அடிக்கடி நேரும் விபத்துகளால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கம்மாபுரம் பகுதியில் வசிக்கும் 10-க்கும் மேற்பட்டோர் வேனில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கருக்கை கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் கார்குடல் கிராமம் அருகில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் கம்மாபுரம் பகுதியில் வசிக்கும் ராஜமாணிக்கம், வேல்முருகன், சுப்பிரமணியம், பழனியம்மாள் உள்ளிட்ட 8 பேர் பலத்த காயமடைந்தனர். […]
