கள்ளக்காதல் பிரச்சனையில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள ராமனாதிச்சன்புதூர் பகுதியில் அஜய் ஜான்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஷாலினி என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் ஷாலினி மீண்டும் கர்ப்பம் அடைந்ததால் வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டிருந்த ஜான்சன் 4 வருடங்களுக்கு முன்பாக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதன்பின் வெளிநாட்டிற்கு செல்லாமல் இங்கே தொழிலாளியாக வேலை பார்த்து […]
