Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த நூலக அதிகாரி…. பெண் ஊழியருக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி….!!

பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த அதிகாரியை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் கரும்பு கடை பகுதியில் சுல்தான் மியாமணியம்(47) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருக்கும் அனைத்து நூலகங்களிலும் புத்தகம் இருப்பு கணக்கிடும் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் காரமடை பகுதியில் இருக்கும் நூலகத்திற்கு சென்று புத்தக இருப்புகளை சரிபார்த்த போது சுல்தான் பெண் ஊழியரிடம் இரண்டு அர்த்தத்தில் பேசி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“என்ஜின் கோளாறு காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்”…. 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட ரயில்….!!!!!

சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் கோளாறு காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்ட நிலையில் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. சென்னையிலிருந்து கடலூர் வழியாக தினசரி சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலானது இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று காலை 7.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டது. பின்னர் காலை 10:48 மணிக்கு திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அதன் பின்னர் காலை 10.53 பணிக்கு புறப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலே மின்சார எஞ்சின் பழுதாகி நடுவழியில் நின்றது. இதைத்தொடர்ந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உலக முதலுதவி தினம்….. “ஒரே இடத்தில் 5386 மாணவ-மாணவிகள் பயிற்சி”….உலக சாதனை படைப்பு…..!!!!!

உலகம் முதலுதவி தினத்தை முன்னிட்டு ஒரே இடத்தில் 5386 மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று உலக சாதனை படைத்தார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மைதானத்தில் உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து மாபெரும் உலக சாதனையாக பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற முதல் உதவி விழிப்புணர்வு செய்முறை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க அரசுப்பள்ளி கல்லூரி, அண்ணா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கந்து வட்டி டார்ச்சர்”….. போலீசில் புகார்…. பைனான்ஸ் அதிபர் அதிரடி கைது….!!!!!

கந்துவட்டி புகாரின் பேரில் போலீசார் பைனான்ஸ் அதிபரை கைது செய்தார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் அருகே இருக்கும் இடையார்பாளையத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றார். இவர் பைனான்ஸ் அதிபர் சதீஷ்குமார் என்பவரிடம் வட்டிக்கு 5 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். மாணிக்கம் மாதம் தோறும் வட்டி பணம் கொடுத்து வந்த நிலையில் சென்ற மூன்று மாதங்களாக தொழில் சரியாக இல்லாத காரணத்தினால் சரியாக வட்டி பணத்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கோவையிலிருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள்”….. 5 பேர் கைது…. போலீசார் அதிரடி…!!!!!!

கோவையில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 13 மூட்டை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடத்திய 5 பேரை கைது செய்தார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள கோபாலபுரம் கிராமத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் போலீஸ்  சப் இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்பொழுது அவ்வழியாக வந்த ஒரு கார், இரண்டு மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்ததில் காரில் 11 மூட்டைகள் மோட்டார் சைக்கிளில் தலா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கன்று குட்டியை கொன்ற விலங்கு…. வனத்துறையினரின் ஆய்வு…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

சிறுத்தை கன்று குட்டியை அடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முத்துக்கல்லூர் பகுதியில் விவசாயியான கிருஷ்ணசாமி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தோட்டத்தில் இருந்த மாடுகள் சத்தம் போட்டதால் கிருஷ்ணசாமி அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கன்று குட்டியை சிறுத்தை அடித்து கொன்றதை பார்த்து கிருஷ்ணசாமி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கால் தடங்களை ஆய்வு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மின் இணைப்பை சரி செய்த மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன தடாகத்தில் முருகேசன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்ராஜ்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.நேற்று வீட்டில் இருந்த மின்விளக்குகள் எரியாததால் மோகன்ராஜ் மின்சார இணைப்பை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்த மோகன்ராஜை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் […]

Categories
ஆன்மிகம் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“சக்தி மாரியம்மன் கோவில்”…. விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேகம்…. பிராத்தனையில் பக்தர்கள்….!!!!

சக்தி மாரியம்மன் கோவிலில் நேற்று வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் வீரகேரளம் திம்மையா நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் சக்தி விநாயகர், சக்தி மாரியம்மன், முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவானது கடந்த 6 ஆம் தேதி முளைப்பாரி ஊர்வலத்துடன் தொடங்கி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிள்ளையார் வழிபாடு, திருவிளக்கு வழிபாடு போன்ற பல்வேறு பூஜைகள் நடைபெற்றுள்ளது. பின்னர் 7ஆம் தேதி காலை விமான கலசம் நிறுவுதலும் மூன்றாம் கால வேள்வி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படி இருந்தால் எப்படி? அம்மன்குளத்தில் அவல நிலை…. வருத்தம் தெரிவித்த சமூக ஆர்வலர்….!!!!

பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் பொது கழிவறையை கண்டு மக்கள் புலம்பி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் குளம் பகுதியில் பொது கழிவறை ஒன்று உள்ளது. இந்த கழிவறையானது மிக மோசமான நிலைமையில் இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இரு பேஷன்களும் அருகருகேவும் கதவுகள் இல்லாத நிலையிலும் இருக்கிறது. இந்த கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வந்தாலும் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றது என அப்பகுதி மக்கள் புலம்பித் தவிக்கின்றனர். இது குறித்து சமூக ஆர்வலரான ஒருவர் கூறியதாவது “பொதுக்கழிப்பிடம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்….!!

சாலைகளில் மழை நீர் குளம் போல தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று காலை கடுமையான வெப்பம் நிலவியது. இதனை அடுத்து மாலை 4 மணிக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் பல்லடம் ரோடு சூடாமணி கூட்டுறவு சங்கத்திற்கு எதிரே மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து ஓடியது. சில […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

5 கோடி ரூபாய் வரை மோசடி…. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த மனு…. பரபரப்பு சம்பவம்…!!

சீட்டு கம்பெனி நடத்தி 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிலர் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கோவை ஆவாரம்பாளையத்தில் சரவணகுமார்(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி, மகன் உள்பட 6 பேருடன் இணைந்து ஸ்ரீ அம்மன் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் சீட்டு கம்பெனி நடத்தினார். இதனையடுத்து 100-க்கும் மேற்பட்ட […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடடே! சூப்பர்….. 10 வயதில் இவ்வளவு திறமையா….? பாரம்பரிய விளையாட்டில் உலக சாதனை படைத்து அசத்தல்…. கோவை சிறுவனுக்கு குவியும் பாராட்டு….!!!!

உலக சாதனை படைத்த சிறுவனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அப்பநாயக்கன் பாளையம் பகுதியில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி உமாதேவி என்ற மனைவியும் பவன் (10) என்ற மகனும் இருக்கின்றனர். இதில் பவன் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவனுக்கு சிறு வயது முதலே குங்ஃபூ, கிக் பாக்ஸிங் மற்றும் சிலம்பம் போன்றவற்றை கற்றுக் கொண்டு வருகிறார். இவர் குங்ஃபூ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கேபிள் இணைப்பை சரி செய்ய சென்ற ஊழியர்….. சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தனியார் நிறுவன ஊழியருக்கு இரண்டரை ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்லனுர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கேபிள் டிவி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு சரவணன் அதே பகுதியில் வசிக்கும் ஒருவரின் வீட்டு கேபிள் டிவி இணைப்பை சரி செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பிராங்க் வீடியோ எடுப்பதற்கு தடை” மாநகர போலீஸ் கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

பொது இடங்களில் பிராங்க் வீடியோ எடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, சமீப காலமாக பிராங்க் வீடியோ என்ற பெயரில் பலர் பூங்காக்கள், நடை பயிற்சி மைதானங்கள், பள்ளி வளாகங்கள் போன்ற இடங்களில் குறும்பு தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர். அதனை தொழில் முறை ரீதியாக யூடியூப் சேனலில் வெளியிட்டு பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால் சில வீடியோக்களில் நடிப்பவர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ஒரு வேலையா…..? பொது இடங்களில் அத்துமீரும் பிராங்க் வீடியோ….. போலீசார் கடும் எச்சரிக்கை….!!!!

பொது இடங்களில் பிராங்க் செய்யக்கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் இடங்களாகிய பள்ளி வளாகங்கள், நடைபயிற்சி மைதானங்கள், பூங்காக்கள், வணிக வளாகங்கள் போன்ற பகுதிகளில் பொதுமக்களை பிராங்க் செய்து வீடியோ எடுப்பதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. இதனால் கோவை மாநகர காவல்துறையினர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் சிலர் குறும்புத்தனமான வீடியோக்களை எடுக்கின்றனர். இந்த வீடியோக்களை யூடியூப் சேனலிலும் வெளியிட்டு பணம் சம்பாதிக்கின்றனர். இந்த பிராங்க் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பிராங்க் வீடியோ….. “இனி இப்படி செய்யக்கூடாது”….. யுடியூபர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை…!!

பிராங்க் வீடியோ எடுத்து சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதல் இன்றி யூடியூபில் பதிவேற்றினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை காவல்துறை எச்சரித்துள்ளது. வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் சிறிய வயது முதல் பெரியவர்கள வரை அனைவரும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யுடியூப் என தங்களது நேரத்தை இதில் செலவிட்டு வருகின்றனர்.. அதில் குறிப்பாக பெரும்பாலான மக்கள் யூடியூபில் சில சேனல்களை பின் தொடர்ந்து அதில் நிறைய வேடிக்கையான, நகைச்சுவையான மற்றும் பிராங்க் போன்ற வீடியோக்களை பார்த்து ரசித்து வருகின்றனர்.. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மூதாட்டியை காப்பாற்ற முயன்ற வாலிபர்கள்…. பின் நடந்த சம்பவம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

கிணற்றுக்குள் தத்தளித்து கொண்டிருந்த மூதாட்டி உட்பட 3 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெத்தநாயக்கனூர் மேட்டுக்காடு பகுதியில் இருக்கும் தோட்டத்தில் சின்னமணி என்பவர் விவசாய பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தோட்டத்து கிணற்றிற்கு அருகில் இருந்த பம்பு செட்டில் மின் மோட்டாரை இயக்க முயன்றபோது சின்னமணி எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார். அவரது சத்தம் கேட்டு அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் மூதாட்டியை மீட்பதற்காக கிணற்றுக்குள் குதித்து கயிற்றைப் பிடித்து மேலே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குளிரில் நடுங்கிய 70 வயது மூதாட்டி…. சப்-இன்ஸ்பெக்டரின் செயல்…. குவியும் பாராட்டுகள்…!!

குளிரில் நடுங்கிய மூதாட்டியை பத்திரமாக மீட்ட சப்-இன்ஸ்பெக்டரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை மையம் அருகே சாலையோர நடைபாதையில் குளிரில் நடுங்கியவாறு மூதாட்டி ஒருவர் படுத்து கிடந்துள்ளார். இதனை பார்த்த ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் என்பவர் சுமார் 70 வயதுடைய அந்த மூதாட்டியை மீட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த உறவினர்…. தாய்- மகளுக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

தாய், மகள் இருவரையும் உறவினர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு விவேகானந்தர் வீதியில் போபால் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுலோச்சனா(48) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷர்மிளா(28), மணிமேகலை(25) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மணிமேகலை கிணத்துக்கடவில் இருக்கும் ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார்வருகிறார். இந்நிலையில் சுலோச்சனாவுக்கும் உறவினரான ஐயப்பன் என்பவருக்கும் இடையே பூர்வீக சொத்து தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இது தொடர்பான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பாட்டு கேட்டு கொண்டே நடந்த வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. போலீசாரின் எச்சரிக்கை…!!

ரயிலில் அடிபட்டு ஹோட்டல் ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பயணங்களின் போது சிலர் அஜாக்கிரையாக இருப்பதால் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக சிலர் ரயிலில் பயணிக்கும் போது கவன குறைவாக இருப்பதால் கீழே தவறி விழுந்து உயிரிழக்கின்றனர். மேலும் சிலர் செல்போன் உபயோகித்துக் கொண்டும், பாட்டு கேட்டுக் கொண்டும் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும்போது ரயில் மோதி இருக்கின்றனர். இதுகுறித்து எச்சரிக்கை விடுத்தும் அதனை கண்டு கொள்வதில்லை. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முள்ளுப்பாடி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

லாரி சக்கரத்தில் சிக்கிய வாலிபர்….. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. கோவையில் கோர விபத்து…!!

லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் இருக்கும் காய்கறி சந்தை மைதானத்தில் மனோஜ் என்பவர் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை மனோஜ் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் காந்தி சிலை அருகே லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை மனோஜ் இடது புறமாக முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த மற்றொரு […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செப்டம்பர் 8-ம் தேதி அரசு விடுமுறை….. இந்த மாவட்டத்திற்கு மட்டும்….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 08.09.2022 (வியாழக்கிழமை) அன்று கோவை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் உள்ளூர் விடுமுறை நாளாக மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக அவ்வலுவலகங்களுக்கு 17.09.2022 (சனிக்கிழமை) அன்று முழு பணிநாளாக செயல்படும் என்றும், உள்ளூர் விடுமுறை நாள் அன்று மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குடியிருப்பு வீதிகளில் தேங்கும் மழைநீர்”… கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!!!!

கோவை நகரில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. ஆனால் நகரில் உள்ள நூறு வார்டுகளில் பல இடங்களில் சரியான வடிகால் வசதிகள் இல்லாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சில இடங்களில் மழைநீர் வடிகால் தூர்வாரப்படாமல் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தண்ணீர் செல்லும் ரோட்டில் அவல நிலை ஏற்பட்டு இருக்கிறது. மேலும் பலத்த மழை பெய்கின்ற போது வீதிகளில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றது. இதனால் வீடுகளில் இருக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரூ.22 லட்சம் கையாடல்…. தணிக்கையில் சிக்கிய தபால் அதிகாரி…. நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு…..!!!!

தமிழகத்தில் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தினசரி ஒரு திருட்டு சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு மர்ம நபர்கள் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தபால் அதிகாரி ஒருவர் வாடிக்கையாளர்களின் முதலீடு பணத்தை கையாடல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் தபால் அலுவலகத்தில் உதவி தபால் அதிகாரியாக பணிபுரிந்தவர் சிவசுப்பிரமணி (51). சேலத்தை சேர்ந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பருவமழை எதிரொலி!… வெள்ளத்தில் அதுவும் அடிச்சிட்டு போயிட்டு…. சுற்றுலா பயணிகள் முக்கிய கோரிக்கை….!!!!

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்தில் குரங்கு நீர் வீழ்ச்சி (கவியருவி) இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சிக்கு வனப் பகுதிகளில் உற்பத்தியாகும் நீரோடைகள் வாயிலாக நீர்வரத்து இருக்கிறது. இங்கு கோவை மட்டுமின்றி வெளியூர், வெளி மாவட்டங்களிலிருந்து வருடந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக வனத்துறை சார்பாக நீர்வீ ழ்ச்சியில் தடுப்பு கம்பிகள் அமைத்து கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக குழந்தைகள், பெண்கள் பயப்படாமல் நீர் வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர். இதனிடையில் தற்போது பெய்துவரும் […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சேலம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாமக்கல் நீலகிரி பல்சுவை மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை விருதுநகர் வேலூர்

Heavy rain alert: 22 மாவட்ட மக்களே உஷார்….! உங்க பகுதிக்கும் அலெர்ட் சொல்லி இருக்காங்க…!!

தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர்,  டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம்.  இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும்,  நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இனி தனியார் பள்ளி வாகனங்களில் இது கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!!

மாணவ,மாணவிகளை பள்ளிக்கூடத்திற்கு அழைத்து செல்ல தனியார் பள்ளிநிர்வாகங்கள் சார்பாக வாகன வசதியானது செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் பள்ளி வாகனங்கள் விபத்துகளில் சிக்காமல் இருக்கவும், நல்ல செயல்திறனுடன் இருக்கிறதா.? என்பதை கண்டறியவும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட பிறகே தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் பள்ளிவாகனங்களுக்குள் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் பள்ளிவாகனங்களில் டிரைவர் இருக்கைக்கு முன்புறமும், குழந்தைகள் தெரியும் வகையிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உண்டு உறைவிட பள்ளி மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி”…. ஆசிரியர்கள் பாராட்டு…!!!!!

மண்டல அளவில் நடைபெற்ற கால்பந்து மற்றும் கைப்பந்து போட்டியில் வால்பாறை உண்டு உறைவிட பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் இருக்கும் அரசு பள்ளிக்கள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையேயான மண்டல அளவில் கோட்டூரில் பல்வேறு போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் வால்பாறை எம்ஜிஆர் நகரில் இருக்கும் மலைவாழ் கிராம மக்களின் குழந்தைகள் தங்கி படிக்கும் உண்டு உறைவிட பள்ளி மாணவி கவிசிரி பங்கேற்ற கால்பந்து அணி முதலிடம் பெற்றுள்ளது. மேலும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கைப்பந்து போட்டி: முதலிடத்தை தட்டி தூக்கிய உண்டு உறைவிட பள்ளி மாணவிகள்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்றுக்கொடுப்பது மட்டுமின்றி அவர்களின் திறமையை வெளிப்படுத்த அவ்வப்போது விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவ-மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்று வருகின்றனர். அதன்படி கோவை மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் இருக்கும் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையில் மண்டல அளவிலான பல போட்டிகள் கோட்டூரில் நடந்தது. இவற்றில் வால்பாறை பகுதியிலுள்ள அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இவர்களால் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும்”…. பிரதமர் மோடி அதிரடி பேச்சு….!!!!

கோவை மாவட்டத்தை அடுத்த கிணத்துக் கடவு ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் மத்திய அரசின் சார்பாக ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் எனும் தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான 36 மணிநேர மென் பொருள் வடிவமைக்கும் போட்டியானது நேற்று துவங்கியது. இவற்றில் மாற்றுத்திறனாளிகள் அன்றாடம் சந்திக்கும் 6 பிரச்சனைகள், மத்திய அரசின் சமூக நீதித்துறையால் பட்டியலிடப்பட்டு அவற்றுக்கான மென் பொருள் தீர்வு வழங்க மாணவர் குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இப்போட்டி தொடக்கவிழா, புது டெல்லியிலிருந்து காணொலி வாயிலாக நடத்தப்பட்டது. இதில் மத்திய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்!…. 66 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 85 லட்சத்தை சுருட்டிய தம்பதி…. போலீஸ் நடவடிக்கை….!!!!

தமிழகத்தில் மோசடி சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் மோசடி செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த மோசடி வலைக்குள் தெரியாமல் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு மோசடி சம்பவம் அரங்கேறி உள்ளது. அதாவது, நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அருகில் குச்சிபாளையத்தில் வசித்து வருபவர் விவசாயி கே.சபரிநாதன் (35) கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது “ஆகாஷ் சுருதி ஸ்பைஸ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யாரையும் நம்ப முடியல!…. காசோலைகளை திருடி மோசடி செய்த நபர்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

நாளுக்கு நாள் மோசடி சம்பவங்களானது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க சைபர் கிரைம் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் மக்கள் மோசடி வலைக்குள் சிக்கி ஏமார்ந்து விடுகின்றனர். அந்த வகையில் தற்போது காசோலைகளைத் திருடி ஊழியர் ஒருவர் மோசடி செய்த சம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது. கோவை-திருச்சி சாலையில் தனியார் கார் விற்பனை ஷோரூம் இருக்கிறது. இங்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வெங்கட சுப்பிரமணி (45) என்பவர் கணக்குப்பிரிவு ஊழியராக பணிபுரிந்து வந்தார். இதையடுத்து இவர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளிகள் அருகில் போலீஸ் கமிஷனர் திடீர் ஆய்வு…. எதற்காக தெரியுமா?….. பெரும் பரபரப்பு….!!!!

சமீபத்தில் விபத்துக்கள் அதிகமாக ஏற்படுகின்றது. இதனால் அதிகமானோர் உயிர் இழக்கின்றனர். அதற்கு காரணமாக முன்வைக்கப்படுவது ஹெல்மெட் அணியாமல் இருப்பதுதான். ஹெல்மெட் அணிவது மிக அவசியமானது. எனவே ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலிஸ் தரப்பில் அடிக்கடி அறிவுறுத்தி வரும் நிலையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன்படி நேற்று முந்தினம் காலை கோவை-திருச்சி ரோட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் திடீர் ஆய்வு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குறுமைய அளவிலான போட்டி”… முதலிடத்தை வென்ற அரசு பள்ளி…. வெளியான தகவல்….!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட கோட்டூர் குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள், அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இந்த போட்டியில் அரசு, தனியார் பள்ளிகள் உட்பட 31 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். 14 வயதுக்கு உட்பட்டோருக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் மாணவிகள் பிரிவில் கோட்டூர் அரசு பெண்கள் பள்ளியானது முதலிடம் பிடித்தது. இதையடுத்து மாணவர்கள் பிரிவில் ஹேண்ட் பால் போட்டியில் 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் கோட்டூர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயலில் சிக்கிய பெண்…. 10 வருஷம் ஜெயில்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!

ஈரோடு அருகேயுள்ள வீரப்பம்பாளையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சென்ற 2020-ம் வருடம் செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி காவல்துறையினர் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை தடுத்துநிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்தபெண் வந்த மோட்டார்சைக்கிளில் 16 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் காவல்துறையினர் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர், ஈரோடு பள்ளி பாளையத்தை சேர்ந்த ராஜசேகர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இவர்களுக்கு விவசாயம் கிடைத்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்…. விவசாயிகள் வலியுறுத்தல்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை மற்றும் நெல் சாகுபடி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப்பகுதிகளில் ஆண்டுக்கு 2 போகத்தில் நெல்லை விவசாயிகள் பயிரிடுகின்றனர். இந்த விவசாயத்திற்காக ஆழியார் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கும், பழைய ஆயக்கட்டு பாசத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் நெல் விவசாயம் ஓரளவுக்கு இருந்தது. ஆனால் தற்போது பெய்த தென்மேற்கு பருவ மழையால் அணைகள், குளம் மற்றும் குட்டைகள், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் ஆனைமலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விவசாயிகளே!….. இந்த பயிர்களுக்கு காப்பீடு செய்யுங்கள்….. வேளாண் துறை வெளியிட்ட தகவல்….!!!!!

இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம், வறட்சி, இடி, மின்னல் மற்றும் கனமழையினால் பாதிக்கப்படும் தென்னை, பனைமரம் மற்றும் விவசாய பயிர்களுக்கு இழப்பீடு பெற அனைத்து விவசாயிகளும் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுல்தான் பேட்டை வேளாண் துறை அதிகாரிகள் கூறியது, தென்னை, பனைமர காப்பீட்டு திட்டத்தின் கீழ் குட்டை மற்றும் ஒட்டு ரக தென்னை மரங்களை 4 ஆம் ஆண்டு முதலும், நெட்டை மரங்களை 7-ம் ஆண்டு முதல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்…. எதற்காக தெரியுமா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 40க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினமும் ரூ.437 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து ஊதிய பாக்கிய வழங்க கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சி.ஐ.டி.யு. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை வந்த முதல்வர் மு.க .ஸ்டாலின்…. உற்சாகமாக வரவேற்பு அளித்த திமுகவினர்….!!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகில் உள்ள ஆச்சிப்பட்டி அண்ணா திடலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு முன்னதாக கோவை அருகில் உள்ள ஈச்சனாரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள பி.ஏ.பி. அலுவலகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு மதியம் முதலவர் மு.க.ஸ்டாலின் வந்தார். அதன்பிறகு அங்கிருந்து மாலை 4.45 மணிக்கு அவர் புறப்பட்டு ஆச்சிப்பட்டியில் நடந்த மாநாட்டிற்கு சென்றார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் 40 ஆயிரம் பேருக்கு நிதியுதவி…. அமைச்சர் வெளியிட்ட தகவல்…..!!!!!

கோவை மாவட்டம் கிணத்துக் கடவு பேரூராட்சியிலுள்ள குழந்தைகள் மையத்திற்கு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று திடீரென்று வந்தார். அப்போது அவரை சிறுமிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து அவர் குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட உணவுகளை ஆய்வு மேற்கொண்டு சாப்பிட்டு பார்த்தார். அத்துடன் குழந்தைகளுக்கும் மதிய உணவு பரிமாறினார். அதன்பின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு சாப்பாடு எப்படி இருக்கிறது என மாணவ -மாணவிகளிடம் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து சிங்கராம்பாளையம் பிரிவிலுள்ள சரணாலயத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“திறந்த வெளியில் சமையல் பண்றோம்”…. புது கட்டிடம் கட்டி தாங்க…. அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், என்.சந்திராபுரம் ஊராட்சியிலுள்ள சாலைப் புதூர் கிராமத்தில் 200க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள அங்கன்வாடி மையத்தில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இதற்கிடையில் அங்கன்வாடி மையம் ஓட்டுகள் வேய்ந்த சிறிய வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அத்துடன் இங்கு படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவு தயாரித்து கொடுக்க சமையல்கூடம் இல்லை. இதன் காரணமாக அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் திறந்த வெளியில் குழந்தைகளுக்காக உணவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

40 மாடுகளின் மீது ஆசிட் வீச்சு…. வாயில்லா ஜீவன்களின் மீது நடந்த கொடூர சம்பவம்….. கோவையில் பரபரப்பு….!!!!

கால்நடைகளின் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அருகே ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருவதோடு, 40 கறவை மாடுகளை வீட்டில் வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வரும் மாடுகள் தினந்தோறும் மேய்ச்சலுக்காக மலையடிவாரத்திற்கு செல்லும். கடந்த சில நாட்களுக்கு முன்பாக மேய்ச்சலுக்காக சென்ற மாடுகள் வீடு திரும்பிய பிறகு மிகவும் சோர்வோடு காணப்பட்டதுடன் உணவு ஏதும் சாப்பிடாமல் இருந்துள்ளது. அதோடு 40 மாடுகளின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்”…. வாசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…..!!!!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் காவல்துறையினர் மத்தம்பாளையம் தனியார் கல்லூரி அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கார், மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் காவல்துறையினரை பார்த்ததும் திரும்பி செல்ல முயன்றனர். இதையடுத்து அவர்களை பிடிக்க காவல்துறையினர் முயன்றபோது 2 பேர் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பியோடினர். அதன்பின் காரில் வந்தவவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், அவர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அப்பாஸ் (45) என்பதும், தனியார் நிறுவனத்தில் வேலை செய்ததும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி TO பாலக்காடு…. 4 வழிச்சாலை அமைக்கும் பணி மும்முரம்…. அதிகாரி தகவல்….!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலை வழியே தினசரி 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகிறது. கேரளாவுக்கு லாரி, கனரகவாகனங்கள் அதிகளவு சென்று வருவதால் பாலக்காடு சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து காணப்படும். இந்நிலையில் வாகன பெருக்கத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டது. இதனால் இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதற்கென ரூபாய்.70 கோடி நிதிஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஜமீன் முத்தூர் வழியே போகும் ஆற்றின் குறுக்கே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மீண்டும் வால்பாறைக்கு இடம்பெயரும் காட்டு யானைகள்…. வனத்துறையினர் முக்கிய அறிவுறுத்தல்….!!!!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சென்ற வருடம் மார்ச்மாதம் இறுதியில் வறட்சி துவங்கியது. இதன் காரணமாக வால்பாறை வனப் பகுதியிலிருந்த காட்டு யானைகள் கூட்டம் கேரள வனப்பகுதிக்கு சென்றுவிட்டது. இப்போது தென் மேற்கு பருவமழை பெய்து வால்பாறை பகுதி முழுதும் பசுமையாக காட்சியளிக்கிறது. இதையடுத்து கேரள வனப் பகுதிகளிலிருந்து காட்டு யானைகள் மீண்டுமாக வால்பாறை வனப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வர தொடங்கி இருக்கிறது. தமிழக, கேரள எல்லையிலுள்ள வால்பாறை வனப் பகுதி, சாலக்குடி வனப் பகுதியில் காட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதில் சண்டை…. தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு…. பரபரப்பு சம்பவம்….!!!!

கோவை மாவட்டம் வால்பாறை அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் முத்துக்குமார் (38). இவர் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான மகேந்திரன் (50) என்பவரை தன் வீட்டில் மண் எடுக்கும் பணிக்காகவும், மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதற்காகவும் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அருகேயுள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதில் முத்துக்குமாருக்கும், மகேந்திரனுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக மகேந்திரன், முத்துக்குமாரை தாக்கியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த முத்துக்குமார் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து வந்து மகேந்திரனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாமி கும்பிடுவதற்காக சென்ற உறவினர்கள்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

தண்ணீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை மார்க்கெட் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் செந்தில்குமார் தனது உறவினர்களுடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குலவிளக்கு அம்மன் கோவிலில் கிடாய் வெட்டி பொங்கல் வைத்து சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இவர்களுடன் கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்த விவசாயியான பாலசண்முகம்(44) என்பவரும் சென்றுள்ளார். இந்நிலையில் கோவிலுக்கு எதிரே இருக்கும் ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு சென்றதால் பாலசண்முகம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடப்பாவிகளா!…. எருமை மாடுகள் மீது ஆசிட்…. மர்ம நபர்களின் கொடூர செயல்….!!!!!

கோவை மேட்டுப்பாளையம் கல்லாறுபகுதியில் கால்நடை வளர்ப்போர் அதிகளவில் எருமை மாடு மற்றும் பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர். இவற்றில் மேட்டுப்பாளையம் ரயில்வே கேட் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் இங்கு நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இங்கு 40 எருமைமாடுகளை வளர்த்து, பால் கறந்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் எருமைகளையும், மாடுகளையும் மேய்ச்சலுக்கு விடும்போது எருமைகள் மீது சிலர் ஆசிட் ஊற்றியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலால் 20-க்கும் அதிகமான எருமைகள் காயம் அடைந்துள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடும்ப சண்டை: தொழிலாளியை அரிவாளால் வெட்டிய டிரைவர்…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள மாக்கினாம்பட்டி நேரு வீதியில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி குணசேகரன் (19). இவருடைய மாமா மகள் கீர்த்தனாவுக்கும், பொள்ளாச்சி ரங்கசாமிகவுண்டர் வீதியை சேர்ந்த டிரைவரான சூர்யாவுக்கும் சென்ற 3 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இப்போது இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஆதிகா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சென்ற 5 மாதமாக கீர்த்தனா, பெண் குழந்தையுடன் எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுல்தான்பேட்டை ஒன்றியம்: 26 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் நேற்று 26 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாமானது நடைபெற்றது. இவற்றில் முதல் தவணை, 2 ஆம் தவணை மற்றும் பூஸ்டர் என மொத்தம் 502 நபர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா தலைமையிலான மருத்துவக் குழுவினரால் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் முருகதாஸ், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் போன்றோர் செய்து இருந்தனர். இதேபோன்று பொள்ளாச்சி நகரம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், வடக்கு ஒன்றியத்தில் சிறப்பு […]

Categories

Tech |