அரசு பள்ளிக்கூடத்தில் வில்லுப்பாட்டு உள்ளிட்ட புதிய முற்சியின் மூலமாக மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு பெரியார் வீதியில் உள்ள அரசு தொடக்க பள்ளிக்கூடத்தில் எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை மொத்தம் 520 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட்டது. கடந்த 1 2/2 வருடங்களாக வீடுகளில் முடங்கி கிடந்த மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று […]
