மாவட்ட ஆட்சியர் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் சுமார் 3 கோடியே 6 லட்சம் செலவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரான திரு.விசாகன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் வேடச்சந்தூர் எம்.எல்.ஏ-வான காந்திராஜன் என்பவர் முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில் விழாவின் வரவேற்புரையை திட்ட இயக்குனர் தினேஷ்குமார் தொடங்கியுள்ளார். […]
