கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 34 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 34 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. அதாவது செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், கிள்ளியூர், தூத்தூர், இடைக்கோடு, குழித்துறை, கோதநல்லூர் போன்ற ஆரம்ப சுகாதார நிலையத்திலும், நாகர்கோவில் டதி பள்ளி, தம்மத்துகோணம் சி.எம்.சி. பள்ளி, சால்வேசன் மிலிட்டரி பள்ளி போன்று பகுதிகளில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார். இதனையடுத்து […]
