கடலூர் மாவட்டத்தில் உள்ள செடுத்தான் குப்பம் கிழக்கு தெருவில் முந்திரி விவசாயியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்பு ராஜா என்ற மகன் உள்ளார். இவர் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நெய்வேலி 20-வது வட்டத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் டவுன்ஷிப் மெயின் பஜாரில் நகை கடை வைத்துள்ளார். அவரது தந்தையும், எனது தந்தையும் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில் எனது தந்தையிடம் நீங்கள் பெரிய அளவில் பணம் கொடுத்தால் […]
