கிணத்துக்கடவு அருகே ஊராட்சி மன்றத் தலைவர், அவருடைய கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோவிந்தாபுரம் ஊராட்சிப் பகுதியில் நேற்று ஒருதரப்பினர் பொங்கல் விழா நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தபோது அங்கு வந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தி, அவருடைய கணவர் ஆகியேர் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்று காலை கிணத்துக்கடவு காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கவந்த பொதுமக்கள் திடீரென காவல் நிலையம் […]
