ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டு உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவற்றில் 11 பேர் தி்.மு.க., 2 பேர் பா.ஜ.க., ஒருவர் அ.தி.மு.க., ஒருவர் கொ.ம.தே.க. ஆவர். மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட 5-வது வார்டான காட்டுப் பாளையம் பகவதி நகரில் 2 ஏக்கர் பரப்பளவில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை அமைக்க கட்டிட அனுமதி வழங்குவது குறித்த தீர்மானம் நேற்று முன்தினம் 8 தி.மு.க. உறுப்பினர்களால் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக அறிந்த அந்த பகுதி […]
