Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…. அதிகாரிகள் அதிரடி…!!!

தீவிர வாகன சோதனையின் போது அதிகாரிகளால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்திற்கு கன்னியாகுமரியில் இருந்து அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்காக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குழித்துறை பகுதியில் தாசில்தார் ரமேஷ் பாபு தலைமையிலான அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். இவர்களைப் பார்த்தவுடன் காரை சாலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தனிநபர் உரிமை பெறுவது எப்படி?….. மலைவாழ் மக்களுடன் உரையாடிய மாவட்ட ஆட்சியர்….!!!

மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து மாவட்ட ஆட்சியர் உரையாடினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒருநூறாம்வயல், தச்சமலை, வட்டப்பாறை போன்ற கிராமங்களில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த்  ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து தனிநபர் சட்டத்தின் கீழ் உரிமை பெறுவது எப்படி என்பது குறித்து கலந்தாலோசனை செய்தார். அதன்பின் மலைவாழ் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகனை பார்க்க சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!!

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அருகே பெருமாள்புரம் பகுதியில் ஆறுமுகம் பகவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ஆறுமுகம் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் மும்பையில் உள்ள மெட்ரோ ரயிலில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் மகனை பார்ப்பதற்காக ஆறுமுகமும் அவரது மனைவியும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மதுபோதையில் வீட்டிற்கு வந்த கொத்தனார்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!!

கொத்தனார் கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே குன்னம்விளை பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் மனமுடைந்த குமரேசன் மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் குமரேசன் வழக்கம்போல் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் குமரேசனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் குமரேசனை மீட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்….. அரசு ஊழியர்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!

அரசு ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதன்பிறகு தமிழகத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மாநிலத் துணை தலைவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நேரில் சென்று மனுக்களை பெற்றுக்கொண்டார்…. அசத்தும் போலீஸ் சூப்பிரண்டு….. குவியும் பாராட்டு…!!

முதியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று மனுக்களை பெற்றுக்கொண்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக பதவி ஏற்ற போலீஸ் சூப்பிரண்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இவரிடம் புகார் கொடுப்பதற்காக ஏராளமான மக்கள் வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஏராளமான மக்கள் புகார் கொடுப்பதற்காக டி.எஸ்.பி அலுவலகத்திற்கு சென்றிருந்தனர். அதில் முதியவர்களும் இருந்தனர். இதையறிந்து கொண்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று முதியவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். அதன்பிறகு முதியவர்களிடம்  நேரடியாக மனு கொடுப்பதற்கு வர வேண்டாம் எனவும்,  வீட்டில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென மண்ணெண்ணெய் குடித்த மாற்றுத்திறனாளி….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

மாற்றுத்திறனாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கருப்புகோடு பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாற்றுத்திறனாளியான ஜெயக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சில நாட்களாக யாரிடமும் சரிவர பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயக்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மண்ணெண்ணெய் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் பரிதாபமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஓகே” சொன்ன கலெக்டர்…. அதிரடி காட்டிய போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்….!!

ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வீயன்னூர் அருகே வட்டவிளை வீடு பகுதியில் விபின் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது காவல்துறையில் 3 வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீஸ் டி.ஜி.பி ஆபாஷ்குமார்  குண்டர் சட்டத்தின் கீழ் விபினை கைது செய்ய முடிவு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“18 லட்ச ரூபாய்” 41 நாள் உண்டியல் வசூல்….. ஆச்சரியத்தில் பக்தர்கள்…. எந்த கோவில் தெரியுமா?…..!!!

புகழ்பெற்ற கோவிலின்  உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகுதியில் புகழ்பெற்ற பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மாசித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கோவிலில் இருக்கும் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதற்கு திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமை தாங்கினார். இந்த உண்டியல் எண்ணும் பணியில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் பலர் ஈடுபட்டிருந்தனர். இதில் மொத்தம் 18,83,946 ரூபாய் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கடல் சீற்றம்” தாமதமாக தொடங்கப்பட்ட படகு போக்குவரத்து…. காத்திருந்த சுற்றுலா பயணிகள்…!!

தாமதமாக தொடங்கப்பட்ட படகு போக்குவரத்தினால்  சுற்றுலா பயணிகள் நீண்ட நேரமாக காத்திருந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் கடற்கரையில் காலை வரும் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு கடலில் நீராடி மகிழ்கின்றனர். அதன்பிறகு காமராஜர் மண்டபம், காந்தி மண்டபம், தமிழன்னை பூங்கா, மீன் சுரங்க கண்காட்சி போன்ற இடங்களைப் பார்த்து ரசிக்கின்றனர். இதனையடுத்து கடலின் நடுவே அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு மூலமாக செல்கின்றனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“வேலைக்கு செல்லுங்கள்” தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள்சந்தை அருகே தலக்குளம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தங்கராஜ்க்கு  மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் தங்கராஜின்‌ மனைவி மற்றும் உறவினர்கள் தங்கராஜை வேலைக்கு செல்லுமாறு கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த தங்கராஜ் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்தே புகார் அளிக்கலாம்…. பதவியேற்ற “3 வாரங்களில்” நிகழ்த்திய சாதனை…. அசத்தும் போலீஸ் சூப்பிரண்டு….!!!

முதியவர்கள் வீட்டில் இருந்தபடியே புகார் அளிக்கலாம் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தினமும் புகார் அளிப்பதற்காக ஏராளமானோர் வருகின்றனர். இதில் குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் அதிகம் வருகின்றனர். நான் புதிய போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்ற நாளில் இருந்து இதுவரை 424 மனுக்கள் வந்துள்ளது. இந்த மனுக்கள் 4 வகையாக பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தமிழக அரசை கண்டிக்கிறோம்”…. பா.ஜ.க கட்சியினர் போராட்டம்…. குமரியில் பரபரப்பு….!!

சொத்து வரி உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பா.ஜ.க சார்பில் போராட்டம் நடைபெற்றது. இவர்கள் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தின் போது தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் சொத்து வரி உயர்வை குறைக்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மேலும் இந்த போராட்டத்தில் பா.ஜ.க […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“5 அம்ச கோரிக்கைகள்” உடனே நிறைவேற்றுங்கள்…. முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்…..!!

முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் முடிதிருத்தும் தொழிலாளர்களிடம் கட்டாயமாக வரி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும். எங்கள் பிரிவினருக்கு மருத்துவ படிப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதன்பிறகு வங்கிகளில் மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. கையில் காலி தட்டுகள்…. ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் போராட்டம்….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் வரையறுக்கப்பட்ட முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி, இலவச மருத்துவக் காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஈசாக்கு தலைமை தாங்கினார். இவர்கள் போராட்டம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சொத்து வரி உயர்வை கண்டிக்கிறோம்…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் தலைமை தபால் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் இந்தி திணிப்பு மற்றும் மத்திய அரசின் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்லச்சாமி தலைமை தாங்கினார். மேலும் இந்த போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் நூர் முகமது, முன்னாள் எம்.பி பெல்லார்மின், செயற்குழு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரப்பர் தோட்டத்தில் கிடந்த பிணம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை அருகே மணியன்குழி பகுதியில் கோபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும்,  2 மகள்களும் இருக்கின்றனர். இதில் ஒரு மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கோபாலன் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்துவிட்டு கேரளாவுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற கோபாலன் நீண்ட நேரமாகியும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு….. ஒருவர் கைது….. போலீஸ் விசாரணை….!!

ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அஞ்சுகிராமம் அருகே மேட்டு குடியிருப்பு பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுநராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கும் வீரதாஸ் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அருணாச்சலம் அஞ்சுகிராமம் அருகே சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வீரதாஸ் அருணாச்சலத்தை அரிவாளால் கொடூரமான முறையில் வெட்டினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அருணாச்சலத்தை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளிப்பதற்காக சென்ற பெண்….. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

குளத்தில் மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வட்டக்கோட்டை பகுதியில் ஏசுதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவியை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அதன்பின் ஏசுதாசுக்கு சுசிலா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் 2 பேரும் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் சேர்ந்து மகாராஜபுரம் பகுதியில் இருக்கும் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் சுசிலாவுக்கு நீச்சல் தெரியாததால் குளத்தில் தத்தளித்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஏசுதாஸ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த தம்பி…. சவத்துடன் தூங்கிய அண்ணன்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

அண்ணனே தம்பியை உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை அருகே விரிவிளை பள்ளிக்கல் பகுதியில் பிரைட் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு டென்னிஸ் என்ற சகோதரர் இருக்கிறார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் 2 பேரின் மனைவியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து சென்றுள்ளனர். இதனால் டென்னிஸ் மற்றும் பிரைட் ஆகிய 2 பேரும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சுற்றுலாவிற்கு செல்லக்கூடாது” மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் அருகே தெக்கன்திருவிளை பகுதியில் பழனிக் குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுக்கோட்டுதலை ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக இருக்கிறார். இவருக்கு ஜெமிலா என்ற மனைவியும், ஆஷிகா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ஆஷிகா 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்களின் உறவினர்கள் சிலர் சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர். இவர்களுடன் ஆஷிகாவும் சுற்றுலா செல்ல விரும்பியுள்ளார். ஆனால் பெற்றோர் சுற்றுலா செல்வதற்கு மறுப்பு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மக்களே! “ஏப்ரல் 22-ம் தேதி வரை”….. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜாக்கமங்கலம் அருகே கண்டபற்றிவிளை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு சுகாதாரத் திருவிழா மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மற்றும் விஜய் வசந்த் எம்.பி தொடங்கி வைத்தனர். அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அனைத்து ஊராட்சிகளிலும் சுகாதாரத் திருவிழா மற்றும் மருத்துவ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்ன? உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா?…. ஆச்சரியத்தில் பக்தர்கள்…. எந்த கோவில் தெரியுமா?….!!

பிரசித்தி பெற்ற கோவிலின் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பகுதியில் பிரசித்தி பெற்ற தாணுமாலய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தும் வகையில் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் எண்ணும் பணி 3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும். இந்நிலையில் நேற்று உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட இணை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“50,000 மீனவரக்ள்” வேலை நிறுத்தப் போராட்டம்…. வெறிச்சோடி காணப்பட்ட துறைமுகம்….!!

மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கு 15-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறது. இந்த துறைமுகத்தில் உள்ள நுழைவு வாயிலில் அடிக்கடி படகுகள் விபத்துக்குள்ளாகிறது. இதனால் மீனவர்கள் பலர் இறந்துள்ளனர். எனவே துறைமுகத்தை சீரமைப்பு செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக 50,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கல்வி நிறுவனங்கள்” போதைப் பொருள் விழிப்புணர்வு…. மாணவர்கள் ஊர்வலம்….!!!!

கல்வி நிறுவனங்கள் சார்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே மணலிக்கரை பகுதியில் புனித மரிய கொரற்றி மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் சார்பாக போதைப் பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு பள்ளி தாளாளர் டயஷ் ரெஜின் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலத்தில் போதை பொருள் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்திக் கொண்டு சென்றனர். அதன்பிறகு கொல்லங்கோடு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியின் சார்பாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பலத்த மழை…. அடித்துச் செல்லப்ப்பட்ட தரைப்பாலம்….. பொதுமக்கள் அவதி….!!

பலத்த மழையின் காரணமாக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். ‌ கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இங்குள்ள நாகர்கோவில், பூதப்பாண்டி பகுதிகளில் அரை மணி நேரமாக மழை வெளுத்து வாங்கியது. இங்குள்ள கீரிப்பாறை பகுதியில் இருந்து லேபர் காலனிக்கு செல்வதற்காக தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலம் மழையில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும்….. அச்சக உரிமையாளர்கள் சங்கத்தினர் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!

அச்சக உரிமையாளர்கள் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு அச்சக உரிமையாளர்கள் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மூலப்பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளதை கண்டித்தும், ஜி.எஸ்.டி வரியை குறைக்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். இதற்கு பொதுச் செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மேலும் இந்த போராட்டத்தில் பொருளாளர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொழிலாளியை மிரட்டி பணம் பறிப்பு…. வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி…!!

தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் அருகே பட்டகுடிவிளை பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவட்டார் சாலையில் நின்று கொண்டிருந்த போது ரெதீஷ் என்பவர் தொழிலாளியை மிரட்டி பணம் கேட்டுள்ளார். இவர் பணம் கொடுக்க மறுத்ததால் ரெதீஷ் கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாய் பணத்தை பறித்துள்ளார். இதுகுறித்து ராஜேஷ் திருவட்டார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரெதீஷை கைது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட சத்தம்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை….!!

மளிகை கடையில் பணம் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீஸ்வரம் அருகே சமாதானபுரம் பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென கடையில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இதனால் துரை கடைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கடையில் இருந்து ஒருவர் வெளியே ஓடி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த துரை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்” ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் போராட்டம்…. குமரியில் பரபரப்பு….!!

ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விசுவாசபுரத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் எப்.சி கட்டணத்தை குறைக்க வேண்டும். அதன்பிறகு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்திய எப்.சி கட்டணம் 10% திரும்ப பெற வேண்டும். இதனையடுத்து ஆன்லைன் மூலமாக அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும். அதன்பிறகு மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை அமல்படுத்த கூடாது உள்ளிட்ட பல கோரிக்கைகளை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிக்கொண்ட மோட்டார் சைக்கிள்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் மீன் பிடி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே கோடிமுனை பிரண்ட்ஸ் காலனி பகுதியில் நிதோன் சித்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரும், சோபி என்பவரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் கோடிமுனை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கொட்டில்பாடு மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் சித்ராஜின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தாயார் கண்டித்ததால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்….. போலீஸ் விசாரணை….!!

தாயார் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே பருத்திமூட்டுவிளை பகுதியில் மிக்கேல் தாசன் – மேரி சரோஜினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பெமிஷ் என்ற மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பெமிஷுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பெற்றோர் பெண் பார்த்துள்ளனர். அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் மேரி சரோஜினி பெமிஷை கண்டித்துள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

72 பவுன் தங்க நகைகள் கொள்ளை…. வேலைக்கார பெண்கள் கைது…. போலீஸ் அதிரடி…!!

வீட்டில் தங்க நகைகள்  கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வாட்டர் டேங்க் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். இவருடைய 2 மகள்களுக்கும் திருமணம் ஆகி கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆனந்தன் வீட்டில் மொத்தம் 250 பவுன் தங்க நகைகள் இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷு பண்டிகை கொண்டாடுவதற்காக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தூக்கத்தில் அலறிய சிறுமி…. மருத்துவர் கூறிய அதிர்ச்சி தகவல்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திடீரென சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் அருகே ஞாறோடு பகுதியில் சுதீப் – கோபிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விபிஷிகா (8) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் விபிஷிகா அதிகாலை 2 மணியளவில் தூக்கத்திலிருந்து எழுந்துள்ளார். அதன்பிறகு விபூசிகா திடீரென அலரி துடித்தபடி மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் விபிஷிகாவை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேங்காப்பட்டினம் பகுதியில் புதுக்கடை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு முதியவரை அழைத்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்த சுப்பையா என்பதும், மது விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் சுப்பையாவை கைது செய்து அவரிடமிருந்த 60 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் பிணமாக கிடந்த ஓட்டுநர்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

பூட்டிய வீட்டிற்குள் பேருந்து ஓட்டுநர் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே மேட்டுக்கடை முல்லை நகர் பகுதியில் பிரபா சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருவட்டார் பணிமனையில் அரசு ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் வீட்டில் பிரபாசிங் மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் பிரபாசிங் செல்போனுக்கு அவருடைய மனைவி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தமிழக முதல்வர் காணொலிக்காட்சி மூலமாக உரையாடல்….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்….!!!

தமிழக முதல்வர் விவசாயிகளுடன் காணொலிக்காட்சி மூலமாக உரையாடினார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் வைத்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுடன் காணொலிக் காட்சி மூலமாக உரையாடினார். இந்த நிகழ்ச்சியானது குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் பகுதியில் இருக்கும் ஞானதாசன் மாடரேட்டர் பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து நடைபெற்றது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் மேயர் மகேஷ், மாவட்ட ஆட்சியர் அரவிந்த், விஜய் வசந்த் எம்.பி, […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மது அருந்திக் கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே குச்சிராயன்விளை பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் ரமேஷ் தனது நண்பருடன் சேர்ந்து கொடுமுடி கரையாகுளத்தின் படித்துறையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது ரமேஷ் எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரமேஷின் நண்பர் குளத்தில் இறங்கி ரமேஷை மீட்க முயற்சி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

லாட்ஜில் பிணமாக கிடந்த ஓட்டுநர்….. அதிர்ச்சியில் உரிமையாளர்கள்….. போலீஸ் விசாரணை….!!

லாட்ஜில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கிறது. இவர் கடந்த 10-ஆம் தேதி வேலை தேடி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இவர் மீனாட்சிபுரம் பகுதியில் இருக்கும் ஒரு லாட்ஜில் அறையெடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் சண்முகம் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்…. கோர விபத்தில் 3 பேர் பலி…. பெரும் சோகம்….!!

பயங்கர விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே சீதப்பால் பகுதியில் முத்து கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. இவர் தன்னுடைய நண்பர் முகர்ஜிபாஸை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அதன்பிறகு முகர்ஜி பாஸ், முத்து கிருஷ்ணன் உள்பட 3 பேர் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் கன்னியாகுமரிக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை….. போதை பொருட்கள் பறிமுதல்….. 3 வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி….!!

தீவிர வாகன சோதனையின் போது காவல்துறையினரால் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் வடசேரி காவல்துறையினர் ஆம்னி பேருந்து நிலையம் அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றிக் கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த விபின், அருண் துளசி, ஷாஜி என்பது தெரியவந்தது. இவர்கள் பெங்களூருவிலிருந்து ஆம்னி பேருந்து மூலமாக நாகர்கோவிலுக்கு வந்துள்ளனர். இவர்கள் கையில் இருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல்…. 5 பேர் கைது….. போலீஸ் அதிரடி….!!

சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் போதை மாத்திரை கடத்திய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர போதைப் பொருள் மற்றும் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன்பிறகு போதைப்பொருள் விற்பனையை தடுப்பதற்காக ரயில்வே நிலையங்கள் மற்றும் பேருந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சித்ரா பௌர்ணமி” கடற்கரையில் தோன்றிய அபூர்வ காட்சி…. ஆர்வத்துடன் பார்த்த சுற்றுலா பயணிகள்….!!

விடுமுறை தினத்தை முன்னிட்டு கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஒரே நேரத்தில் சூரியன் மறைந்து சந்திரன் உதயமாகும் காட்சி தெரியும். இந்நிலையில் விடுமுறை தினம் என்பதால் இந்த அபூர்வ காட்சியை பார்ப்பதற்காக கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனையடுத்து மாலை 6 மணி அளவில் அரபிக்கடல் பகுதியில் மஞ்சள் நிற சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. அப்போது வங்கக்கடல் பக்கமாக சந்திரன் மேகக் கூட்டங்களில் இருந்து வெளியே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஈஸ்டர் பண்டிகை….. நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை…. மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு….!!

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுள்ளது. நாடு முழுவதும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்ததை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். இந்த புனித நாளில் கிறிஸ்தவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆலயங்களுக்குச் செல்வார்கள். அங்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் பகுதியில் சவேரியார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதனையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு இயேசு உயிர்ப்பு பெருவிழா திருப்பலி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய கார்கள்…. கோர விபத்தில் 6 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு….!!

நேருக்கு நேர் கார்கள் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் துணை மேலாளராக பணிபுரிகிறார். இவருக்கு வித்யா என்ற மனைவியும், ஜெயஷர்ஷினி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு கேரளாவில் இருந்து காரில் குடும்பத்துடன் சென்றுள்ளனர். இந்த கார் ஆரல்வாய்மொழி அருகே சென்ற போது எதிரே வந்த கார் ஈஸ்வரனின் காரின் மீது பலமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கர விபத்து….. கொத்தனாருக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகன விபத்தில் கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திக்கணங்கோடு பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரளாவில் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் முளகுமூடு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த வாகனம் குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குருசுமலைக்கு சென்ற நபர்….. திடீரென ஏற்பட்ட விபரீதம்….. போலீஸ் விசாரணை….!!

திடீரென ஒருவர் மயங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் பகுதியில் ஜெயராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புனித வெள்ளியை முன்னிட்டு குருசுமலை பகுதிக்கு சிலுவையை தரிசனம் செய்வதற்காக நண்பர்களுடன் சென்றுள்ளார். அவர்கள் சிலுவையை தரிசனம் செய்துவிட்டு திரும்பி வரும் வழியில் ஜெயராஜன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் ஜெயராஜனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஜெயராஜனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சித்ரா பௌர்ணமி” ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விலை….. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இப்பகுதிக்கு  மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்தப் பகுதியில் விற்பனை செய்யப்படும் பூக்களை உள்ளூர் மற்றும் கேரள வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்வார்கள். இதனையடுத்து வெளிநாடுகளுக்கும் பூக்கள் தோவாளையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பூக்களின் விலை வேகமாக உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது ஒரு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய ஸ்கூட்டர்….. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் அருகே வடுகன்பற்று பகுதியில் வைத்தியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், மதுவர்தனி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் 2 பேரும் ஸ்கூட்டரில் இருளப்பபுரம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இவர்கள் சுசீந்திரம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் ரேணுகாவின் ஸ்கூட்டரின் மீது பலமாக மோதியது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்….. 19 கிலோ கஞ்சா பறிமுதல்…. போலீஸ் அதிரடி….!!

ரயில் மூலமாக கடத்தி வரப்பட்ட கஞ்சாவை காவல்துறையினர்  பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கடந்த 15 நாட்களாக தனிப்படையினர் அமைக்கப்பட்டு அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயில்கள் மூலமாக கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் தினந்தோறும் ரயில்களில் சோதனை செய்து வருகின்றனர். இதனையடுத்து மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக […]

Categories

Tech |