கரூர் மாவட்டம் மண்மங்கலம் புலியூர், தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் இடி, காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாகவே கரூரில் சில இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகி வந்தது. காலை நேரங்களில் அதிகப்படியான வெயிலும் மாலை நேரங்களில் மேகமூட்டத்துடனும் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மதியம் அரைமணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கரூர் நகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு, கரூர் நகரம், தான்தோன்றிமலை, பசுவதிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக […]
