கடலூர் அருகே ரோடுரோலர் மோதி அம்பேத்கர் சிலை சேதமானதை அடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சென்னை செல்லும் பசாலை அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. தற்போது அங்கே சர்வீஸ் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்றைய தினம் பணியின்போது ரோடுரோலர் தவறுதலாக மோதியதில் அம்பேத்கர் சிலையின் கைவிரல், அதன்பீடம் சேதமடைந்து இரும்பு கூண்டும் தகர்ந்தது. […]
