சட்ட விரோதமாக வீட்டிலேயே ஸ்கேன் மையம் நடத்திய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மலைகோட்டாலம் காட்டுக்கொட்டாய் பகுதியில் இருக்கும் வீட்டில் ஸ்கேன் மையம் செயல்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த ஸ்கேன் மையத்தில் கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை கண்டறிகின்றனர். இந்நிலையில் அதிகாரிகள் ஒரு கர்ப்பிணியை மலைகோட்டாலத்தில் இருக்கும் ஸ்கேன் மையத்திற்கு அனுப்பி வைத்து கண்காணித்துள்ளனர். பின்னர் அதிரடியாக அதிகாரிகள் ஸ்கேன் மையத்திற்குள் நுழைந்தனர். அப்போது கருவில் இருப்பது […]
