Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தமிழக முதல்வர் குறித்து அவதூறு….. சமூக வலைத்தளங்களில் வைரல்…. போலீஸ் அதிரடி….!!

தமிழக முதல்வர் குறித்த அவதூறு பரப்பிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழக முதல்வர் மற்றும் நபிகள் நாயகம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் பரப்புவதாக குமரி மாவட்ட கோட்டார் துறையினருக்கு புகார் வந்துள்ளது.  அந்த புகாரின்படி  வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த அருள் முருக கிருஷ்ணன் என்பவர் அவதூறு கருத்துகள் பரப்பியது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் திருவாரூர் சென்று அருள் முருக கிருஷ்ணனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது….. ஓட்டுநர், நடத்துனர்களுடன் கலந்தாய்வு கூட்டம்….!!

பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் ராணித்தோட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழக நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் அலுவலக வளாகம் அமைந்துள்ளது. இங்கு அரசுப் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் அரவிந்த் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் கலந்து கொண்டு பேசினார். இவர் பள்ளி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தமிழக அரசை கண்டிக்கிறோம்”….. பா.ஜ.க கட்சியினர் போராட்டம்….. குமரியில் பரபரப்பு….!!

பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிபள்ளம் காவல்நிலையத்தின் முன்பாக பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பன்றிவாய்க்கால் பொத்தையில் உள்ள மலைப்பகுதியில் வழிபாட்டுத்தளம் அமைக்க முயற்சி நடப்பதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வருவாய்த்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்தும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு குருந்தன்கோடு கிழக்கு மண்டல தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் நாஞ்சில் ராஜா, அகில பாரத இந்து மகா சபை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடும்பத் தகராறு…. கணவன் எடுத்த விபரீத முடிவு….. போலீஸ் விசாரணை….!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அருகே முப்பந்தல் கண்ணுபொத்தை காலணியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய முதல் மனைவி 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர் இரண்டாவதாக சித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சங்கர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆலயத்திற்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி….!!!

வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை பகுதியில் மரியம்மை என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக வீட்டின் கதவை பூட்டி விட்டு சென்றுள்ளார். இவர் வழிபாடு முடிந்து வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மரியம்மை வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 1/2 பவுன் தங்க நகை மற்றும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆணையிட்ட கலெக்டர்….. அதிரடி காட்டிய போலீஸ்….. பாய்ந்தது குண்டாஸ்….!!

கொலை குற்றவாளியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாளக்குடி அருகே விளாங்கோடு காலணியில் மார்ஷல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவர் அடிதடி, கொலை முயற்சி போன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி மார்ஷல் ஒருவரை அரிவாளால் கொடூரமான முறையில் வெட்டியுள்ளார். இது தொடர்பாக மார்ஷல் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை….. வசமாக சிக்கிய வாலிபர்….. விசாரணையில் வெளியான தகவல்கள்….!!

பல பெண்களிடம் நகை பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஸ்கூட்டரை மறித்து அதில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளை பகுதியைச் சேர்ந்த சுபின் என்பது தெரியவந்தது. இவர் கடந்த மாதம் 22-ஆம் தேதி மளிகை கடையில் வேலை பார்க்கும் மேரி ஸ்டெல்லா என்ற பெண்ணிடம் முட்டை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடர் விடுமுறை…. குவிந்த சுற்றுலா பயணிகள்….. களைகட்டியது கன்னியாகுமரி….!!

விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. சுற்றுலா தலமான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. இவர்கள் அதிகாலை வரும் சூரிய உதயத்தில் பார்த்து ரசித்துவிட்டு கடலில் நீராடி மகிழ்ந்தனர். அதன்பிறகு பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காணாமல் போன ஸ்கூட்டர்…. பட்டதாரி கைது….. போலீஸ் அதிரடி….!!

ஸ்கூட்டரை திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமாரபுரம் அருகே சரல்விளை பகுதியில் ஜெபர்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவர் சரல்விளை பகுதியில் இருக்கும் ஒரு கால்வாயில் குளிப்பதற்காக ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அவர் குளித்து விட்டு திரும்பி வந்து பார்க்கும் போது கரையில் நின்ற ஸ்கூட்டரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெபர்சன் கொற்றிக்கோடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மயங்கிய நிலையில் கிடந்த உரிமையாளர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

டீக்கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் அருகே அஞ்சுகண்டறை‌ செக்கோட்டு விளை பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ரமேஷ் திடீரென விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் வீட்டில்  கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ரமேஷை மீட்டு சிகிச்சைக்காக குலசேகரம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தென்னந்தோப்புக்கு சென்ற முதியவர்….. திடீரென தாக்கிய காட்டுப்பன்றி….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

முதியவரை கொடூரமான முறையில் காட்டுப்பன்றி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி அருகே பெருந்தலைக்கோடு பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் சூலக்கரை பகுதியில் இருக்கும் தென்னந்தோப்புக்கு ஓலைகளை சேகரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென ஒரு காட்டுப்பன்றி மணியை கொடூரமான முறையில் தாக்கியுள்ளது. இதில் மணிக்கு உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அம்பேத்கர் படம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு…. சீல் வைத்த அதிகாரிகள்…. பெரும் பரபரப்பு….!!

டாக்டர் அம்பேத்கரின் படம் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தாழக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மேலகாலனி சந்திப்பு உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அம்பேத்கர் சிலை பொறிக்கப்பட்ட கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி தோவாளை தாசில்தார் தாஜ்நிஷா, வருவாய் ஆய்வாளர் லெனின், கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி, பேரூராட்சி செயல் அலுவலர் அப்துல்காதர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இவர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்….. அனைத்து கட்சியினர் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!!

ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரி அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விரிகோடு என்ற பகுதியில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வாகனங்கள் மூலமாகவும் நடந்தும் கடந்து செல்கின்றனர். இந்த பகுதியில் ரயில்வே கேட் மூடப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ரயில்வே மேம்பாலம் அமைத்து தருமாறு பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் விரிகோடு பகுதிக்கு பதிலாக அதிகாரிகள் மாற்றுப்பாதையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்….. திடீரென தாக்கிய மின்னல்….. பெரும் சோகம்….!!

மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காப்பட்டணத்தில் ரப்சேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகள்கள், 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ரப்சேல், சூசை ஆண்டனி என்பவருக்கு சொந்தமான படகில் ஆழ்கடலுக்கு 5 மீனவர்களுடன் தேங்காப்பட்டணம் துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென ரப்சேல் மீது மின்னல் தாக்கியது. இதைப்பார்த்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாணவர்களை மதமாற்ற முயற்சி….. ஆசிரியர் பணியிடை நீக்கம்…. குமரியில் பரபரப்பு….!!

பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் அருகே கண்ணாட்டுவிளை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தையல் கலை ஆசிரியராக பயாட்றிஸ்‌ தங்கம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவர்களிடம் 2 மத நூல்களை ஒப்பிட்டு ஒரு மதத்தை மட்டும் உயர்வாகப் பேசியுள்ளார். இதனையடுத்து ஒரு குறிப்பிட்ட மதத்தின் கருத்துக்களை எடுத்துக் கூறி அந்த மதத்தை பின்பற்றுமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களிடம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம்…. தியேட்டரில் திரை கிழிப்பு…. பெரும் பரபரப்பு….!!

பிரபல நடிகர் விஜய் நடித்த  பீஸ்ட் படம் ரிலீஸான தியேட்டரில் திரை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் நேற்று வெளியானது. இந்த திரைப்படம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் 3 திரையரங்குகளில் ரிலீஸானது. நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை பார்ப்பதற்காக தியேட்டரில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக 3 தியேட்டர்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மத்திய அரசை கண்டிக்கிறோம்”….. எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டம்….. பெரும் பரபரப்பு….!!

எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சத்தார் அலி தலைமை தாங்கினார். இவர்கள் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்த மத்திய அரசை கண்டித்தும், சொத்து வரியை குறைக்க கோரியும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் ஜாகீர் உசேன், பொருளாளர் சைபர் அகமது, செயலாளர்கள் ஜப்பார், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கழிவறையில் சடலமாக கிடந்த கொத்தனார்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….. போலீஸ் விசாரணை….!!

மர்மமான முறையில் கொத்தனார் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தாளக்குடி அருகே சந்தைவிளை பகுதியில் ஜேசுராஜகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மிக்கேல் ஜெயா என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் இரவில் உணவருந்தி விட்டு தூங்குவதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் மிக்கேல் ஜெயா மறுநாள் காலை கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு ஜேசுராஜகுமார் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மிக்கேல் ஜெயா கதறி அழுதுள்ளார். இதுகுறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடனை திருப்பி செலுத்த முடியவில்லை….. லாரி ஓட்டுநர் எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

லாரி ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு அருகே கோவிலான்விளை பகுதியில் சுரேஷ் ராதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் சுரேஷ் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 1 லட்ச ரூபாயும், வேறு சிலரிடமும் கடன் வாங்கியிருந்தார். இந்த கடனை சுரேஷால் உரிய நேரத்தில் திருப்பி செலுத்த முடியவில்லை.  இதன் காரணமாக கணவன் – மனைவிக்கு இடையே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரச்சார தலைவர் ஜெயபிரகாஷ் கைதை கண்டிக்கிறோம்…. பாஜக கட்சியினர் போராட்டம்…. குமரியில் பரபரப்பு…!!

பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தமிழக முதல்வரை அவதூறாக பேசிய குற்றத்திற்காக பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு தலைவர் ஜெயபிரகாஷ் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஜெயபிரகாஷை கைது செய்த காவல்துறையினரை கண்டித்தும், ஜெயபிரகாஷ் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டத்திற்கு பா.ஜ.க கட்சியின் மாவட்ட தலைவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது….. 61 நாட்கள் தடை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!

மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 மற்றும் திருத்திய விதிகள் 2020 இன் கீழ் தமிழக கிழக்கு கடலோரப் பகுதிகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். இந்த தடை 61 நாட்கள் நீடிக்கும். அதாவது மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன் வளத்தை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த வருடம் ஏப்ரல் 14-ஆம் தேதி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை….. வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு பகுதியில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சனல் குமார் தலைமையிலான குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் இருந்த ஒரு பள்ளி வளாகத்தின் முன்பு சந்தேகப்படும்படியாக ஒரு வாலிபர் நின்றுகொண்டிருந்தார். அந்த வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அடைக்காகுழி பகுதியைச் சேர்ந்த அபிஜித் என்பதும், மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் வாலிபரிடம் இருந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

இளைஞர்கள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்களாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு எந்த வேலையும் இருக்கக்கூடாது. இவர்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தமிழகத்தில் 15 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும். இவர்கள் அரசிடமிருந்து வேறு எந்த ஒரு உதவி தொகையும் பெறக்கூடாது. இதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் மாவட்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற கணவன்….. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே குஞ்சாவிளை பகுதியில் ஏசுதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவியும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஏசுதாஸ் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார். அப்போது ஸ்ரீஜா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவர் திடீரென தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்துள்ளார். அதன்பின் கடையிலிருந்து திரும்பி வந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

3 வருடங்களுக்கு ஒருமுறை….. படகுகள் புதுப்பித்தல்…. மீன் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை….!!

 மீன் தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீன் தொழிலாளர் சங்க தலைவர் அலெக்சாண்டர் தலைமையிலான நிர்வாகிகள் சிலர் மனு கொடுப்பதற்காக வந்தனர். இவர்கள் மீனவர்கள் நாட்டுப் படகுகள் மற்றும் விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக செல்கின்றனர். இவர்கள் வெளிமாநிலங்களுக்கு மீன்பிடிக்க செல்லும் போது குறிப்பிட்ட காலத்திற்குள் கரைக்கு திரும்ப முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக ஆண்டுதோறும் படகுகளை புதுப்பிக்க வேண்டும் என உத்தரவு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புதிதாகக் திறக்கப்பட்ட காவல்நிலையம்….. காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்த முதல்வர்….!!

புதிய காவல்நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக போக்குவரத்து காவல்நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதற்காக 83.24 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த காவல்நிலையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதன்பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நாளை மதுக்கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!

நாளை மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வாணிப கழக மதுபான கடைகள் மூடப்படும். இதனையடுத்து எப்.எல்-1, எப்.எல்-2, எப்.எல்-3, எப்.எல்-3ஏ, எப்.எல்-3ஏஏ உரிமம் பெற்ற மதுபான கடைகள் மூடப்படும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போக்குவரத்து விதிகளை மீறினார்கள்…. 15 ஆட்டோக்களுக்கு அபராதம்…. போலீஸ் அதிரடி…!!

போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்ட வாகனங்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் அதிக அளவில் பள்ளிகள் உள்ளது. இந்த பள்ளிகளில் படிக்கும் பல மாணவ-மாணவிகள் ஆட்டோ மூலமாக பள்ளிக்குச் செல்கின்றனர். இந்நிலையில் சில ஆட்டோக்கள் அதிக அளவு மாணவர்களை ஏற்றிச் செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் விதிகளை மீறி செயல்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்குமாறு போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு காவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின்படி  மாநகராட்சியின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்….. மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமை தாங்கினார். இவர் கூட்டத்திற்கு வந்திருந்த மாற்றுத் திறனாளிகளிடம் நேரடியாக சென்று மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் மொத்தம் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தங்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவித் தொகைகள் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கிறோம்…. தே.மு.தி.க கட்சியினர் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!

தே.மு.தி.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு தே.மு.தி.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றை கண்டித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாணவர் அணி துணைச் செயலாளர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மேலும் மாநகர மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட செயலாளர்கள் அமுதன், ஐடன் சோனி உள்பட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெண் மருத்துவரின் வீட்டில் கைவரிசை….. பிரபல கொள்ளையர் கைது….. 226 பவுன் தங்க நகைகள் மீட்பு…. போலீஸ் அதிரடி….!!!!

பிரபல கொள்ளையரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே நடுக்காட்டு இசக்கியம்மன் பகுதியில் ஜலதா தேவகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜலதா தேவகுமாரியின் கணவனும், மகனும் இறந்து விட்டனர். இவருடைய மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜலதா தேவகுமாரியின் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக 83 பவுன் தங்க நகைகள் மற்றும் 1,26,000 ரூபாய் பணம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இடியுடன் கூடிய பலத்த கனமழை…. வீடுகளில் வெள்ளம் போல் சூழ்ந்த தண்ணீர்…. அவதியில் பொதுமக்கள்….!!

கனமழையின் காரணமாக குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் நாகர்கோவிலில் ‌இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனையடுத்து தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் முக்கடல் அணையிலிருந்து நாகர்கோவில் பகுதிக்காக குடிநீருக்காக வினாடிக்கு 8.6 கன […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய கைதி…. போலீஸ் வலைவீச்சு…. பெரும் பரபரப்பு….!!

நீதிமன்றத்திலிருந்து கைதி தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாபு என்பவரை கடந்த 2007-ஆம் ஆண்டு மார்த்தாண்டத்தில் நடைபெற்ற திருட்டு வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பிறகு பாபு ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் ஒரு கொலை வழக்கில் பாபுவை மீண்டும் திருவனந்தபுரம் காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து மார்த்தாண்டத்தில் நடைபெற்ற திருட்டு வழக்குக்காக கேரள காவல்துறையினர் பாபுவை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வந்துள்ளனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் வைத்து பாபுவின் கை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“திற்பரப்பு நீர்வீழ்ச்சி” குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள்…. காரில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

காரில் வைத்திருந்த பணம் மற்றும் செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதியம்புத்தூர் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராமரும், அவருடைய நண்பர்கள் 7 பேரும் சேர்ந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலாக்காக சென்றுள்ளனர். இவர்கள் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு காரை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வந்து பார்க்கும்போது காரிலிருந்து 3 செல்போன்கள் மற்றும் ரூபாய் 5,000 பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து குலசேகரம் காவல்நிலையத்தில் ராமர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென வேரோடு சாய்ந்த மரம்…. 2 ஆட்டோக்கள் சேதம்…. கவலையில் உரிமையாளர்கள்…!!

2 ஆட்டோக்கள் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குளச்சல் பகுதியில்  நகராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இதன் முன்பாக சாகுல் ஹமீது மற்றும் சேவியர் ஆகிய 2 பேரும் தங்களுக்கு சொந்தமான ஆட்டோக்களை நிறுத்தி வைத்துள்ளனர். அங்கு பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால்  திடீரென மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் ஆட்டோக்கள்  சேதமடைந்தது. இதுகுறித்து நகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு நகராட்சி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஒரே நாளில்” அடுத்தடுத்த 4 கடைகள்…. மர்மநபர்கள் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

கடைகளில் பணம்  கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் அருகே கோட்டூர்கோணம் பகுதியில் அனில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தும்பகோடு பாலம் அருகில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். இவர் மறுநாள் காலை கடையை திறப்பதற்காக வந்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அனில்குமார் கடைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது கடையில் இருந்த 23,000 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அரைகுறை ஆடையுடன் இருந்த இளம்பெண்”….. போலீசாரின் அதிரடி சோதனை…. வாலிபர் கைது…. புரோக்கருக்கு வலைவீச்சு….!!

விபச்சாரத்தில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி புதுக்கடை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அவர்கள் ஒரு வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தபோது வாலிபரும் இளம்பெண்ணும் அரைகுறை ஆடையுடன் நின்றுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அருமனை பகுதியை சேர்ந்த கனிஷ் என்பதும், இளம்பெண் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் மாணவர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புதுக்கடை அருகே எட்வின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எட்வர்ட் ஜிஜோ என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் அரசு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவருடைய நண்பர் சுபினும், எட்வர்ட் ஜிஜோவும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் வெள்ளையம்பலம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். இவர்கள் செல்லும் வழியில் மேலமங்கலம் பகுதியை சேர்ந்த சுவாமி தாஸ் என்பவர் சாலையை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்…. கோர விபத்தில் பெண் காவலர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பயங்கர விபத்தில் பெண் காவலர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே கிராத்தூர் கிராமத்தில் கிரிஸ்டல் பாய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கருங்கல் காவல்நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு சைலன் என்ற கணவரும் ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கிரிஸ்டல் பாய் பணி முடிந்து குழித்துறை மருத்துவமனைக்கு சொந்த வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இவர் மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்து வரும் மழை…. சாலையில் வெள்ளம் போல் ஓடும் தண்ணீர்….!!!

தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலையின் பல பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இங்கு அதிகபட்சமாக நாகர்கோவிலில் 36 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ‌ இதனையடுத்து பூதப்பாண்டியில் 12.4 மில்லி மீட்டர் மழையும், குழித்துறையில் 25.6 மில்லி மீட்டர் மழையும், மயிலாடியில் 12.2 மில்லி மீட்டர் மழையும், புத்தன் அணையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திற்பரப்பு வலதுகரை கால்வாய்…. தூர்வாரும் பணிகள் பாதிப்பு…. விவசாயிகள் கோரிக்கை…!!

மழையின் காரணமாக கால்வாயில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு வலதுகரை கால்வாயில் இருந்து இடைக்கோடு, மஞ்சாலுமூடு, அருமனை, முழுக்கோடு வழியாக பல பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த கால்வாயை சரியான முறையில் பராமரிக்காததால் பல இடங்களில் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கால்வாயை தூர்வாருமாறு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் மழையின் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு கால்வாயில் மண் விழுந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற காளியம்மன் திருக்கோவில்…. சிறப்பாக தொடங்கிய சித்திரா பௌர்ணமி…. பக்தர்கள் புனித யாத்திரை…!!

பிரசித்தி பெற்ற கோவிலுக்கு பக்தர்கள் புனித பயணம் மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில்  புகழ்பெற்ற பத்துகாணி காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா தொடங்கியது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு நிர்மால்ய தரிசனம், அஷ்ட திராவிய மகா கணபதி ஹோமம், தேவி மகாத்மிய பாராயணம், 18 சித்தர்கள் பூஜை, குங்கும அபிஷேகம், தீபாராதனை போன்றவைகள் நடைபெற்றது. அதன்பிறகு கோவிலுக்கு வருகை புரிந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது. இதனையடுத்து களியல் முட்டங்காவு பகவதி அம்மன் கோவிலில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

யூரியா, பாக்டம்பாஸ் உரம் தட்டுப்பாடு…. கொச்சியிலிருந்து ரயில் மூலம் இறக்குமதி…!!!

தட்டுப்பாடு காரணமாக வெளிமாநிலத்தில் இருந்து உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர், மரவள்ளி கிழங்கு, வாழை மரம், தென்னை மரம், கும்பப்பூ, கன்னிப்பூ போன்றவைகளை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். ஆனால் பயிர்களுக்கு தேவையான யூரியா, பாக்டம்பாஸ் உரங்கள் தட்டுப்பாடாக இருக்கிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே கொச்சியில் இருந்து ரயில் மூலமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 629 டன்‌ பாக்டம்பஸ் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதை அதிகாரிகள் லாரிகள் மூலமாக குடோன்களுக்கு ஏற்றி சென்றனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்…. பிரதமர் மோடி அமோக வெற்றி பெறுவார்…. எச்.ராஜா கருத்து….!!

இனி வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதமர் மோடி அமோக வெற்றி பெறுவார் என கூறியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதிக்கு பா.ஜ.க கட்சியின் செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா வருகை புரிந்தார். அப்போது பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் மக்கள் மத்தியில் பா.ஜ.க கட்சிக்கு  அமோக ஆதரவு இருக்கிறது எனவும், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார் எனவும் கூறினார். அதன்பிறகு மத்திய மந்திரி அமித்ஷா  ஆங்கிலம் பயன்படுத்தும் இடத்தில் இந்தி மொழியைப் பயன்படுத்தலாம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவு நேரத்தில் கேட்ட அலறல் சத்தம்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!!

ஆடு திருடிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே கோட்டார் முதலியார்விளை பகுதியில் அந்தோணி சவரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தோணி சவரிமுத்து ஆடுகளை சென்று பார்த்துள்ளார். அப்போது 2 பேர் ஆடுகளை திருட முயற்சி செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து அந்தோணி சவரிமுத்து கோட்டார் காவல்நிலையத்தில் புகார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. 175 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

தீவிர ரோந்து பணியில் போது காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் ரயில்வே நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சில மூட்டைகள் கேட்பாரற்று கிடந்துள்ளது. இதை காவல்துறையினர் பிரித்து பார்த்துள்ளனர். அந்த மூட்டையில் ரேஷன் அரிசி இருந்துள்ளது. அதில் மொத்தம் 175 கிலோ ரேஷன் அரிசி இருந்துள்ளது. இதை புஷ்பராஜ் என்பவர் கடத்த முயற்சி செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் புஷ்பராஜை  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த துக்கம்…. கணவன் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே புங்கரை பகுதியில் தங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி இறந்து விட்டார். இதனால் மனமுடைந்த தங்கசாமி மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கசாமி வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இதனையடுத்து தங்கசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தங்கசாமியை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விலை உயர்வை கண்டிக்கிறோம்…. மக்கள் நீதி மையம் கட்சியினர் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!

மக்கள் நீதி மையம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மக்கள் நீதி மையம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றை கண்டித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு சசி ஜெயபிரகாஷ், பெரி இவான்ஸ், ஜோசப் கெனி ஆகியோர் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பாடையில் கட்டி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடற்கைரையில் குவிந்த கூட்டம்…. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள்….!!!

கடற்கரையை ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். இங்கு விடுமுறை நாட்கள், பண்டிகை தினங்களில்  அதிக அளவு கூட்டம் கூடும். இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால் காலை முதலே சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்தது. இவர்கள் காலையில் வரும் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு, கடலில் நீராடி மகிழ்ந்தனர். அதன்பிறகு பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து கடலின் நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் மண்டபம், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பரவலாக பெய்த சாரல் மழை…. அருவிகளில் அதிகரித்த தண்ணீர்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!!

மழையின் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் வெள்ளமாக ஓடுகிறது. இந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 242 கன அடி நீரும், பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 88 கன அடி நீரும், சிற்றார் 2 அணைக்கு விநாடிக்கு 23 கன அடி தண்ணீரும் வருகிறது. இந்நிலையில் திற்பரப்பு அருவியில் மழையின் காரணமாக வெள்ளம் கொட்டுகிறது. இதன் காரணமாக […]

Categories

Tech |