சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லந்தக்கோட்டை கிராமத்தில் ராஜா- தேவிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அஜித் என்ற மகன் உள்ளார். இவர் மூங்கில் நார் கூடை பின்னும் இருக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அஜித்துக்கும் 13 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. […]