மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள முடிகாடு கிராமத்தில் பிரபாகரன்-ஜெயந்தி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இம்பீரியல் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி பிரபாகரனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரபாகரன் மனைவி ஜெயந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் காயமடைந்த பிரபாகரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]
