Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்… 200 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்…!!!!!!

சாணார்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜான்சன் தலைமையிலான போலீசார் அதிகாரிப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து ஆட்டோவில் இருந்து 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சிலுவத்துறை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணகுமார் மற்றும் ஆட்டோவில் பயணம் மேற்கொண்ட திண்டுக்கல்லை சேர்ந்த ராஜரத்தினம் அதிகாரி பட்டியைச் சேர்ந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இயற்கை விவசாய திருவிழா”…. காண வந்த ஊர் பொதுமக்கள்…. விவசாயிகளுக்கு பாராட்டு சான்றிதழ்…..!!!!

திண்டுக்கல் மாவட்டம் ஓம் சாந்தி மேல்நிலைப் பள்ளியில் இயற்கை விவசாய திருவிழாவானது நேற்று துவங்கியது. இதனை முன்னிட்டு இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள், பழங்கள், சிறு தானியங்கள், சிறுதானிய உணவுவகைகள், மரச்செக்கு எண்ணெய், மாட்டு சாணத்தில் தயாரிக்கப்பட்ட அகல் விளக்கு, ரசாயனம் இல்லாத சாம்பிராணி, பனை ஓலை கூடை மற்றும் அலங்கார பொருட்கள், நாட்டு மாட்டு நெய், ஆயுர்வேத மருந்துகள் ஆகியவை கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தது. இதேபோன்று இயற்கை முறையில் விவசாயம் செய்வதற்கு உரிய இடுப்பொருட்கள், பாரம்பரிய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சுதந்திரதின விழா எதிரொலி!…. பேருந்து நிலையத்தில் மூவர்ணத்தில் ராட்சத பலூன்….!!!!

நாடு முழுதும் 75வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு வீடுகள், அரசு அலுவலகங்கள் உட்பட அனைத்து கட்டிடங்களிலும் 3 நாட்கள் தேசியகொடி பறக்கவிடப்படுகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாநகராட்சியில் 40,000 வீடுகள், பழனி நகராட்சியில் 12,875 வீடுகள், கொடைக்கானல் மற்றும் ஒட்டன்சத்திரம் போன்ற நகராட்சிகளில் தலா 12,000 வீடுகள், 23 பேரூராட்சிகளில் 1 லட்சத்து 7ஆயிரத்து 100 வீடுகள், 306 ஊராட்சிகளில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 437 வீடுகள் என மொத்தம் 5 லட்சத்து 91 ஆயிரத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மகளின் கள்ளக்காதலை கண்டித்த பெற்றோர்…. வாலிபரின் வெறிச்செயல்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!!!

கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பதிக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே பச்சலாக்கவுண்டனூர் பகுதியில் ராஜேந்திரன்-ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு அமுதா என்ற மகள் இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி கணவர் இறந்துவிட்ட நிலையில், பக்கத்துக்கு ஊரை சேர்ந்த காளிமுத்துவுக்கும், அமுதாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு அமுதாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு காளிமுத்துவையும் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த காளிமுத்து தக்க சமயம் பார்த்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“75-வது சுதந்திர தின விழா” தேசியக்கொடி ஏற்றும் கலெக்டர்…. மாவட்டம் முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு….!!!!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றுகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் நாளை சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இதனையடுத்து காவலர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மாவட்ட ஆட்சியர் சிறப்பாக பல்வேறு துறைகளில் பணியாற்றிய நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்குகிறார். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி: 500 மீட்டர் நீள பிரமாண்ட தேசியக்கொடியை ஏந்தி ஊர்வலம்…. வெளியான புகைப்படம்….!!!!

திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பாக பழனியில் சுதந்திரதினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் கனக ராஜ் தலைமை தாங்கினார். இதையடுத்து மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்து, ஊர்வலத்தை துவங்கி வைத்தார். பழனி தேரடியிலுள்ள நேதாஜி சிலை பகுதியிலிருந்து ஊர்வலம் துவங்கியது. இந்த ஊர்வலத்தின் போது பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட 500 மீட்டர் நீள பிரமாண்ட தேசியக் கொடியை ஏந்தி பா.ஜ.க. நிர்வாகிகள் சென்றனர். பழனி நகரின் முக்கியமான வீதிகள் வழியே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடியிருப்புக்குள் புகுந்து அட்டுழியம் செய்யும் யானைகள்…. போராட்டத்தில் இறங்கிய மக்கள்…. பரபரப்பு….!!!!

திண்டுக்கல் மாவட்டம் ஆடலூர், சோலைக் காடு, கொக்குப்பாறை ஆகிய பகுதிகளில் சென்ற சில நாட்களாக காட்டுயானைகள் முகாமிட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் தோட்டங்களுக்கு போக முடியாமல் அச்சமடைந்துள்ளனர். மேலும் யானைகள் நடமாட்டத்தால் கூலித் தொழிலாளிகளும் வேலைக்கு செல்வதில்லை. இந்நிலையில் சோலைக்காட்டை சேர்ந்த பூதப்பாண்டி, பட்டத்துவேல், கோபி, பரமேஸ்வரி போன்றோரின் தோட்டத்துக்குள் நேற்று முன்தினம் காட்டு யானைகள் நுழைந்து அங்கு பயிரிட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு ஆகியவற்றை சேதப்படுத்தியது. அத்துடன் இரவு நேரங்களில் அவை ஊருக்குள் வலம் வருகிறது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மாரியம்மன் கோயில் திருவிழா”…. பக்தியுடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்….!!!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார்நத்தம் கிராமத்தில் ஸ்ரீ மகாமுத்து மாரியம்மன் கோயில் இருக்கிறது. இந்த கோயில் திருவிழா 8- ஆம் தேதி துவங்கியது. நேற்று முன் தினம் காலை அனுமந்தராயன்கோட்டை அருகேயுள்ள குடகனாற்று கரைக்கு பக்தர்கள் சென்றனர். இதையடுத்து பக்தர்கள் அம்மனை வழிபட்டு, அங்கு இருந்து பால் குடங்களை சுமந்தவாறு ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். அதன்பின் குடங்களில் கொண்டுவந்த பாலை அம்மனுக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்தனர். அத்துடன் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அஞ்சுவீடு அருவியில் பாதுகாப்பு ஏற்பாடு…. வனத்துறையினரின் திடீர் ஆய்வு…. சமூக ஆர்வலர் விடுத்த முக்கிய கோரிக்கை….!!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை பகுதியில் அஞ்சு வீடு அருவி இருக்கிறது. இந்த அருவியில் பாதுகாப்பு ஏற்பாடு செய்வது தொடர்பாக வனத் துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். இதற்கிடையில் பேத்துப்பாறை, அஞ்சுவீடு, கணேசபுரம், பாரதி அண்ணா நகர், கோம்பை ஆகிய இடங்களில் பகல் நேரத்திலேயே காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. அவை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை அச்சுறுத்துவதோடு பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக புகாரின்படி மாவட்ட வனஅலுவலர் டாக்டர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உணவு திருவிழா: போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்…. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…. எங்கேன்னு தெரியுமா?…!!!!!

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக அங்கு நேற்று உணவு திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கொடைக்கானலில் தயாரிக்கப்படும் சாக்லெட், திண்டுக்கல் கடலை மிட்டாய், பிரபல ஓட்டல்களின் பிரியாணி, அசைவ உணவுகள், சத்தான தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவுகள், கேக்வகைகள், மரச்செக்கு மற்றும் கல்செக்கில் எடுக்கப்பட்ட எண்ணெய் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தது. மொத்தம் 45 அரங்குகளில் உணவுகள், உணவுபொருட்கள் இடம்பெற்றிருந்தன. இந்த உணவு திருவிழாவிற்கு மாநகராட்சி மேயர் இளமதி தலைமை தாங்கி துவங்கி வைத்தார். அதேபோன்று துணை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம்….. கூண்டில் சிக்கிய குரங்குகள்…. வனத்துறையினரின் நடவடிக்கை….!!

அட்டகாசம் செய்த குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் அப்சர்வேட்டரி சாலை செம்மண் மேடு பகுதியில் இருக்கும் ஏராளமான குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து பொருட்கள் மற்றும் துணிகளை எடுத்து செல்கிறது. நாளுக்கு நாள் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருந்தனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் 2 கூண்டுகளை வைத்தனர். அந்த கூண்டுக்குள் இருந்த உணவுகளை பார்த்து ஓடிவந்த குரங்குகள் கூண்டுக்குள் சிக்கியது. நேற்று மாலை வரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தேசிய கராத்தே போட்டி…. திண்டுக்கல் மாணவர்கள் சாதனை… குவியும் பாராட்டுக்கள்….!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் 20 வது தேசிய ஓபன் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டிகள் கடந்த 7 ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆந்திரா, உத்திரபிரதேசம், கேரளா, கர்நாடகா பல்வேறு மாநிலங்களில் இருந்து 400 க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர். இந்த போட்டியில் திண்டுக்கல்லில் இருந்து 28 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்று, போட்டியில் சிறப்பாக விளையாடி பரிசுகளை குவித்தனர். அதன்படி கட்டா என்னும் தனிப்பிரிவில் 2 பேர் முதலிடம் பிடித்தனர். அதனை தொடர்ந்து 4 வீரர்கள் 2 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…… உடனே விண்ணப்பியுங்கள்…..!!!

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் சிறுபான்மையான மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதனை தொடர்ந்து 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் அடுத்த மாதம் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  அதனைப் போல 11 ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, ஐ.டி.சி, வாழ்க்கை தொழில் கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாய் இறந்த துக்கம்…. மகள் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தாய் இறந்த துக்கத்தில் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்துலாபுரத்தில் ராக்கம்மாள்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகாத நாகலட்சுமி(44) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி உடல்நல குறைவு காரணமாக ராக்கம்மாள் உயிரிழந்தார். இந்நிலையில் தாய் இறந்த துக்கத்தில் இருந்த நாகலட்சுமி யாரிடமும் பேசாமல் அழுது கொண்டே இருந்துள்ளார். நேற்று காலை அப்பகுதியில் இருக்கும் தோட்டத்து கிணற்றில் குதித்து நாகலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

70 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த பசு மாடு…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

கிணற்றுக்குள் விழுந்த பசுமாடை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புத்தூர் பூசாரிப்பட்டியில் நாகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 6 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு பசுமாடு தடுப்பு சுவர் இல்லாத 70 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. இதனை அடுத்து தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசுவை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அம்மாடியோ!…. தலையில் தேங்காய் உடைக்கும் வினோத வழிபாடு….. கோலாகலமாக நடைபெற்ற திருவிழா…..!!!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள எட்டிக்குளத்துப்பட்டியில் சின்னதண்ணன், கசுவம்மாள், மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கோவிலில் திருவிழா நடத்த விழா குழுவினர் முடிவு செய்தனர். இதனையடுத்து நேற்று முன் தினம் கோவிலில் விழா தொடங்கியது. அப்போது கோவிலில் சன்னதியில் இருந்து மின்னொளி ரத்தத்தில் சாமிகள் எழுந்தருளி வீதி உலா வந்தனர். அப்போது பக்தர்களின் சேர்வையாட்டம், கரகாட்டம், வானவேடிக்கை உள்ளிட்டவை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாவ்…. பிரியாணி, கேக் வகைகளுடன் நாளை உணவு திருவிழா….. உடனே கிளம்புங்க….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் அனைவருக்கும் சத்தான உணவு என்னும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. மேலும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்படுக்கின்றது.இதனையடுத்து பி.வி.கே. திருமண மண்டபத்தில் நாளை காலை உணவு திருவிழா நடத்தப்பட உள்ளது. இதில் திண்டுக்கல்லில் பிரபலமான பிரியாணி, கேக் வகைகள், பராம்பரிய உணவுகள் உள்ளிட்ட பல்வகை உணவுகள், செக்கு எண்ணெய் முதலானவை இடம்பெறுகின்றது. இதற்காக 45 அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாநில அளவில் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டி…. தஞ்சாவூர் வீரர்-வீராங்கனைகள் சூப்பர் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்…!!!!

டோக்கியோவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி நடைபெற்ற ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நீரச் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவரை கௌரவிக்கக்கூடிய வகையில் இந்திய தடகளம் சார்பில் நாடு முழுவதும் நீரச் சோப்ரா தங்கம் வென்ற அதே நாளில் ஈட்டி எறிதல் போட்டி நேற்று நடைபெற்றது. அதன்படி தமிழக தடகள சங்கத்தின் தலைவர் தேவாரம், செயலாளர் லதா ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில்….. மீண்டும் ரோப் கார் சேவைகள் தொடக்கம்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!!!

ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்வதற்கு மலை அடிவாரத்தில் இருந்து யானை பாதை, படிப்பாதை, மின் இழுவை ரயில் நிலையம் மற்றும் ரோப் கார் போன்றவைகள் இருக்கிறது. இந்நிலையில் ரோப் காரில் செல்லும்போது நகரின் இயற்கை அழகுகளை ரசித்துக்கொண்டே செல்லலாம் என்பதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்காரில் செல்வதற்கு விரும்புகின்றனர். இந்த ரோப் கார்களில் மாதத்திற்கு ஒரு முறை மற்றும் ஆண்டுதோறும் பராமரிப்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கட்டுப்பாட்டை இழந்த கார்கள்” சாலையில் கவிழ்ந்து 8 பேர் படுகாயம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!!!

திடீரென நிலைத்தடுமாறி கார் கவிழ்ந்ததில் 8 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், இவருடைய மனைவி மகாலட்சுமி, மகன் ஜஸ்வந்த் மற்றும் மகள் கிருஷ்ணா ஆகியோர் காரில் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென நிலை தடுமாறிய கார் சாலையின் ஓரமாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேருக்கும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடூரமாக கொல்லப்பட்ட மெக்கானிக்…. கொலையாளியை அடித்து கொன்ற பொதுமக்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!!!

2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே லிங்கவாடி பகுதியில் டிவி மெக்கானிக்காக வேலைப்பார்த்து வந்த தங்கராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கிறது. இதே பகுதியில் வசித்து வந்த உதயகுமாரும், தங்க ராஜாவும் சேர்ந்து ஒரு டீக்கடையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இவர்களை சமாதானம் செய்வதற்கு அப்பகுதி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 4 பேர்…. 480 கிலோ புகையிலை பறிமுதல்…. போலீஸ் அதிரடி…..!!!

சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சாணார்பட்டி அருகே கொசவபட்டி பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இவருடைய உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு குடோனில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதில் மொத்தம் 480 கிலோ இருந்தது. இதனையடுத்து குடோனில் இருந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அருவியில் தவறி விழுந்த வாலிபர்…. 4-வது நாளாக தேடும் பணி தீவிரம்…. அதிகாரிகள் ஆய்வு….!!!!

அருவியில் விழுந்த நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு கடந்த 3-ஆம் தேதி அஜய் பாண்டியன் என்பவர் புகைப்படம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாறை மீது ஏறி நின்ற அஜய் பாண்டியனை அவருடைய நண்பர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது திடீரென கால் வழுக்கி அருவிக்குள் அஜய் பாண்டியன் விழுந்துவிட்டார். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் அணி வெற்றி…. வெளியான தகவல்….!!!

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் போட்டியில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த 38 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்களும் மொத்தம் 8 அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றனர். இதில் கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நீலகிரி, இராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த அணியினர் ஒரு பிரிவாக பிரிக்கப்பட்டு இவர்களுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டி நடைபெற்று வருகிறது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

புல்லாவெளியின் நீர்வீழ்ச்சியில் வாலிபர் அடித்து செல்லப்பட்டாரா…..? தேடும் பணிகள் தீவிரம்….!!!!!!!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேல சத்திரத்தை சேர்ந்த நாகநாத சேதுபதி என்பவர் வசித்து வருகிறார். அவருடைய மகன் அஜய் பாண்டியன் இவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான மங்களம் கொம்புவில் குத்தகைக்கு தோட்டம் எடுத்து ஏலக்காய் விவசாயம் செய்துவந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் தனது நண்பர் கல்யாண சுந்தரம் என்பவரிடம் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு சென்று இருக்கின்றார். நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள பாறையில் இறங்கிய அஜய் பாண்டியனை கல்யாணசுந்தரம் செல்போனில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவில் பக்தர்களுக்கு….. விரைவில் ரோப் கார் சேவை…. வெளியான சூப்பர் தகவல்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்து வருகை புரிவார்கள். பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக் கோவிலுக்கு செல்ல படிப்பாதையை தவிர ரோப்கார் மின்இழுவை ரயில் ஆகிய சேவைகள் உள்ளது. இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடி செல்ல முடிவதால் பெரும்பாலனோர் ரோப் கார் தேர்வு செய்கின்றனர். இதற்காக கிழக்கு கிரிவீதியில் ரோப்கார்நிலை அமைக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகத்தை பொறுத்து இயக்கப்படும் இந்த ரோப் காரில் தினசரி மாதாந்திர மற்றும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாநில அளவில் நடைபெற்ற குத்து சண்டை போட்டி…. பழனி மாணவர்கள் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை, சேலம், புதுக்கோட்டை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள்.  இந்த போட்டி வயது மற்றும் எடை அடிப்படையில் தனி தனியாக நடைபெற்றது. இதனையடுத்து இந்த போட்டியில் போட்டியில் பழனி பகுதியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்தனர். அதன்படி 46 கிலோ எடை பிரிவில் அன்பு கார்த்தி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வட்டி தொழிலாளி கொலை வழக்கு….. மனைவி உள்ளிட்ட 4 பேர் கைது…. பெரும் பரபரப்பு….!!!

திண்டுக்கல் மாவட்ட சத்திரப்பட்டி முல்லை நகரில் ஓமந்தூரான்(46) என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரளா மாநிலத்தில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பாண்டீஸ்வரி. இந்நிலையில் ஓமந்தூரான் தனது மனைவி பாண்டியரின் பெயரில் ஒரு சொத்தை விற்று பணம் தருமாறு அடிக்கடி தகராறு செய்து வந்தார். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் அவர்களுக்கு ஏற்பட்ட தகராறி கிரிக்கெட் மட்டையால் அடித்து ஓமந்தூரான் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை… முறிந்து விழுந்த மரங்கள்….. போக்குவரத்து பாதிப்பு…..!!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று காலை முதல் இரவு வரை சில நிமிடங்களில் சாரல் மழையும், மிதமான மழையும் பெய்தது. தொடர் மழை எதிரொலியாக நகரை ஒட்டி உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர் சோலா அருவி, தேவதை அருவி, பாம்பார் அருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் வத்தலகுண்டு மற்றும் மேல்மலை செல்லும் பாதையில் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெற்ற மகனையே…. தமிழகத்தில் இப்படியும் ஒரு கொடூர தாய்….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!

திண்டுக்கல்லில் கணவனை கொலை செய்து விட்டு மகனை தாய் ஜெயிலுக்கு அனுப்பியுள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது பழனியை சேர்ந்தவர் ஓமந்தூரார். ஓமந்தூரானுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் மது குடித்து விட்டு அடிக்கடி தனது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தகராறு செய்து வந்துள்ளார்.  இவர் தன் மனைவி பாண்டீஸ்வரி பெயரில் இருக்கும் சொத்துக்களை கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.இதனால் பாண்டீஸ்வரி உறவினர்களுடன் சேர்ந்து கணவனை கொலை செய்துள்ளார். அதன் பிறகு மகனுக்கு 15 வயது என்பதால் அவனுக்கு தண்டனை குறைவு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சனை… இளம் பெண் தற்கொலை முயற்சி…. பெரும் பரபரப்பு…!!!!!!!

சாணார்பட்டி அருகே உள்ள கைலாசப்பட்டியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இவரது மனைவி நந்தினி(22). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக நந்தினி நேற்றிரவு வீட்டில் யாரும் இல்லாத போது தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் பரவிய தீயால் அவர் அபய குரல் எழுப்பியுள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து நந்தினி உடலில் பற்றி எரிந்த தீயை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

லாரியில் இறந்து கிடந்த ஓட்டுநர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

நெஞ்சுவலி ஏற்பட்டதால் லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் லாரி ஓட்டுனரான பாண்டி(54) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று பாண்டி வேடசந்தூரில் இருந்து நோட்டு மற்றும் புத்தகங்களை ஏற்றி கொண்டு லாரியில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள தென்னிலை கடைவீதி அருகே சென்ற போது நெஞ்சுவலி ஏற்பட்டதால் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு பாண்டி அப்படியே அமர்ந்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை….. கொடைக்கானல்-அடுக்கம் மலைப்பாதையில் 3 இடங்களில் மண்சரிவு….. அவதியில் மக்கள்….!!!

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள் ஆளாகியுள்ளனர். அதன்படி திண்டுக்கல், தேனி, நிலக்கரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் மூலம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று இரவு முதல் பலத்த மழை மற்றும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல்-அதுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் மலைப்பாதையில் இன்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

புல்லாவெளி அருவியில் தவறி விழுந்த இளைஞர்….. பதைபதைக்கும் வீடியோ காட்சி…. பெரும் அதிர்ச்சி….!!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதன் காரணமாக நீரோடைகள், அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் தாண்டிக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புல்லாவெளி அருவிக்கு பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டிய என்பவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு அஜய் பாண்டியன் புல்லாவெளி அருவியில் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். கொடைக்கானல் புல்லாவெளி அருவியில் போட்டோ எடுக்கும் போது தவறி விழுந்த இளைஞர் மாயம் ⚠️ பதைபதைக்கும் காட்சிகள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இளம்பெண் தற்கொலை வழக்கு…. விசாரணையில் தெரிந்த உண்மை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள முத்தழகுபட்டியில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுகன்யா(25) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுகன்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சுகன்யாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் சுகன்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவர்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பிலாத்து பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொண்ணு(24) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பொண்ணு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த கார்த்திகேயன் தனது மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை….. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி….!!!

இருசக்கர வாகனங்களை திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டுள்ளது. அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர நோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தாராபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்களை நிறுத்தி காவல்துறையினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கால்பந்து போட்டி”…. பங்கேற்ற மாணவ-மாணவிகள்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம், குயின்சிட்டி ரோட்டரி சங்கம், மாவட்ட கால்பந்து கழகம் போன்றவை சார்பாக மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டியானது விளையாட்டு அரங்கில் துவங்கியது. இதன் தொடக்கவிழாவிற்கு மாவட்ட கால்பந்து கழக தலைவர் ஜி.சுந்தரராஜன் தலைமை தாங்கினார். அத்துடன் செயலாளர் எஸ்.சண்முகம் முன்னிலை வகித்தார். இதையடுத்து மேற்கு ரோட்டரி சங்க தலைவர் ஜெயச்சந்திரன், குயின்சிட்டி ரோட்டரி சங்கதலைவி சர்மிளா பாலகுரு போன்றோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பாம்புகள் இப்படி தான் வாழும்…. நடைபெறும் புகைப்பட கண்காட்சி…. பார்ப்பதற்கு குவியும் பொதுமக்கள்….!!!!

பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான பொதுமக்கள்  புகைப்பட கண்காட்சியை பார்த்து செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில் மாதம் தோறும் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த மாதம் அதிகமாக வாழும் பாம்புகள், கொடிய விஷமுள்ள பாம்புகள், விஷம்மற்ற  பாம்புகள், பாம்புகளின் ஆயுட்காலம், அதன் நன்மைகள் ஆகியவை  குறித்த புகைப்படங்கள் கண்காட்சியில்  வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் பாம்புகள் பற்றிய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 46 பேர்…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!!!

முயலை வேட்டையாட முயன்ற 46 பேருக்கு 5 ஆயிரம்  ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொப்பம்பட்டி பகுதியில் ஒரு கும்பல் முயல் பிடிப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனச்சரகர்  குமார் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 46 பேர் முயலை பிடித்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து பழனியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்திற்கு அழைத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திருமணத்தை மறைத்து காதல்…. ரூ.30 லட்சம் அபேஸ் செய்த நடிகை….. பெரும் பரபரப்பு….!!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ்.யூடியூப் சேனல் நடத்தி வரும் அவரிடம் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்து வரும் திவ்யபாரதி என்பவர் அறிமுகமாகியுள்ளார். தனது குடும்பத்துடன் கொடைக்கானலில் உள்ள பகலவன் ராஜா வீட்டிற்கு சென்று தங்கி குடும்ப ரீதியாக நட்பாக பழகியுள்ளனர். திவ்யபாரதி தன்னுடன் இரண்டு பெண் குழந்தைகளை அழைத்து வந்துள்ளார். அந்த குழந்தைகளை தனது அக்காவின் குழந்தைகள் என்றும் அக்கா கணவர் ஓடி விட்டதால் தான் வளர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கழிவுநீர் கலந்ததால் செத்து மிதக்கும் மீன்கள்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

கழிவு நீர் கலந்ததால் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுள்ளெறும்பு நால்ரோடு காலனி அருகே கெங்கன்குளம் அமைந்துள்ளது. இந்நிலையில் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கெங்கன்குளத்தில் கலப்பதாக கூறப்படுகிறது. இதனால் குளத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்ட மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே ஆலையிலிருந்து கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நிரம்பி வழியும் மகாநதி அணை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!!!!!!!

பட்டிவீரன்பட்டி அய்யம்பாளையம் பகுதியில் கருணாநிதி அணை அமைந்திருக்கின்றது. அணையின் மொத்த உயரம் 74 அடி ஆகும். ஆனால் இந்த அணையின் பாதுகாப்பு கருதி 72 அடி வரையே தண்ணீர் தேக்கி வைக்கப்படுகின்றது. இந்த சூழலில் கடந்த சில வாரங்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வந்தது. இதனால் அணையின்  நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 22 அடியை எட்டியது. இதனை அடுத்து உபநிநீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றது. அணையின் நீர்மட்டம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. இடிந்து விழுந்த மேற்கூரை…. சுதாரித்துக்கொண்ட குடும்பத்தினர்….!!!!

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி இந்திராகாலனியில் 20 வருடங்களுக்கு முன்பு  தொகுப்பு வீடுகளானது கட்டப்பட்டது. அவற்றில் ஒரு வீட்டில் கூலித் தொழிலாளியான ராஜ் (60) குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் கனமழை பெய்தது. இதனால் ராஜ் வீட்டில் மழைநீர் ஒழுக துவங்கியது. இதன் காரணமாக ராஜ் பக்கத்து வீட்டில் தனது குடும்பத்தினருடன் சென்று தங்கினார். இதையடுத்து நள்ளிரவில் ராஜ் வீட்டின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதற்கிடையில் தண்ணீர் ஒழுக தொடங்கியதுமே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குறைதீர்க்கும் கூட்டம்…. பெட்ரோலுடன் மனு கொடுக்க வந்த கிராம மக்கள்…. பரபரப்பு….!!!!

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூடுதல் கலெக்டர் தினேஷ் குமார் உள்பட அனைத்துதுறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது அடிப்படை வசதிகள், உதவித்தொகை உட்பட பல கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி கலெக்டர் விசாகன் உத்தரவு பிறப்பித்தார். மேலும் அகரம் பேரூராட்சி வி.காமாட்சிபுரத்தை சேர்ந்த மக்கள் அடிப்படைவசதிகள் கேட்டு மனு கொடுத்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில்…. ரோப்கார் பராமரிப்பு பணிகள்…. வெளியான முக்கிய தகவல்….!!!

ரோப் கார் பராமரிப்பு பணிகள் கூடிய விரைவில் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்வதற்கு மலை அடிவாரத்தில் இருந்து யானை பாதை, படிப்பாதை, மின் இழுவை ரயில் நிலையம் மற்றும் ரோப் கார் போன்றவைகள் இருக்கிறது. இந்நிலையில் ரோப் காரில் செல்லும்போது நகரின் இயற்கை அழகுகளை ரசித்துக்கொண்டே செல்லலாம் என்பதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்காரில் செல்வதற்கு விரும்புகின்றனர். இந்த ரோப் கார்களில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கருப்பசாமி கோவிலில் நடைபெற்ற கிடா விருந்து” மயங்கி விழுந்து உயிரிழந்த ஓட்டுநர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மயங்கி விழுந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மொட்டணம்பட்டி கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் அமைந்துள்ள ஒரு நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று  பாலமுருகன் அய்யலூர் பகுதியில் அமைந்துள்ள கருப்பசாமி கோவிலில் நடைபெற்ற கிடாவெட்டு விருந்திற்கு  சாப்பிட சென்றுள்ளார். இதனையடுத்து பாலமுருகன் சாப்பிட்டு கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பாலமுருகனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஒரு வாரமாக வெளுத்து வாங்கிய மழை…. ஆர்ப்பரித்து கொட்டும் புல்லாவெளி நீர்வீழ்ச்சி…. குவியும் சுற்றுலா பயணிகளின் கூட்டம்….!!!!!

புல்லாவெளி  நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாறை, கானல்காடு, தடியன்குடிசை, பெரியூர், குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த மலை கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக இடி மின்னலுடன்  கனமழை பெய்தது. இந்நிலையில் இயற்கை எழில் கொஞ்சும் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் அருவியில்   குளிப்பதற்காக வருகின்றனர். இதனையடுத்து தண்ணீர் இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடப்பாவமே….! விஷப்பூச்சி கடித்த 3 வயது குழந்தை…. பெற்றோரின் கவனக்குறைவால் நேர்ந்த சோகம்….!!!!

வடமதுரை அருகே விஷப்பூச்சி கடித்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே பிச்சையம்பட்டி பகுதியை சேர்ந்த மரம் வெட்டும் கூலி தொழிலாளர் பால்காளை, தினமும் கோவிலூர் அருகே கூலி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்புவார். இவருக்கு மூன்று வயதில் காவிய தர்ஷினி என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது கண்ணுக்கு தெரியாத பூச்சி கடித்துள்ளது. பின்னர் வீட்டின் அருகிலேயே இந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா…. 3000 ஆடுகள் பலியிட்டு வழிபாடு….!!!!!!!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே விராலிப்பட்டியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கண்மாயின் கரையோரத்தில் கோட்டை கருப்பண்ணசாமி கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வருடம் தோறும் ஆடி மாத திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். அதன்படி கருப்பண்ணசாமி கோவில் ஆடி மாத திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு இரவு 7 மணி முதல் கட்ட பூஜையுடன் திருவிழா தொடங்கியுள்ளது. அதன் பின் ஆடுகள் பலியிடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில்  பக்தர்கள் நேர்த்திக்கடனாக […]

Categories

Tech |