ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரைத் தகாத வார்த்தைகளில் பேசிய மூன்று பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர். கோவை இருகூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி அருகே சிங்காநல்லூர் காவல் நிலையத்தின் தலைமை காவலர் ஜான்சன் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஒண்டிபுதூர் இருகூர் இடையே உள்ள பெட்ரோல் பங்க் அருகில் சந்தேகத்திற்கு இடமான மூன்று நபர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இவற்றைப் பார்த்த காவலர் ஜான்சன், அவர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர்கள் ஜான்சனிடம் தகாத வார்த்தைகளில் பேசியதாகத் […]
