விவசாயி மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அத்தியூர் கேர்மாளம் கிராமத்தில் விவசாயியான தனராஜ்(40)என்பவர் வசித்து வருகிறார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தனராஜ் அதே பகுதியில் வசிக்கும் பொன்னுச்சாமியின் மகள் துளசிமணி(31) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 15-ஆம் தேதி துளசிமணி வீட்டில் இறந்து கிடப்பதாக அப்பகுதியில் வசிக்கும் சிலர் பொன்னுசாமியிடம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து […]
