மொபட் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மருதத்தூர் கிராமத்தில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான கருப்புசாமி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கருப்புசாமி தனது மனைவி செல்வராணி, உறவினர் ஆறுமுகம், விஜய் ஆகியோருடன் ஒரு மொபட்டில் பூலாம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஏ. அகரம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த தனியார் பேருந்து மொபட் மீது […]
