Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஐயோ இப்படியா நடக்கணும்” எதிர்பாராத விபத்து….கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

குடிநீர் குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது மண்சரிந்து 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் புத்தன் அணை கூட்டு குடிநீர் திட்டப் பணிகளுக்காக குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வடசேரி கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன் குடிநீர் தொட்டி பதிப்பதற்காக குழி தோண்டும் பணி தொழிலாளர்களால் நடைபெற்றுள்ளது. அப்போது பணியில் ஈடுபட்ட புளியடி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், முருகன் ஆகிய […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இது தவறான உறவு” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கன்னியாகுமரியில் நடந்த சோகம்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் லாரன்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரீஜன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள கொல்லத்தில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கியிருந்து ரீஜன் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். அப்போது அந்த வீட்டில் வசிக்கும் பெண்ணிற்கும், ரீஜனுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பெண்ணிற்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருக்கின்றனர். இது குறித்து அறிந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அந்த விலங்கா இருக்குமா….? பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. வனத்துறையினர் தெரிவித்த தகவல்….!!

மர்ம விலங்கு 6 கோழிகளை கடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்டு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம விலங்கு ஒன்று 2 நாய்கள் மற்றும் 12 கோழிகளை கடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆரல்வாய்மொழி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்கள் கோழிகளை வளர்த்து வந்தனர். இதில் சில கோழிகள் கூண்டிலும், மற்றவை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெண்களே இப்படி செய்யலாமா….? பேருந்தில் நடந்த சம்பவம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

பேருந்தில் பணம் திருட முயன்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்யும் பெண்களிடம் நகை மற்றும் பணம் திருடும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இந்நிலையில் ஆடி மாதம் பெண்கள் அதிகமாக கோவிலுக்கு செல்வதால் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. இதனையடுத்து அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து ஆரல்வாய்மொழிக்கு மொழி  புறப்பட்ட அரசு பேருந்தில் இரண்டு பெண்கள் பயணிகளின் கைப்பையை திறந்து அதில் இருந்த பணத்தை திருட முயன்றுள்ளனர். இதனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நாங்க கொடுத்த பணத்தை தாங்க…. அலுவல ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மன அழுத்தம் காரணமாக கல்லூரி அலுவலக ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தென்தாமரைகுளம் பகுதியில் குமார் வேதமாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் அலுவலக ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ஞானசெல்வம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பீனா குமாரி என்ற மகளும், ஷிபுகுமார் என்ற மகனும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புஅவரது மகளான பீனாகுமரியின் திருமணத்திற்காக கடன் வாங்கியிருந்தார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உயிரை விட தயங்கமாட்டேன்…. மாற்றுத்திறனாளி செய்த செயல்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலின் முன்பு காவல்துறையினர் மனு கொடுக்க வருபவர்களை சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதி அளிக்கின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரேக் பிடிச்சதுக்கு இப்படியா…. பயணிகளுக்கு ஏற்பட்ட நிலை…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் உள்பட 6 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்திலுள்ள இருக்கன்துறை பகுதியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி ஜல்லிகளை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனைப்பார்த்த டிரைவர் வேகமாக வந்த டிப்பர் லாரி நிறுத்தியுள்ளார். இதனால் அதன்பின் வந்த சிமெண்ட் ஏற்றிக்கொண்டு வந்த லாரியும், அரசு பேருந்தும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இதுக்காகத்தான் அங்க போனாரு…. டிரைவருக்கு நடந்த சோகம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

வெள்ளத்தில் சிக்கி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கிராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். தற்போது மழை பெய்து வருவதால் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள பழையாறு ஆற்றில் அதிகமாக தண்ணீர் ஓடுகிறது. இந்நிலையில் அதிகாலையில் இசக்கிராஜ் ஆற்றிற்கு சென்று மீன்பிடிப்பதற்காக வலையை விரித்துள்ளார். இதனையடுத்து மதியம்  விரித்த வலையை எடுப்பதற்காக இசக்கிராஜ் தனது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா வந்திருக்கலாம்…. வாலிபருக்கு நடந்த சோகம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள கொல்லியோடு பகுதியில் ரஞ்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மனு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கண்ணுமாமூடு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து மனு மூவோட்டுகோணம் பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு முன்னால் சென்ற காரில் மோட்டார்சைக்கிள் உரசியது. இதனால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள சுவரின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கனும்…. மீனவர்களுக்கு நேர்ந்த விபரீதம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

மீன் பிடிக்க சென்ற 2 மீனவர்கள் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தூத்தூர் பகுதியில் ராபின் மற்றும் சூசை ததேயூஸ் என்ற மீனவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ராபின் மற்றும் சூசை ததேயூஸ் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் முட்டம் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் பார்திபபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தூத்தூர் கடற்கரையை நோக்கி தாளக்கன்விலையில் உள்ள கல் குவாரியில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இந்த வழியில் சென்றதால்…. தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்…. கன்னியாகுமரியில் சோகம்….!!

ரயில் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விராலிகாட்டுவிளையில் விஜில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு விஜில் ரயிலில் சென்று கொண்டிருந்தார. இதனையடுத்து ரயில் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது ரயிலில் இருந்து கீழே இறங்கிய விஜில் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார். அதன்பின் அவர் வந்த ரயில் புறப்பட்டது கவனிக்காமல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

யாரும் தப்பிக்கவே முடியாது…. நடைபெறும் தீவிர சோதனை…. போலீஸ் சூப்பிரண்டின் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்வதை தடுப்பதற்காக போலீஸ் சூப்பிரண்ட் பத்ரிநாராயணன் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். இதனால் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் பெரும்பாலான கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த மாவட்டத்தில் கடந்த 53 நாட்களில் மட்டும் 333 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு நாராயணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது இந்த மாவட்டத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்” 43 இடங்களில் முகாம்…. கலெக்டரின் தகவல்….!!

கன்னியாகுமரியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 43 இடங்களில் இன்று கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் முகாம்கள் ஏற்படுத்தி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு நடத்தபட்ட  65 முகாம்களில் மொத்தம் 10 ஆயிரத்து 861 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனையடுத்து இன்று (சனிக்கிழமை) 43 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். அதாவது செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு, கிள்ளியூர், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற மாணவி…. திடீரென இப்படி ஆயிட்டு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மாணவியின் மீது மின்கம்பி அறுந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனத்த மழை பெய்தது. இவ்வாறு நாள் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வாணியன்விளையில் சுனில் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வெட்டுமணியில் பத்திரம் எழுதிக் கொடுக்கும் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு மனைவியும், அஷிகா என்ற மகளும் இருந்துள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. ஆக்ரோஷமாக எழும்பிய ராட்சத அலை…. ஏமாற்றத்துடன் சென்ற பயணிகள்….!!

சாரல் மழையினால் சூரிய உதயத்தை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தில் திரும்பி சென்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகின்றது. இந்த மழையினால் கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசியது. இதனால் கட்டுமரம் மற்றும் பள்ளம் போன்ற சிறு மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கோவளம், சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கீழமணக்குடி, மணக்குடி உள்ளிட்ட பல கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் மீன் தொழில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அவர் கூட சேர்த்து வைங்க…. வக்கீல் பெண்ணின் போராட்டம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று பெண் வக்கில் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருத்துவபுரத்தில் வக்கீல் பிரியதர்ஷினி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும், முளகுமூடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி உதவி பேராசிரியர் ஒருவருக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதனயடுத்து திருமணத்திற்கு பிறகு கணவர் வீட்டார் அதிகமாக வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக பிரியதர்ஷினி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. தேங்கி காணப்பட்ட மழைநீர்…. பொதுப்பணித் துறையினரின் கண்காணிப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்த நிலையில் நாகர்கோவில் போன்ற பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனையடுத்து மயிலாடியில் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. மேலும் கொட்டாரம், ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், தக்கலை, குழித்துறை, அருமனை, பூதப்பாண்டி, இரணியல், களியல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா…. நடைபெறும் தீவிர சோதனை…. காவல்துறையினரின் எச்சரிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து நாகர்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் தலைமையில் காவல்துறையினர் வடசேரி கனகமூலம் சந்தை வடக்கு கேட் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்ற பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேலை வாங்கி தாரேன்னு சொன்னாங்க…. நம்பி கொடுத்து ஏமாந்துட்டோம்…. காவல்துறையினரின் தீவிர..விசாரணை….!!

ரயில்வே வேலை வாங்கித்தருவதாக பெண்ணிடம் பண மோசடி செய்த 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் இருளப்பபுரம் காமராஜர் சாலையில் ரெமி கிளார்சன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த மனுவில் நான் படித்து விட்டு வேலை தேடி வந்த நிலையில் தனது தாயாரிடம் திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரையைச் சேர்ந்த பஷீர் என்பவர் அறிமுகம் ஆனார். அவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காணாமல் போன இளம்பெண்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. பின் நடந்த சம்பவம்….!!

இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஏற்பட்டு இளம்பெண் கன்னியாகுமரி வாலிபரை கரம்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சிறு காவேரிபாக்கம் பகுதியில் மணிகண்டன் மகள் காயத்ரி என்பவர் வசித்து வருகின்றார். இவர் கடந்த 19-ஆம் தேதி வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார். இதுகுறித்து மணிகண்டன் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் உதவியுடன் காயத்ரியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் காயத்ரியின் செல்போன் சிக்னல் மூலம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடிக்கடி இப்படிதான் ஆகுது…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

விபத்து ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பாறைகள், எம்சாண்ட் போன்ற கனிமவளங்கள் தினசரி 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றது. அவ்வாறு ஏற்றி செல்லும் கனரக வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எடையே விட கூடுதலாக ஏற்றி செல்வதனால் தினசரி வாகன விபத்துக்களும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றது. இதன் காரணமாக அழகியமண்டபம் அருகில் கல்லுவிளையில் அதிக எடையுடன் ஏற்றிச் சென்ற லாரி திடீரென கவிழ்ந்து விபத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தென்னை மரத்தில் இருந்த விஷ வண்டுகள்…. தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்….!!

தென்னை மரத்தில் ஏறியபோது விஷ வண்டுகள் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கனகமூலம் புதுக்குடியிருப்பு பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மரம் ஏறும் தொழிலாளியாக இருந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜா வீட்டின் அருகில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக ஏறியபோது மரத்தில் உள்ள சில விஷ வண்டுகள் அவரை கடுமையாக கொட்டியது. இதனால் ராஜாவிற்கு உடம்பில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்” ஆர்வத்துடன் சென்ற பொதுமக்கள்…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கன்னியாகுமரியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்திற்கு 13 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்ததையடுத்து 65 இடங்களில் முகாம்கள் நடைபெற்றது. அதன் அடிப்படையில் 14 இடங்களில் ஆன்லைன் டோக்கன் மூலம் தடுப்பூசி போடப்பட்டது. இதனையடுத்து குழித்துறை அரசு மருத்துவமனை மற்றும் கவிமணி மகளிர் மேல்நிலைப்பள்ளி போன்ற இடங்களில் வெளிநாடு செல்பவர்களுக்குரிய 2-வது டோஸ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகளை கூறிய வாலிபர்…. ஏமாந்துபோன மாணவிகள்…. போக்சோவில் தூக்கிய காவல்துறையினர்….!!

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி தனது தந்தையுடன் வசித்து வருகின்றார். இவரது தந்தை சற்று மனநலம் குறைந்தவர் என்று கூறப்படுகின்றது. எனவே மாணவியின் தாயார் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் மாணவியுடன், மார்த்தாண்டம் ஆர்.சி.தெருவைச் சேர்ந்த அபி என்ற வாலிபர் பழகி இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உன்னை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுற்றுலா தலத்திற்கு திரண்ட பயணிகள்…. காலையிலே வந்து பார்த்துட்டோம்…. விளையாடி மகிழ்ந்த சிறுவர்- சிறுமிகள்….!!

கன்னியாகுமரியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் திரண்டு வந்தனர். கன்னியாகுமரியின் சுற்றுலா தலத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் ஆயிரக்கணக்கில் வருகை புரிந்து படகில் சென்று கடல் நடுவில் இருக்கின்ற விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்த்து விட்டு செல்வது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள உத்தரவின்படி கடலில் குளித்தல், படகில் செல்லுவதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்னை அடிச்சுட்டான்…. தொழிலாளியின் தவறான முடிவு…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செறுகோள் அப்பட்டுவிளையில் ரெங்கசாமி என்ற தொழிலாளி வசித்து வருகின்றார். இவரது பக்கத்து வீட்டில் தம்பி கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சுபாஷ் என்ற மகன் இருக்கின்றார். இந்த இரு குடும்பத்தினருக்கும் இடையில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ரெங்கசாமியுடன் சுபாஷ்  தகராறு செய்து அவரை மண்வெட்டியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ரெங்கசாமிக்கு உள் காயம் ஏற்பட்ட நிலையில் தனது வீட்டிற்கு சென்று படுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பக்ரீத் பண்டிகை” செல்போன் மூலம் சொன்னோம்…. தொழுகை முடிந்தபின் சுவையான….!!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் புத்தாடை அணிந்துகொண்டு சிறப்பு தொழுகை செய்தனர். தமிழகம் முழுவதும் நேற்று பக்ரீத் பண்டிகை கோலாகலமாக நடைபெற்றது. இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் முஸ்லிம்கள் புத்தாடைகள் அணிந்து மசூதிக்கு சென்று சிறப்பு தொழுகை செய்தனர். அதாவது நாகர்கோவில், திங்கள்நகர், திருவிதாங்கோடு, தக்கலை, குளச்சல், களியக்காவிளை, கடையாலுமூடு, தேங்காப்பட்டணம், ஆளூர், கன்னியாகுமரி, திட்டுவிளை, மாதவலாயம், குலசேகரம், இரவிபுதூர்கடை போன்ற பல்வேறு இடங்களில் முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை செய்துள்ளனர். இதனையடுத்து நாகர்கோவிலை பொறுத்தவரை கோட்டார், இடலாக்குடி, வடசேரி, […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. 65 இடங்களில் முகாம்…. கலெக்டரின் தகவல்….!!

கன்னியாகுமரியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 13 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்ததை அடுத்து இன்று (வியாழக்கிழமை) தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார். இதில் முதன் முதலில் தெரிவிக்கப்பட்ட 14 இடங்களில் தடுப்பூசி ஆன்லைன் பதிவு செய்வதன் மூலமாக அனுமதிக்கப்படும். அதாவது செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம் துறை, குருந்தங்கோடு, கிள்ளியூர், தூத்தூர், இடைக்கோடு, குட்டக்குழி, கோதனல்லூர் போன்ற அரசு ஆரம்ப […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பூசாரி…. வாலிபர்களின் கொடூர செயல்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

கோவில் பூசாரியை தாக்கி வாலிபர்கள் நகை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சின்னமுட்டம் பகுதியில் ஒரு கோவில் இருக்கின்றது. அந்த கோவிலில் கோழிப்போர் விளையை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் பூசாரியாக இருக்கின்றார். இவர் தினசரி காலையில் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கமாக இருக்கின்றது .அதன்படி அதிகாலை 4 மணிக்கு கோவிலுக்கு சென்று விட்டு பின் பூஜை பொருட்கள் எடுத்து வருவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பூஜை பொருட்களை எடுத்து விட்டு மீண்டும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குண்டும், குழியுமாக இருக்கு…. சீரமைத்து தரனும்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்று பா.ஜனதா கட்சியின் சார்பாக போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகளால் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அதிலும் குறிப்பாக அவ்வை சண்முகம் சாலை, முதன்மை கல்வி அதிகாரி அலுவலக சாலை, கோட்டார் சாலை மோசமாக காணப்படுவதனால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். ஆகவே குண்டும், குழியுமான சாலைகள் சரி செய்யக் கோரியும், பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஆடி மாதம் சிறப்பு வழிபாடு” விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…. திரண்டு வந்த பக்தர்கள்….!!

ஆடி மாதம் முதல் செவ்வாய் கிழமையை முன்னிட்டு நேற்று அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில், வடசேரி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் போன்ற அம்மன் கோவில்களில் அரசு விதித்துள்ள நெறிமுறைகளுடன் ஆடி மாத சிறப்பு வழிபாடு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில் பெரும்பாலான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதனையடுத்து செண்பகராமன்புதூர் அருகில் உள்ள […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-ஸ்கூட்டர் மோதல்…. தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

அரசு பேருந்து-ஸ்கூட்டர் மோதியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புளியடிவிளையில் சுரேஷ் என்பவர் கொத்தனாராக வசித்து வந்துள்ளார். இவருக்கு கவுசல்யா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு குழந்தையும் இருக்கின்றனர். இதில் சுரேஷ் கேரள மாநிலம் கொல்லத்தில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் அதிகாலையில் கொல்லத்தில் இருந்து ஒரு ஸ்கூட்டரில் ஊருக்கு புறப்பட்டார். அப்போது அவருடன் வேலை செய்து வந்த அருமனை பொத்தைத்தாணி விளையை சேர்ந்த டேவிட்மணி என்பவர் சுரேசுடன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற தந்தை, மகள்…. காத்திருந்த பேரதிர்ச்சி…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

யானை தாக்கியதால் தந்தை, மகள் இருவரும் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கீரிப்பாறை வாழையத்துவயல் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மாறாமலே எஸ்டேட் பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மகள் ஸ்ரீனா கோவையில் உள்ள வேளாண்மை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். ஆனால் தற்போது ஸ்ரீனா சொந்த ஊரில் இருக்கின்றார். இதனையடுத்து மணிகண்டன் வழக்கம்போல் அதிகாலை மோட்டார் சைக்கிளில் மாறாமல் டீக்கடைக்கு புறப்பட்டார். அந்த டீக்கடையின் அருகில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குறி கேட்க வரும் பெண்களை…. “குறி வைத்த பூசாரி” குமரியை உலுக்கிய சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கிராமத்தில் வசிப்பவர் ஜெகன். பூசாரியாக இவர் அந்த பகுதியில் அய்யாவழி கோவில் ஒன்றை தர்மபதி என்ற பெயரில் நடத்தி வருகிறார். இதில் பலரும் குறி கேட்க வருகின்றனர். இந்நிலையில் இந்த பூசாரி, அவரிடம் குறி கேட்க வரும் இளம்பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் திங்கல்நகர்  பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாதர் சங்கத்தின் தலைவி கூறுகையில், இந்த சம்பவம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆஸ்துமா நோயினால் அவதி…. ஆவி பிடித்ததால் மயங்கிய மாணவி…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

ஆவி பிடிக்கும் போது மயங்கி விழுந்த மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமாரப் பெருமாள் விளையில் சாம் பெனடிக் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு அக்சயா ஜென்சி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அருகில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதில் அக்சயா ஜென்சி ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அடிக்கடி ஆவி பிடிப்பது வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் ஆஸ்துமா நோய்க்காக அவரின் பெற்றோர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில்…. ஆடிமாத களப பூஜை…. இந்த தேதி வரை நடைபெறும்….!!

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆடிமாத களப பூஜை சிறப்பாக நடைபெற்று வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தொடக்கத்தில் கற்கடக ஸ்ரீபலி விழா நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. அதன்படி இந்த ஆண்டு ஆடி மாதம் தொடங்கியதை முன்னிட்டு கற்கடக ஸ்ரீபதி விழா நடைபெற்றது. இதனையடுத்து கோவிலில் நடைபெறும் நித்திய காரியபூஜைகள் முடிவு பெற்ற பின் மாலை 6.30 மணிக்கு மேல் ரிஷப வாகனத்தில் சிவபெருமானையும், கருட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மண்வெட்டியால் தாக்கிய வாலிபர்…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

முன்விரோதம் காரணமாக தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செறுகோள் அப்பட்டுவிள பகுதியில் ரங்கசாமி என்பவர் கூலித் தொழிலாளியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு ரஞ்சிதம் என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் இருக்கின்றனர். இவர்களுக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கிருஷ்ணனுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. எனவே இரு வீட்டாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கிருஷ்ணனின் மகன் சுபாஷ் மண்வெட்டியால் ரங்கசாமியை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறத. இதில் ரங்கசாமிக்கு பலத்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

படகு கவிழ்ந்து விபத்து…. மீனவருக்கு நேர்ந்த சோகம்…. சமூக வலைதளங்களில் பரவும் காட்சிகள்….!!

படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் உயிரிழந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேங்காப்பட்டணம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த 17ஆம் தேதி படகில் மீன்பிடிக்க சென்று விட்டு மாலை வேளையில் துறைமுகத்தில் நுழைவதற்கு முயற்சி செய்தனர். அப்போது அவர்கள் துறைமுக முகத்துவார பகுதியில் வந்தபோது ராட்சத அலையில் படகு கவிழ்ந்து விட்டது. இதனால் 6 மீனவர்கள் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் இனையம்புத்தன்துறையை சேர்ந்த ஆன்டனி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இந்த ஆண்டுகளுக்கான வகுப்புகள்…. மீண்டும் திறந்தாச்சு…. சமூக இடைவெளியுடன் மாணவ- மாணவிகள்….!!

அரசு தொழிற் பயிற்சி நிலையம் திறக்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சிமுறையில் வகுப்புகள் நடைபெற்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன்படி ஐ.டி.ஐ.மாணவர்களுக்கு இந்த ஆண்டுகளுக்கான வகுப்புகள் தொடங்குவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையம் திறக்கப்பட்டு செய்முறை வகுப்புகளில் நடைபெற்றது. அதன்பின் சுமார் ஆறு மாத இடைவெளிக்குப் பின் மாணவ-மாணவிகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பகவதி அம்மன் கோவில்” நடைபெற்ற வாஸ்து நிகழ்ச்சி…. கோவில் நிர்வாகிகளின் தகவல்….!!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வாஸ்து பார்க்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால் கோவிலின் கருவறை மேற்கூரைகள் முழுவதும் எரிந்து நாசமானது. இதனையடுத்து கோவிலில் இரும்பிலான தற்காலிக மேற்கூரைகள் அமைத்து தேவப்பிரசன்னம் பார்த்து முதல் பரிகாரமாக மிருத்யுஞ்சய ஹோமம் நடைபெற்றது. அதன்பின் வாஸ்து பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது சுசீந்திரம் பிரதீபன் நம்பூதிரி கோவிலில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்” மொத்தம் 23 இடங்களில்…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 23 முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 39 ஆயிரத்து 280 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் 23 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இதில் நாகர்கோவில் கவிமணி அரசு பள்ளி மற்றும் குழித்துறை அரசு மருத்துவமனையில் வெளிநாடு செல்பவர்களுகான 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனையடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஆடிமாதம் முன்னிட்டு” நாகராஜா கோவிலில் வழிபாடு…. பக்தர்களின் கோரிக்கை….!!

ஆடி மாதத்தை முன்னிட்டு நாகராஜா கோவிலில் பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.  தமிழகத்தில் கொரோனா படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆடிமாதம் பிறந்ததை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்கள் உட்பட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் பெரும்பாலானோர் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். எனவே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அன்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறி…. குடும்பமாக திரண்டு வந்தாங்க…. விளையாடி மகிழ்ந்த சிறுவர்- சிறுமிகள்….!!

ஊரடங்கும் தளர்வுகளை மீறி சுற்றுலா தலங்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்கள் மற்றும்  பொழுதுபோக்கு பூங்காக்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. எனவே தற்போது ஊரடங்கி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் பூங்காக்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் கொரோனா பரவல் காரணமாக வீட்டிலேயே இருந்த பொதுமக்கள் தற்போது சுற்றுலா தலங்களுக்கும் செல்ல தொடங்கி இருக்கின்றனர். இதனால் கன்னியாகுமரி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ராட்சத அலைகள் வந்துட்டு…. அதான் யாரும் போகல…. வெறிசோடி காணப்பட்ட மீன்சந்தை….!!

கடல் சீற்றம் காரணமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கன்னியாகுமரியில சின்னமுட்டத்தை தங்குதளமாக கொண்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை வைத்து மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதேபோன்று கன்னியாகுமரி வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், புதுகிராமம், சிலுவை நகர், கீழமணக்குடி, பள்ளம் போன்ற பல்வேறு  கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேல் உள்ள வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். அதன்படி மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுவிட்டு காலை 8 மணிக்கு கரை திரும்புவர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க…. நடவடிக்கை எடுத்தாச்சு…. அமைச்சரின் தகவல்….!!

மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செறுகோல் கிராம நிர்வாக அலுவலகம் முதல் புதுவீட்டுவிளை வரை 2 1/2 கி.மீ நீளத்தில் தமிழ்நாடு கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலைகள் அமைக்கப்பட இருக்கின்றது. இந்த பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கிவைத்து நிருபர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அப்போது இந்த மாவட்டத்தில் ஏ.வி.எம். கால்வாய் கடலோர மக்களின் பாதுகாப்பு அரணாகவும், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சபையார் குளத்தில் இருந்த முட்புதர்கள்…. கலெக்டரின் தூய்மை பணி…. பொதுமக்களின் பாராட்டு….!!

சபையார் குளத்தில் முட்புதர்களை கலெக்டரும் சேர்ந்து அகற்றியதால் பொதுமக்கள் அவரை பாராட்டியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கரியமாணிக்கபுரம் சபையார் குளத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்படி கூட்டு துப்புரவு பணி நடைபெற்றது. இந்த பணியினை கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்ததோடு தானும் மண்வெட்டி எடுத்து முட்புதர்களை வெட்டி அகற்றினார். அவருடன் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் மற்றும் மாநகர நல அதிகாரி கிங்சால் போன்றோரும் துப்புரவு பணிகளை மேற்கொண்டனர். இதனையடுத்து புதர்களை வெட்டி அகற்றியதும் கலெக்டர் அரவிந்த் மரக்கன்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ரயில்வே நிலையம்” எல்லாம் சரியா நடைபெறுதா…. கோட்ட மேலாளரின் ஆய்வு….!!

ரயில்வே நிலையத்தில் கோட்ட மேலாளர் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ரயில் நிலையத்தில் விரிவாக்கம் மற்றும் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனை திருவனந்தபுரம் கோட்ட மேலாளர் முகுந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் நடைமேடை, இருக்கைகள், பயணிகள் ஓய்வு அறை, பாதுகாப்பு அறை போன்றவற்றையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும் இடம், தட்கல் டிக்கெட் எடுக்கும் இடம் போன்றவற்றையும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

படகு கவிழ்ந்து விபத்து…. மீனவருக்கு நேர்ந்த சோகம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

ராட்சத அலையால் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேல்மிடாலம் பகுதியில் சர்ஜீன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் இணையம்புத்தன்துறை சேர்ந்த தாசன் மகன் ஆன்டனி பிரிட்டன் ராஜா, தேங்காய்ப்பட்டணத்தை சேர்ந்த வினித், முள்ளூர்துறையைச் சேர்ந்த ஷைஜீ, இணையம்புத்தன்துறையை சேர்ந்த மரியதாசன் உட்பட 7 பேர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் மீன்பிடித்து விட்டு மாலை வேளையில் கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது தேங்காப்பட்டணம் துறைமுகத்தின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேரப்பிள்ளைகள் மிரட்டுறாங்க…. மண்ணெண்ணெய் கேனுடன்முதியவர்கள்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

பேரப்பிள்ளைகள் வீட்டை கேட்டு மிரட்டுவதாக முதியவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி இறச்சகுளத்தில் மருதப்பன்- சரஸ்வதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்றுகொண்டு திடீரென தீ குளிப்பதற்காக மண்ணெண்ணெய் கேன் மூடியை கழற்றி கொண்டிருந்தனர். அதனைக் கண்ட காவல்துறையினர் சரஸ்வதி கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் சரஸ்வதியிடம் நடத்திய […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த வேதனையில்…. முதியவரின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மனைவி இறந்த மன வேதனையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி அருகில் துரைசாமி என்பவர் தொழிலாளியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்திரை கனி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 பிள்ளைகளும் இருக்கின்றனர். இந்தப் பிள்ளைகள் அனைவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதில் சித்திரை கனி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால் துரைசாமி தன்னுடைய மகன் […]

Categories

Tech |