மாவட்ட கலெக்டரிடம் பேருந்து வசதி கேட்டு கோவிந்தசாமி எம்.எல்.ஏ மனு கொடுத்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ கோவிந்தசாமி கலெக்டர் சாந்தியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் கூறியதாவது, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வத்தல்மலை கிராமத்தில் 600 குடும்பங்களும், பால் சிலம்பு கிராமத்தில் 170 குடும்பங்களும் என மொத்தமாக 770 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் 16 கோடி ரூபாய் செலவில் சாலை […]
