சரக்கு வேன் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள செங்கோடம்பாளையம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிர்வேல்(26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பால் எடுத்து வரும் சரக்கு வேனில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். வழக்கமாக கதிர்வேல் கருமாண்டம்பாளையத்தில் இருந்து ஈரோட்டுக்கு சென்று தனியார் பால் பண்ணையில் இருந்து பால் பாக்கெட்டுகளை எடுத்து மொடக்குறிச்சி பகுதியில் வினியோகம் செய்து வந்துள்ளார். நேற்று அதிகாலை சரக்கு […]
