாங்குளம் விலக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது பிரபாகரனின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த அரசு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட தொழிலாளி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூரில் தொழிலாளியான ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விஷம் அருந்திவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் கிராம நிர்வாக அலுவலர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராதாகிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற நபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலையை கடக்க முயன்ற நபர் மீது கார் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் சந்தைப்பேட்டையில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரை-விருதுநகர் நான்கு வழி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது மதுரையிலிருந்து விருதுநகர் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது பலமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த காளிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற தம்பதியினர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

உறவினர் வீட்டிற்கு செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள காமராஜர் நகரில் நிக்சன் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜாக்குலின் பிரபா என்றார் மகள் இருக்கிறாள். இந்நிலையில் அவர்கள் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் மதுரை மாவட்டம் பேரையூரிலுள்ள உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அவர்கள் கிளாங்குளம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அரசு பேருந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற மாணவன்… திடீரென நடந்த சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

10-ஆம்  வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மேல அனுப்பானடி பகுதியில் சரவண பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார்.  இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு ஆசிரியர் சந்தோஷை   சக மாணவர்களுடன் சேர்ந்து மேஜையை  தூக்க சொல்லியுள்ளார். அப்போது சந்தோஷ் திடீரென மயங்கி விழுந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அண்ணன் வீட்டிற்கு சென்ற சகோதரி…. மீன் வியாபாரிக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

மீன் வியாபாரியை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள தும்மக்குண்டு கிராமத்தில் மீன் வியாபாரியான வைரவன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய சகோதரியான இந்திராவை அதே பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவர் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதால் கோபத்தில் இந்திரா தனது அண்ணனான வைரவன் வீட்டிற்கு வந்துவிட்டார். இதனால் வைரவனுக்கும், ரமேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ரமேஷ் வைரவனை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சக்கரத்தில் சிக்கிய சேலை…. கணவன் கண்முன்னே நடந்த விபரீதம்…. மதுரையில் சோகம்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சித்தாலை கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வீரலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இதனை அடுத்து சிவரக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வீரலட்சுமியின் சேலை மோட்டார் சைக்கிளின் பின் சக்கரத்தில் சிக்கிவிட்டது. இதனால் வீரலட்சுமி நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த துக்கம்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மோகன் இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
மதுரை மாநில செய்திகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. முதல் 3 பரிசை தட்டி தூக்கிய காளையர்கள்….!!!!

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று அவனியாபுரத்தில் காலை 8 மணி அளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும் , 300 மாடுபிடி வீரர்களும் களமிறங்கினர். அந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்ற மாடுபிடி வீரர் 23 காளைகளை பிடித்து முதல் பரிசான காரை தட்டிச் சென்றார். அதேபோல் வலையங்குளத்தை சேர்ந்த முருகன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி…. மளிகை கடைக்குள் புகுந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி மளிகை கடைக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள முடுவார்பட்டி சாலையில் மணல் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. இதனை அடுத்து சாலையோரம் இருந்த மளிகை கடைக்குள் லாரி புகுந்துவிட்டது. இந்த விபத்து நடந்த நேரம் பொதுமக்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

புதரிலிருந்து வந்த சத்தம்…. உயிருக்கு போராடிய குதிரை…. மருத்துவ குழுவினரின் சிகிச்சை….!!

உயிருக்கு போராடி கொண்டிருந்த குதிரையை கால்நடை மருத்துவ குழுவினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள அரசடி சாலையில் சுற்றித்திரிந்த குதிரை மீது வாகனம் மோதியதால் அதன் பின்னங்கால்கள் உடைந்துவிட்டது. இது குறித்து தகவலறிந்த கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குதிரைக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அந்த குதிரையின் உரிமையாளர் முத்துவேல் என்பவர் தனது சொந்த பொறுப்பில் குதிரைக்கு சிகிச்சை அளித்து பராமரித்து கொள்வதாக கூறி அதனை வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நாயை விழுங்கிய 10 அடி நீள மலைப்பாம்பு… அதிர்ச்சியடைந்த வாலிபர்… தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

நாயை விழுங்கிய  10 அடி நீளமுடைய  மலைப்பாம்பை  தீயணைப்பு வீரர்கள் பிடித்துவிட்டனர்.` மதுரை மாவட்டத்தில் உள்ள தேனடிக்குடிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு  ஒன்று நாயை  விழுங்கி கொண்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த   ஆடு மேய்த்த வாலிபர்   தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த மலைப்பாம்பு நாயை வெளியே கக்கியுள்ளது. […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1,999 மாடுபிடி வீரர்கள் விண்ணப்பம் : மதுரை மாவட்ட நிர்வாகம்..!!

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1,999 மாடுபிடி வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ஜல்லிக்கட்டில் 4,534 காளைகள் பங்கேற்க அவற்றின் உரிமையாளர்கள் விண்ணப்பித்துள்ளதாக அறிவித்துள்ள நிர்வாகம், தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் மற்றும் காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் தலா 700 காளைகள், 300 வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி என்ற நிலையில் ஏராளமானோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.. மதுரையில் வரும் 17ஆம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை… கணவன் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்வாரிய ஊழியர் விஷம் குடித்து   தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பூசலப்புரம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சின்ன கட்டளை கிராமத்தில் அமைந்துள்ள மின்வாரியத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.  இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார்.இந்நிலையில் கணவன்   மனைவிக்கு இடையே  குடும்ப பிரச்சனை காரணமாக  தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரமேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து  மயங்கிய நிலையில் கிடந்த ரமேஷை  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பொங்கலை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு… கட்டுப்பாடுகளை வெளியிட்ட அமைச்சர்…!!

பொங்கள் பண்டிகையை  முன்னிட்டு நடத்தபட இருக்கும்    ஜல்லிக்கட்டுக்கான புதிய விதிமுறைகளை அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அணிஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், தென் மண்டல ஐ.ஜி அன்பு, போலீஸ் சூப்பிரண்ட் பாஸ்கரன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். இதனையடுத்து அமைச்சர் மூர்த்தி நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவனியாபுரம், பாலமேடு […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… “ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும்”… ஆட்சியர் அறிவிப்பு!!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்காக (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. மேலும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.. இதற்கிடையே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்துவதற்கு அரசு அனுமதி கொடுத்தது. இந்நிலையில் அலங்காநல்லூர் விழா குழுவினருடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆலோசனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூச விழா… பக்தர்கள் செல்வதற்கு தடை…சிறப்பாக நடைபெற்ற பூஜைகள் …!!

தைப்பூசத்தை முன்னிட்டு மலை உச்சியில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அழகர்மலை உச்சியில் பிரசித்தி பெற்ற ஆறுபடை வீடுகளில் ஒன்றான முருகப்பெருமான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி  நேற்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியுள்ளது. இதில் மூலவருக்கு  சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை  நடைபெற்றது. அதன்பின் வள்ளி- தெய்வானை சமேதரராக வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. இதில் அரசின் வழிகாட்டுதலின்படி பக்கதர்களுக்கு அனுமதி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையோரம் நடந்து சென்ற சிறுவன்…. வழியில் நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

வேன் மோதியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பாரைப்பட்டி பகுதியில் ராஜாங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதுடையை நேயன் மாறன் என்ற மகன் இருந்துள்ளான். இவன் வீட்டிலிருந்து வெளியே வந்து சாலையின் ஓரமாக நடந்து சென்றுள்ளான். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்று சிறுவன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நேயன்மாறனை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு…. திடீரென நடந்த விபரீதம்…. தீயணைப்பு துறையினரின் முயற்சி….!!

கிணற்றில் விழுந்த பசுமாட்டை தீயணைப்புத்துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு பத்திரமாக மீட்டனர். மதுரை மாவட்டத்திலுள்ள குட்லாடம்பட்டி பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோசலை என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டில் சொந்தமாக பசுமாடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் பசுமாடு அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது பசுமாடு தடுப்புச்சுவர் இல்லாத 50 அடி ஆழ கிணற்றில் எதிர்பாராதவிதமாக விழுந்தது. இதனைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா அச்சம்….. குடும்பமே தற்கொலை முயற்சி…. 2 பேர் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் கல்மேடு அருகே கொரோனா உறுதியானதால் அச்சத்தில் சானி பவுடரை கரைத்து குடித்து குடும்பத்தினர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 வயது குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெண் குறித்து அவதூறு பேச்சு…. ரவுடி பேபி சூர்யா கைது…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பெண் குறித்து அவதூறாக பேசிய ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் வசிக்கும் ரவுடி பேபி சூர்யா என்பவர் டிக் டாக் செய்து பிரபலமானவர் ஆவார். இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அவரது சேனலில் வரும் நிகழ்ச்சி தொடர்பாக சூர்யா தகாத முறையில் ஆபாசமாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணை சூர்யாவும், அவரது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற சம்பவம்…. வசமாக சிக்கிய இருவர்…. தனிப்படை போலீசின் அதிரடி நடவடிக்கை….!!

தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் இருக்கும் வீடு, மற்றும் கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்குமாறு போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனால் தனிப்படை காவல்துறையினர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் காளையார் கோவிலை சேர்ந்த காளிராஜன் மற்றும் கார்த்திக் குமார் ஆகிய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் சுற்றி வளைத்த கும்பல்…. காவலாளிக்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பரபரப்பு…!!

மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் காவலாளியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சக்கிமங்கலம் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஏ.கே நகர் ரியல் எஸ்டேட் இடத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த கண்ணனை மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணனின் சடலத்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம் மையத்தில் திருட்டு முயற்சி…. தலைமை அலுவலகத்தில் எச்சரிக்கை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ஏ.டி.எம் மையத்தில் திருட முயன்ற வாலிபரை உடனடியாக கைது செய்த தனிபடையினரை மாநகர கமிஷனர் பாராட்டியுள்ளார். மதுரை மாவட்டம் கீழச்சந்தைப்பேட்டையில் ஸ்டேட் வங்கியின் கிளை மற்றும் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் நள்ளிரவு சமயத்தில் ஏ.டி.எம் மையத்தில் மர்மநபர் ஒருவர் புகுந்து இயந்திரத்தை உடைத்து திருட முயன்று உள்ளார். இதனால் ஏ.டி.எம் மையத்தில் அபாய ஒலி அளித்ததால் அந்த நபர் அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடியுள்ளார். இந்த அபாய எச்சரிக்கை மும்பையில் உள்ள ஸ்டேட் வங்கியின் தலைமை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வழிப்பறிக் கொள்ளை…. பெண்ணிற்கு நடந்த கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கியதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள தடாக பகுதியில் ஜான்சிராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருமங்கலம் பகுதியை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது அதே வழியில் வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் இருந்த 2 மர்ம நபர்கள் ஜான்சிராணி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது நிலை தடுமாறி ஜான்சிராணி வாகனத்தை ஓட்டியபடி சென்றுள்ளார். இதனை அடுத்து அந்த 2 மர்ம நபர்கள் ஜான்சிராணியை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடை உடைப்பு…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

பூட்டி இருந்த டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்களை மர்ம நபர் திருடி சென்றுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சத்திரப்பட்டி பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை ஊழியர்கள் பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன்பின் கடையை ஊழியர்கள் திறக்க வந்த போது கடையின் பூட்டு மற்றும் கண்காணிப்பு கேமரா ஆகியவை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் உள்ளே சென்று பார்த்ததில் கடையில் வைக்கப்பட்டிருந்த 110 மதுபாட்டில்கள் திருடு போனது தெரியவந்துள்ளது. இதுபற்றி கடை சூப்பர்வைசர் நீதிமாறன் காவல்நிலையத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

3-வதாக பிறந்த பெண் குழந்தையை…. துடிக்க துடிக்க கொன்ற பெற்றோர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தம்பதியினர் 3-வதாக பெண் குழந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியகட்டளை கிராமத்தில் முத்துப்பாண்டி-கௌசல்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கௌசல்யாவுக்கு கடந்த 21-ஆம் தேதி 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. ஆனால் சில நாட்களிலேயே அந்த குழந்தை இறந்து விட்டதால் யாருக்கும் தெரியாமல் குழந்தையை முத்துப்பாண்டியும் கௌசல்யாவும் இணைந்து வீட்டிற்கு பின்புறம் புதைத்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் கல்லூரி மாணவரான சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான விக்னேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நாராயணபுரத்துக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த லாரி சேகரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனையடுத்து படுகாயமடைந்த விக்னேஷை அருகில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நண்பருடன் சென்ற மாணவர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பாலகிரிஷ்ணாபுரம் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பால கார்த்திகேயன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பால கார்த்திகேயன் தனது நண்பரான விக்னேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நாராயணபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி பால கார்த்திகேயனின் மோட்டார் சைக்கிள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“தனிக்குடித்தனம் செல்ல வேண்டும்” புதுப்பெண்ணை கொன்ற கணவர்…. மதுரையில் பரபரப்பு…!!

புதுப்பெண்ணின் கழுத்தை நெரித்து கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அய்யங்கோட்டை கிராமத்தில் சுதா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுதாவுக்கு பெயிண்டரான நாகவேல் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென சுதா தனது கணவரிடம் கூறியதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேலை முடிந்து நாகவேல் வீட்டிற்கு வந்த பிறகு தனிக்குடித்தனம் செல்வது குறித்து தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கீழே விழுந்த தொழிலாளி… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… மதுரையில் சோகம் …!!

சென்ட்ரிங் பலகையில் இருந்து விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பெருமாள்பட்டி கிராமத்தில் கூலி தொழிலாளியான ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  கட்டிட பணிக்காக மேலூருக்கு  சென்றுள்ளார். இந்நிலையில்  சென்ட்ரிங்  பலகை அமைக்கும் பணியில்  ஈடுபட்டுக்கொண்டிருந்த ராதாகிருஷ்ணன் எதிர்பாராதவிதமாக   நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதனையடுத்து  படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணனை  அருகில் உள்ளவர்கள்  மீட்டு   அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும்  வழியிலேயே ராதாகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பிளேடால் கிழித்துக்கொண்டு கைதிகள்…. மத்திய சிறைச்சாலையில் பெரும் பரபரப்பு….!!!!

மதுரை அரசரடி அருகே புது ஜெயில் ரோடு பகுதியில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 1,300க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் சிறை என 2 வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறையில் முதல் தளத்தில் இருந்த பழைய சிறைவாசிகளுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிறைக்கு வந்த திருச்சியை சேர்ந்த சிறைவாசிகளுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் கைதிகள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பேரிச்சம்பழம் கொடுத்த ஊழியர்…. திடீரென தாக்கிய கோவில் யானை…. மதுரையில் பரபரப்பு…!!

முருகன் கோவிலின் ஊழியரை யானை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 22-ஆம் தேதி எண்ணெய்க்காப்பு திருவிழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் தினமும் இரவில் தெய்வானை அம்மாள் திருவாச்சி மண்டபத்தை சுற்றி வலம் வருவது வழக்கம். அதைப்போல் நேற்றும் தெய்வானை அம்மாள்  இரவில் வலம் வந்தபோது அவர் பின்னால் வந்த யானைக்கு கோவில் ஊழியரான புகழேந்தி என்பவர்  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரகளை செய்த கும்பல்…. ரயில்வே ஊழியருக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

சில நாட்களுக்கு முன்பு ரயிலில் ஏறி ரகளை செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் பொள்ளாச்சி, பழனி வழியாக சென்று கொண்டிருந்தது. தத்தனேரி வருகை பாலத்தில்  சென்றுகொண்டிருந்த போது சிக்னல் சரியாக இல்லாததால் பேருந்து  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது சில மர்மநபர்கள்  ரயிலில் ஏறி கத்தி கூச்சலிட்டு உள்ளனர். இதனை தட்டிக்கேட்ட  ரயில்வே ஊழியரையும் அந்த கும்பலை  சேர்ந்தவர்கள் சரமாரியாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அவர்களை கைது பண்ணுங்க…. பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

கால்வாயில் மணலை திருடும் மர்ம நபர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஆத்திபட்டி, குடிசேரி , சலுப்பட்டி, தொட்டனம்பட்டி, வீராளம்பட்டி, மங்கல்ரேவு, பெரியபூலாம்பட்டி, கல்லுப்பட்டி மற்றும் வண்ணிவேலம்பட்டி போன்ற கிராம மக்களுக்காக  ராமசாமிபுரம்  பகுதியில்  பொதுப்பணி துறைக்கு சொந்தமான கால்வாயில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அந்தக் கால்வாயில் சில மர்ம நபர்கள் மண்ணை திருடியதால் பாலம் சேதமடைந்து காணப்படுகிறது . இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் மணல் கடத்தலில்  ஈடுபடுபவர்களை கைது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“உன் பெண்ணை கட்டிக்கொடு” தாய் மாமா வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு…. இன்ஜினீயர் கைது…!!

மாமாவின் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய இன்ஜினியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலக்கால் பகுதியில் தீபன்சக்கரவர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஜினியராக   பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தீபன்சக்கரவர்த்தி  தனது தாய் மாமாவின் மகளை திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார். அதற்காக மாமாவின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் தீபன் சக்கரவர்த்தியின் தாய்மாமா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் பெண் சம்மதம் தெரிவிக்கவில்லை இதனால் கோபமடைந்த தீபன்சக்கரவர்த்தி தாய்மாமாவின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

14 வயதில் இவ்வளவு திறமையா…? ரூ.3 கோடி உதவித்தொகை…. வியக்க வைக்கும் விவசாயி மகள்…!!!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகில் புலவன்காசிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் மகள் ஸ்வேகா சாமிநாதன். இவர் அமெரிக்காவின் டெக்ஸ்டெரிட்டி குளோபல் நிறுவனத்தில், தனது 14 வயது முதல் தலைமைத்துவ மேம்பாடு மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டங்களின்கீழ் பயிற்சி பெற்று வந்துள்ளார். அங்கு வழங்கப்பட்ட பயிற்சியாலும் தனது புத்திக் கூர்மையாலும் அங்கு படிக்கும் வாய்ப்பைத் தற்போது பெற்றுள்ளார். மாணவி ஸ்வேகா சாமிநாதன் பல சர்வதேச அளவிலான போட்டிகளில் வென்றுள்ளார். இவற்றைக் கருத்திற்கொண்டு மாணவிக்கு 3 கோடி ரூபாய் உதவித்தொகை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரயிலில் ஏறி கூச்சலிட்ட மர்ம நபர்கள்…. ஊழியருக்கு நடந்த கொடுமை…. போலீஸ் வலைவீச்சு…!!

ரயிலில் ஏறி கொள்ளையடித்து சென்ற கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள  ரயில்வே நிலையத்தில் இருந்து நேற்று காலை 4 மணி அளவில் பழனி, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு வழியாக செல்லும்  அம்ரிதா எக்ஸ்பிரஸ் புறப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்பிரஸ் தத்தனேரி வைகை பாலத்திற்கு அருகே  சென்று கொண்டிருந்தபோது சிக்னல் சரியாக இல்லாததால்  ரயில்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது  . இந்நிலையில் சில மரமநபர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள் அநாகரிகமாக கத்தி கூச்சலிட்டுள்ளனர். இதனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நான்கு மண்டல அளவிலான போட்டி… வெற்றி பெற்ற காவலர்கள்… பரிசுகளை வழங்கிய ஐ.ஜி…!!!

நான்கு மண்டல அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறையினருக்கும் ஐ.ஜி பரிசுகளை வழங்கி பாராட்டியுள்ளார். மதுரை  மாவட்டத்தில் அமைந்துள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வைத்து கடந்த 20- ஆம் தேதி தமிழ்நாடு காவல்துறையினர் மண்டலங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நான்கு மண்டலங்களில் இருந்து ஆயுதப்படை போலீஸ்,அதிவிரைவு கமாண்டோ படையை சேர்ந்த 120 வீரர்கள்  கலந்து கொண்டனர். இங்கு  ஜீடோ, டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக், கராத்தே மற்றும் வால்சண்டை போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. நேற்று […]

Categories

Tech |