பிரசித்தி பெற்ற அய்யாசாமி திருக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அலங்காரிபாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யா சாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு நேற்று 2-வது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அய்யா சாமிக்கு பழம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து […]
