Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“விலை உயர்வை கண்டிக்கிறோம்”…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு வட்டச் செயலாளர் அருள்தாஸ் தலைமை தாங்கினார். இவர்கள் பெட்ரோல், டீசல், சுங்கவரி மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஏழுமலை, விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணி உள்ளிட்ட பலர் கலந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“3 லட்சம் மதிப்புள்ள” செல்போன் மற்றும் மடிக்கணினிகள்…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

செல்போன் கடையில் கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே முகமது பிலால் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போன் மற்றும் மடிக்கணினி பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வேலை முடிந்ததும் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இவர் மறுநாள் வந்து பார்க்கும் போது கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முகமது பிலால் கடைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய மாணவர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே ஒலையனுர் பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் ஒலையனுர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பதும், ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருவதும் தெரியவந்தது. இவர் 300 கிராம் கஞ்சாவை பதுக்கி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் மற்றும் பார்த்திபன் இமானுவேல் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் உளுந்தூர்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் மோட்டார் சைக்கிள் லாரியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் சந்தோஷ் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

கஞ்சா விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ரிஷிவந்தியம் அருகே காட்டுடையார்கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி ரிஷிவந்தியம் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் திருக்கோவிலூர் அருகே மெகலார் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

9 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு…. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி….!!

திருட்டுப்போன செல்போன்கள் மீட்க்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 மாதங்களாக திருடப்பட்ட மற்றும் தவறவிட்ட செல்போன்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. இதில் 61 செல்போன்கள் மீட்க்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூபாய் 9 லட்சம் ஆகும். இந்த செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் விழா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் கலந்து கொண்டார். இவர் உரிமையாளர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். மேலும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சுப்புராயன், ஜவர்ஹர்லால், […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….. உதவி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்…. முதன்மை கல்வி அலுவலர் அதிரடி…!!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வானவரெட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு உதவி தலைமை ஆசிரியராக துளசிராமன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் 15 சிறுமிகளுக்கு  பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் கள்ளக்குறிச்சி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் துளசிராமனை  கைது செய்தனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீப்பிடித்து எரிந்த துணை மின்நிலையம்…. அதிர்ச்சியில் ஊழியர்கள்…. பெரும் பரபரப்பு…!!

திடீரென  மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் துணை மின்நிலையம் அமைந்துள்ளது. இங்கு நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து உளுந்தூர்பேட்டை தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். அதன்பிறகு மின் அலுவலக ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் மிகுந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் கள்ளக்காதல்…. கொன்று புதைக்கப்பட்ட நண்பர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

புதைக்கப்பட்ட தொழிலாளியின் உடல் காவல்துறையினரால்தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக பாண்டியன் நண்பர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் பாண்டியன் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் பாண்டியன் வேலைக்கு சென்றிருக்கலாம் என குடும்பத்தினர் நினைத்திருந்தனர். இருப்பினும் 20 நாள்கள் ஆகியும் பாண்டியன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“10 மாணவிகளுக்கு திருமணம்” புத்தகத்தை ஏந்த வேண்டிய கையில் குழந்தைகள்…. அதிர்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர்….!!!

பள்ளியைவிட்டு இடைநின்ற 10 மாணவிகளுக்கு திருமணம்  நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 66 மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இடையில் நின்றுள்ளனர். இந்த பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார். அப்போது இடைநின்ற மாணவர்களின் விவரம் குறித்து கேட்டறிந்தார். அதன்பிறகு மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் விதமாக மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

2 பெண்களை திருமணம் செய்த வனக்காவலர்….. 7 பேர் மீது வழக்குப்பதிவு…. பெரும் பரபரப்பு…!!!

2 பெண்களை திருமணம் செய்த வனக்காவலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தம்மம்பட்டி பகுதியில் ஞானப்பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமானூர் பகுதியில் வனக்காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் கீரனூர் பகுதியைச் சேர்ந்த சுஜாதா என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. இந்நிலையில் ஞானப்பிரகாசம் தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த ஜனனி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதைப் பற்றி அறிந்த முதல் மனைவி சுஜாதா காவல்துறையில் ஞானப்பிரகாசம் மீது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகள்…. நிவாரணத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்….. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகள் கருணைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் www.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பெறப்படுகிறது. இதன் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்கள் அதிகாரிகளால் பரிசீலனை  செய்யப்பட்ட பிறகு கருணைத் தொகை வழங்கப்படும். இதுவரை 865 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இதில் 781 மனுதாரர்களுக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 3,750 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு….!!!!

சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் அருகே கல்வராயன் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி தலைமையிலான ஒரு குழு கல்வராயன் மலை வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது துரூர் கிராம ஓடை அருகே பெரிய பேரல்கள் இருந்துள்ளது. உடனே காவல்துறையினர் பேரல்கள் இருந்த இடத்திற்கு சென்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த கேஸ் சிலிண்டர்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!!!

திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கூரைவீடு முற்றிலுமாக எரிந்து நாசமானது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் அருகே குரும்பலூர் கிராமத்தில் ராஜா- ஜெயமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 10 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஜெயராணி சமையல் செய்வதற்காக சிலிண்டரை ஆன் செய்துள்ளார். அப்போது சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயமணி வீட்டை விட்டு வெளியே ஓடினார். இவருடைய கணவர் ராஜா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. 3 மாதங்களாக அரங்கேறிய கொடூரம்…. போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது….!!!!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள வானவரெட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு உதவி தலைமை ஆசிரியராக துளசிராமன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர்  மாணவர்களுக்கு கணக்கு பாடமும் நடத்துகிறார். இவர் 5-ம் வகுப்பு படிக்கும் 15 மாணவிகளுக்கு கடந்த 3 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பெற்றோர்களிடம் தெரிவித்தால் தேர்வில் தோல்வி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பயிர்களைத் தாக்கும் அஸ்வினி பூச்சிகள்…. டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி…. விவசாயிகளின் கோரிக்கை….!!!

சாகுபடி பயிர்களில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் மருந்து தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடகீரனூர், மேல சிறுவல்லூர், வடபொன்பரப்பி, கடுவனூர், கானாங்காடு, புதூர்ப்பாக்கம், மூங்கில்துறைப்பட்டு போன்ற பகுதிகளில் விவசாயிகள் பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இவர்கள் கரும்பு மக்காச்சோளம், கேழ்வரகு, உளுந்து, நெல், மணிலா, கேழ்வரகு, சாமந்தி உள்ளிட்ட பல பயிர்களை பயிரிட்டுள்ளனர். இந்தப் பயிர்களை குருத்துப்பூச்சி மற்றும் பஞ்சு அஸ்வினி பூச்சிகள் பெருமளவுக்குத் தாக்கி சேதப்படுத்துகிறது. இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகள்…. மாவட்ட ஆட்சியர் ஆய்வு…. நகராட்சி ஆணையருக்கு உத்தரவு….!!!

நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதிகளில் கலைஞர் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். இவர் ஏமப்பூர் மற்றும் விளாந்தாங்கல் பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை முதலில் ஆய்வு செய்தார். அப்போது வடிகால் வசதியுடன் கூடிய சாலைகளை தரமானதாக அமைக்க வேண்டுமென வலியுறுத்தினார். இதனையடுத்து விஜயலட்சுமி நகர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வன்னியருக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து…. பா.ம.க வினர் போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!!

பா.ம.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு முனை சாலையில் பா.ம.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் மாநில வன்னியர் சங்க துணை தலைவர் நாராயணன், முன்னால் துணைப் பொதுச்செயலாளர் ரமேஷ், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் கிருஷ்ணன், மாவட்ட வன்னியர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குடும்பத்தகராறில் கணவன் கொலை…. மனைவி, மகன் உள்ளிட்ட 3 பேர் கைது…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டனந்தல் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துணி தைக்கும்  கடை வைத்து நடத்தி வந்துள்ளார் இவருக்கு திருமணமாகி மாலதி என்ற மனைவியும் ராஜதுரை என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரவிச்சந்திரன் ஒரு கோவிலின் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது ரவிச்சந்திரனை அவருடைய  மனைவி, மகன் உள்ளிட்ட 3 பேர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில் ஒரு குழு வடக்கனந்தல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மதன் குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேப்போன்று திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சரவணம்பாக்கம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

என்ன? உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா?…. ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!

பிரசித்தி பெற்ற கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே சித்தலூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருக்கும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதற்கு இந்த சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சிவாகரன் தலைமை தாங்கினார். இந்த உண்டியலில் 7,94,149 ரூபாய் இருந்தது. இதில் 68 கிராம் தங்கம் மற்றும் 33 கிராம் வெள்ளியும் இருந்தது. இந்த காணிக்கை எண்ணும் பணியில் சுமார் 20-க்கும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. கஞ்சா மற்றும் மது பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் மது விற்பனை செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் சிறப்பு ‌சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகம் மற்றும் இளங்கோ தலைமையிலான ஒரு குழு சேஷசமுத்திரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சாராயம் விற்பனை செய்த வேல்முருகன், அலமேலு என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 30 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“150 உணவு வகைகள்” சிறப்பாக நடைபெற்ற பரம்பரியத் திருவிழா…. பரிசுகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!

சிறப்பாக நடைபெற்ற பாரம்பரிய உணவுத்  திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரம்பரிய உணவுத்  திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பாக  நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் முருங்கைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை உள்ளிட்டவை கீரை வகைகள் அடங்கியிருந்தது. இதனையடுத்து தானியங்கள், பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, உணவு வகைகள், பழச்சாறுகள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம்பெற்றிருந்தது. இந்தத் திருவிழாவில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கலந்து கொண்டார். இவர் குழந்தைகளுக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான குழு சின்னமாம்பட்டு தொகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் புதுமாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், கோவிந்தன் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் 100 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்து  2 […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பழைய பென்சன் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்…. அரசு ஊழியர்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!

அனைத்துத்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் மத்திய அரசுக்கு எதிராக 2 நாள் போராட்டத்தில் ஈடுபட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தின் முன்பாக அனைத்துத்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இவர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. 50,000 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்…. கடைக்கு சீல் வைக்கப்பட்டதால் பரபரப்பு….!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான ஒரு குழு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை மறித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பது தெரியவந்தது. அவர் மளிகை கடைக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வதாக கூறியுள்ளனர். இருப்பினும் அவருடைய நடவடிக்கையில் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிணற்றில் சடலமாக மிதந்த வாலிபர்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

கிணற்றில் வாலிபர் சடலம் மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே குளத்தூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகலாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு கிணற்றில் சடலமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பகண்டை கூட்ரோடு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் வடை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரகலாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேலை நிறுத்தப் போராட்டம்…. வங்கி, தபால் சேவைகள் முடக்கம்…. பொதுமக்கள் அவதி….!!

அரசு ஊழியர்களின் போராட்டத்தினால் ரூபாய் 200 கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப்போக்கு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கியது. ஆனால் மத்திய அரசு அலுவலகங்களான தபால், வங்கி, வருமான வரித்துறை, காப்பீடு அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பலர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென மோதிய வாகனம்…. முறிந்து விழுந்த மின்கம்பி…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!

வாகனம் மோதியதில் மின்கம்பி முறிந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியிலிருந்து கச்சிராபாளையம் வரை 20 கிலோ மீட்டர் நீளத்தில் சாலை அமைந்துள்ளது. இதில் குண்டியாநத்தம் பகுதியில் ஒரு மின்கம்பம் அமைந்துள்ளது. இந்த மின் கம்பத்தின் மீது ஒரு வாகனம் மோதி முறிந்து கீழே விழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரியத்துறைக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரியத்துறை ஊழியர்கள் கீழே கிடந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளியே வந்த விவசாயி…. குடும்பத்தினர் பேசாததால் நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

ஜாமீனில் வெளியே வந்த‌ விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே கீழ்ப்பாடி கிராமத்தில் அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சொத்து தகராறில் தன்னுடைய மகன் அலெக்ஸாண்டரை கட்டையால் அடித்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அண்ணாமலையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. 15 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

கஞ்சா விற்பனை செய்த 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருளம்பாடி பகுதியில் திருக்கோவிலூர் போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில் ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது பாபு என்பவரின் வீட்டில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் பாபுவின் வீட்டில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூபாய் 15 லட்சம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தென்னை மரத்தில் ஏறிய வாலிபர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மரத்திலிருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிரேசன் (29) என்ற மகன் இருந்துள்ளார். இவர் நடிகர் விஜய் மக்கள் மன்ற இயக்கத்தின் நிர்வாகியாக இருந்துள்ளார். இந்நிலையில் கதிரேசன் ஒரு தென்னை மரத்தில் ஏறியுள்ளார். அப்போது நிலைத்தடுமாறி மரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் கதிரேசனுக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் கதிரேசனை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போலி பத்திரம் மூலம் நிலம் மோசடி…. 2 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை…!!

போலி பத்திரம் தயார் செய்து நிலம் மோசடி செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இதேபகுதியில் சுப்பிரமணியன் என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் 2 பேருக்கும் இடையே  நிலப்பிரச்சனை இருந்துள்ள.து இதுகுறித்த வழக்கு உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் சுப்பிரமணியன் பிரச்சனையில் இருக்கும் நிலத்திற்கு போலி பத்திரம் தயார் செய்துள்ளார். அந்த இடத்தை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு விற்பனை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென மோதிய வாகனம்…. பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

வாகனம் மோதி பெண் உயிரிழந்த சம்பவம்‌ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகில் வீரசோழபுரம் பயணிகள் நிழற்குடை அருகே 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இவர் மீது அவ்வழியே சென்ற வாகனம் பலமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தியாகதுருகம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாராய ஒழிப்பு விழிப்புணர்வு…. மாணவர்கள் ஊர்வலம்…. கலந்துகொண்ட அதிகாரிகள்…!!

சாராயம் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம்  பகுதியில் சாராய ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் மதுவிலக்கு மற்றும் ஆயர்தீர்வைத் துறை, பேரிடர் மேலாண்மை துறை, வருவாய்த்துறை மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் நடத்தப்பட்டது. இதற்கு  தாசில்தார் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். இது சின்னசேலம் பகுதியில் இருந்து தொடங்கி விஜயபுரம் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. மேலும் மாணவர்கள் சாராய ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விவசாய நிலத்திற்கு சென்ற மாணவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

டிராக்டரில் இருந்து தவறி விழுந்து மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ரிஷிவந்தியம் அருகே கொங்கணங்கொள்ளை கிராமத்தில் செந்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌதம் என்ற மகன் இருந்துள்ளான். இவர் அரசு மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இதே பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவருடன் கௌதம் விவசாய நிலத்திற்கு டிராக்டரில் சென்றுள்ளார். இந்நிலையில் கண்ணன் விவசாய நிலத்தில் டிராக்டரை ஓட்டிக் கொண்டிருக்கும் போது திடீரென நிலைத்தடுமாறி கௌதம் கீழே […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற மாணவி…. திடீரென கேட்ட அலறல் சத்தம்…. அதிர்ச்சியில் பயணிகள்…!!

ஓடும் பேருந்தில் மாணவியிடம் சில்மிஷம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் பகுதியில் 14 வயதுடைய மாணவி வசித்து வருகிறார். இவர் தினமும் பேருந்து மூலமாக பள்ளிக்கு சென்று வருகிறார். இந்நிலையில் மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது பேருந்தில் பயணம் செய்த ஒருவர் மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதனால் மாணவி பயந்துபோய் கூச்சலிட்டுள்ளார். அந்த மாணவியின் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் சில்மிஷம் செய்த நபரை பிடித்து கச்சிராபாளையம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. லாட்டரி சீட்டுகள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான குழு மேட்டுக்குப்பம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் விசாரித்தனர். அந்த விசாரணையில் பொன்னைவலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் என்பது தெரியவந்தது. இவரிடம் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் இருந்தது. இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் ஜெகதீசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஒரேநாளில்” அடுத்தடுத்த 2 கடைகளில்…. மர்மநபர்கள் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

ஒரே நாளில் 2 கடைகளில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கந்தசாமிபுரத்தில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவர் உளுந்தூர்பேட்டை பகுதியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வேலை முடிந்ததும் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இவர் மறுநாள் கடைக்கு  வந்தபோது வெளிப்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாலு கடைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது கடையில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 50,000 பணம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 2,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!!

காவல்துறையினரால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய ஊறல் அழிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் கச்சிராப்பாளையம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மல்லிகைப்படி வனப்பகுதியில் பெரிய பேரல்கள் இருந்தது. உடனே காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அதில்  சாராய ஊறல் இருந்தது தெரியவந்தது. அதில் மொத்தம் 2,000 லிட்டர் இருந்தது. இதை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்காக…. சிறப்பாக நடைபெற்ற சுயம்வர பார்வதி ஹோமம்….!!

 சுயம்வர பார்வதி ஹோமம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.   கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை சார்பாக சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. அதாவது சுயம்வர பார்வதி ஹோமம் நடைபெற்றது. இந்த பூஜையில் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர். இதற்கு ஆராய்ச்சியாளர் சி.பொதுவுடைமூர்த்தி தலைமை தாங்கினார். இந்த பூஜையில் கலந்து கொண்டவர்களின் பெயர், ராசி, நட்சத்திரம் பதிவு செய்யப்பட்டு பார்வதி மந்திர உச்சாடனம் செய்யப்பட்டது. இதனையடுத்து யாகம் வளர்க்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த ஹோமத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்…. ஊரக வளர்ச்சி அலுவலர்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!

ஊரக வளர்ச்சி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் 9 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார். அதாவது அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். அதன்பிறகு  மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை ஊராட்சி அலுவலர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார்.  மேலும் ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள், […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது…. மீறினால் கடும் நடவடிக்கை…. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…!!

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி  பொருட்களை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக மஞ்சப்பை உபயோகப்படுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டது. இதன்பிறகு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில், தமிழக முதல்வரின் பிளாஸ்டிக் மாசில்லா திட்டத்தின்படி பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மஞ்சள் பையை உபயோகப்படுத்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பயங்கர தீ விபத்து…. 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்…. அதிர்ச்சியில் உரிமையாளர்…!!

தீ விபத்தினால் 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டை பகுதியில் பேக்கரி கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை. இதுகுறித்து  உளுந்தூர்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“வரதச்சனை கொடுமை” பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. கதறும் குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே கீழத்தாளனுர் கிராமத்தில் வினோத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன் திருமணமாகி சங்கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வினோத்குமார் வரதட்சணை கேட்டு சங்கீதாவை கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் மனமுடைந்த சங்கீதா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“2 கோடி ரூபாய்” ஊராட்சி மன்ற நிதியில் மோசடி… மாவட்ட ஆட்சியரிடம் மனு…!!

ஊராட்சி ஒன்றிய நிதியில் ரூ 2 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை‌ ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் ரூபாய் 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இது மின்சார உபரி பணிகளுக்காக ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் முறைகேடு நடந்திருப்பதாக ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். அதாவது ஊராட்சி மன்ற தலைவருக்கு தெரியாமலேயே பணம் பட்டுவாடா செய்யப் பட்டிருப்பதாக எழுதப்பட்டிருந்தது. எனவே மாவட்ட ஆட்சியர் ஊராட்சி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி…. தவிக்கும் மாணவர்கள்…. அரசுக்கு கோரிக்கை…!!

புதிதாக பள்ளி கட்டிடம் கட்டித்தர கிராமமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே வடபூண்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இங்கு 45-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் உள்ள 3 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளி பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால், கிராம சேவை மையத்திற்கு பள்ளி தற்காலிகமாக மாற்றப்பட்டது. இங்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஒரே மேடையில்” 250 கர்ப்பிணி பெண்கள்…. சிறப்பாக நடைபெற்ற வளைகாப்பு விழா…!!

கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்னசேலம் பகுதியில் ஒரு தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இங்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் 250 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. இந்த விழாவில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர் கர்ப்பிணி பெண்களுக்கு 1,000 ரூபாய் மதிப்பிலான மதிப்பிலான சீர்வரிசை பொருள்களை  வழங்கினார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“என்னுடைய பணத்தை வாங்கி கொடுங்க சார்” விவசாயிக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

காவல் நிலையத்தில் புகார் அளித்த விவசாயிக்கு கொலை மிரட்டல் வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் அருகே சோழப்பட்டு கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் கடந்த 2013-ஆம் ஆண்டு கோவிந்தராஜ் என்பவருக்கு தன்னுடைய விவசாய நிலத்தை விற்பனை செய்துள்ளார். இதில் ரூபாய் 1 லட்சம் பாக்கி பணம் சரவணனுக்கு, கோவிந்தராஜ் கொடுக்க வேண்டியிருந்தது. இந்த பாக்கி பணத்தை சரவணன் பலமுறை கேட்டுள்ளார். ஆனால் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாப்பிடுவதற்காக சென்ற மாணவி…. திடீரென கடித்த பூச்சி…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

விஷப்பூச்சி கடித்து மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அம்மகளத்தூர் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அந்த கிராமத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி பள்ளியிலிருந்து மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஒரு விஷப்பூச்சி மாணவியை கடித்துள்ளது. இதனால் மயங்கிய நிலையில் கிடந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி […]

Categories

Tech |