விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வருடந்தோறும் இந்து முன்னணி சார்பாக தமிழகம் முழுவதும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பின் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் கொண்டாடுவதற்கும், சிலை ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு […]
