கிராம மக்களுடன் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பூதவராயன்பேட்டை கிராமத்தில் தி.மு க பிரமுகரான பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் பூதவராயன் பேட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். கடந்த ஓராண்டுக்கு முன்பு கடலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பழனிச்சாமியின் கழுத்து தோள்பட்டையில் இருந்த கொழுப்பு கட்டி அகற்றப்பட்டுள்ளது. […]
