தொழிலாளியை கொலை செய்த உறவினருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம்பேட்டை பகுதியில் கூலி தொழிலாளியான மஞ்சமுத்து(53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் உறவினரான ராமலிங்கம்(37) என்பவருக்கும் நில பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு அப்பகுதியில் இருக்கும் சுடுகாடு வழியாக நடந்து சென்று கொண்டிருந்த முத்துவை ராமலிங்கம் ஆபாசமாக திட்டி கட்டையால் தாக்கியதால் அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் […]
