Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இயங்காத மின் மோட்டார்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பீமாண்டப்பள்ளி பகுதியில் விவசாயியான வெங்கடேசப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் தண்ணீர் பிடிப்பதற்காக மோட்டார் சுவிட்சை அழுத்தியுள்ளார். இந்நிலையில் மோட்டார் இயங்காததால் வெங்கடேசப்பா அதனை சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட வெங்கடேசப்பாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி….. பெயிண்டருக்கு நடந்த கொடூரம்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கள்ளக்காதல் விவகாரத்தில் பெயிண்டரை அடித்து கொலை செய்த குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கீழ் பூங்குருவி கிராமத்தில் கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கதிரேசனுக்கும், பாரதி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் பெயிண்டரான ரகுபதி என்பவருக்கும், பாரதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இது குறித்து அறிந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பேரிடர் கால முன்னேற்பாடுகள்…. நடைபெற்ற ஆலோசனை கூட்டம்…. பல்வேறு கட்ட நடவடிக்கைகள்…!!

பேரிடர் கால முன்னேற்பாடுகள்  குறித்துமாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.   கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால்  ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்காக பேரிடர் மேலாண்மை முன்னேற்பாடுகள் குறித்த கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது.  இந்த கூட்டத்தில்  தமிழக அரசின் முதன்மை செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆணையர் பீலா ராஜேஷ் தலைமை தாங்கியுள்ளார். இதற்கு மாவட்ட ஆட்சியர் சந்திரபானு ரெட்டி முன்னிலை வகித்து உள்ளார். இந்த கூட்டத்தைப் பற்றி பீலா ராஜேஷ் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவியின் காதல்…. வாலிபர்கள் செய்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

 2 வாலிபர்களை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாரைபுளியமரம் பகுதியில் கூலி தொழிலாளியான கதிர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கல்லூரி மாணவியை காதலித்துள்ளார். பின்பு இருவரும் பல இடங்களுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த மாணவியை  பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து கதிர்,  தனது நண்பரான பெரியவேடி என்பவரிடம் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து பெரியவேடியும், அந்த மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய மயில்….. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. வனத்துறையினரின் தகவல்…!!

விபத்தினால் காயமடைந்து உயிருக்கு போராடிய மயிலுக்கு தீயணைப்பு படையினர் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டியில் குஜிலியம்பாறையில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மயில் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த மயில் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த குஜிலியம்பாறை தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். இதனையடுத்து அந்த மயிலை தங்களுடன் மீட்டு முதலுதவிக்காக கொண்டு சென்றுள்ளனர். அதன்பின் மயிலுக்கு முதலுதவி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“விவசாயம் செய்ய முடியல”…. தீக்குளிக்க முயன்ற நபர்…. தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு…!!

தாலுகா அலுவலகத்திற்கு முன் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காமாட்சி கொட்டாய் என்னும் கிராமத்தில் விவசாயியான திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். ஊத்தங்கரை தாலுகா அலுவலகத்திற்கு சென்ற திருப்பதி, திடீரென தான் வைத்திருந்த கேனல் உள்ள பெட்ரோலை, தனது உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடோடி வந்து திருப்பதியிடமிருந்து கேனை பிடுங்கி விட்டு, அவர் மீது தண்ணீரை ஊற்றியுள்ளனர். இந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. அதிகாரிக்கு நடந்த விபரீதம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த மின்வாரிய அதிகாரி  மீது கார் ஏறி இறங்கிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை மாவட்டத்தில் உள்ள விஸ்வநாதபுறத்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில்  செயற்பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.  இவருக்கு சுஜாதா என்ற மனைவி உள்ளார்.  இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் முருகன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது நிலைதடுமாறி  இருசக்கர வாகனத்திலிருந்து கீழே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

போதையில் இருந்த நண்பர்கள்…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்….. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

நண்பர்கள் இணைந்து பீர் பாட்டிலால் தொழிலாளியை தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அச்செட்டிபள்ளி பகுதியில் கூலித் தொழிலாளியான பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாபு தனது நண்பர்களான மகேந்திரன் மற்றும் பிரேம்நாத் ஆகியோருடன் இரவு நேரத்தில் கொதாகொண்டபள்ளி பகுதியில் இருக்கும் மதுபான கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மது அருந்திய பிறகு போதையில் நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த பிரேம்நாத் பீர் பாட்டிலால் பாபுவின் தலையில் சரமாரியாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இந்த பகுதியில் தான் இருக்கா….? டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

வனத்துறையினர் டிரோன் கேமரா மூலம் சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கூசும்மலைப்பகுதியில் சிறுத்தை ஒன்று இரண்டு குட்டிகளுடன் உலா வருகிறது. மேலும் இந்த சிறுத்தை அப்பகுதியில் இருக்கும் நாய்கள் மற்றும் மாடுகளை கடித்ததாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டிரோன் கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கடனால் வந்த தகராறு….. மகனை கண்டித்த பெற்றோர்….. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கடன் தொகையை செலுத்துவது தொடர்பான தகராறில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செல்லக்கூடபட்டி பகுதியில் கூலி தொழிலாளியான கவியரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தந்தையிடம் மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். இதனால் சிலரிடமிருந்து கடன் வாங்கி கவியரசின் தந்தை அவருக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் கடந்த நான்கு மாதங்களாக கவியரசு கடன் தொகையை செலுத்தாததால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

லாரியின் மீது மோதிய கார்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் தொழிலாளியான ரத்தீஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரத்தீஷ் தனது நண்பரான சத்தியசீலன் என்பவருடன் காரில் சென்றுள்ளார். இந்த காரை கிருஷ்ணா என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் ஓசூர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் கார் பலமாக மோதி விட்டது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு போக மாட்டீங்களா….? மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் குமாரின் மனைவி அவரை கண்டித்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய புதுமாப்பிள்ளை….. காப்பாற்ற சென்ற மாமியார்…. கிருஷ்ணகிரியில் நடந்த சோகம்…!!

குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி புதுமாப்பிள்ளையும், காப்பாற்ற சென்ற மாமியாரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி பகுதியில் இஸ்மாயில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பஜ்லூன் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு முஷ்கான் என்ற மகள் உள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முஷ்கானுக்கும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஷமீர் என்பவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷமீர் தனது மாமியார் வீட்டிற்கு மனைவியுடன் வந்துள்ளார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்….. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் பெயிண்டரான சதீஷ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சதீஷ்குமாரை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷ்குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“உன்னால் தான் பெண் கிடைக்கல” சுடுகாட்டில் கிடந்த தம்பதியினர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மகனுக்கு பெண் கிடைக்காத விரக்தியில் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கீழ்குப்பம் பகுதியில் விவசாய கூலி தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தாமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ரவீந்திரன், சுரேந்திரன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் திருப்பூரில் இருக்கும் ஒரு தனியார் கம்பெனியில் சுரேந்திரன் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சுரேந்திரன் அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளம்பெண்ணை காதலித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விவசாயி கொலை வழக்கு…. மருமகளின் தம்பி கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சொத்தை அபகரிக்கும் நோக்கத்தில் விவசாயியை உறவினர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிலேப்பள்ளி பகுதியில் விவசாயியான வெங்கடப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வெங்கடப்பன் தனது விவசாய நிலத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது காரில் வந்த மர்ம கும்பலை சேர்ந்த நபர்கள் அவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேட்டையாடப்பட்ட நாய்கள்…. கூண்டு வைத்த வனத்துறையினர்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

சிறுத்தையை படிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சிறுத்தை ஒன்று தனது குட்டியுடன் உலா வந்துள்ளது. மேலும் சிறுத்தை கூசுமலைப்பகுதியில் நாய்கள் மற்றும் ஆடுகளை வேட்டையாடியதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்ததில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காட்டிக்கொடுத்த காவலாளி…. பெரியப்பாவை கொன்ற மகன்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

முதியவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிட்டபாறை பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பல ஆண்டுகளாக செல்வம் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் காவலாளியாக பணிபுரிந்து வருகின்றார். இவரின் தம்பி மகனான அப்பாபுலி என்பவர் அந்த தோட்டத்தில் மாடுகளை மேய்ப்பது வழக்கம். அப்போது அந்த தோட்டத்தில் இருக்கும் கோழிகளை அப்பாபுலி திருடியுள்ளார். இதுகுறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த பெருமாள் தனது தம்பி மகன் குறித்து தோட்டா […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

3 பேரை கொன்ற காட்டு யானை…. விரட்டியடித்த வனத்துறையினர்…. கிராம மக்களின் கோரிக்கை…!!

3 பேரை கொன்ற ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனஹள்ளி பகுதியில் சுற்றித் திரிந்த ஒற்றை காட்டு யானை அடுத்தடுத்து 3 பேரை தாக்கிக் கொன்று விட்டது. இதனால் அந்த காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனத்துறையினர் அந்த காட்டு யானையை ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். அதன் பிறகு கர்நாடக மாநில வனத்துறையினர் அந்த ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சிறப்பு காட்சி பொருள்…. 2500 ஆண்டுகள் பழமையான தாழி…. அதிகாரியின் தகவல்…!!

அரசு அருங்காட்சியகத்தில் முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தாழி பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் அரிய பொருட்கள் இருக்கின்றன. இந்த அருங்காட்சியகத்தில் முதுமக்கள் தாழியை சிறப்பு காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது. இது 2500 ஆண்டுகள் பழமையானதாகும். இதுகுறித்து காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறும் போது, காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சிறிய வகை தாழியாகும். இந்நிலையில் சிவப்பு வண்ண பானை வகையை சேர்ந்த இந்த தாழியின் வெளிப்புறம் அலங்கார வேலைப்பாடுகள் செய்துள்ளனர். அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் மிகவும் உறுதியான […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

போதையில் இருந்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் கூலி தொழிலாளியான துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான துரை போதையில் அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டார். இதனால் துரை தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று துரையின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மது அருந்திய உறவினர்கள்…. வேன் டிரைவரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

கட்டிட தொழிலாளியை வேன் டிரைவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புது வாணியர் பகுதியில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மணிவண்ணன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூருக்கு தனது சுய வேலை காரணமாக சென்றுள்ளார். இதனையடுத்து மணிவண்ணன் தனது உறவினரான பார்த்திபன் என்பவருடன் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருக்கும் போது அதே பகுதியில் வசிக்கும் வேன் டிரைவரான ஸ்ரீகாந்த் என்பவர் அங்கு சென்றுள்ளார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை பகுதியில் ரியாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ரியாஸை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ரியாஸ் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதிகரித்த தொல்லை…. வேன் உரிமையாளரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடன் தொல்லை அதிகரித்ததால் வேன் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சாமல்பட்டி பகுதியில் வேலவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வேன் உரிமையாளரான வேலவன் தொழிலுக்காக பலரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்த இயலாததால் மன உளைச்சலில் இருந்த வேலவன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ள அவர்களை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் நின்ற காட்டு யானை….. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

காட்டு யானை நீண்ட நேரமாக சாலையில் நின்று கொண்டிருந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் சாலையோரம் காட்டு யானை ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. ராணுவ வீரரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கட்டிகணபள்ளி பகுதியில் ராணுவ வீரரான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த மாதம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுமி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விளையாடி கொண்டிருந்த சிறுமி கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவ்யஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி தனது வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்து விட்டார். இதனால் தண்ணீரில் மூழ்கி சிறுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் பிணத்தை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காட்டு யானைகளின் அட்டகாசம்…. சேதமான மின் கம்பங்கள்…. இருளில் மூழ்கிய கிராமங்கள்…!!

காட்டு யானைகள் மரத்தை வேரோடு பிடுங்கியதோடு, 2 மின் கம்பங்களை சேதப்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள டபுள்கான்தொட்டி கிராமத்தில் சுற்றித்திரியும் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றது. இந்நிலையில் யானைகள் ஒரு பெரிய மரத்தை வேரோடு பிடிங்கி எரிந்ததோடு, அங்கிருந்த 2 மின் கம்பங்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் மின்சாரம் தடைபட்டு 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கி விட்டன. இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வீடுகளுக்குள் வரும் கழிவு நீர்…. பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நல்லதம்பி செட்டி தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி சரியாக செய்து கொடுக்காததால் மழை நீருடன் சாக்கடை கழிவு நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. மேலும் அப்பகுதி முழுவதும் சேரும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. கடந்த 4 நாட்களாக அப்பகுதியில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனையடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அவளும் என்னை விட்டு போயிட்டா” தாய் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பனகமுட்லு பகுதியில் சேட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேட்டு இறந்து விட்டதால் முனியம்மாள் தனது மகளான சத்யா உடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சத்யா கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு  பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த முனியம்மாள் தனது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அனுமதிக்க மறுத்த தந்தை….. மருமகனின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்ததால் மருமகன் மாமனாரை பாட்டிலால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியில் ஆட்டோ டிரைவரான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் பிரியதர்ஷினி கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியதர்ஷினியும், அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் மணி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் சென்னையில் வசித்து வந்த பிரியதர்ஷினி தனது கணவருடன் தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர்களை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

முகநூலில் வந்த பெண்ணின் புகைப்படம்…. அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை…. போலீஸ் நடவடிக்கை…!!

நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மாப்பிள்ளைக்கு முகநூலில் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முதுகாணபள்ளி பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான நரேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நரேஷ் குமார் தான் காதலித்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்து வேறு ஒரு நபருடன் அவருக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் கோபமடைந்த நரேஷ்குமார் அந்த இளம்பெண்ணின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

150 அடி உயர செல்போன் கோபுரம்…. மிரட்டல் விடுத்த ஊழியர்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் ஆவார். இந்நிலையில் துரைசாமிக்கும், அவரது சகோதரர்களுக்கும் இடையே ஏற்கனவே நிலப் பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. மேலும் சகோதரர்களுக்கு இடையே இது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் துரைசாமி தனது வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் 150 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“ரொம்ப டார்ச்சர் பண்றாங்க” நாக்கை அறுத்து கொண்ட மேஸ்திரி…. போலீஸ் விசாரணை…!!

கடன் தொந்தரவினால் கட்டிட மேஸ்திரி நாக்கை அறுத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் கட்டிட மேஸ்திரியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌபாக்கியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் புதிதாக கட்டிய வீட்டிற்காக முருகேசன் பலரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை முருகேசனால் திருப்பி செலுத்த இயலவில்லை. மேலும் கடன் கொடுத்தவர்கள் தொந்தரவு செய்ததால் மன உளைச்சலில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“திருப்பணிக்கு உதவுங்கள்” குழந்தையை கடத்த முயன்ற பெண்கள்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

குழந்தையை கடத்த முயன்ற குற்றத்திற்காக 2 பெண்களுக்கு தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள லைன்கொல்லை பகுதியில் கூலி தொழிலாளியான சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு சத்யராஜின் வீட்டிற்கு சீதா, அலமேலு என்ற இரண்டு பெண்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் தங்கள் பகுதியில் கட்டப்படும் கோவில் திருப்பணிக்கு உதவுமாறு 2 பெண்களும் சத்யராஜிடம் கூறியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டு சத்யராஜின் மனைவி வீட்டிற்குள் சென்ற […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கட்டாயப்படுத்திய தொழிலாளர்கள்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக 2 கட்டிட தொழிலாளர்களை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினர் ஒருவர் குடிநீர் கேன் விநியோகம் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நாராயணசாமி தனது உறவினரின் குடிநீர் கேன் விற்பனை செய்யும் கடைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு கடைக்கு வந்த 13 வயது சிறுமியை நாராயணசாமி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திருமண ஏற்பாடு செய்த பெற்றோர்…. இளம்பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் அங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கௌசல்யாவிற்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவெடுத்தனர். ஆனால் திருமணம் செய்து கொள்ள விரும்பாத கௌசல்யா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கௌசல்யாவின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கண்டிப்பா வேலை கிடைக்கும்” மேலாளரிடம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தனியார் நிறுவன மேலாளரிடமிருந்து மர்ம நபர் 1 1/2 லட்சம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சீனிவாசனின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் காலி பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை உண்மை என்று நம்பிய சீனிவாசன் அந்த செல்போன் எண்ணை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளிவந்த நபர்…. மர்ம கும்பலின் வெறிச்செயல்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

ஜாமினில் வெளிவந்த தொழிலாளியை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உளிபெண்டா கிராமத்தில் தொழிலாளியான சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கர்நாடக மாநில எல்லையான உன்சனஹள்ளி பகுதியில் இருக்கும் தனியார் மதுபான கடைக்கு மது குடிக்க சென்ற சங்கரை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் பின் தொடர்ந்து சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வீடு புதுப்பிக்கும் பணி….. எலக்ட்ரீசியனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேலை பார்த்து கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்டராக இருக்கின்றார். இந்நிலையில் குமாரின் வீட்டை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வீட்டில் எலக்ட்ரிக்கல் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வீரண்ணா என்பவரை மின்சாரம் தாக்கி விட்டது. இதனால் படுகாயமடைந்த வீரண்ணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சரக்கு வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலியான நிலையில், இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் பகுதியில் கூலித் தொழிலாளியான ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் மத்தூர்-வாலிபட்டி சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து அவ்வழியாக வேகமாக சென்ற சரக்கு வேன் ராஜ் குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏன் உடற்பயிற்சி செய்யவில்லை….? இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத பெற்றோர்…!!

உடற்பயிற்சிக்கு சொல்லாததை கண்டித்ததால் திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெத்தனபள்ளி பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற தனலட்சுமி உடல் எடையை குறைப்பதற்காக பயிற்சிக்கு சென்று வந்துள்ளார். ஆனால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தாய் இறந்த துக்கம்….. 2 மணி நேரத்தில் மகளுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தாய் இறந்த துக்கத்தில் மகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பொம்மேபள்ளி கிராமத்தில் கோவிந்தசாமி-பவுனம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு 6 மகன்களும், 6 மகள்களும் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட கோவிந்தசாமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் கணவன் இறந்த துக்கத்தில் பவுனம்மாள் சரியாக சாப்பிடாமல் இருந்துள்ளார். இந்நிலையில் இவர்களின் மகளான மங்கம்மாள் என்பவர் பவுனம்மாளை அழைத்து தனது வீட்டில் வைத்து கவனித்துள்ளார். கடந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகம்…. மனைவியை கொன்ற தொழிலாளி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கேத்து நாயக்கன் பட்டியில் கூலித் தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு காமாட்சியின் நடத்தை மீது சந்தேகப்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ரவி தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

போதையில் இருந்த ராணுவ வீரர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மதுபோதையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகாராஜா கடை பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கோவிந்தன் போதையில் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த கோவிந்தனை அருகில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கோவிந்தன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய மோட்டார் சைக்கிள்…. ராணுவ வீரருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி மைல்கல் மீது மோதிய விபத்தில் ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாலேகுறி பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் துணி தைக்கும் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு லோகேஸ்வர சக்தி என்ற மகன் இருந்துள்ளார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த லோகேஸ்வர சக்தி தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் சென்றுள்ளார். இதனை அடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மேலாளர் தற்கொலை வழக்கு…. சிக்கிய 2 கடிதங்கள்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

இரண்டு கடிதங்கள் எழுதி வைத்து விட்டு தனியார் நிறுவன மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கெலமங்கலம் பகுதியில் சஜய்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த சஜய்குமார் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த சஜய்குமார் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குற்றங்களை குறைக்க சி.சி.டிவி கேமராக்கள் அமைப்பு!

ஓசூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய வனப்பகுதியில் சுழல் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. சூளகிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேலுமலை தேசிய நெடுஞ்சாலையே வாகனங்கள் மெதுவாக செல்வதால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் மேலுமலை வனப்பகுதியில் சுழல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெண் கேட்டு சென்ற பெற்றோர்…. காதலர்களின் திடீர் முடிவு…. போலீஸ் விசாரணை….!!

வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட காதலர்கள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பஞ்சப்பள்ளி பகுதியில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அருள் குட்டலபள்ளி கிராமத்தில் வசிக்கும் மோனிஷா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அருளின் பெற்றோர் மோனிஷாவின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

6 மாதங்களாக அவதி…. ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்வாரிய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பீலாளம் கிராமத்தில் முனியப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் லைன் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 6 மாதங்களாக முனியப்பா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த முனியப்பா […]

Categories

Tech |