Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“யோகாசன போட்டி”…. திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

திண்டுக்கல்லில் யோகாசனசங்கம் சார்பாக மாவட்ட அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது. திண்டுக்கல் விளையாட்டு மைதானம் அருகே உள்ள உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் நத்தம், பழனி, வேடசந்தூர், வத்தலக்குண்டு என மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த 400க்கும் அதிகமான வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டிகள் வயது அடிப்படையில் பல சுற்றுகளாக நடைபெற்றது. இதை மாவட்ட யோகாசன சங்க தலைவர் ஜி.சுந்தரராஜன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி போன்றோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். இவற்றில் கலந்துகொண்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இடைவிடாது பெய்த மழை…. நிரம்பி வழியும் வரதமாநதி அணை…. கண்டு ரசிக்கும் மக்கள்….!!!!!

திண்டுக்கல் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர்பாசன ஆதாரமாக பாலாறு, பொருந்தல்ஆறு, வரதமா நதி, குதிரைஆறு அணைகள் இருக்கிறது. கொடைக்கானல் மலைப் பகுதிகளில் மழை பெய்யும்போது இந்த அணைகளுக்கு நீர்வரத்து ஏற்படும். சென்ற சில வாரங்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் மழை பெய்ததை அடுத்து பழனியிலுள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதிலும் குறிப்பாக வரதமாநதிஅணை தன் முழு கொள்ளளவான 66.47அடியை எட்டிநிரம்பியது. இந்நிலையில் சென்ற 2 நாட்களாக கொடைக்கானலில் கன மழை பெய்தது. இதன் காரணமாக பழனி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. பேருந்து நிலையத்தில் பெருக்கெடுத்த நீர்…. சிரமப்பட்ட பயணிகள்….!!!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று பகல் நேரத்தில் வெயில் கொளுத்தியது. இந்நிலையில் மாலை 4 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து சிறிதுநேரத்தில் கன மழை பெய்ய துவங்கியது. சுமார் 2 மணிநேரம் கொட்டித் தீர்த்த மழையால் செம்பட்டியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. செம்பட்டி பேருந்து நிலையத்தில் மழை நீர் சூழ்ந்து குளம்போல் மாறியது. இதன் காரணமாக பயணிகள் சிரமமடைந்தனர். அத்துடன் செம்பட்டியிலுள்ள ஆத்தூர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நடன கலைஞரை கொல்ல முயன்ற 4 பேர்…. என்ன காரணமாக இருக்கும்?….. போலீசார் அதிரடி….!!!

திண்டுக்கல் நெட்டுத்தெருவில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மோகன் பிரகாஷ்(24). இவர் திண்டுக்கல் ஆர்.எம்.காலணியில் நடனப் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று நடன மையத்துக்கு சென்றார். அப்போது ஒரு கும்பல் அவரை வலிமறித்து சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பித்து ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்து அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதனையடுத்து மோகன் பிரகாசை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ரூ.30,000 இருந்தால் வங்கியில் கடன் வாங்கி தருகிறேன்”…… டெய்லரை ஏமாற்றிய பெண்…. போலீசார் அதிரடி….!!!

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகில் உள்ள தெத்துப்பட்டியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவி கரியமாலா. இவர் தையல் தொழிலாளி. இவர் புதிதாக எந்திரங்கள் வாங்கி தையல் தொழிலை மேம்படுத்தற்கு போதிய பணம் இல்லாதால் வங்கியில் கடன் வாங்க முடிவு செய்தார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் ராஜதானிகோட்டை பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டியம்மாள் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அப்போது முத்துப்பாண்டியம்மாள் வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கித் தருவதாக கூறி கரியமாலாவிடம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாலை ஓரத்தில் சிம்கார்டு விற்பனை செய்யக்கூடாது…. புகார் அளித்த மாவட்ட செல்போன் ரீடெய்லர் சங்கத்தினர்….!!!!!

மாவட்ட செல்போன் ரீடெய்லர் சங்கத்தினர் புகார்  மனு ஒன்று அளித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  அலுவலகத்தில் மொபைல் போன் ரீடெய்லர் சங்கத்தினர் சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் நமது மாவட்டத்தில் சாலை ஓரங்களில் 3  சிம் கார்டு நிறுவனத்தினர் குடை அமைத்து குறைந்த விலையிலும், இலவசமாகவும் சிம்கார்டு விற்பனை செய்து வருகின்றனர். இந்த சிம் கார்டுகளை வாங்குபவர்கள் 1  மாதம் மட்டுமே பயன்படுத்திவிட்டு அதனை தூக்கி வீசி விடுகின்றனர். இதனையடுத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

10 ஆண்டுகளாக பட்டா வழங்கவில்லை…. நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டம்…. கோரிக்கைகளை வலியுறுத்திய விவசாயிகள்….!!!!

ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வைத்து விவசாயிகள் குறைதீர்க்கும்  கூட்டம் நடைபெற்றது. இதில் ஆர்.டி.ஓ. முருகேசன், உதவி வன பாதுகாவலர் சக்திவேல், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பரதன், வனசரவர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் விவசாயிகள் கூறியதாவது. நமது கொடைக்கானல் தாலுகாவில் உள்ள சாலை ஓரங்களில் மிகவும் ஆபத்தான மரங்கள் அதிக அளவில் உள்ளது.  தற்போது மழைக்காலம் என்பதால் மரங்கள் சாலையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நைட் 10 மணிக்கு மேல் ஆண்கள் மட்டுமே….. இது தமிழகத்தில் தான்…!!!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விநோத திருவிழா நடைபெற்றது. விராலிப்பட்டி கோட்டை கருப்பண சாமி கோயிலில் நடந்த ஆடித் திருவிழாவில் காலை முதல் மாலை வரை பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சாமி தரிசனம் செய்யலாம். ஆனால், நைட் பத்து மணிக்கு மேல் பெண்களுக்கு அனுமதியில்லை. நள்ளிரவில் நடக்கும் விநோத திருவிழாவில் 3000க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆடுகள், சேவல்கள் ஒரே நேரத்தில் பலியிடப்பட்டு அனைத்து மொத்தமாக சமைக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மின்கம்பத்தில் பற்றி எரிந்த தீ…. அச்சத்தில் பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

மின்கம்பத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மிதமான மழை பெய்தது. இந்நிலையில் கலையரங்கம் பகுதியில் இருக்கும் மின் கம்பத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும் அப்பகுதியில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மகனின் படிப்பிற்காக வைத்திருந்த பணம்…. பேருந்தில் இருந்த 6 லட்ச ரூபாய் அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

பேருந்தில் வைத்திருந்த 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் கல்குவாரி உரிமையாளரான சுந்தர வடிவேல்(40) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சுந்தரவடிவேல் தனது குடும்பத்தினருடன் தனியார் பேருந்தில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். மேலும் மகனின் படிப்புக்காக வைத்திருந்த 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை சுந்தர வடிவேல் ஒரு பையில் எடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து ஓட்டுநர் பெரியகுளம்- […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உலா வந்த காட்டெருமை…. அச்சத்தில் சுற்றுலா பயணிகள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

காட்டெருமை ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டெருமைகள் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று காலை கொடைக்கானல் நகராட்சி அலுவலகம் எதிரே காட்டெருமை உலா வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு அங்கும் இங்கும் ஓடினர். இதனை அடுத்து காட்டெருமை சாலையில் உலா வந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சுமார் 1 […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“தலப்பாக்கட்டி” என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது. அதிரடி உத்தரவு….!!!!

திண்டுக்கல்லை பூர்விகமாக கொண்ட தலப்பாக்கட்டி பியாணி உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஒரு உணவகம் ஆகும். இந்த உணவகத்திற்கு தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் பல கிளைகள் உள்ளன. இந்த நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த உம்மாச்சி தரவாடு பிரியாணி என்ற உணவுகம் தனது பெயரில் தலப்பாக்கட்டி என்ற வார்த்தையை இணைத்துக்கொண்டதாக திண்டுக்கல் தலப்பாக்கட்டி உணவக நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மது அருந்துவதை கண்டித்த மனைவி…. கணவரின் மூர்க்கத்தனமான செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மதுபோதையில் கத்திரிக்கோலால் மனைவியின் கழுத்தில் குத்தி கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வடமதுரை பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். டெய்லரான இவர் அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவருக்கு கற்பகம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சுஜிதா, இனியதர்ஷினி, வர்ஷினி என்ற 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கருப்பையாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனை கற்பகம் கண்டித்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழா…. ஆம்புலன்ஸ் பயன்பாடு குறித்து விளக்கம்…. கலந்து கொண்ட மாணவர்கள்….!!

அரசு பள்ளியில் ஒரே நாளில் முப்பெரும் விழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய வத்தலக்குண்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் சுற்றுச்சுவர் திறப்பு மற்றும் மரக்கன்று நடும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதற்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பரமேஸ்வர் என்பவர் தலைமை தாங்கி புதிய சுற்றுச்சுவரை திறந்து வைத்தார். இந்த விழாவில் மாவட்ட கல்வி அதிகாரி பாண்டித்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதயகுமார், இந்திராணி, ஊராட்சி மன்ற கூட்டமைப்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நுண்ணுயிர் கூடம் அமைக்க எதிர்ப்பு…. போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

நுண்ணுயிர் கூடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தேநீர் கடைகள், பலகார கடைகள், பழங்கள், பூக்கள், உணவு உள்ளிட்ட ஏராளமான கடைகள் மாநகராட்சி அதிகாரிகள் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். அங்கு விற்கப்படும் உணவுப் பொருட்கள், பலகாரங்கள் ஆகியவற்றையும் வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் பேருந்து நிலைய வளாகத்தில் அதிகமாக குப்பைகள் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அருவிக்கு செல்ல தடை…. ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள்…. அருவியை பார்வையிட அனுமதி வழங்க கோரிக்கை….!!

பியர்சோலா அருவியை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் நகரில் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கும் இடமான பியர்சோலா அருவி அமைந்துள்ளது. கடந்த சில தினங்களாக, கொடைக்கான‌ல் பகுதியில் பெய்து வரும் மழையினால் இந்த அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் அருவி அருகில் காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் வனத்துறையினர் கடந்த சில வருடங்களாக அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பொக்லைன் எந்திரம் மூலம்…. ஆக்கிரமிப்புகள் அகற்றம்…. எச்சரிக்கை விடுத்த நெடுஞ்சாலைத்துறையினர்….!!

சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி பேருந்து நிலையம், அடிவாரம் ரோடு ஆகிய இடங்களில் சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனைதொடர்ந்து அங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் பேருந்துநிலையம், அடிவாரம் ரோடு ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் ஆகியோர் பொக்லைன் எந்திரம் மூலம் திண்டுக்கல் சாலை, புதுதாராபுரம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

WOW: நீச்சல் குளத்தில் செஸ் போட்டி…. விளையாடி அசத்திய மாணவர்கள்…..!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் வரும் 28ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுதும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சென்ற சில நாட்களாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட விளையாட்டு அரங்கிலுள்ள நீச்சல் குளத்தில் மிதக்கும் விதமாக செஸ் போர்டுகள் வைக்கப்பட்டது. அதாவது 16 குழுக்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிணற்றில் பின்னிக்கொண்டு நடனமாடிய பாம்புகள்…. ஆர்வத்துடன் பார்த்த மக்கள்…. வெளியான புகைப்படம்….!!!!

திண்டுக்கல் மாவட்டம் அருகே ரெட்டிய பட்டியில் கன்னிமார் கோயில் இருக்கிறது. இந்த கோயிலின் அருகில் தனியார் தோட்டத்தில் சுமார் 40அடி ஆழம் உள்ள கிணறு இருக்கிறது. இப்போது கிணற்றில் 6 அடி தண்ணீர் உள்ளது. நேற்று அந்த கிணற்றின் பக்கவாட்டு பகுதியில் 2 பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடி கொண்டிருந்தது. அவற்றில் ஒன்று கரு நாகம், மற்றொன்று சாரைப் பாம்பு ஆகும். அவ்வாறு பாம்புகள் பின்னிப்பிணைந்த காட்சியை சில பேர் வேடிக்கை பார்த்தனர். இத்தகவல் அப்பகுதியில் காட்டுத் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர்…. ரயிலில் அடிபட்டு பலி…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விநாயகர் நகரில் கூலி தொழிலாளியான நாச்சான்(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொட்டிசெட்டிபட்டி ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது மதுரையை நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உறவினருடன் சென்ற சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை…!!

தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள எண்டப்புளி புதுப்பட்டி பகுதியில் பிச்சை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கபிலேஷ்(14) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று கபிலேஷ் உறவினர் ஒருவருடன் பெரியார் பிரதான நீர் பாசன கால்வாயில் குளித்து கொண்டிருந்தான். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் சிறுவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டான். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சிறுவனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-அரசு பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோதமங்கலம் பகுதியில் கூலி தொழிலாளியான பெலிக்ஸ்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பெலிக்ஸ் மோட்டார் சைக்கிளில் கோதமங்கலம் நோக்கி சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பெலிக்ஸை அக்கம் பக்கத்தினர் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வலி தாங்க முடியவில்லை” கர்ப்பிணி பெண் தற்கொலை…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆட்சிபுரத்தில் அழகுமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி(32) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்கு கடந்த சில வாரங்களாக அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜலட்சுமி தனது வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இழப்பீடு பெற்று தர வேண்டும்” பயிற்சி முகாமில் அறிவுறுத்தல்…. கலந்து கொண்ட பலர்….!!

கடத்தல் சம்பவங்களால் பாதிக்கப்படும் குழந்தை, பெண்களுக்கு இழப்பீடு பெற்று தர வேண்டும் என்று பயிற்சி முகாமில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள், ஆணைக்குழு, மாநில மனித உரிமைகள் ஆணையம், தொண்டு நிறுவன கூட்டமைப்பு சார்பில் மனித கடத்தல் தடுப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாம் மாவட்ட நீதிபதியின் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் கூறியதாவது, குழந்தைகள், பெண்கள் கடத்தலை தடுக்க வேண்டும் என்றும், அதற்கான சட்டங்களை தெளிவாக தெரிந்து கொண்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கூடுதல் நேரம் வேலை பார்ப்பதால் பாதிக்கப்படும் உடல்நலம்…. போராட்டத்தில் ஈடுபட்ட கேட்கீப்பர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!

கூடுதல் மணி நேரம் வேலை செய்வதால் உடல்நலம் பாதிக்கப்படுவதாக கேட்கீப்பர்கள் ரெயில்வே மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களில் பணியாற்றும் ரயில்வே கேட் கீப்பர்கள் 25 பேர் திண்டுக்கல் ரயில்வே மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் கூடுதல் நேரம் வேலை வாங்குவதால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இதனால் மருத்துவ பரிசோதனை செய்யும்படி கூறியுள்ளனர். மேலும் மருத்துவ விடுப்பு அளிப்பதற்கு சான்று அளிக்கும் படியும் தெரிவித்துள்ளனர். ஆனால் ரயில்வே மருத்துவமனை மருத்துவர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்!… வசமாக சிக்கிய 6 பேர்…. அதிரடி காட்டிய போலீஸ்…..!!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் சென்ற சில மாதங்களாக போதைகாளான் மற்றும் கஞ்சா விற்பனை அதிகரித்து இருப்பதாக சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்படி கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான காவல்துறையினர் மேல்மலைப் பகுதி முழுதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கொடைக்கானல் அருகில் மன்னவனூர், பூண்டி உள்ளிட்ட மேல்மலை கிராமங்களில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை வழி மறித்து சிலர் போதை காளான் மற்றும் கஞ்சா […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“குடிநீர் விநியோகம் சரியாக இல்லை”…. ஆத்திரத்தில் கிராம மக்கள் செய்த செயல்… போலீஸ் பேச்சுவார்த்தை…..!!!!

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகில் கணவாய்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைகாரன்பட்டி கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் 200 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இங்கு குடிநீர் விநியோகம் முறையாக இல்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக கோபமடைந்த கிராமமக்கள் திண்டுக்கல்-நத்தம் சாலையில் ஒத்தக்கடை என்னு இடத்தில் திரண்டு வந்தனர். இதையடுத்து அவர்கள் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். இதுபற்றி தகவலறிந்த சாணார்பட்டி போலீசார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகம்: திடீரென தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆரோக்கியமாதா தெருவில் வசித்து வருபவர் ரூபாவதி (38). இவர் கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுக்க வந்தார். அப்போது ரூபாவதி தான் கொண்டுவந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனையடுத்து காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு அவரை தடுத்து நிறுத்தினர். அதன்பின் அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர், தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதனை ரத்துசெய்ய வேண்டும் எனவும் கூறினார். அதனை தொடர்ந்து காவல்துறையினர் ரூபாவதிக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யானை தந்தங்களை விற்க முயற்சி…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

யானை தந்தங்களை விற்க முயன்ற கேரள வாலிபர்கள் உள்பட 8 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் யானை தந்தங்களை சிலர் விற்பனை செய்வதாக வனத்துறை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால் அவர்கள் வனத்துறை வனத்துறை அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் வனத்துறை தனிப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெருமாள் மலை பகுதியில் வனத்துறையினர் தீவிர […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வார விடுமுறையை முன்னிட்டு…. கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!

வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு கடந்த 2 நாட்களாக வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதற்கிடையே கொடைக்கானலுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதனால் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் மோயர்பாயிண்ட், பைன் மரக்காடுகள், பில்லர் ராக்ஸ், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளில் நிலவிய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம்”…. மாணவ மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்…..!!!!!!!!

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாணவ, மாணவிகள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஆசிரியர்கள் ரம்யா, கவிதா போன்றோர்  முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலத்தின் போது ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், பாலிதீன் பைகளை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது எனவும் துணி பையை பயன்படுத்துவோம் எனவும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போலீசில் பாதுகாப்பு கேட்டு வந்த காதல் ஜோடி….. என்னவா இருக்கும்?…. போலீசார் பேச்சு வார்த்தை….!!!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளம்பட்டி தம்பி தோட்டம் பகுதியில் தங்கதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டயம் படிப்பு படித்து முடித்துவிட்டு பிளம்பராக வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த நர்மதா பி.எஸ்.சி பட்டதாரி ஆவார். இவர்கள் இரண்டு பேரும் ஒரே பகுதியில் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் விவகார இருவிட்டு பெற்றோர்களுக்கும் தெரிய வந்தது. அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“நிலம் மோசடி வழக்கு”…. 2 பேருக்கு நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு….!!!!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவூரூரை வசித்து வருபவர் ராஜேந்திர குமார். இவருக்கு கேரளமாநிலம் வைக்கத்தில் 38 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்து வைக்கத்தை சேர்ந்த பால கோபால் (60), கோட்டயம் புதுபள்ளியை சேர்ந்த தங்கச்சன் (76) போன்றோர் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்தனர். இதற்கென பழனியில் பத்திரப்பதிவு செய்தனர். இதனையறிந்த ராஜேந்திர குமார் சென்ற 1997-ம் வருடம் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி 7 பிரிவுகளின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கற்களால் வடிவமைக்கப்பட்ட காமராஜர் சிலை…. செய்து அசத்திய பள்ளி மாணவர்கள்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!!

தமிழகம் முழுதும் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள் விழாவானது கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. வட மதுரை கலைமகள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தாளாளர் பெருமாள் தலைமை தாங்கினார். அத்துடன் இயக்குனர் அருள்மணி முன்னிலை வகித்தார். இதையடுத்து தலைமை ஆசிரியர் ராமு வரவேற்றார். அதன்பின் காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கிடையில் விழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. ரூ.33 லட்சம் கோவில் நீளங்கள் மீட்பு… இந்து சமய அறநிலைத்துறை அதிரடி…!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள தாழையூத்து கிராமத்தில் இருந்து இந்து சமய அறநிலையத்துக்கு சொந்தமான அங்காளம்மன், மாரியம்மன், வேலுசமுத்திரம், செங்கழுநீரம்மன் கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களுக்கு சொந்தமான ரூ.33 லட்சம் மதிப்பிலான 25.95 ஏக்கர் நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அறநிலைய துறையினர் கோவில் நிலங்களை மீட்க முடிவு செய்தனர். அதன்படி அறநிலைத்துறை திண்டுக்கல் உதவி ஆணையர் சுரேஷ் தலைமையில் கோவில் அதிகாரி ராமநாதன், தாசில்தார் விஜயலட்சுமி, ஆய்வாளர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. குளிர்சாதன பெட்டியில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள்…. பறிமுதல் செய்த அதிகாரிகள்….!!

சட்டவிரோதமாக குளிர்சாதன பெட்டியில் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நவாமரத்துப்பட்டியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரெட்டியார்சத்திரம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நவாமரத்துப்பட்டியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு மளிகை கடையில் சோதனை செய்தபோது அங்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

‘குளு குளு’ சீசனை முன்னிட்டு…. ரோஜா பூங்காவிற்கு வருகை தந்த 2 1/4 லட்சம் சுற்றுலா பயணிகள்….!!

குளுகுளு சீசனை முன்னிட்டு ரோஜா பூங்காவிற்கு 2 1/4 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடை சுற்றுலா தலமான கொடைக்கானலில் குளுகுளு சீசன் என்பதால் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் முக்கிய இடங்களான பிரையண்ட் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவிற்கு அதிகமாக சென்று வருவர். மேலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடித்து கொலை செய்யப்பட்ட வாலிபர்…. காதலியின் குடும்பத்தினர் செய்த சம்பவம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வாலிபரை அடித்துக் கொன்ற காதலியின் அண்ணன் மற்றும் தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சேடப்பட்டி பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகுவிஜய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே ஊரில் வசிக்கும் முத்தமிழ்செல்வனின் மகன் அஜித் குமார் என்பவரும் அழகுவிஜய்யும் நண்பர்கள். இவரது வீட்டிற்கு அழகுவிஜய் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அஜித்குமாரின் 18 வயது தங்கைக்கும் அழகுவிஜய்க்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் – மயிலாடுதுறை…. புதிய பயணிகள் ரயில் சேவை தொடக்கம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

புதிதாக பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் முடக்கப்பட்டது. ஆனால் தொற்று தற்போது குறைந்ததால் படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நெல்லையிலிருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயில் சேவையும் ஒன்றாகும். இந்த ரயில் திருநெல்வேலி, ஈரோடு மற்றும் மயிலாடுதுறை இணைப்பு பயணிகள் ரயிலாக இருந்தது. இந்த ரயில் திண்டுக்கல்லுக்கு வந்ததும் ஈரோடு மற்றும் மயிலாப்பூருக்கு தனித்தனியாக பெட்டிகள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தந்தையை கார் ஏற்றி கொல்ல முயன்ற நபர்…. குழந்தை உயிரிழப்பு…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

திண்டுக்கல் மாவட்ட ரெட்டியார்சத்திரம் அருகிலுள்ள சில்வார்பட்டியில் பொன்னுசாமி(34) என்பவர் வசித்து வருகிறார்.. அவருடைய ஒன்றரை வயது குழந்தை சாதனா. கடந்த 10 ஆம் தேதி காலை பொன்னுசாமி தனது குழந்தையை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்றார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது அதை ஊரைச் சேர்ந்த விவசாய ராஜேந்திரன்(45) என்பவர் ஒட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக பொன்னுச்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இவர்களுக்கு மட்டும் எளிதான வேலை வழங்க வேண்டும்”….. மாவட்ட கலெக்டர் அதிரடி….!!!!

திண்டுக்கல் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி கூட்ட அறங்கில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். அவரைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டார். மேலும் அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அதன்பிறகு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்திரவிட்டார். அப்போது பேசிய அவர், “தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். ஒவ்வொரு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில்…. மாணவர்களுக்கு தீத்தடைப்பு பயிற்சி…!!!

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். மேலும் கூடுதல் கலெக்டர் தினேஷ் குமார் முன்னிலை வகித்தார். இதனையடுத்து தீ விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்ற தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜூ மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். அதுமட்டுமில்லாமல் சமையல் கியாஸ் சிலிண்டரில் தீபற்றினால் எவ்வாறு அழைக்க வேண்டும் என்றும் மழைக்காலங்களில் சாலையின் குறுக்காக சாய்ந்து விழும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அம்மாடியோ…. 21 அடி நீளம் அலகு குத்திய பக்தர்கள்….!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அய்யனார் நகரில் விநாயகர், மதுரை வீரன், மாரியம்மன் ஆகிய கோவில்கள் உள்ளது இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு அம்மன் கரக அலங்கரித்து வானவேடிக்கையுடன் கோவிலுக்கு கொண்டு வந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த விழாவில் வேடசந்தூர் குடகானாற்றியில் இருந்து இரண்டு பக்தர்கள் 21 அடி நீளம் உள்ள வேல் அழகு குத்திக்கொண்டு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தி சிறப்பு வழிபாடு செய்தனர். இதனையடுத்து பக்தர்கள் அக்னி சட்டி, மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு வந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மாநில அளவிலான கபடி போட்டி”…. முதலிடம் பிடித்த பழனி அ.கலையம்புத்தூர் அணி….!!!!

மாநில அளவிலான கபடி போட்டியானது பழனியில் நடைபெற்றது. இவற்றில் திண்டுக்கல், திருப்பூர், மதுரை, திருச்சி மற்றும் கோவை உட்பட பல மாவட்டங்களிலிருந்து 56 அணிகள் பங்கேற்றது. இந்த போட்டியை வணிக வரித்துறை கூடுதல் ஆணையர் தேவேந்திர பூபதி துவங்கி வைத்தார். அத்துடன் கபடி கழக மாநில துணை செயலாளர் ரமேஷ் இதற்கு முன்னிலை வகித்தார். போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து போட்டியில் பழனி அ.கலையம்புத்தூர் அணி முதலிடத்தை பிடித்தது. உடுமலை, தாராபுரம் அணிகளானது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மின் மயானம் அமைக்க எதிர்ப்பு”…. போராட்டத்தில் இறங்கிய மக்கள்…. பரபரப்பு….!!!!!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியிலிருந்து செம்பட்டி போகும் சாலையில் சின்னாளப்பட்டி பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு இருக்கிறது. இங்கு மின்மயானம் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பாக முடிவு செய்யப்பட்டது. இதனிடையே குப்பைகிடங்கு அருகேயுள்ள அஞ்சுகம் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அப்பகுதி பொதுமக்கள் 200க்கும் அதிகமானோர் சின்னாளப் பட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு திரண்டுவந்தனர். இந்நிலையில் அவர்கள் பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார்மனு கொடுக்க வேண்டும் என்று கேட்டனர். எனினும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற மின்வாரிய ஊழியர்…. திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

விபத்தில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஆரோக்கிய செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஆரோக்கிய செல்வராஜ் குத்தாலம் மின்வாரியத்தில் தற்காலிகமாக பணிபுரியும் அபி என்பவருடன்  சேர்ந்து மோட்டார் சைக்கிளில் ஒ.என்.ஜி.சி. பிளான்ட் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  வந்த வேன் திடீரென நிலை தடுமாறி இவர்கள் வந்த  மோட்டார் சைக்கிள் மீது பலமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு நேர்த்திக்கடனாக விடப்பட்ட ஆடுகள்…. கடித்து குதறிய வெறி நாய்கள்… பொதுமக்களின் கோரிக்கை….!!!

வெறி நாய்கள் கடித்து கோவில் ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீராலிங்கப்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற கோட்டை கருப்பசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல்  இந்த வருடமும் வரும்  ஆடி மாதம் திருவிழா  நடைபெறுகிறது.இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். பெண்கள் பங்கேற்பதில்லை. இந்நிலையில் பக்தர்கள் திருவிழா நடைபெறும் ஆடி மாதத்திற்கு முன்பே நேர்த்திக்கடனாக ஆடுகளை  கோவிலில் விட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி: முருகனை தரிசிக்க திரண்டு வந்த பக்தர்கள்…. நீண்டநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்…..!!!!

வார விடுமுறையை முன்னிட்டு நேற்று பழனிமுருகன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக பக்தர்களின் கூட்டமானது அதிகளவு காணப்பட்டது. அதிலும் குறிப்பாக அதிகாலையிலேயே சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் திரண்டதால் மலைக் கோயில், அடிவாரம் மற்றும் கோயிலுக்கு போகும் பாதைகள், தரிசன வழிகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதன் காரணமாக சுமார் 2 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். அதேபோன்று மின்இழுவை ரயில் நிலையத்திலும் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து கோயிலுக்கு சென்றனர். இதனிடையில் பக்தர்கள் சிலர் காவடி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசுமாடு…. தீயணைப்பு வீரர்களின் செயல்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கணக்குபிள்ளையூர் பகுதியில் விவசாயியான ராமன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் பசுமாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தோட்டத்தில் இருந்து 50 அடி ஆழ கிணற்றில் பசு மாடு எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதனை பார்த்த ராமன் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தறிகெட்டு ஓடி கடைகள் மீது மோதிய கார்….. ஓட்டுநருக்கு தர்மஅடி கொடுத்த வியாபாரிகள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

தாறுமாறாக ஓடிய கார் சாலையோர கடைகள் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். நேற்று மாலை எரிச்சாலையில் அதிவேகமாக சென்ற கார் சாலையோரம் இருந்த 6 கடைகள் மீது பயங்கரமாக மோதியது. மேலும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது தறிக்கெட்டு ஓடிய கார் ஓடியதால் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நளினி என்ற சுற்றுலா பயணியும், வேளாங்கண்ணி என்ற வியாபாரியும் படுகாயம் […]

Categories

Tech |