Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறு…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

குடும்ப தகராறில் கணவன் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகில் கோணம்குருசடி பகுதியில் டென்னிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் டென்னிஸுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக இவருடைய  மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து டென்னிஸ் தனது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மணவாளக்குறிச்சி அருகே கல்லடிக்குறிச்சி பகுதியில் சுதர்சனம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 20 வயதுடைய ஸ்ரீஜி என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீஜி ஒரு வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் சாத்தன்விளை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது ஸ்ரீஜியின்  மோட்டார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அ.தி.மு.கவில் இணைந்த தி.மு.க கவுன்சிலர்கள்…. அதிர்ச்சியில் வட்டாரங்கள்…!!

தி.மு.க கவுன்சிலர்கள் 2 பேர் அ.தி.மு.க கட்சியில் இணைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பகுதியில் 4-வது வார்டு கவுன்சிலராக சகாய சுஜிதாவும், 5-வது வார்டு கவுன்சிலராக சுரேஷ் குமாரும் உள்ளனர். இவர்கள் தி.மு.க கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார். இந்நிலையில் சகாய சுஜாதாவும், சுரேஷ்குமாரும் அ.தி.மு.க கட்சியில் இணைந்துள்ளனர். இவர்கள் கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் முன்னிலையில் அ.தி.மு.க கட்சியில் இணைந்தனர். அப்போது ஊராட்சி துணைத் தலைவர் விஜயகுமார், ஒன்றிய கழக செயலாளர் ஜெசீம் ஆகியோர் உடனிருந்தனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற முதியவர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிரேன் மோதிய விபத்தில் சாலையில் நடந்துசென்ற  முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் இருக்கும் மாங்கரை பகுதியில் ‌ சுரேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் சூப்பிரண்டாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் கடைக்கு செல்வதற்காக சாலையோரமாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த கிரேன்  முதியவரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
Uncategorized கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாணவியை ஏமாற்ற… லாட்ஜ்ஜில் ரூம் போட்ட கலை..! வசமாக சிக்கி கம்பி என்னும் சேலம் வாலிபர்…!!

மார்த்தாண்டம் அருகே 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம்  செய்த  வாலிபர் போக்சோ  சட்டத்தில் போலீசார்  கைது  செய்தனர்.  மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியில் வசித்து  வரும்  மாணவி ஒருவர். அந்த பகுதியில் உள்ள  பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியின் ஆன்லைன் வகுப்பிற்காக பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால் அந்த மாணவி கல்விக்காக செல்போனை பயன்படுத்தாமல் தவறாக பயன்படுத்தியுள்ளார். அதாவது சேலம் மாவட்டம் எடப்பாடி மேட்டு தெருவில் வசித்து வரும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

செல்போனால் வந்த விளைவு…. மாணவிக்கு நேர்ந்த விபரீதம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ்  கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி செல்போன் மூலமாக படித்து வந்துள்ளார். இவருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கலையரசன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு கலையரசன் ஒருநாள் மாணவியிடம் உன்னை சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு மாணவியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கலையரசன் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு மாணவியை வருமாறு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மொபைல் ஷோரூம் அமைத்துத் தருகிறோம்…. “7 3/4லட்ச ரூபாயை இழந்த என்ஜினியர்”…. விசாரணையில் போலீசார்…!!

இணையதளம் மூலமாக 7 3/4 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் பெருவிளையில் ஆல்பர்ட் செல்வ ஸ்டாலின் [வயது 22] என்பவர் வசித்து வருகிறார். இவர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆல்பர்ட் செல்வ ஸ்டாலின் செல்போன் கடை வைக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து இவர் ஒரு பிரபல செல்போன் கம்பெனியில் இணையதள முகவரியில் இது தொடர்பாக விண்ணப்பித்துள்ளார். அதன்பிறகு அந்த நிறுவனத்தின் மேலாளர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகை” பாதுகாப்பு பணிகள் தீவிரம்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகிறார். இவர் நாகர்கோவில் மாநகராட்சியில் நடைபெறும் சாலை பணிகளை பார்வையிடுவதற்காகவும்,வெள்ள சேத சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக வருகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து இவர் நாளை கன்னியாகுமரிக்கு வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு அவர் தங்கியிருக்கும் அரசினர் விருந்தினர் மாளிகைகள் பாதுகாப்பு பணிகள் ஒழுங்கான முறையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சொந்தமான இடங்கள்…. ஆக்கிரமிக்கும் தனி நபர்கள்…. மீட்பு பணியில் கோவில் நிர்வாகம்…!!

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான பல இடங்கள், நஞ்சை, புஞ்சை நிலங்கள்  ஆகியவை தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது என தகவல் வந்தது. இந்த இடங்களை மீட்கும் பணியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டது தெரியவந்தது. எனவே தாளக்குடி‌ பகுதியில் இருக்கும் திருக்கோயிலுக்கு சொந்தமான அந்த இடத்தை திருக்கோவிலின் இணை ஆணையர் குமாரவேல் தலைமையில் ஒரு குழு சென்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பாஜக வேட்பாளர்கள்” அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம்…. குமரியில் பரபரப்பு…!!

பா.ஜ.க வின் 2 வேட்பாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க வின் சார்பாக அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கட்சியின் அறிவிப்பை மீறி பா.ஜ.க கட்சியின் 2 வேட்பாளர்கள் அவர்களை எதிர்த்து மறைமுகத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் காரணமாக குமரி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

டெம்போ மீது மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

டெம்போ மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கருங்கோடு பகுதியில் இருக்கும் பாலபள்ளத்தில் அருண் சஞ்சு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நடைக்காவு பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது  அவ்வழியே வேகமாக வந்த டெம்போ அருண் சஞ்சுவின்  மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் அருண் சஞ்சீவ் படுகாயமடைந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பழிவாங்கும் எண்ணத்தோடு வழிப்பறி” வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் பகுதியில் இருக்கும் செருப்பாலூரில் நாராயண பிள்ளை என்ற முதியவர் வீதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த 2 வாலிபர்கள் முதியவரை மிரட்டி அவரிடமிருந்த 550 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து முதியவர் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களையும் வலை வீசித் தேடி வந்தனர். அந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில்…. சிறப்பாக நடைபெற்ற வலியபடுக்கை பூஜை…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சிறப்பாக நடைபெற்ற வலியபடுக்கை பூஜையில் ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் மாசிதிருவிழா கடந்த 17-ஆம் தேதி தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள், சாமி வீதி உலா, சமய மாநாடு, சிறப்பு ஆராதனைகள் போன்றவைகள் அம்மனுக்கு நடைபெற்றது, இதைத்தொடர்ந்து நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனைகள் போன்றவைகள் நடைபெற்றது. அதன்பிறகு அம்மன் வெள்ளி பல்லக்கில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாநகராட்சியின் முதல் மேயர்…. தி.மு.க விற்கு கிடைத்த பெருமை…. செங்கோல் வழங்கி பதவி பிரமானம்…!!

தி.மு.க வேட்பாளர் மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமையுடன் பதவியேற்றுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பேரூராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள 52 வார்டுகளில் சுயேச்சை-2 ,அதிமுக-7, பாஜக-11, திமுக கூட்டணி 34 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கவுன்சிலராக பதவி ஏற்பு விழா முடிவடைந்த நிலையில் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க வேட்பாளர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மேயர் மற்றும் துணை மேயர்” 18 பேரூராட்சிகளில் வெற்றி…. அசத்திய தி.மு.க…!!

தி.மு.க கட்சி  18 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் மயிலம் பகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இது தவிர மீதமுள்ள 50 பேரூராட்சிகளிலும் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் 18 இடங்களில் தி.மு.க வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அகத்தீஸ்வரம் பகுதியில் தலைவராக திமுகவைச் சேர்ந்த அன்பரசி என்பவரும், துணைத் தலைவராக அ.தி.மு.க வைச் சேர்ந்த சரோஜா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“காணாமல் போன கவுன்சிலர்கள்” அதிர்ந்து போன கழகம்…. இறுதியில் ஒத்திவைப்பு…!!

போதுமான‌ அளவு கவுன்சிலர்கள் வராததால் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மயிலம் பகுதியில்‌ 15-வார்டுகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுயேட்சை-3, அ.தி.மு.க-4, திமுக- 2, பா.ஜ.க-5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த பகுதியில் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெறவிருந்தது. இந்தத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, பாஜக என 3 கட்சிகளும் போட்டியிட்டுள்ளனர். இவர்கள் தங்களுக்கு ஆதரவாக கவுன்சிலர்களை திரட்டியுள்ளனர். அப்போது சுயேச்சை கவுன்சிலர் சிவசங்கர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பேரூராட்சியின் தலைவர்” 8 இடங்களில் பா.ஜ.க…. சிறப்பாக நடைபெற்ற பதவியேற்பு விழா…!!

பாரதிய ஜனதா கட்சி  8 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி  பகுதிகளான வெள்ளிமலை-15, வில்லுக்குறி-15, தென்தாமரைகுளம்-15, புதுக்கடை-15, மண்டைக்காடு-15, கணபதிபுரம்-15 இடைக்கோடு-18, இரணியல்-15 இடங்களில் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற  வேட்பாளர்கள் கவுன்சிலராக பதவியேற்ற நிலையில், தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது.  இந்த 8 பேரூராட்சிகளிலும் நடைபெற்ற தலைவர் போட்டியில் பாரதிய ஜனதா கட்சியினர் வெற்றி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற தேர்தல்…. பொறுப்புடன் பதவியேற்ற தலைவர்…!!

தி.மு.க பெண் கவுன்சிலர் நகராட்சியின் முதல் தலைவர் என்ற பெருமையுடன் பதவியேற்றுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு பகுதியில் நகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தப் பகுதியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. இதில் தே.மு.தி.க-1, அ.தி.மு.க-1, பா.ஜ.க-5, காங்கிரஸ்-6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-10, தி.மு.க-10 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. அதன்பிறகு நடைபெற்ற நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்தலில் தலைவர் போட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

2 வருடங்களுக்கு பிறகு அனுமதி…. பால் மற்றும் மஞ்சள் ஊற்றி வழிபாடு…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

கொரோனா பரவல் குறைந்ததால் நாகராஜா கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் புகழ்பெற்ற நாகராஜா திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல கடந்த 2 வருடங்களாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால்  மீண்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கோவிலுக்கு சாமி  செய்வதற்காக சென்றுள்ளனர். இந்த கோவிலில் இருக்கும் நாகர் சிலைகளுக்கு பால் மற்றும் மஞ்சள் ஊற்றி வழிபட்டனர். மேலும் இந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடன் தொல்லையால்…காய்கறி வியாபாரி எடுத்த விபரீத முடிவு…சோகத்தில் குடும்பத்தினர்…!!

காய்கறி வியாபாரி கடன் தொல்லையால் விஷம்  குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகில் காட்டாத்துறை பருத்திக்கோட்டவிளை பகுதியில் காய்கறி வியாபாரியான கிறிஸ்டோபர்(47) என்பவர் வசித்து வந்தார். இவர் மனைவி ராஜினி(41). கிறிஸ்டோபர் நிறைய பேரிடம் கடன் வாங்கி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டார். இதனால் மனமுடைந்த கிறிஸ்டோபர் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“என் பொண்ண காணும்” தாயை கதறவிட்ட மகள்…. காதலனுடன் போலீசில் தஞ்சம்….!!

குலசேகரத்தில் காணாமல் போன கல்லூரி மாணவி காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்  அடைந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் காணாமல் போன கல்லூரி மாணவி காதலனுடன் காவல்நிலையம்  வந்து சேர்ந்துள்ளார். தன் மகளை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று முன்னாள் கவுன்சிலரான மாணவியின் தாய் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் கூறியதாவது, குலசேகரம் அருகில் கொல்லாறை கைதகல் காலனியில் தசரதன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மனைவி உஷா திற்பரப்பு பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலர். தற்போது நடந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

” காலில் இருந்த புண் ” முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூக்குமாட்டி முதியவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் அருகில் தோட்டன்விலை பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள்  இருக்கின்றனர். இந்நிலையில் ரவிக்கு நீண்ட நாட்களாக காலில் புண் இருந்துள்ளது. இந்த காலில் இருந்த புண்ணிற்கு பல்வேறு சிகிச்சைகள் அவர் செய்து வந்துள்ளார். ஆனால் எந்தவித பயனும் அளிக்கவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த ரவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் அறையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

துணி தைக்கும் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிச்சந்தை பகுதியில் செதுஊர் கிராமத்தில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துணி தைக்கும் தொழிலாளியாக இருந்து வந்துள்ளார். இந்தத் தொழில் சரியாக நடக்காததால் இவர் மளிகை கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் தர்மலிங்கம் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த தர்மலிங்கம் தனது உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வெள்ளிச்சந்தை பகுதியில் வடக்கு கோணத்தில் அருள் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெம்போ ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் அருள் பிரபு உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர் சாந்தபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே வெட்டூர்ணிமடம் பகுதியில் வில்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வேலைக்காக கன்னியாகுமரிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திரும்பி வரும் வழியில் எதிர்பாராத விதமாக அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வில்சனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நீண்ட நேரமாக கதவை திறக்காத கணவன்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பகுதியில் ரவீந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஸ்ரீகுமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனையடுத்து ரவீந்திரனும் அவரது மனைவியும் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளனர். கடந்த மாதம் 27-ஆம் தேதி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது அறைக்கு ரவீந்திரன் தூங்குவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முன்னால் அமைச்சரை விடுதலை செய்யவேண்டும்…. அ.தி.மு.க வினர் போராட்டம்…. குமரியில் பரபரப்பு…!!

முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அ.தி.மு.க வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்த போராட்டத்தில் அ.தி.மு.க கட்சியை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் அவர்கள் செய்தியாளர்களிடம் இரணியல் மற்றும் குழித்துறை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. கன்னியாகுமரியில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வெட்டூர்ணிமடம் பகுதியில் வில்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் முடித்துவிட்டு கட்டிட தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வில்சன் மோட்டார் சைக்கிளை கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனமும் வில்சன் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வில்சனை அருகில் இருந்தவர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அவர் மீது நடவடிக்கை எடுக்கனும்” பள்ளி மாணவிக்கு நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

பள்ளி மாணவி திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முட்டம் பகுதியில் பிரிமோஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாக கூறிச் சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் பதற்றமடைந்து அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இதனால் மாணவியின் தந்தை பிரிமோஸ் வெள்ளி சந்தை காவல்நிலையத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எல்லையில் சிக்கி தவிக்கும் மாணவர்கள்…. பதற்றத்தில் பெற்றோர்கள்…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தங்களது பிள்ளைகளை மீட்குமாறு பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். ரஷ்யாவிற்கு உக்ரைனுக்கும்  இடையே போர் நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அங்கு படிக்கும் தமிழக மாணவர்கள் பதுங்கு குழிகளிலும், கடும் குளிரிலும் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் சில மாணவர்களை அரசு இந்தியாவிற்கு மீட்டு வந்துள்ளது. தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருங்கல் பகுதியில் வசிக்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுபநிகழ்ச்சிக்கு சென்ற பெற்றோர்…. கல்லூரி மாணவியின் விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள உதச்சிகோட்டை பகுதியில் ஹென்றிதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அகிலா என்ற மகள் உள்ளார். இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அகிலாவின் பெற்றோர் ஒரு சுப நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டனர். அப்போது அகிலா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனையடுத்து பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  குமரி மாவட்டத்திலுள்ள மணவாளக்குறிச்சி பகுதியில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த  மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.  அந்த சோதனையில் அவர்கள் சட்டவிரோதமாக  1.100 கிலோ கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் 3 பேரிடமும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் வர்த்தக நாடார் குடியிருப்பு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனவேதனையில் இருந்த கட்டிட தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பஞ்சரவிளை பகுதியில் ஜெஸ்டின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு முன் மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் ஜெஸ்டின் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் ஜெஸ்டினின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று 2 குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் மன வேதனையிலிருந்த ஜெஸ்டின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு வெளியே சென்ற கொத்தனார்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சேக்கல் பகுதியில் ஜெஸ்டின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சோனியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக ஜெஸ்டின் வாழ்க்கையில் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெஸ்டின் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் ஜெஸ்டினின் உறவினர்கள் அவரை பல்வேறு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காணாமல் போன தொழிலாளி… குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு பகுதியில் கூலி தொழிலாளியான ஜெஸ்டின் என்பவர்  வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெஸ்டின் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் வேலைக்கு சென்ற  ஜெஸ்டின் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அவரை பல இடங்களில் தேடியுள்ளார். அப்போது ஜெஸ்டின் அதே பகுதியில் இருக்கும் ஒரு கல்லறை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுப நிகழ்ச்சிக்கு சென்ற பெற்றோர்…. மகள் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

மாணவி  தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள உதச்சிக்கோட்டை பகுதியில் ஹென்றிதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அகிலா என்ற மகள் இருந்துள்ளார். இவர் மார்த்தாண்டத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அகிலாவின் பெற்றோர் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். அப்போது அகிலா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனையடுத்து சுப நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இங்கிருந்து ரஷ்யா 40 கி.மீ தூரம் தான்” பதுங்கு குழியில் தவிக்கும் மாணவர்கள்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை….!!

உணவு, தண்ணீர் இல்லாமல் பதுங்கு குழிகளில் தவிக்கிறோம் என உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நட்டாலம் கீழ்விளையை சேர்ந்த ஜெயின்ஸ் என்ற மருத்துவ மாணவர் உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கிறார். அவருடன் ஸ்டெனிபர் ஜான், பபின், அஜ்மல் அலி போன்ற மாணவர்களும் தங்கியுள்ளனர். இந்நிலையில் ஜெயின்ஸ் தனது அண்ணனுக்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறியதாவது, நாங்கள் தங்கியிருக்கும் பகுதியை சுற்றிலும் போர் நடக்கிறது. இதனால் எப்போதும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெண் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு…. கணவரின் வெறிச்செயல்….. போலீஸ் விசாரணை….!!

வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இறச்சகுளம் அருள் ஞான புரம் பகுதியில் அஜீஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வழக்கறிஞரான சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை சாந்தி தனது ஸ்கூட்டரில் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் இறச்சகுளம் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்த […]

Categories
Uncategorized கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனை…. 3 வாலிபர்கள் கைது…. காவல்துறை அதிரடி….!!

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற மூன்றுபேரை காவல்துறையினர் கைது செய்தனர். ராஜாக்கமங்கலம் அண்ணா காலனியில் வசித்து வரும் மாரிமுத்து(26), சுசீந்திரம் மறுகால்தலையை சேர்ந்த குட்டி(22), வர்த்தக நாடார் குடியிருப்பை சேர்ந்த சகாயகவின் ஆகிய 3 பேரும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுதொடர்பாக மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர் மண்டைக்காடு புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது இவர்கள் மூன்று பேரையும் பிடித்ததாகவும் இவர்களிடமிருந்து 1கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

” ஓகே ” சொன்ன கலெக்டர்…. ஆப்புவைத்த போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்…!!

குண்டர் சட்டத்தின் கீழ் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் காவல்நிலையத்தில் சதயா, மதுரை வீரன், ஐயப்பன் ஆகிய 3 பேர் மீதும் ஒரு கொலை வழக்கு பதிவாகி இருந்தது. இந்நிலையில்  இவர்கள் மூன்று பேரையும் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இவர்கள் தொடர்ந்து பல குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் காவல்துறையினர் அவர்களை பலமுறை எச்சரித்துள்ளனர். அனால் அவர்கள் மூன்று பேரும் அதை காதில் வாங்கி கொள்ளாமல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வில்லுக்குறி பகுதியில் தொழிலாளியான ஆல்பர்ட் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆல்பர்ட் தனது மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம்- தேங்காப்பட்டணம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஆல்பர்ட் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆல்பர்ட் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர். இதனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சண்டை போட்டதால் வந்த காயமா….? நகர முடியாமல் சிரமப்படும் யானை…. வனத்துறையினரின் முயற்சி…!!

காயத்துடன் சிரமப்படும் காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க வனத்துறையினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் டாப்சிலிப்-பரம்பிக்குளம் புலிகள் காப்பக எல்லையில் நின்று கொண்டிருந்த ஒரு யானையின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நடக்க முடியாமல் அந்த யானை ஒரே இடத்தில் நின்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த யானைக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கம்பீரமான பத்மநாபபுரம் அரண்மனை… விடுமுறை நாளில் … குவிந்த சுற்றுலா பயணிகள் ..!!

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக குவிந்துள்ளனர். தக்கலை அருகே பத்மநாபபுரம் அரண்மனை சுமார் 3 1/2 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. இந்த அரண்மனையில் ஒவ்வொரு அறையும் விலை உயர்ந்த மரங்களால் கலைநயத்தோடு கட்டப்பட்டுள்ளது. அவ்வாறு கட்டப்பட்ட அறைகள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. பத்பநாபபுரம்   அரண்மனையின் தரைப்பகுதி சுட்ட சுண்ணாம்பு சிரட்டை கரி, கடுக்காய் ,முட்டை  போன்றவற்றால்   அமைக்கப்பட்டுள்ளதால் பளிங்கு  கல்போன்று காட்சியளிக்கிறது . அந்த அரண்மனையின் அழகையும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரயில் மோதி கட்டிட தொழிலாளி பலி…. மது போதையில் தண்டவாளத்தை கடந்தாரா….? போலீஸ் விசாரணை….!!

குழித்துறை ரெயில் நிலையத்தில் மது அருந்தி விட்டு தண்டவாளத்தை கடக்க முயன்ற கட்டிடதொழிலாளி  பலி. கன்னியாகுமரி  மாவட்டத்தில்  அருவிக்கரை அருகே  உள்ள மாத்தூர் பகுதியில்  வசித்து  வருபவர்  சுஜர்சிங் (வயது 45).   இவருக்கு பிந்து என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும்  உள்ளனர்.  இவர் கேரள மாநிலம் திருவல்லாவில் தங்கி கட்டிட வேலை  பார்த்து  வந்துள்ளார். வாரத்தின் இறுதி நாட்களில் கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்த சுஜர்சிங் கடந்த 26ஆம் தேதி தனது நண்பர்களுடன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசவத்திற்கு சென்ற காதல் மனைவி…. வீட்டிற்கு வராததால் சோகம்…. கணவனின் விபரீத முடிவு….!!

காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாக்குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகில் குற்றியாறு பகுதியில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன்(29) இவர் மனைவி நிஷா. இவர்  பூக்கட்டும் தொழில் செய்து வருகிறார். இவர்கள் 2 பேரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர்  நிஷா பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பிரசவத்திற்குப் பின்பும் நிஷா தன் தாய் வீட்டில் தங்கியிருந்தார். இதனால் மன […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடைபெற்ற சோதனை…. கிலோகணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் ஹசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிரமாக சோதனை செய்துள்ளனர். அப்போது வீட்டிற்குள்  ஹசன் 25 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து புகையிலை பொருட்களை காவல்துறையினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோணம் பகுதியில் இருந்து தேரூர் செல்லும் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அம்மன் கோவில் அருகில் சந்தேகப்படும்படியாக இரண்டு பைகளுடன் நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் தட்டான்விளை பகுதியில் வசிக்கும் பாபு, சுரேஷ் மற்றும் குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கணவருக்கு மருந்து வாங்க சென்ற பெண்…. பேருந்தில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை திருடி சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தொலையாவட்டம் கோட்டவிளை பகுதியில் கூலி தொழிலாளியான ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏஞ்சல் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட ராமனுக்கு மருந்து வாங்குவதற்காக ஏஞ்சல் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு ஏஞ்சல் பேருந்தில் சென்றுள்ளார். அதன்பின் தொலையாவட்டம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய டெம்போ….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. குமரியில் பரபரப்பு…!!

டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் கோழி இறைச்சி கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கணேசபுரத்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் முருகன் தனது நண்பரான சுப்பிரமணியன் என்பவருடன் கடைக்கு தேவையான கோழிகளை வாங்குவதற்காக டெம்போவில் பணகுடி நோக்கி சென்றுள்ளார். இந்த டெம்போவை எப்சன் ராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் வெள்ளமடம் கிறிஸ்து நகர் பகுதியில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்ற தாய்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு கிருஷ்ணன் கோவில் பகுதியில் எலக்ட்ரீசியனான விபின் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக விபினின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். மேலும் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான விபினை அவரது தாயார் சுகுமாரி கண்டித்துள்ளார். இந்நிலையில் பெங்களூருவில் வசிக்கும் மகளை பார்ப்பதற்காக சுகுமாரி சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த விபின் வீட்டில் தூக்கிட்டு […]

Categories

Tech |