கடலூர் அருகே நடைபெற்ற திடீர் வாகன சோதனையில் பெண்ணுடன் சேர்ந்து காரில் சாராயம் கடத்திய இன்ஸ்பெக்டரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் அருகே உண்ணாமைலை செட்டி சாவடியில் மது விலக்கு அமல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்தனர். திடீரென அந்த காரை ஓட்டி வந்தவர் இறங்கி தப்பி ஓடினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரினை சோதனை செய்ததில் 148 மது பாட்டில்கள் மற்றும் 30 லிட்டர் சாராயம் […]
