கன்னியகுமாரியில் திருமணமாகி 10 மாதங்களே ஆன நிலையில் இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை அடுத்த பாலப்பள்ளம் மேல்விலை கிராமத்தைச் சேர்ந்தவர் மெர்லின். இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணி முடித்து விட்டு வீட்டிற்கு காரை பணிமனையில் விட்டு, வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மேலப்பாளையத்தின் முன் புதிய வீடு ஒன்று கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. அதற்காக மணல், கற்கள் உள்ளிட்டவை […]
