Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நேற்றையில் இருந்து காத்திருக்கோம்… ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள்… ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்…!!

ஊரடங்கு காரணமாக தன் சொந்த ஊருக்கு செல்வதற்காக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.  தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு மற்றும் பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் கடைகள் மற்றும் விடுதிகளில் தங்கி வேலை செய்யக்கூடிய வடமாநில தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக தன் சொந்த ஊருக்கு செல்வதற்கு முடிவெடுத்தனர். இதனால் வடமாநில தொழிலாளர்கள் தன் சொந்த ஊருக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென கவிழ்ந்த படகு… மீனவர்கள் நிலைமை என்ன…? தீவிரமாக நடைபெறும் தேடுதல் வேட்டை…!!

மீனவர்கள் 11 பேர் சென்ற படகு நடுகடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வள்ளவிளை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பெரியநாயகி எனும் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது நடுக்கடலில் வேறொரு படகு உடைந்து கவிழ்ந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அந்த படகை பார்வையிட்டுள்ளனர். அதன்பின்னர் அந்தப் படகு மெர்சிடஸ் பெயரில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மீனவர்கள் விசாரித்தபோது, வள்ளவிலை கிராமத்தில் வசிக்கும் கைராசன் மகன் ஜோசப் பிராங்கிளின் என்பவருக்கு சொந்தமான படகுதான் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அவன் இதை பார்க்கணும்… வீடியோ காலில் நடந்தது என்ன…? இளம் பெண் எடுத்த விபரீத முடிவு…!!

காதல் தகராறில் காதலனுடன் வீடியோ கால் பேசியவாறு காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் அந்தோணி ஜெஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரிய சுசிலா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு பிராட்வின் நிபியா என்ற மகளும் எக்சன் ஜெதீஸ் தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் அந்தோணி ஜெஸ்டின் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் பிராட்வின் நிபியா நெல்லை மாவட்டத்திலுள்ள ஏர்வாடி மருத்துவமனையில் நர்சிங் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்….? தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி கூலி தொழிலாளி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பள்ளிவிளை ரயில் தண்டவாளத்தில் ஒரு வாலிபர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நாகர்கோவில் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்த வாலிபர் அருகுவிளை அம்மன் கோவில் தெருவில் வசித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

டெம்போவில் இருந்தது என்ன? அடித்து பிடித்து ஓடிய மர்மநபர்கள்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

குமரியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். குமரி மாவட்டத்தில் அழகிய மண்டபம் அருகே டெம்போவில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் பொருட்களான அரிசி, மண்ணெண்ணெய் போன்றவை கடத்தப்படுவதாக மாவட்ட அதிகாரிக்கு  தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மாவட்ட வருவாய்த்துறை சார்பில் பறக்கும்படை அதிகாரிகள் தாசில்தார் பாபு ரமேஷ், வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஜ்குமார், டேவிட்  போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தடுப்பூசி இல்லன்னு சொல்றாங்க… இன்று முதல் நடைபெறும் தீவிர பணி… தட்டுப்பாடை நிவர்த்தி செய்ய கோரிக்கை…!!

குமரியில் ஐந்தாயிரம் தடுப்பூசி டோஸ்ட் வந்துள்ளதால் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் மொத்தம் 5 ஆயிரம் கோவிட் தடுப்பூசி டோஸ்ட் வந்துள்ளது. இதனால் தடுப்பூசி போடும் பணி இன்று முதல் நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனவை கட்டுப்படுத்தும் விதமாக முதல் தடுப்பூசி ஜனவரி 16ம் தேதியிலிருந்து பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து களப்பணியாளர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் 60 வயதிற்கு மேல் இருப்பவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 45 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

டீ தானேன்னு நம்பி குடிச்சிட்டேன்… ரயிலில் நடந்த ஏமாற்று வேலை… வலை வீசி தேடும் போலீசார்…!!

நாகர்கோவில் வந்த ரயிலில் தொழிலாளரிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.   உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்தவர் தொழிலாளி வினோத் குமார். இவருடைய மகன் நெல்லை மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை பார்ப்பதற்காக வினோத்குமார் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துள்ளார். இந்நிலையில் அந்த ரயிலில் பயணம் செய்த இரண்டு நபர்கள் தாம்பரத்தில் வினோத் குமாருக்கு டீ வாங்கி கொடுத்துள்ளார்கள். அதை டீயை வினோத்குமார் வாங்கி குடித்தவுடன் மயங்கி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து இப்படி பண்ணிட்டு இருக்காங்க…. காவல்துறையில் குவிந்த புகார்…. அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸ்….!!

குளச்சல் அருகே தொடர்ந்து நகைபறிப்பு மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியில் கடந்த சில நாட்களாக நகை பறிப்பு மற்றும் கொள்ளை சம்பவம் நடந்து வந்ததுள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் இந்த சம்பவத்தில் ஈடுபடும் மர்ம நபர்களை   தேடுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் லட்சுமிபுரம் அருகே சந்தேகத்தின் பேரில் இருவரிடம் காவல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இவனை வண்டியில் தூக்கி போடுங்கடா’ அதிமுக நிர்வாகி மிரட்டல் – வைரலாகும் வீடியோ

கன்னியாகுமரியில் ஆவின் நிறுவனம் பணியாளரை அந்த நிறுவனத்தின் தலைவரும், அதிமுக பிரமுகருமான ஒருவர் மிரட்டியதோடு , அடியாட்களை வைத்து தாக்கியதில் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார். நாகர்கோவிலில் உள்ள ஆவின்  நிறுவனத்தில் கடந்த 23 ஆண்டுகளாக ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர் ராஜன். இவருக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வேறு ஒரு பணியாளருக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. ஆனால் ஆவின் நிறுவனத்தின் தலைவரும்,  குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அசோகன் எதிர்தரப்பு பணியாளருக்கு ஆதரவாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காற்றில் பரந்த சமூக இடைவெளி….! மீனுக்காக குவிந்த மக்கள்…. குமரியில் தொற்று அபாயம் …!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறி மீன் வாங்க குவிந்த வியாபாரிகள், பொது மக்களால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மீன்களின் இனப்பெருக்கத்திற்காக தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் கடந்த 14ஆம் நாள் நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதோடு.. இரண்டு மாதங்கள் இந்த தடைக்காலம் நீடிக்கும். ஆனால், கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடித்தொழில் நடைபெற்று வருவதால் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மீன் வாங்கி செல்கின்றனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதலை மறுத்த பெண்…. இளைஞர் செய்த விபரீத காரியம்…. போலீஸ் விசாரணை….?

காதலித்த பெண் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்ணக்கோடு கிராமத்தில் ராஜன் என்பவர்க்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ராஜன் மற்றும் அவரது மனைவி இறந்து விட்டதால் அவரது இரண்டு மகன்களும் ராஜனின் தங்கை ரோசியின் வீட்டில் வளர்ந்து வந்தனர். இரண்டு மகன்களில் ஒருவரான ரெதீஷ் என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பிய அவர் தனது வீட்டின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு…. வெளிய போகாதீங்க…. 8 மணிக்கு மேல் பேருந்துகள் கிடையாது….!!

குமரி நெல்லை இடையே இயங்கும் பேருந்துகள் இன்று இரவு 8 மணிமுதல் நிறுத்தப்படுகிறது.   தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனையடுத்து கன்னியாகுமரியில் இருந்து நெல்லைக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் இன்று இரவு 8 மணி முதல் நிறுத்தப்படுகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவுவதால் கன்னியாகுமரியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனாவால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்….. சுபநிகழ்ச்சிகள், திருவிழாக்கள் ரத்து…. சரிவடைந்த வாழையின் விலை….!!

கொரோனா பரவல் காரணமாக வாழை இலை மற்றும் வாழை மரங்களின் விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர். குமரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் வாழைமரங்களை தங்களின் நிலத்தில் விளைவித்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை  பரவி வருவதால் விவசாயிகள் கடும் சிக்கலிற்கு ஆளாகியுள்ளனர். பல்வேறு சுபநிகழ்ச்சிகளில் வாழை மரம் மற்றும் வாழை இலைகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது கொரோனா பரவலினால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கும் கோவில் திருவிழாவிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாழை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எல்லாரும் கவனமா இருங்க… மீண்டும் அதிரவைக்கும் கொரோனா… அதிகரிக்கும் உயிரிழப்பு…!!

கொரோனா பரவலால் குமரியில் மட்டும் மூன்று நபர்கள் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நேற்று குமரியில் கொரோனாவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை மூன்று. அங்கு கொரோனா பரவலை தடுப்பதற்கான முயற்சிகளை மாவட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே திருவனந்தபுரத்தில் வசித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிறகு கர்ப்பிணி தாய் மற்றும் இளம் குழந்தை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

படகு கவிழ்ந்து மூவர் பலி…. மீட்கப்பட்ட 6 பேர்…. மற்றவர்கள் என்ன ஆனார்கள்…? பரிதவிப்பில் உறவினர்கள்…!!

மங்களூர் அருகே மீன் பிடிக்கும் படகு கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கேரள மாநிலம் கோழிக்கூடு அருகே பேய்ப்பூரிலிருந்து கடந்த ஞாயிறு அன்று ஜாபர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், 14 பேர் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதே படகில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த ஏழு மீனவர்களும் சென்றிருந்தனர். மங்களூர் கடற்கரையிலிருந்து 43 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, சிங்கப்பூரைச் சேர்ந்த ஹாவ்ரே என்ற சரக்கு கப்பல் மோதியதில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாவட்டத்திற்குள் நுழைந்தாலே…! ”இ -பாஸ் முறை கட்டாயம்”…. குமாரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு …!!

கேரளாவில் இருந்து கன்னியாகுமரி வரும் பயணிகளுக்கு இ – பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அரவிந்த் தெரிவித்திருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா  மருத்துவ முகாம்களை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 67 ஆயிரம் பேருக்கு முதல் கட்ட தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். கேரளாவில் இருந்து வரும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இலவசமாக மீன் கேட்டு அடிதடி…! குமரியில் பரபரப்பு சம்பவம் …!!

பேச்சிப்பாறை அணை பகுதியில் இலவசமாக மீன் கொடுக்க மறுத்த பொதுப்பணித்துறை மீன்பிடி ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீது ரவுடி கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் மீன் வளத் துறை சார்பில் மீன் குஞ்சுகள் வளர்க்கப்படுகிறது.அணையில் உள்ள வளர்ப்பு மீனை பிடிக்க 9பரிசல் மற்றும் 18 பேர் மீன்வளத் துறை அனுமதித்துள்ளது. இவர்கள் பிடிக்கும் மீன்கள் மீன்வளத்துறையால் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பேச்சிப்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அல்போன்ஸ் […]

Categories
கன்னியாகுமாரி கொரோனா சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி அல்லாத வெளிமாநில பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை மீண்டும் அமல்…!!!

கொரோனா வைரஸ் 2ஆம் அலை வேகமாக பரவுவதை அடுத்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இ-பாஸ் நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்தது. சென்னை விமான நிலையத்தில் உள்ள சர்வதேச முனையத்தில் இ-பாஸ் நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது. ஆனால் உள்நாட்டு விமான நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் இ-பாஸ் இல்லாமலேயே பயணித்து வந்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக அதிகரித்து வருவதை தொடர்ந்து உள்நாட்டு […]

Categories
கன்னியாகுமாரி கொரோனா மாநில செய்திகள்

கேரள – தமிழக எல்லையில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை…!!

கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. களியக்காவிளையில் உள்ள பிரதான சோதனைச்சாவடி தவிர மற்ற இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளை மூட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. களியக்காவிளை சோதனைச்சாவடியில் தீவிர வாகன தணிக்கை ஈடுபட்ட வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இ-பதிவு இல்லாமல் வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை தக்கலை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

46 மனநல நோயாளிகளுக்கு கொரோனா…. வேதனை தரும் செய்தி…!!!

கன்னியாகுமரியில் மனநல காப்பகத்தில் 46 நோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விளவங்கோடு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

தமிழக கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ளது விளவங்கோடு சட்டமன்ற தொகுதி. மலையாளம் பேசும் மக்கள் இங்கு கணிசமாக உள்ளன. இந்தப் பகுதியின் முக்கிய தொழில்களாக ரப்பர் விவசாயம், முந்திரி தொழில் மற்றும் செங்கல் சூளைகள் உள்ளன. சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி 8 முறையும், ஸ்தாபன காங்கிரஸ் 1 முறையும் வென்றுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. தற்போதய எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியின் விஜயதாரணி.  விளவங்கோடு தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,47,495 […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பத்பநாபபுரம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

1957ஆம் ஆண்டு வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாகவே இருந்த பத்மநாபபுரம் குமரித் தந்தை என அழைக்கப்படும் மார்சல் நேசமணி தலைமையில் நடைபெற்ற பெரும் போராட்டத்திற்குப் பின் தமிழகத்துடன் இணைந்தது. பத்மநாபபுரம் அரண்மனை, ஆசியாவிலேயே உயரமான மாத்தூர் தொட்டி பாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களும் இங்கு அமைந்துள்ளன. பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ், ஜனதா தளம், அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளனர். ஸ்தாபன காங்கிரஸ், பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளச்சல் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் தொகுதி கடல் சார்ந்த பகுதி ஆகும். பண்டைய காலத்தில் துறைமுக நகரமாக விளங்கிய குளச்சல் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்படும் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்தது. குளச்சல் மற்றும் முட்டம் கடற்கரைகள் சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலையாக கருதப்படுகிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மிகப் பழமைவாய்ந்த இரணியல் அரண்மனை இங்குதான் அமைந்துள்ளது. குளச்சல் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 7 முறை வெற்றி பெற்றுள்ளது. ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா தளம் மற்றும் […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

இந்தியாவின் தெற்கு முனையில் கடை கோடியில் அமைந்துள்ளது கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி. முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி மிக முக்கியமான சுற்றுலா தலமாகும். கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவரின் பிரம்மாண்ட சிலை தமிழரின் பெருமையின் கம்பீரத்தை பறைசாற்றுகிறது. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் 1 முறையும், காங்கிரஸ் கட்சி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக 5 முறையும், அதிமுக 6 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளன. கன்னியாகுமரியின் தற்போதய எம்எல்ஏ திமுகவின் ஆஸ்டின். கன்னியாகுமரி தொகுதி மொத்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பெண்களின் சபரி மலை” களைகட்டிய மீன பரணி விழா.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. மனவாளக்குறிச்சியில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என போற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்கோவிலில் மாசித்திருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் 9 வரை பத்து நாட்கள்  தொடர்ந்து நடைப்பெற்றது. மேலும் இந்தத் திருவிழாவில் கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் இருந்தும் எராளமான மக்கள் பங்கேற்றனர். இவ்விழாவுக்கு வந்தவர்கள் கடலில் குளித்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு சென்றனர். இந்நிலையில் இன்று  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

50 கிலோ மீட்டர் தூரம்… கோலாகலமாக நடந்த படகு போட்டி.. தங்கத்தை அள்ளிய வெற்றியாளர்கள்…!!

கன்னியாகுமரி கடலில் பாய்மர படகு போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம் பரிசாக வழங்கப்பட்டது. கன்னியாகுமரி அருகே இருக்கும் கடலில் பாய்மர படகு போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியை ஏற்பாடு செய்தவர் இடிந்தகரை கிராமத்தில் உள்ள அன்ரன், டைட்டஸ், இம்ரான் ஜூலியன்  ஆகும். மேலும் இப்போட்டி 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு கோவளத்ததிலிருந்து இடிந்த கரை  உள்ள தெளிப்பாமுனை கடற்கரை வரை  நடத்தப் பட்டது. இதில் மொத்தம் 15 படகுகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு படகிலும் 10 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இதுக்கு இப்படி ஒரு முடிவா… கர்ப்பிணியை தவிக்க விட்ட கணவன்… கதறும் குடும்பத்தினர்..!!

தனிக்குடித்தனம்  செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி என்னும் பகுதியின் அழகிய நகரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு இரண்டு தங்கைகளும் ஒரு தம்பியும் உள்ளனர்.மேலும்  இவர் நாகர்கோவிலில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் . இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் கணேசன் கடுக்கரை பகுதியில் உள்ள  ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார் . திருமணத்துக்குப்பின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா… மாஸ்க் போடாவிட்டால் அபராதம்… அதிகாரிகள் அதிரடி சோதனை…!!

நாகர்கோவிலில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு தலைதூக்கியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் தொற்று அதிகமானதால் அதன் அண்டைப் பகுதியான குமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.  இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக கட்டுப்பாட்டுக்குள் இருந்த வைரஸ் தொற்று,  நேற்று 10 பேருக்கு ஒரே நாளில் பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள்  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாடகை வீட்டில் நடந்த ரகசியம்… போலீசுக்கு வந்த தகவல்… 3 பேர் கைது..!!

இரணியில் வாடகை வீட்டில் விபச்சாம் நடத்திய வாலிபர்களை கைது செய்த காவல் துறையினர். கன்னியாகுமரி பகுதியில் இரணியல் உள்ள காவல் துறையினருக்கு, காரங்காடு பகுதியில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடைபெறுவதாக தகவல்கள் கிடைத்தது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி  அப்பகுதிக்கு சென்று  விசாரணை  மேற்கொண்டு குறிப்பிட்ட வீட்டை சோதனை செய்தனர். அப்பொழுது  திக்குறிச்சி பகுதியை சேர்ந்த வீஜு வயது 34, இவர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபச்சாரம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா… கல்லுரி முதல்வருக்கு தொற்று உறுதி… அதிர்சியில் மாணவர்கள்…!!

தனியார் கல்லூரி முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது. உலகெங்கிலும் கொரோனா தொற்று பரவி  ஒரு வருடத்தை கடந்தும் சற்றும் குறைந்தபாடில்லை, இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து குமரி  மாவட்டத்திலும் தொற்று பரவுவதை தடுப்பதற்காக  பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மக்களை காப்பாற்றும் வகையில் கண்காணிப்பு பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கண்காணிப்பு பணியின் பரிசோதனையின் போது காய்ச்சல் பாதிப்பு உள்ளோரை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உன்னாலதான் இப்படி நடந்தது…. குத்திக்காட்டி பேசிய குடும்பம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!

கணவர் வீட்டில் கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலை சேர்ந்த தம்பதிகள் நாகராஜன்( 28 வயது) – சிவானி (22 வயது). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சிவானி பெற்றோர் திருமணத்தின்போது 95 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இதனையடுத்து  இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருந்த சிவானிக்கு திடீரென கருசிதைவு ஏற்பட்டுள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“வெளிநாட்டில் காதல் கணவர்” மாமியாருடன் சண்டையால்…. குழந்தையை கொன்று…. தானும் தூக்கிட்ட மனைவி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் ராம்குமார்- கவிதா. ராம்குமார் கவிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் இவர்களுடைய காதலுக்கு ராம்குமார் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஒரு குழந்தை பிறந்த பிறகு அவருடைய வீட்டில் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதையடுத்து ராம்குமார் தன்னுடைய குடும்பத்தை நடத்துவதற்காக வெளிநாட்டிற்கு தன்னுடைய மனைவியை அம்மா இன்பராணியிடம் விட்டு விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் கவிதாவுக்கும் அவருடைய மாமியாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த கவிதா தன்னுடைய […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குழந்தையை கொன்ற தாய்…. தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. காதல் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தனது குழந்தையை கொன்றுவிட்டு இளம் பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள துணிக்கடையில் டிரைவராக பணிபுரிந்த போது அங்கு வேலை பார்த்த கவிதா என்ற பெண்ணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். அதன் பிறகு கணவன் மனைவி இருவரும் காமராஜர் நகரில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஹரிஹரன் என்ற […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிள்ளியூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

தமிழகத்தின் கடைசி அதாவது 234 தொகுதியான கிள்ளியூர் கன்னியாகுமரியின் கடை கோடியில் அமைந்துள்ளது. கேரளாவை கடல் மற்றும் சாலை மார்க்கமாக இணைக்கும் ஒரே ஊர் கிள்ளியூர். பழம்பெரும் தமிழ் புலவரும், தமிழ் சங்கம் வைத்திருந்தவர்களில் ஒருவருமான அதங்கோட்டாசான் குமரியை தமிழகத்தோடு இணைக்க போராடி உயிர் நீத்த பல தியாகிகள் கிள்ளியூரின் அடையாளமாக விளங்குகின்றனர். இதுவரை 11 சட்ட மன்றத் தேர்தல்களை சந்தித்துள்ள கிள்ளியூர் தொகுதியில் இதுவரை தேசிய கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக ராஜீவ் காந்தி […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நாகர்கோவில் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் நாகராஜா கோவில் உள்ளது. இந்த கோவிலின் பெயரை வைத்தே நாகர்கோவில் என்று பெயர் வந்ததுள்ளது. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பிறந்த ஊர் நாகர்கோவில் ஆகும். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை படித்த பள்ளி கோட்டாரில் உள்ளது. 1952ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தலை நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி சந்தித்து வருகிறது. திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்து சட்டமன்றத்திற்காக முதல் தேர்தலை சந்தித்த நாகர்கோவில் பின்னர் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாகவும், தேர்தலை சந்தித்தது. 1967க்குப் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

லட்சத்தீவில் கைது செய்யப்பட்ட மீனவர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…. அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

கடல் அட்டைகளை கடத்தியதாக கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோடிமுனை பகுதியில் ஜூலியஸ் நாயகம் என்பவர் வசித்துவருகிறார். இவரும் திருவனந்தபுரம் பகுதியில் வசித்து வரும் ஷாஜன் என்பவரும் இணைந்து மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜூலியஸ் நாயகம், ஷாஜன் மற்றும் 2 வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என மொத்தம் 4 பேர் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் கடந்த […]

Categories
Uncategorized கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெளிநாட்டில் கணவர்…. மாமியாருடன் தங்கியிருந்த மனைவி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. குழந்தைக்கு நேர்ந்த சோகம்…!!

இளம் பெண் ஒருவர் தனது குழந்தையை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்ய முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கன்னியாகுமரியை சேர்ந்த தம்பதிகள் ராம்குமார் (26 வயது) – கவிதா (20 வயது). இவர்களுக்கு ஹரிஹரன் (1 வயது) என்ற குழந்தை ஒன்று உள்ளது. இதில் ராம்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் கவிதா தனது மாமியார் ராணியுடன் கன்னியாகுமரியில் வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று கவிதாவின் மாமியார் காய்கறி வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

Just In: பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…

இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி கொண்டு இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

காதல் தோல்வியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கலிங்கராஜபுரம் பகுதியில் சரவணன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருக்கும் ஒரு அறையில் தூங்க சென்ற சரவணன் நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது தனது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த நித்திரவிளை காவல்துறையினர் சம்பவ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புதுசு புதுசா யோசிக்கிறாங்க…. இப்படி கூட செய்யலாமா…. அதிகாரியின் வித்தியாசமான முயற்சி…!!

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பாராகிளைடரில் பறந்தபடி சாகச நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அதிகாரிகள் அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தீவிரமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கன்னியாகுமரி கடற்கரையில் பாராகிளைடர் மூலம் சாகச நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியை குமரி மாவட்ட நிர்வாகம் கோவையில் உள்ள இந்திய வான் விளையாட்டு மற்றும் அறிவியல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எல்லா கடமையும் முடிச்சாச்சு… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

திருமணமாகாத விரக்தியில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊரம்பு பகுதியில் ராஜேஷ் என்ற பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் வசித்து வந்துள்ளார். இவர் தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் தன்னுடைய இரண்டு தங்கைகளுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் தனது தாய் தூங்கிய பின்பு வீட்டின் அருகே உள்ள மரத்தில் கயிறு கட்டி ராஜேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரியும் தீ…. ஆபத்து ஏற்படுமென அபாயம்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

மலை மீது பற்றி எரியும் தீயானது காற்றின் வேகத்தால் மளமளவென பற்றி எரிகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பார்வதிபுரம், ஆரல்வாய்மொழி, தோவாளை போன்ற மலைத்தொடர்களில் அடிக்கடி தீ பிடிக்கிறது. இந்நிலையில் சுங்கான்கடை மலையில் உள்ள பல்வேறு இடங்களில் தீ பற்றி எரிந்துள்ளது. இந்த தீயில் அரிய வகை செடிகள் மற்றும் மரங்கள் கருகி விட்டன. மேலும் பலத்த காற்று காரணமாக தீயானது பல்வேறு இடங்களுக்கு பரவி கொண்டிருக்கிறது. அதோடு தீ அணையாமல் பற்றி எரிவதால் எல்லா இடங்களிலும் புகை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்னை விட்டுட்டு போயிட்டா… கணவர் செய்த செயல்… போலீஸ் அதிரடி விசாரணை…!!

மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று வேறு ஒருவரை திருமணம் செய்ததால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தாமொழி கிராமத்தில் வசித்து வந்தவர் கதிரவன். இவர் எலக்ட்ரிஷனாக பணிபுரிந்து வந்தார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கதிரவன் அஜிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவி இருவரும் பிரிந்து விட்ட நிலையில் அஜிதா மட்டும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடத்தப்பட்ட மனைவி… தப்பியவர்களுக்கு வலைவீச்சு… போக்சோவில் கைது செய்த போலீஸ்…!!

ப்ளஸ் 2 படிக்கும் மாணவியை கடத்தியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கன்னியாகுமாரி மாவட்டத்திலுள்ள தடிக்காரன்கோணம் பகுதியில் வசித்து வருபவர் தொழிலாளி முருகன். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இவர் பிளஸ் 2 படிக்கும் மாணவிக்கு ஆசை வார்த்தைகளை கூறியதுடன் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் மாணவியின் பெற்றோருக்கு தெரிந்தவுடன் அவர்கள் முருகன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

11 வருஷமா குழந்தை இல்லை…. மனைவி செய்த காரியம்…. கணவர் எடுத்த விபரீத முடிவு…!!

நாகர்கோவிலில் மனைவி செய்த காரியத்தால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த 34 வயதுடைய கதிரவன் என்பவரும் 32 வயதுடைய அஜிதா என்பவரும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு இதுவரை குழந்தைகள் இல்லை. இதனால் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அஜிதா வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனை அறிந்த கதிரவன் அதிர்ச்சி அடைந்து மனம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

2 பைக்குகள்… 270 கிலோ எடை… தோளில் சுமந்து சென்ற இரும்பு மனிதன்… 42 கிலோமீட்டர் நடந்து சாதனை..!!

இரண்டு மோட்டார் சைக்கிள்களை தோளில் சுமந்தபடி உலக சாதனைக்காக, நடந்து சென்ற குமரி இரும்பு மனிதருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த கண்ணன் என்பவர் இரும்பு மனிதர் என்ற பட்டம் பெற்றவர். இவர் 9 டன் எடையுள்ள லாரியை கயிற்றால் இழுத்து உலக சாதனை பெற்றுள்ளார். இதன் காரணமாக அவருக்கு சோழன் புக் ஆஃ ரெக்கார்டு என்னும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று சுமார் 270 கிலோ எடையுள்ள 2 மோட்டார் சைக்கிளை தனது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…. டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செண்பகராமன்புதூரில் உள்ள மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யுமாறும், இ.எஸ்.ஐ திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதோடு விற்பனைக்கு ஏற்றவாறு கடைகளில் பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்டென மறித்த வாலிபர்…. இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. வலை வீசி தேடும் போலீசார்…!!

ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த பெண்ணை வழிமறித்து அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செல்வவிளை பகுதியில் ரதி குமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதிக்கு வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். அதன்பின் தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்த போது, இவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் ராஜகுமாரியை திடீரென […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை… அதிரடி அறிவிப்பு…!!!

அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மார்ச் 4ம்தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

1008 பெண்கள் வைத்த மஞ்சள் பொங்கல்… கோலாகலமாக கொண்டாடப்பட்ட நாகராஜா ஆயில்ய விழா… அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..!!

நாகராஜா கோவிலில் நடைபெற்ற ஆயில்ய விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகமூட்டம் நாகராஜா கோவிலில் நேற்று ஆயில்ய விழா நடைபெற்றது. இதில் 1008 பெண்கள் கலந்துகொண்டு மஞ்சள் பொங்கலிட்டனர். பின் அந்த பொங்கலை நாகராஜாவிற்கு படைத்து வழிபாடு செய்துள்ளனர். மேலும் பல்வேறு தீப ஆராதனைகளுடன் இந்த விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கோவிலுக்குள் […]

Categories

Tech |