பேருந்தின் கண்ணாடியை உடைத்த குற்றத்திற்காக 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி தனியார் பேருந்து பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை தேசிங்கு என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 வாலிபர்கள் பேருந்தை முந்தி செல்ல முயற்சித்துள்ளனர். ஆனால் பேருந்து டிரைவர் அவர்களுக்கு வழி விடவில்லை. இதனால் கோபமடைந்த வாலிபர்கள் பெரியகாட்டுபாளையம் பகுதியில் வைத்து பேருந்தை முந்திச் சென்று மோட்டார் சைக்கிளை குறுக்கே நிறுத்தி வழிமறித்தனர். அதன்பிறகு […]
