கார் முட்புதருக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடக்கு தாமரை குளத்தில் இருந்து கீழ மணக்குடி நோக்கி சொகுசு கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது. இந்த கார் ஆண்டிவிளை பகுதியில் வைத்து உப்பள சூப்பிரண்டு அலுவலகத்தில் நிலைத்தடுமாறி சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. அதன்பின் கார் மதில் சுவரை உடைத்து கொண்டு சுமார் 200 மீட்டர் தூரமுள்ள முட்புதருக்குள் விழுந்து கவிழ்ந்துவிட்டது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் கார் கண்ணாடியை உடைத்து படுகாயம் […]
