கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகவுண்டன்பட்டியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான கார்த்திக்(19) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் தடுப்பு சுவரின் கீழ் அமர்ந்து கார்த்திக் அவரது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். இதனையடுத்து மதுபோதையில் கார்த்திக் தடுப்பு சுவரின் மேல் உட்கார்ந்திருந்த போது நிலைத்தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்து […]
