Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஹிஜாப் தடை” முஸ்லீம் மாணவிகள் போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!

முஸ்லீம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே திருவிதாங்கோட்டில் முஸ்லிம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் திடீரென நேற்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கர்நாடகத்தில் ஹிஜாப்பிற்கு  விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். மேலும் ஹிஜாப் தடையை எதிர்த்து கையில் பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் போராட்டம் நடத்தினார்கள்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. 340 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக  புகையிலை பொருட்கள் கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அருகே கண்ணுபொத்தை ரயில்வே பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். அதில் ஒருவர் கொண்டுவந்த மூட்டைகளை கீழே தள்ளி விட்டு தப்பித்து சென்றார். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் அதில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 340 கிலோ இருந்தது. இதை பறிமுதல் செய்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முதியவருக்கு கொலை மிரட்டல்…. வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி…!!

முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அஞ்சுகிராமம் அருகே மயிலாடி பகுதியில் டேவிட் (60) என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் அஜித் (25) என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் அஜித்துக்கும், டேவிட்டுக்கு இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக 2 பேருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டேவிட் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின்படி  அஜித் மற்றும் டேவிட்டை காவல்துறையினர் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குப்பை கிடங்கில் தொடர்ந்து எரியும் தீ…. தீயணைப்பு வீரர்களின் கடுமையான போராட்டம்…. மேயர் ஆய்வு…!!

குப்பைகள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தில்  மீண்டும் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில்  மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு ஒன்று உள்ளது. இந்த குப்பை கிடங்கில் கடந்த 18-ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து 2 நாட்களாக கடுமையாக போராடினார்கள். அதன்பிறகு நேற்று முன்தினம் தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் நேற்று அதிகாலை மீண்டும் தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சிராயன்குழி பகுதியில் இன்ஸ்பெக்டர் தாஸ் தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த லாரியை காவல்துறையினர் மறித்து சோதனை செய்தனர். அதில் செம்மண் இருந்தது தெரியவந்தது. இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் சட்டநாதபுரம் பகுதியைச் சேர்ந்த அருள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அருளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அடிக்கப்பட்ட அலாரம்” அதிர்ச்சியடைந்த காவலாளி…. போலீஸ் வலைவீச்சு…!!

செல்போன் டவர் பேட்டரிகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அஞ்சுகிராமம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் ஒன்று உள்ளது. இங்கு ராஜ் என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த செல்போன் டவர் கதவை யாராவது திறந்தால் உடனே ராஜ் கைப்பேசிக்கு  அலாரம் அடிக்கும். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்போன் டவரின் அறையை மர்ம நபர்கள் சிலர் திறந்துள்ளனர். அப்போது ராஜ் கைபேசிக்கு அலாரம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ் செல்போன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“என்னுடைய பணத்தை கொடு” கொடூரமான முறையில் தாயை கொன்ற மகன்…. பெரும் பரபரப்பு…!!

கொடூரமான முறையில் தாயை கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செப்பபள்ளிவிலை பகுதியில் தேவராஜ்-சரோஜினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சரோஜினி மாற்றுத்திறனாளி ஆவார். இவர்களுக்கு விஜயன் என்ற மகன் இருக்கிறார். இவர் பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர்.இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதன்காரணமாக  விஜயனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்  விஜயன் மனைவியை பிரிந்து தாய் தந்தையுடன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள்” தொடர்ந்து அரங்கேறும் கொடூரம்…. குமரியில் பரபரப்பு…!!

வெடிமருந்து வெடித்ததில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‌ கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தாமொழி அருகே தர்மபுரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மரப்பட்டரை  வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மாமியார் ராமலட்சுமி பட்டாசு தயாரிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஏற்பட்ட பட்டாசு விபத்தில் மாணவி பலியானார். இதுதொடர்பாக ராமலட்சுமி உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் ராஜேந்திரன் பட்டாசுகளை தன்னுடைய வீட்டின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மரத்தை வெட்டிய தொழிலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே கீழ்பம்பம் பெற்றவிலை பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மகள் இருக்கின்றனர். இந்நிலையில் சங்கர் வீட்டின் அருகே இருக்கும் பப்பாளி மரத்தை வெட்டியுள்ளார். இதனையடுத்து வெட்டிய மரத்தை வெளியே போடுவதற்காக தோளில் சுமந்து கொண்டு சென்றுள்ளார். அப்போது வெட்டப்பட்ட மரம் மின்வேலியின் மேல் உரசி மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொளுத்தும் கோடை வெயில்…. நீர்விழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

கோடை வெயிலின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில்  திற்பரப்பு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. தற்போது கோடை வெயில் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் இங்கு கூட்டம் கூட்டமாக வருகின்றனர். இவர்கள் அங்குள்ள தங்கும் விடுதிகளில் தங்கி காலை மற்றும் மாலை நேரங்களில் அருவியில் குளித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்துள்ளனர். இவர்கள் அருவியில் குளித்தும், படகு சவாரியும் செய்தனர். இங்கு சுற்றுலா பயணிகளின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மக்களே விருது வேண்டுமா?…. உங்களுக்கும் தகுதி இருக்கு….விரைவில் முன்பதிவு செய்யுங்க….!!!!

பசுமை சாம்பியன் விருதுக்கு தகுதியானவர்கள் மார்ச் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக்காக தங்களை முழுமனதோடு அர்ப்பணித்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் பசுமை சாம்பியன் என்ற விருதை 100 பேருக்கு வழங்க உள்ளது. மேலும் தலா 1 லட்ச ரூபாய் வீதம் பணமுடிப்பு சேர்த்து வழங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடன் வேண்டுமா?…. அதுவும் “குறைந்த வட்டி” விகிதத்தில்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

சிறுபான்மையினர் மக்களுக்கு கடன் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரசீயர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் போன்ற சிறுபான்மையினர் மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.  இவர்களுக்காக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் சிறு தொழில் கடன்கள், கறவை மாடுகள் கடன், கல்விக் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள், தனிநபர் கடன்கள் போன்றவைகள் வழங்கப்படுகிறது. இந்தக் கடன்களை பெற 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இது குடும்பத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அமாவாசை மற்றும் பௌர்ணமி” திடீரென நடக்கும் மாற்றங்கள்…. கடல் உள்வாங்கியதால் பரபரப்பு…!!

காலநிலை மாற்றத்தின் காரணமாக கடல் 50 அடி  உள்வாங்கியுள்ளது. சர்வதேச சுற்றுலா தளமாக கன்னியாகுமரி மாவட்டம் விளங்குகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். கடந்த 2004-ஆம் ஆண்டு தமிழகத்தில் சுனாமி ஏற்பட்டது. அதிலிருந்து குமரி கடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த மாற்றங்கள் குறிப்பாக அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் மட்டுமே நிகழ்கிறது. இந்த தினங்களில் கடல் சீற்றம், நீர்மட்டம் ஏற்றம் மற்றும் இறக்கம், கடல் கொந்தளிப்பு போன்றவைகள் நிகழ்கிறது. இதேப்போன்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இரயில்வே நிலையத்தில் மயங்கி கிடந்த தொழிலாளி…. மருத்துவர் கூறிய அதிர்ச்சி தகவல்…. போலீஸ் விசாரணை…!!

இரயில்வே நிலையத்தில் தொழிலாளி விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே காஞ்சாபுரம் பகுதியில் ஆல்வின்  என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டீக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 1 மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். இந்நிலையில் ஆல்வின் குழித்துறை ரயில்வே நிலையத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் நாகர்கோவில் ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஹிஜாப்பிற்கு விதிக்கப்பட்ட தடை” முஸ்லீம் அமைப்பினர் போராட்டம்…. குமரியில் பரபரப்பு…!!

முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில்உள்ள  குளச்சல் பகுதியில் முஸ்லிம் அமைப்பினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கர்நாடக மாநிலத்தில் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து போராட்டம் செய்தனர். இந்தப் போராட்டத்திற்கு அஷ்ரப் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் குளச்சல் எஸ்.டி.பி.ஐ கட்சி தலைவர் நிசார், நகர த.மு.மு.க தலைவர் ஷாகுல் ஹமீது, மாவட்ட ஒய்.எம்.ஜே செயலாளர் சேக் முகமது உள்ளிட்ட பலர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பற்றி எறிந்த தீ…. பல மணி நேர போராட்டம்…. அவதிப்படும் பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!

குப்பை குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தில  தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு உள்ளது. இங்கு குப்பைகள் மலைபோல் குமித்து வைக்கப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த குப்பை கிடங்கை மாற்றுமாறு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என பிரிக்கப்படுகிறது. அதன்பிறகு இந்த குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரமாக பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பு வேண்டுமா?…. அப்ப உடனே விண்ணப்பியுங்கள்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

பழைய தாலுகா அலுவலகத்தில் ஏழை மக்கள் குடியிருப்புக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அஞ்சுகிராமம் அருகே நியூபறக்கின்கால் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 450 வீடுகள் இருக்கிறது. தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்படி அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இதற்காக ஜோசெப் பள்ளி எதிரில் இருக்கும் பழைய தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பவர்களின் ஆண்டு வருமானம்  3 லட்சத்திற்கும் குறைவாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

லாரி டிரைவரை அரிவாளால் வெட்டி… “தங்க செயின் பறிப்பு”… ஒருவர் அதிரடி கைது… 5 பேருக்கு வலைவீச்சு..!!

லாரி டிரைவரை அரிவாளால் வெட்டி தங்கச் சங்கிலியை பறித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள எம்ஜிஆர் நகரில் லாரி டிரைவரான விஷ்ணு(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் சுசீந்திரம் அருகிலுள்ள நல்லூர் பக்கத்தில் மறு கால் தலையில் உள்ள புலமாடன் கோவில் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியில் நாகர்கோவில் ஒழுகினசேரி அவ்வைசண்முகம் சாலை பகுதியை சேர்ந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற போட்டி…. உற்சாகமாக கலந்து கொண்ட வீரர்கள்…. பரிசு வழங்கிய எம்.பி….!!

சிறப்பாக நடைபெற்ற மாட்டுவண்டி போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு  மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை வழக்கறிஞர் லட்சுமி நாராயணன், தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்தப் போட்டிக்காக பல்வேறு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்…. திடீர் போராட்டம்…. குமரியில் பரபரப்பு…!!

ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே வடிவீஸ்வரம் பகுதியில் வட்டார கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இதன் முன்பாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கடந்த 2019-ஆம் ஆண்டு ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது வழங்கப்படாத ஊழியர் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். அதன்பிறகு சம்பளத்தில் இருக்கும் முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு ஷேக் முஜிபர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உடல் கருகி பலியான மாணவி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…. பெரும் பரபரப்பு…!!

வெடிமருந்து பதுக்கி வைத்திருந்த 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறுதெங்கென்விலை பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் வெடிமருந்து தயாரிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும் தேன்மொழி, வர்ஷா என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜன் வெடிமருந்தை தன்னுடைய வீட்டில் இருக்கும் ஒரு அறையில் மறைத்து வைத்துள்ளார். அப்போது ராஜனின் மகள் வர்ஷா அங்கு  சென்ற போது திடீரென வெடி மருந்து வெடித்தது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வங்கிக்கு சென்ற மூதாட்டி…. பேருந்தில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் அருகே நல்லூர் கிராமத்தில் சந்தானம்  [82] என்பவர் வசித்து வருகிறார். இவர் சுசீந்திரம் பகுதியில் இருக்கும் ஒரு வங்கிக்கு பேருந்தில் சென்றுள்ளார். இவர் திரும்பி வரும் வழியில் பேருந்தில் மர்ம நபர் ஒருவர் சந்தானத்தின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதை மூதாட்டி கவனிக்காமல் இருந்துள்ளார். இவர் நல்லூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது கழுத்தில் இருந்த சங்கிலி காணாமல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பறக்கை மதுசூதன பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து பக்தி இன்னிசை, தோல்பாவைக்கூத்து, சமய சொற்பொழிவு, வாகன பவனி போன்றவைகளை நடைபெற்றது. இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“எனக்கு உடல்நலம் சரியில்லை” தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே புதுக்கிராமம் பகுதியில் சிங்கராயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்றும் பயனளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த சிங்கராயன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சிங்கராயனை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை…. ‘200 நாட்கள்” பாதயாத்திரையாக வந்த வாலிபர்….!!

வாலிபர் ஒருவர் பாதயாத்திரையாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியில் ஓம்கார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு புகைப்பட கலைஞர் ஆவார். இவர் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை நடந்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து 200 நாட்கள் நடந்து கன்னியாகுமரிக்கு வந்துள்ளார். இவர் இந்தியாவில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றை நடந்தே சென்று தெரிந்துகொண்டு அதை கட்டுரையாக வெளியிட வேண்டும். இதற்காக பாதையாத்திரை மேற்கொண்டதாக கூறினார்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பங்குனி உத்திர திருவிழா…. “சிறப்பு பேருந்துகள்”…. பொதுமக்களின் வசதிக்காக….!!

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று குமரி மாவட்டத்திற்கு பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவர். இதற்காக அரசு 87 சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. அதாவது நாகர்கோவில் பகுதியில் இருந்து நெல்லை மாவட்டம் சித்தூருக்கு 22 சிறப்பு பேருந்துகளும், திருச்செந்தூருக்கு 15 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து உவரி பகுதிக்கு 15 பேருந்துகளும், மதுரை மாவட்டத்திற்கு 15 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா…. வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…!!

சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே பத்மநாபபுரத்தில் பிரசித்தி பெற்ற நீலகண்ட சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு நாள்தோறும் உச்ச பூஜை, ஸ்ரீ பூதபலி, உஷபூஜை மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 9-ம் திருநாளான நேற்று சுவாமிக்கு சிறப்பான தேரோட்டம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக தந்தை செய்த தொழில்…. மகளே பலியான கொடூரம்…. குமரியில் பரபரப்பு…!!

மாணவி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜமங்கலம் அருகே ஆறுதெங்கன்விளை பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசின் அனுமதியின்றி வீட்டில் வைத்து பட்டாசு தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்‌. இவருக்கு பார்வதி என்ற மனைவியும் தேன்மொழி (13) மற்றும் வர்ஷா(10) என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். இவர்கள் வீட்டில் 2 முயல்களை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் வர்ஷா முயல் குட்டிகளுக்கு சாப்பாடு வைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உடல் நலம் சரியில்லாத ஊழியர்…. திடீரென நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே குளத்தூர் பகுதியில்  ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜேந்திரன் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். எனவே வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ராஜேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சுசீந்திரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் அரங்கேறிய கொடூரம்…. ரயில்வே தண்டவாளத்தில் சிக்கியதால் ஏற்பட்ட விபரீதம்…. குமரியில் பரபரப்பு….!!

இரயில் மோதி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே பாளையங்கட்டி பகுதியில் ரயில்வே மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியில் காயங்களுடன் ஒரு சடலம் கிடந்துள்ளது. ‌இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் நாகர்கோவில் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சீதாச்சிவிளையை சேர்ந்த ஜெபராஜ் என்பது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தாய் தந்தையின் அழுகிய சடலங்கள்…. “2 நாட்கள்” கதறிய குழந்தைகள்…. பெரும் பரபரப்பு…!!

மனைவியை கொலை செய்துவிட்டு  கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.   கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் கோட்டார் செட்டிகுளத்தில் கேசவன்-வனஜா தம்பதியினர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மஞ்சு, அக்ஷரா என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வனஜா கேசவனை பிரிந்து ஜோஸ் கான்பியர் என்பவரை 2-வது திருமணம் செய்துள்ளார். இவர் வெளிநாட்டில் மீன்பிடி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மக்கள் குறைகேட்பு கூட்டம்” மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டார்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று மனுக்களை பெற்றுக் கொண்டார். அதன்பிறகு 2 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு  78,500 ரூபாய் ஆகும். இதைத்தொடர்ந்து பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. இதில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஓய்வூதிய திட்டம்” இரயில்வே ஊழியர்கள் போராட்டம்…. குமரியில் பரபரப்பு…!!

இரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் இரயில்வே நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் எஸ்.ஆர். எம்.யூ சார்பில் நடத்தப்பட்டது. இவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுலுக்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டத்திற்கு கிளை செயலாளர் பால்ராஜ் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் ஏராளமான இரயில்வே  ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய கார்…. ஓடைக்குள் கவிழ்ந்த பரிதாபம்…. பெரும் பரபரப்பு…!!

நிலைத்தடுமாறி கார் ஓடைக்குள் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலுக்கு சுருளகோடு வழியாக ஒரு கார் சென்றது. அந்த கார் வெட்டுத்திருத்திக்கோணம் பகுதியில் சென்றபோது திடீரென நிலைத்தடுமாறி அங்கிருந்த ஒரு ஓடைக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் வந்த 8 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காரில் இருந்தவர்களை மீட்டனர். அதன்பிறகு காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குலசேகரம் காவல்துறைக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மெய்ஞானபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் ஒரு குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 1 1/4 கிலோ கஞ்சா இருந்தது. அதன்பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. ஆனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கடனை திருப்பி தரவில்லை” மூதாட்டியின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள் சந்தை அருகே மேல்கரை பகுதியில் ஞானபிரகாசி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுயஉதவி குழு ஒன்றில் உறுப்பினராக இருந்துள்ளார். இந்நிலையில் ஞானப்பிரகாசி சுய உதவி குழுவில் இருந்து பணத்தை கடனாக பெற்று அதை வேறொரு நபருக்கு கொடுத்துள்ளார். ஆனால் அந்த நபர் உரிய நேரத்தில் பணத்தை திருப்பிக் கொடுக்காததால் ஞானப்பிரகாசி மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இதன் காரணமாக ஞானப்பிரகாசி வீட்டில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பாரம்பரிய பழங்கள் மற்றும் காய்கறிகள்…. சிறப்பாக நடைபெற்ற கருத்தரங்கம்…!!

பாரம்பரிய உணவுப் பொருள்களை பயிர் செய்ய விவசாயிகள் முன்வர வேண்டுமென அமைச்சர் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி அமைந்துள்ளது. இங்கு  மாவட்ட அளவிலான பாராம்பரிய காய்கறிகள் மற்றும் பழங்கள்  குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். இவர் தற்போது நாட்டு பசுக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது எனவும், நாம் உண்ணும் உணவு பொருட்களில் அதிகமான அளவு ரசாயனம் கலந்து இருப்பதாகவும் கூறினார். எனவே விவசாயிகள் தங்களுடைய […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற முதியர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆட்டோ மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை அருகே காஞ்சாம்புரம் சரல் பகுதியில் தாசைய்யன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகாததால் மாம்பழஞ்சி பகுதியில் இருக்கும் தம்பி மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தாசைய்யன் குளிப்பதற்காக விரிவிளை பகுதியில் இருக்கும் ஆற்றிற்கு சென்றுள்ளார். இவர் ஆற்றில் குளித்து விட்டு திரும்பி வரும் வழியில் அவ்வழியே வேகமாக வந்த ஆட்டோ ஒன்று தாசைய்யன்‌ மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“எனக்கு திருமணம் நடக்கல” ராணுவ வீரரின் விபரீத முடிவு…. பெரும் பரபரப்பு…!!

ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேங்காய்பட்டணம் அருகில் கீழ்குளம் செந்தரை பகுதியில் அஜிமோன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராணுவ வீரராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய தாயும் தந்தையும் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டனர். இதன் காரணமாக அஜிமோன் தன்னுடைய பாட்டி செல்லாச்சியின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அஜிமோன் விடுமுறைக்காக தன்னுடைய பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார். இவர் தனக்கு திருமணம் ஆகாததை எண்ணி மிகுந்த மன வேதனையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஓடையில் ஏற்பட்ட அடைப்பு…. அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு கோரிக்கை…!!

சாலையை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே வேர்கிளம்பி சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பில் திருவட்டார், சாமியார் மடம், அழகியமண்டபம், சித்திரங்கோடு ஆகிய 4 ஊர்களின் சாலைகளும் இணைகிறது. இதைத்தொடர்ந்து கண்ணனூர் ஊராட்சி மற்றும் கோதநல்லூர், வேர்கிளம்பி பேரூராட்சிகளின் எல்லையாகவும் அமைந்துள்ளது. இந்த சாலைகளின் வழியாக அரசு பேருந்துகள், கனரக வாகனங்கள், கார்கள் போன்ற பல்வேறு வாகனங்கள் செல்கிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி வீடுகள் மற்றும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட முன்விரோதம்…. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

கொடூரமான முறையில் வாலிபர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் அருகே கண்ணனூர் பருத்தி பகுதியில் அனீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டயருக்கு ரீ பட்டன் அடிக்கும் தொழில் செய்து வருகிறார்‌. இதுதொடர்பாக அனிஷுக்கும் அதே பகுதியில் வசிக்கும் மணி என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கு பழி வாங்குவதற்காக மணி தனது மருமகன்கள்‌ சசி, செல்வின், அன்னாள் மற்றும் வசந்தா ஆகியோருடன் அனிஷ் வீட்டிற்கு சென்றுள்ளனர். இவர்கள் அனிஷை கத்தியால் சரமாரியாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே தேரேகால்புதூர் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வம் பொருட்கள் வாங்குவதற்காக கடை வீதிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவரின்  மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மது போதையில் வந்த நண்பர்கள்…. மாணவருக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

சட்டக்கல்லூரி மாணவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜாமங்கலம் அருகே வடக்குகோணம் பகுதியில் ஸ்டான்லி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சட்ட கல்லூரியில் படிக்கும் ஆண்டனி சுரேஷ் பிரபு என்ற மகன் இருக்கிறார். இவரும் மிசல், ஸ்ரீநாத் இவருடைய தம்பி ஆகிய 4 பேரும் நண்பர்கள் ஆவார். இவர்கள் 4 பேரும் சேர்ந்து அடிக்கடி மது குடிப்பது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆண்டனி சுரேஷ் வீட்டிற்கு இவருடைய நண்பர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கபிரியேல் தலைமையிலான ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது கண்டநாயக்கன்பட்டியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் தண்டநாயகன் பட்டியைச் சேர்ந்த அந்தோணி என்பதும், அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 4,000 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அறுவடைக்குப்பின் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்…. விதைச்சான்று உதவி இயக்குனர் விளக்கம்…!!

அறுவடைக்குப்பின் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விதைச்சான்று உதவி இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் ஷீபா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் விவசாயிகளுக்கு அறுவடைக்குப் பிறகு செய்ய வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கமளித்துள்ளார். அதாவது அறுவடைக்கு முன்பு அறுவடை செய்யும் எந்திரங்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும் எனவும், அதன் மூலம் பிற ரக கலப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும் எனவும் கூறியுள்ளார். அதன்பிறகு அறுவடை செய்யப்படும் நெல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கடனை திருப்பி செலுத்த முடியவில்லை” ஓட்டுநர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

டெம்போ ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள்சந்தை அருகே தச்சன்பரம்பு பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டெம்போ ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு டெம்போ ஓட்டுவதில் சரியான லாபம் கிடைக்காததால் அவரால் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. இதன் காரணமாக மிகுந்த மனவேதனையில் இருந்த சுபாஷ் அடிக்கடி மது அருந்தியுள்ளார். இந்நிலையில் சுபாஷ் தனது வீட்டின் அருகே இருக்கும் ஒரு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்…. மூதாட்டிக்கு நேர்ந்த விபரீதம்…. அரசு மருத்துவமனையில் பரபரப்பு….!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியிடம் தங்க  நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எட்டணி அருகே புலிமார் தட்டுவிலை பகுதியில் சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி இருக்கிறார். இவருடைய தாயார் கமலாபாய் ஜெயந்தியுடன் வசித்து வருகிறார். இதில் கமலாபாய்க்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கமலாபாய் நேற்று முன்தினம் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சூரிய உதயத்தை பார்க்க திரண்ட கூட்டம்….. விழாக்காலம் போல் காட்சியளித்த கன்னியாகுமரி…!!

விடுமுறை நாள்  என்பதால் கடற்கரையை ரசிக்க அதிக அளவில்  சுற்றுலா பயணிகள் திரண்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். இவர்கள் விழா காலங்கள், பண்டிகை தினங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் வருகின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் அதிக அளவு  மக்கள் அங்கு திரண்டுள்ளனர். இவர்கள் சூரிய உதயத்தை பார்த்து ரசித்துவிட்டு, கடலில் நீராடி மகிழ்ந்தனர். இதனையடுத்து கடலின் நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“செல்போன் டவர் அமைக்கக்கூடாது” பொதுமக்களின் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் ராமன்புதூர் கோல்டன் தெருவில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த கோபுரத்தை அமைக்ககூடாது என எதிர்ப்பு வந்தனர். இந்நிலையில் இந்த பணி நேற்று தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“வழிவிட நினைத்தேன்” ஓடைக்குள் பாய்ந்த கார்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

ஓடைக்குள் நிலை தடுமாறி கார் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பகுதியில் இருக்கும் அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கும் அதிகாரி தனது காரில் அலுவலகத்திற்கு சென்று உள்ளார். இவர் எதிரே வந்த ஒரு வாகனத்திற்கு வழி விடுவதற்காக தனது காரை சாலையின் ஓரமாக ஒதுக்கியுள்ளார். அப்போது திடீரென கார் நிலைதடுமாறி ஓடைக்குள் விழுந்தது. இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. அதன்பிறகு கார் கிரேன் மூலமாக மீட்கப்பட்டது. மேலும் பரளியாறு பகுதியில் இருக்கும் […]

Categories

Tech |