Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“திண்டுக்கல் மாநகராட்சியில் நடந்த தூய்மை பணி முகாம்”… மாநகராட்சி கமிஷனர் மேற்பார்வை…!!!

திண்டுக்கல் மாநகராட்சியில் நேற்று தூய்மைப்பணி முகமானது நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி பகுதிகளில் சுத்தமான மற்றும் பசுமையான சுற்றுச் சூழலை உருவாக்கும் பணியை பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒத்துழைப்புடன் தூய்மை பணி முகாம் நடத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் பெயரில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் தூய்மை பணி முகமானது நேற்று நடைபெற்றது. இந்த முகமானது, மாநகராட்சி 1-வது வார்டு பி.வி.தாஸ் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இரண்டு மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பலி”… விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை கைது செய்த போலீஸார்…!!!!

அடுத்தடுத்து வந்த கொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பலியாகி உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொழுமம் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதுடைய மாரிமுத்து. இவர் சொந்த வேலை காரணமாக பழனிக்கு தன் மனைவியுடன் வந்தார். வேலை முடித்தவுடன் மோட்டார் சைக்கிளில் குழுமத்துக்கு இருவரும் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். இதுபோலவே திருப்பூர் மாவட்டத்திலுள்ள குமரலிங்கத்தை சேர்ந்த சாகுல் அமீது மற்றும் அவரின் மனைவி பழனிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு ஊருக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி – கொடைக்கானல் மலை பாதையில்… தீடீரென்று மண்சரிவு…. போக்குவரத்து பாதிப்பு…!!!

பழனி – கொடைக்கானல் மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் கொண்டு அப்புறப்படுத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு, பழனி வழியாக மலைப்பாதைகள் அமைந்துள்ளது. இந்த மலைப் பாதையை கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதில் குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி ஆகிய பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அதிகமாக இந்த பாதையில் செல்கின்றனர். அதேபோன்று பழனி முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு கொடைக்கானல் போகின்றவர்களும் இந்த மலைப் பாதையை தான் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பிலிப்பைன்ஸ் நாட் டிற்கு மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர் உயிரிழப்பு”… பெற்றோர் கோரிக்கை…!!!

பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மருத்துவம் படிக்கச் சென்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை அருகே இருக்கும் இழுப்பப்பட்டியில் வசித்து வருபவர் கந்தசாமி. இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள இனுங்கூர் மேலாண்மை துறை விதை சுத்திகரிப்பு நிலையத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகின்றார். இவர் சென்ற 19ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் விசாகனை சந்தித்து மனு அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “எனது மகன் பிரதீப் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தவோ என்னும் இடத்தில் இருக்கும் மருத்துவ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா…! பழனி முருகன் கோவிலில்… எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை…. ரூ 2,71,95,310 வருவாய்…!!!

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ 2,71,95,310 வருவாய் கிடைத்தது. முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவிலின் உண்டியலில் செலுத்துகிறார்கள். இந்த கோவில் உண்டியல் நிரம்பிய பிறகு கோவில் நிர்வாகம் சார்பாக அதிலுள்ள பணம் பொருள்கள் எல்லாம் எண்ணப்படுகிறது. அதன்படி கடந்த மாதம் 25ம் தேதியன்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டுள்ளது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

4 கோடி மதிப்பு… கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம்…இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு…

குஜிலியம்பாறை அருகில் கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகில் டி.கூடலூரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலங்களை சட்ட விரோதமாக சில நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் இணை ஆணையர் பாரதி அதிகாரிகளுக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நகராட்சி பணியாளர் மீது பாலியல் புகார்… சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ…!!!

பழனி நகராட்சி பணியாளர் மீது பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில், அது  தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சியில் கொசு ஒழிப்பு, துப்புரவு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் பழனி நகராட்சி ஊழியர்கள் மேற்பார்வையில் வேலை பார்க்கிறார்கள். இந்நிலையில் பழனி நகராட்சியில் கொசு ஒழிப்பு பணியில் வேலை பார்க்கும் ஒரு பெண் தொழிலாளிக்கு, நகராட்சி பணியாளர் ஒருவர்  பாலியல் தொல்லை கொடுப்பதாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

புதுமாப்பிள்ளைக்கு நடந்த கொடூரம்…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளையை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், அனுமந்தநகரில் வசித்து வருபவர் பழனிசாமி. இவருடைய மகன் பிரபாகரன்(26) தனியார் வங்கி ஊழியராக இருந்துள்ளார். இவருடைய மனைவி தென்றல் தேன்மொழி. இவர்கள் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 15 தினங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த 18-ம் தேதி பிரபாகரனின் நண்பரான சூர்யாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாட சென்றுள்ளார். அதன்பின் அன்று இரவு தனது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வீட்டுக்குள் புகுந்த 4 அடி நாகப்பாம்பு”… உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!!

வேடசந்தூரில் வீட்டுக்குள் நுழைந்த நான்கு அடி நாகப்பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்தார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடச்சந்தூரில் இருக்கும் குறிஞ்சி நகரில் வாழ்ந்து வரும் முருகேசன் என்பவரின் வீட்டிற்குள் நேற்று பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதைப்பார்த்த முருகேசன் குடும்பத்தார்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர் வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்கள். இதையடுத்து விரைந்து வந்த நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேர […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிய அடையாள அட்டை கேட்டு மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்”….!!!!

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிய அடையாள அட்டை கேட்டு மக்கள் மறியலில் ஈடுபட்டார்கள். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செம்பட்டி அருகே இருக்கும் பாளையங்கோட்டை ஊராட்சியில் வீட்டு வரி செலுத்தினால் தான் கிராம மக்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரிய அனுமதி வழங்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் அறிவித்ததால் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அடையாள அட்டையை கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடூரம்… வாலிபர் வெட்டிக்கொலை… முட்புதரில் கிடந்தசடலம்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!

கொடைரோடு அருகே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகில் நிலக்கோட்டை செல்லும் ரோட்டில் அம்மையநாயக்கனூர் ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை அருகே முட்புதரில் ஒரு ஆண் பிணம் கிடந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி கிராம மக்கள் அம்மையநாயக்கனூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய பாண்டியன், சேகர் மற்றும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

4 நாட்கள் தொடர் விடுமுறை… கொடைக்கானலில் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை…!!!

கொடைக்கானலில் நிலவும் குளுகுளு சூழ்நிலையை அனுபவிப்பதற்காக கடந்த நான்கு தினங்களாக 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் இதமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். இதற்கிடையில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் கொடைக்கானலுக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, பைன் மரக்காடு, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சூறாவளி காற்றுடன்… பெய்த ஆலங்கட்டி மழை…. மகிழ்ச்சியடைந்த மக்கள்.!!

திண்டுக்கலில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்த நிலையில், அதனை கையில் எடுத்து மக்கள் ரசித்தனர். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. திண்டுக்கல் நல்லாம்பட்டி, குள்ளனம்பட்டி, வடமதுரை, அய்யலூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீ பற்றினால் என்ன செய்யனும்?…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்பு துறை…!!

திண்டுக்கல்லில் தீயணைப்பு துறை சார்பாக தீ விபத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதி முதல் வருகின்ற 20ஆம் தேதி வரை தீயணைப்பு துறை சார்பாக தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திண்டுக்கல் சுற்றுவட்டார கிராமங்களில் தீ விபத்து ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தீ விபத்துகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை தீயணைப்பு படை வீரர்கள் ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் திண்டுக்கல் அருகில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அனுமதி இன்றி வீட்டில் வழிபாட்டுக் கூட்டம்… எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் போராட்டம்…!!!

வேடசந்தூரில் வழிபாட்டுக் கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினார்கள். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் ஒரு வீட்டில் வழிபாட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதை அறிந்து இந்து முன்னணியினர் ஒன்று திரண்டு வந்து வழிபாட்டு கூட்டத்தை அனுமதியின்றி நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து அந்த வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இத்தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் வேலுமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பதிவாளர்….. தணிக்கை துறையினர் குற்றச்சாட்டு….. துணைவேந்தர் அதிரடி நடவடிக்கை…..!!

காந்தி கிராம பல்கலைகழகத்தின் பதிவாளரை பணியிலிருந்து  இடை நீக்கம் செய்து துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், அருகிலுள்ள காந்திகிராம பல்கலைக் கழகத்தில் சிவகுமார் என்ற நபர் பொறுப்பாளர் பதவியில் பணியாற்றி வருகின்றார். ஆறு மாதங்களில் இவரது பணி முடிவடைய இருந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த  அறிவிப்பில் பதிவாளர் பணியிலிருந்த சிவகுமாரின் பெயரையும் படத்தையும் நீக்கி  பேராசிரியரான சேதுராமனின் புகைப்படத்தை வைத்து அந்த பல்கலைக்கழகத்தின்  பொறுப்பு பதிவாளர் என இணையதளத்தில் வெளியாகியுள்ளது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்…. ஆலையில் பயங்கர தீ விபத்து…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

நூற்பாலையில் பற்றி எரிந்த தீயை 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெள்ளனம்பட்டியில் தனியார் நூற்பாலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்ததும் தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஆலையில் பற்றி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்…!!

மின்சாரம் பாய்ந்து சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பூவகிழவன்பட்டியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆவாரம்பட்டியில் நடந்த கோவில் திருவிழாவை பார்ப்பதற்காக சிறுமி தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நள்ளிரவு 1 மணிக்கு திருவிழாவில் நாடகம் பார்த்துவிட்டு தீபா உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையோரம் ட்யூப்லைட் கட்டியிருந்த இரும்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“விஷம் வச்சி கொன்னுட்டாங்க” பசுக்களை பார்த்து கதறிய பெண்…. போலீஸ் விசாரணை…!!

2 பசுக்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடுகபட்டியில் கலைச்செல்வி என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது தோட்டத்தில் 4 பசுக்களை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கலைச்செல்வி தனது பசுக்களுக்கு கழனி தண்ணீர் சேகரிப்பதற்காக ஊரின் ஒரு பகுதியில் குடத்தை வைத்து செல்வது வழக்கம். அந்த குடத்தில் பொதுமக்கள் கழனி தண்ணீரை ஊற்றி செல்வர். இந்நிலையில் பொதுமக்கள் ஊற்றிய கழனி தண்ணீரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பின்னோக்கி நகர்ந்த பேருந்து…. விரைந்து செயல்பட்ட வாலிபர்கள்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

மலைப்பாதையில் பிரேக் பிடிக்காததால் அரசு பேருந்து பின்னோக்கி நகர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டுவில் இருந்து அரசு பேருந்து ஒன்று பண்ணை காடு நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தை விஜயகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் பெரும்பாறை அருகில் உள்ள மீனாட்சி ஊத்து பகுதியில் சென்று கொண்டிருந்த போது பயணிகளை இறக்கி விடுவதற்காக ஓட்டுநர் பேருந்தை நிறுத்த முயற்சி செய்தார். ஆனால் பிரேக் பிடிக்காததால் பேருந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மிதித்து கொன்ற விலங்கு…. உடல் நசுங்கி பலியான வேட்டை தடுப்பு காவலர்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

வேட்டை தடுப்பு காவலரை காட்டுயானை மிதித்து கொன்ற சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பண்ணை பெட்டியில் இருக்கும் தனியார் தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள் அங்கிருந்த தென்னை மரங்களை தின்று நாசப்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் வேட்டை தடுப்பு காவலர்கள் பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு காட்டு யானை கோபத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பணம் எடுப்பதற்காக சென்ற நபர்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளியின் வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குஜிலியம்பாறை பகுதியில் கூலி தொழிலாளியான அம்மையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வங்கி கணக்கில் 53 ஆயிரம் ரூபாயை சேமித்து வைத்துள்ளார். இந்நிலையில் பணம் எடுப்பதற்காக அம்மையப்பன் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது வங்கி கணக்கில் பணம் இல்லை என வந்ததால் அம்மையப்பன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டும் சரியான தகவல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை” மூதாட்டி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

மூதாட்டியின் பணத்தை மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னாளபட்டியில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமி தான் சேமித்து வைத்திருந்த 76 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது வங்கி கணக்கில் பணம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பிறகு விஜயலட்சுமி வங்கிக் கணக்கு புத்தகத்தில் பண வரவு-செலவு விவரத்தை பதிவு செய்துள்ளார். அப்போது மூதாட்டியின் வங்கி கணக்கில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பெண்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்த 2 வாலிபர்கள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எழில் நகரில் கஸ்தூரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் கஸ்தூரியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற 2 மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கஸ்தூரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டணம்”… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்…!!!!

கோவிலூரில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே இருக்கும் கோவிலூரில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்ததால் அதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் பழுதடைந்த கோவிலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடத்தை கட்டி தர கோரியும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டமானது கோவிலூர் கிளை செயலாளர் சண்முகம் தலைமையில் நடந்தது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஆன்லைனில் பணம் இரட்டிப்பு செய்வதாக கூறிய வங்கி ஊழியரிடமே பண மோசடி”…. போலீஸார் வழக்குப் பதிவு…!!!

ஆன்லைனில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி வாங்கி ஊழியரிடம் பண மோசடி செய்ததால் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சைலேந்திரபாபு வங்கி ஊழியராகப் பணியாற்றி வருகின்றனர். இவர் இணையத்தில் பணத்தை இரட்டிப்பாக பெறலாம் என்ற விளம்பரத்தை பார்த்ததை தொடர்ந்து அதிலிருந்த இணையதள முகவரிக்கு சென்று சிறிய தொகையை செலுத்திய உடன் அவருடைய கணக்கில் பணம் இருமடங்காக காண்பித்துள்ளது. இதனால் இவர் அவ்வப்போது தனது பணத்தை அதில் செலுத்தி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் கடன் தருவதாக பெண்ணிடம் மோசடி… சைபர் கிரைம் போலீசார் விசாரணை…!!!

ஆன்லைனில் கடன் தருவதாக கூறி பெண்ணிடம் பண மோசடி . திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டி பகுதியில் வாழ்ந்து வருபவர் லட்சுமி. சென்ற சில மாதங்களுக்கு முன்பாக இவரின் தொலைபேசிக்கு குறுந்தகவல் ஒன்று வந்திருக்கிறது. அதில் ஆன்லைனில் கடன் பெற விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என வந்ததால் அப்போது அவருக்கு பணத்தேவை இருந்ததை தொடர்ந்து அந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். தொலைபேசியில் பேசிய அந்த நபர் 3 லட்சம் ரூபாய் கடனாக தருவதாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மாநகராட்சி சாலைகள் ஆக்கிரமிப்பு”… தீவிரமாக நடந்த அகற்றும் பணி…!!!

திண்டுக்கல் மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியில் ஆக்கிரமிப்பால் சாலைகள் குறுகிய அதோடு மட்டுமல்லாமல் சாக்கடை கால்வாய்களையும் ஆக்கிரமித்து கடைகள் வைத்ததால் மழைக்காலங்களில் தண்ணீர் கால்வாயில் போகாமல் சாலையில் ஓடுகின்றது. இதனால் சாலைகள் சேதமடைகிறது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் விளைவாக திண்டுக்கல்லில் உள்ள பூ மார்க்கெட், பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்றும் பணியானது நடந்துள்ளது. இதற்காக நகர்புற அலுவலர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஆத்தூரில் நெல்லை கொள்முதல் செய்வதில் பாரபட்சம்”… விவசாயிகள் குற்றச்சாட்டு…!!!

ஆத்தூரில் உள்ள செம்பட்டியில் நெல்லை கொள்முதல் செய்வதில் பாரபட்சம் பார்ப்பதாக  விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செம்பட்டி ஆத்தூரில் சென்ற மார்ச் மாதம் 6 ஆம் தேதி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. ஒரு மாதமாக நெல்களை அதிகாரிகள் கொள்முதல் செய்து வருகின்றார்கள். கொள்முதலை ஒரு சில பகுதியில் இருந்து உடனடியாகவும் மற்றவர்களிடம் தாமதிப்பதாக விவசாயிகள் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் நெல்கள் மழையில் நனைந்து முளைத்து நாற்றுக்களாக மாறும் நிலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வெயில் வாட்டி வதைத்த நிலையில் திண்டுக்கலில் பெய்த மழை”… வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மக்கள் மழை பெய்யுமா என எதிர்பார்த்துக் கொண்டிருந்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. இதைத்தொடர்ந்து நேற்று மதியத்தில் இருந்து திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. வானம் மேகமூட்டமாக இருந்த நிலையில் இரவு 7 மணியளவில் மழை பெய்தது. இந்த மலையானது ஒரு மணி நேரம் நீடித்தததால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பாலத்தில் திடீரென ஏற்பட்ட பள்ளம்…. சிக்கிய லாரியின் சக்கரங்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

தரைப்பாலத்தில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் லாரியின் சக்கரங்கள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்-நத்தம் இடையே நான்கு வழி சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக திண்டுக்கல்லில் இருந்து சிறுமலை பிரிவு வரை இருக்கும் சாலையில் பெரிய மற்றும் சிறிய பாலங்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையம் அருகே தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கட்டிட கழிவுகளை ஏற்றி கொண்டு டிப்பர் லாரி ஒன்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. வீட்டிற்குள் புகுந்ததால் பரபரப்பு… அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் சுவரை உடைத்து கொண்டு வீட்டிற்குள் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சிக்கந்தர் சாவடியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் முத்துக்குமார் மதுரையில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இவர் நத்தம் அருகே புதுக்கோட்டை முடக்கு சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி செல்வம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தகராறு செய்த வாலிபர்கள்…. சமாதானப்படுத்திய வியாபாரி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மினிவேன் கண்ணாடியை உடைத்து வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூரு மாவட்டம் கலத்திபுரா பகுதியில் வியாபாரியான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக மினிவேன் ஒன்று உள்ளது. இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு வந்து விளையும் காய்கறிகளை கொள்முதல் செய்து வேனில் கர்நாடக மாநிலத்தில் கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் கோவிந்தராஜ் காய்கறி வாங்குவதற்காக பூண்டி கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. படுகாயமடைந்த 2 பெண்கள்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

மினி வேன் மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூருவில் ஆதர்ஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான பிரபா, தீபா ஆகியோருடன் காரை மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த காரை ஆதர்ஷா ஓட்டினார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விட்டல்நாயக்கன்பட்டியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் பழைய இரும்பு பொருட்கள் ஏற்றி சென்ற மினி வேன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலனுடன் அனுப்பி வைத்த பெற்றோர்…. 8 மாதங்களுக்கு பிறகு நடந்த சம்பவம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் 8 மாதங்களுக்கு பிறகு காவல்துறையினரிடம் சிக்கினார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னாளபட்டியில் கூலி தொழிலாளியான பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமராவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 20 வயதுடைய தேன்மொழி என்ற மகள் உள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தேன்மொழி திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த தேன்மொழியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் பாண்டி காவல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் சடலம்…. எப்படி நடந்திருக்கும் இது….? ரயில்வே போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டம் அயலூர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அய்யலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ரயில் மோதி இவர் இறந்துள்ளார். பின்னர் போலீசார் முத்துசாமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவில் ஆணழகன் போட்டி…. “மிஸ்டர் திண்டுக்கல்” கல்லூரி மாணவனுக்கு வாழ்த்துக்கள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியானது  உடற் பயிற்சி நிலைய உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் ஒரு தனியார் அரங்கில் வைத்து நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 180 பேர் பங்கேற்று வயதின் அடிப்படையில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் சிபின்ராய் வெற்றிபெற்று மிஸ்டர் திண்டுக்கல் ஆணழகன் 2022 என்ற பட்டத்தை வென்றார். இதையடுத்து சிபின்ராய்க்கு பொன்னாடை போர்த்தி போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“சிறுமியை கர்ப்பமாக்கிய வேன் டிரைவர்”… போக்சோ சட்டத்தில் கைது…!!!

13 வயது மாணவியை கர்ப்பமாக்கிய வேன் ஓட்டுநர் கைது. திண்டுக்கல் மாவட்டத்திற்கு அருகே இருக்கும் சூடாமணிபட்டியை சேர்ந்த 26 வயதுடைய முனியப்பன் என்பவர் வேன் டிரைவராக வேலை செய்து வருகின்றார். அவருடைய உறவினரான எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த நிலையில் அந்த மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாகியுள்ளார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜமால் முகமது முனியப்பன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தரமற்ற சாக்லேட் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை”… எச்சரிக்கை விடுத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி…!!!

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு தரமற்ற சாக்லேட் மற்றும் உணவு விற்பனை செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி. கொடைக்கானலில் ஆலோசனை கூட்டம் நடந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் லாரன்ஸ் தலைமை வகித்து கூறியுள்ளதாவது, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விற்கக்கூடிய டீத்தூள், நறுமண பொருட்கள் மற்றம் சாக்லேட் உள்ளிட்டவற்றில் தயார் செய்த தேதி மற்றும் காலாவதி தேதி இடம் பெற்றிருக்க வேண்டும். கண்ணாடி பாட்டிலில் விற்கப்படும் ஹோம்மேடு சாக்லேட்டுகளுக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென விழுந்த மேற்கூரை சிமெண்ட் பூச்சு”…. கோவிலூரில் பரபரப்பு…!!!

கோவிலூரில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சு திடீரென விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் அருகே இருக்கும் கோவிலூரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ள நிலையில் இன்று மாலை அங்குள்ள தலைமை டாக்டர் அறையின் மேற்கூரையில் சிமெண்டு பூச்சு திடீரென கீழே விழுந்துள்ளது. நல்லவேளையாக அந்த அறையில் யாரும் இல்லை என்பதால் எந்த அசம்பாவிதமும் அங்கு நடக்கவில்லை. இச்சம்பவத்தால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆளில்லாத வீடு…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியை சேர்ந்தவர்கள்  செல்வம் ஈஸ்வரி தம்பதியினர்.  இவர்களுக்கு கௌசல்யா என்ற மகளும்  உள்ளார். செல்வம் கரூரில் தங்கியிருந்து தச்சு தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஈஸ்வரி வெளியூர் சென்றிருந்தார். இதனால் கௌசல்யா அருகில் உள்ள தனது உறவினர் வீட்டில் இரவு தூங்குவதற்கு சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று காலை செல்வம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைந்து தாறுமாறாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஈஸ்வரியிடம் தகவல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகமாகும் ஆக்கிரமிப்புகள்…. போக்குவரத்து நெரிசல்…. அப்புறப்படுத்திய அதிகாரிகள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் சாலைகளில் ஆக்கிரமிப்புகள்அதிகமாகி வருகின்றது. இது போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளை அப்புறப்படுத்த கமிஷனர் பாலசுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நகரமைப்பு அலுவலர் இந்திரா தலைமையில் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் பஸ் நிலையத்தை சுற்றி உள்ள கடைகள், படிகட்டுகள், கூரைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள்  ஆகியவற்றை அப்புறப்படுத்தி கொடுத்தனர். பின்னர் மீண்டும் இந்த கடைகள் ஆக்கிரமிப்பு செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில்…. வெம்பி பழுத்து கீழே விழும் மா பிஞ்சுகள்…. விவசாயிகள் வேதனை..!!

சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தினால் மா மரங்களில் உள்ள பிஞ்சுகள் உதிர்ந்து போகின்றன. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகில் கோம்பைபட்டி, ஆயக்குடி, புளியமரத்து செட் ஆகிய இடங்களில் உள்ள தோட்டத்தில் மா சாகுபடி செய்யப்படுகின்றன. இந்தத் தோட்டத்தில் விளைகின்ற மாங்காய்களை பழனி, ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள சந்தைகளில் விற்க விவசாயிகள் கொண்டு செல்கின்றன. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மா மரங்கள் பூ பூத்ததால் விவசாயிகள் அந்த மாமரத்திற்கு மருந்து அடித்தார்கள். ஆனால் இந்தக் கோடை காலத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம்க்கு போனபோது…. இருந்த 71,000 ரூபாய்…. அதிர்ச்சிக்கு பின் மெக்கானிக் எடுத்த முடிவு..!!

தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் பணம் செலுத்த போனபோது ரூ 71,000 இருந்ததை பார்த்து மெக்கானிக் அதிர்ச்சி அடைந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், வட ஆலப்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் சிவராஜ்(28). இவர் டி.வி மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி இரவு தனது கடையின் உரிமையாளர் ரவி ரூ 13,000 சிவராஜிடம் டெபாசிட் செய்வதற்கு கொடுத்துள்ளார். இதை அடுத்து சிவராஜ் திண்டிவனம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையத்திற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஜல்லிக்கட்டு விழாவில்… வளர்த்த காளை முட்டி பரிதாபமாக இறந்த விவசாயி… மேலும் 25 பேர் காயம்..!!

புகையிலை பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் குடல் சரிந்து விவசாயி உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம், புகையிலைப்பட்டியில்  புனித சந்தியாகப்பர் புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடத்திற்கான ஜல்லிக்கட்டு நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு ஆரம்பித்தது.இந்த ஜல்லிக்கட்டு விழாவை திண்டுக்கல் ஆர். டி. ஓ பிரேம் குமார் தலைமை தாங்கினார். இவர்  கொடியசைத்து போட்டியை ஆரம்பித்து வைத்தார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கல்யாணம் செய்து கொள்கிறேன்…. 8 ஆம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட வாலிபர்… போக்ஸோவில் தூக்கிய போலீஸ்..!!

மாணவியை கடத்தி பாலியல் தொல்லை செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கலெக்டர் அலுவலக அலுவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் அழகர்சாமி என்பவருடைய மகன் அஜித்குமார் (23). இவர் குடிநீர் கேன் வினியோகம் செய்யும் நிறுவனத்தில் வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் தாடிக்கொம்பு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த எட்டாம் வகுப்பு மாணவிக்கும், அஜித் குமாருக்கும்  இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த மாணவியிடம் கல்யாணம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஒழுங்கா வேலை செய்ய தெரியல…. கம்பெனிய விட்டு போங்க…. பசி, பட்டினியோடு மேற்கு ஆப்பிரிக்காவில் தவிக்கும் லாரி ஓட்டுனர் உட்பட 3 பேர்..!!

மேற்கு ஆப்பிரிக்காவில் வேலை இழந்து பசி பட்டினியோடு தவிக்கும் வேடசந்தூர் லாரி டிரைவர் உட்பட 3 பேரை மீட்க கோரி அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகில் கருக்காம்பட்டியில் வசித்து வருபவர் 42 வயதுடைய செந்தில்குமார். இவருக்கு தீபா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளார்கள். செந்தில்குமார் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் செந்தில்குமார், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் வசித்து வரும் 47 வயதுடைய பழனிமுத்து, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில்… சுருண்டு விழுந்து மூதாட்டி பலி…!!

சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தினால் மயங்கி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பே தினமும் 100 டிகிரி வெப்ப நிலையை தாண்டி வெயில் அதிகமாக அடித்து மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். வெயில் அதிகமாக அடித்து வருவதால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது. இந்த வெயிலின் தாக்கத்தினால் முதியவர்கள் அதிகமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காணாமல் போன மோட்டார் சைக்கிள்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிள் திருடிய குற்றத்திற்காக 2 வாலிபர்கள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தமாடிப்பட்டி பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார்.  இந்நிலையில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த வினோத்குமார் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் நந்தவனப்பட்டி பாலம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரே மோட்டார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விபத்துக்குள்ளான லாரி…. ராட்சத கிரேன் மூலம் மீட்கப்பட்ட இறக்கை…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

விபத்துக்குள்ளான லாரி மற்றும் காற்றாலை இறக்கையை காவல்துறையினர் மீட்டனர். சென்னை மாவட்டத்தில் இருந்து 270 அடி நீளம் கொண்ட காற்றாலை இறக்கைகளை ஏற்றிக்கொண்டு மூன்று லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக தூத்துக்குடி மாவட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரிகள் 300 அடி நீளம் கொண்டதால் வளைவுகளில் எளிதாக திருப்ப முடியாது. இதற்காக லாரியின் பின்பகுதியில் 180 அடி தூரத்தில் ஆபரேட்டருக்கு என்று தனி அறை அமைந்துள்ளது. அதில் ஆப்பரேட்டர் ஒருவர் அமர்ந்து முன்பக்க டயர் திரும்புவதை […]

Categories

Tech |