Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவை சம்பவம்: 109 பொருட்கள்….. NIA வெளியிட்ட பதறவைக்கும் செய்தி….!!!!

கோவையில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக தீபாவளிக்கு முந்தைய நாள் அதிகாலையில் கார் ஒன்று வெடித்து சிதறியது. அந்த காருக்குள் இருந்த மூபின் என்பவர் உடல் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏழு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கார் விபத்தில் உயிரிழந்த முபின் வீட்டில் இருந்து 76 கிலோவுக்கு மேல் ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை சம்பவம் பெரிதாக பீதியை கிளப்பியிருக்கும் நிலையில் இந்த சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் அக்டோபர் 31ல் பந்த்-க்கு அழைப்பு விடுக்கவில்லை – அண்ணாமலை விளக்கம்..!!

கோவையில் அக்டோபர் 31ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் மாநில பாரதிய ஜனதா கடசி தலைவர் அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர் பால் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார். வெங்கடேஷ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் அக்டோபர் 31ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் மன்றம் எச்சரித்துள்ளது.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அடித்து சித்திரவதை செய்த தாய்” 2 வயது பெண் குழந்தை இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரும்புகடை பகுதியில் முகமது ரபீக்(34) என்பவர் வசித்து வருகிறார் இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தில்சாத் பானு(33) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு மகனும், 7 மற்றும் 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பானு தனது 2 பெண் குழந்தைகளையும் அடித்து சித்திரவதை செய்துள்ளார். இதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பேருந்து ஓட்டுனருக்கு திடீர் மாரடைப்பு…. 40 பயணிகளின் நிலைமை என்ன…? பரபரப்பு சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி மகாகாளியம்மன் கோவில் வீதியில் மருதாச்சலம்(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மாலை மருதாசலம் பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து சிங்காநல்லூர் நோக்கி சென்ற அரசு பேருந்தை இயக்கியுள்ளார். அந்த பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் மீன்கரை ரோடு சீனிவாசபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மோட்டார் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“பாஜக பந்த்-க்கு ஆதரவு தரமாட்டோம்”…. வணிகர் சங்கம்..!!

கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் பந்த்துக்கு ஆதரவு தரமாட்டோம் என வணிகர் சங்க பேரமைப்பு தெரிவித்துள்ளது. கோவையில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக சார்பில் வரும் 31 ஆம் தேதி பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த பந்த்துக்கு வணிகர் சங்கங்கள், தனியார் நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாஜக சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.. இந்நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறும் பந்த்தில் வணிகர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவை சம்பவத்தில் பரபரப்பு வாக்குமூலம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கோவையில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக தீபாவளிக்கு முந்தைய நாள் அதிகாலையில் கார் ஒன்று வெடித்து சிதறியது. அந்த காருக்குள் இருந்த மூபின் என்பவர் உடல் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏழு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கார் விபத்தில் உயிரிழந்த முபின் வீட்டில் இருந்து 76 கிலோவுக்கு மேல் ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை சம்பவம் பெரிதாக பீதியை கிளப்பியிருக்கும் நிலையில் இந்த சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை […]

Categories
Uncategorized கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Kovai Cylender Case: ஜமாத் கூட்டமைப்பு ஆலோசனை…! இளைஞர்களை கண்காணிக்க முக்கிய முடிவு ..!!

கோவையில் செய்தியாளர்களை சந்தித்து ஜமாத் கூட்டமைப்பினர் பேசினர். அதில் கோவை மாவட்ட சுன்னத் சமாஜ் கூட்டத்தினுடைய பொதுச் செயலாளர் பேசும் போது, கோவை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் 2019 முதல்  NIA-வால் அவ்வப்போது விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த சூழ்நிலையில் இப்படி NIA உடைய வளையத்தில் விசாரணைக்கு இருக்கக்கூடிய ஒரு நபர்கள்,  திடீரென்று ஒரு பயங்கரவாத செயலை எப்படி நிகழ்த்தி இருப்பார்கள் என்பது மிகவும் அதிர்ச்சி கூறியதாக இருக்கிறது. எங்கே உளவுத்துறையும், NIAவும் இதை தவற விட்டு விட்டார்களோ […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எந்த தீவிரவாதத்திற்கும் துணை போக மாட்டோம், ஜாமத் கூட்டமைப்பு உறுதி ..!!

கோவையில் செய்தியாளர்களை சந்தித்து ஜமாத் கூட்டமைப்பினர் பேசினர். அதில் கோவை மாவட்ட சுன்னத் சமாஜ் கூட்டத்தினுடைய பொதுச் செயலாளர் பேசும் போது, கோவை மாவட்ட நிர்வாக ஆட்சித் தலைவரும், காவல்துறை ஆணையாளர் அவர்களும் ஜமாத் நிர்வாகிகளுடனான சந்திப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோவையில் கடந்த ஞாயிறு அன்று நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஒரு அசாதாரணமான சூழ்நிலை கோவையில் நிலவி வருவதை குறித்து ஜமாத் சார்பாக மாவட்ட நிர்வாகத்தோடு ஆலோசனை நடத்தியதில் நடைபெற்ற சம்பவத்திற்கும், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி சரகத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவிக்கும் அதிகாரிகள்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி போலீஸ் துணை சூபபிரண்டாக தீப சுஜிதா என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டார். ஆனால் திடீரென தீப சுஜிதா சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் புதிய உதவி போலீஸ் சூப்பிரண்டாக பிருந்தா பொறுப்பேற்றார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த பிருந்தா யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். முதல்முறையாக ஐபிஎஸ் அதிகாரி பொள்ளாச்சி சரகத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வரும் 31 ஆம் தேதி கோவையில் பந்த்….. வெளியான முக்கிய தகவல்…..!!!!

கோவை உக்கடம் பகுதியில் தீபாவளிக்கு முந்தைய நாள் கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து ஏற்பட்டது. இது சிலிண்டர் விபத்து என்று காவல்துறையினர் கூறினார்கள். அதை பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதல் முயற்சி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதன்முதலில் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் வீடு மற்றும் அவருடைய நண்பர்களின் வீடுகளில் வெடி பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மூலமாக கோவையில் நடக்க இருந்த மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING: கோவை சம்பவத்தில் திருப்பம்: அடுத்த பரபரப்பு…!!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. கார் வெடித்தபோது உயிரிழந்த ஜமேஷா முபீன் வீட்டில் இருந்து மொத்தம் 75.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வெடிப்பொருட்களை தயாரிப்பதற்கான வேதிப்பொருட்களை அமேசான் – ஃப்ளிப்கார்ட் மூலம் வாங்கியுள்ளார் என போலீசார் புதிய தகவலை தெரிவித்துள்ளனர்.

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

CCTV புட்டேஜ்_யில் சிக்கிய ஜமேசா முபின் கூட்டாளிகள் : பரபரப்பு தகவல்கள்

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்  செய்தியாளர்களிடம் பேசும் போது, ஜமேசா முபின் வீடுகளில் இருந்து ரெண்டு எல்பிஜி சிலிண்டர்,  மூணு ட்ரம். அதில் என்ன பொருட்கள் இருந்தது ? அப்படிங்கிறது தடையவியல் ரிப்போட்டுக்கு அனுப்பி இருக்கின்றோம், சீக்கிரம் வந்துரும். கைது செய்யப்பட்ட நபர்களில் மூன்று நபர்கள் சிசிடிவி ஃபுட்டேஜில் இருந்தவர்கள். இந்த மூணு பேரு ரியாஸ், நவாஸ், ஃபெரோஸ் இந்த மூன்று நபர்கள் முபினுடைய வீட்டிலிருந்து, குண்டுக்கு தேவையான பொருட்கள், சிலிண்டர் இதெல்லாம ஏத்துறதுக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆம்…! கேரளா போயிருக்காங்க… எல்லா கோணத்திலும் விசாரணை…. கோவை ஆணையர் பேட்டி ..!!

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்  செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்த கூட்டு சதியில் வேறு யார் யார் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் ?  எங்கெங்கெல்லாம் அவர்களுக்கு தொடர்பு இருக்கின்றது ? என்பதை தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருகின்றோம். விசாரணையின் அடிப்படையில் கண்டிப்பாக பத்திரிகைகளுக்கும், பொது மக்களுக்கும் தகவல் அ‌ளி‌க்க‌ப்படு‌ம்.  இந்த புலன் விசாரணையின் அடிப்படையில் நாம போயிட்டு இருக்கோம் என தெரிவித்தார். கேரள சிறையில் உள்ள இலங்கை தேவாலயம் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை ஜமேசா முபின் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் நடந்தது என்ன ? பின்னணியில் யார்… யார்? காவல் ஆணையர்Balakrishnan IPS அதிரடி…!

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்  செய்தியாளர்களிடம் பேசும் போது, 23ஆம் தேதி அதிகாலை உக்கடம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு அருகில் ஒரு மாருதி 800 வாகனத்தில் இரண்டு எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் ஒரு சில டிரம்ஸ் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வந்த வாகனம்,  கோவிலுக்கு அருகில் அதிகாலை 4 மணி அளவில் வெடித்து சிதறியதில் அந்த வாகனத்தை ஓட்டி வந்த உக்கடம் பகுதியை சேர்ந்த முபின் என்ற நபர் சம்பவ […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பக்கத்துல போலீஸ் இருந்து இருக்காங்க…! அதான் மேற்கொண்டு வாகனம் போகல; காவல் ஆணையர் பேட்டி ..!!

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்  செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்த வழக்கு தொடர்பாக இருபதுக்கு மேற்பட்ட நபர்களை ஏற்கனவே விசாரணை செய்திருக்கின்றோம். தொடர்ந்து விசாரணை மற்றும் வீடுகளில் சோதனை, சந்தேகப்படக் கூடிய நபர்கள்… வழக்கு விசாரணையின் போது வரக்கூடிய தகவல்களின் அடிப்படையில்…  சந்தேகப்படக் கூடிய நபர்களை விசாரித்தும்,  அவர்களுடைய வீடுகளை சோதனை செய்தும்,  அவர்களுடைய நடவடிக்கைகளை கண்காணித்தும்,  காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த புலன் விசாரணையின் போது சம்பவ இடத்தை ஆய்வு […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: NIA விசாரணைக்கு மாற்ற பரிந்துரை – தமிழக முதல்வர் அதிரடி முடிவு ..!!

கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற பரிந்துரை மற்றும் கோவையில் பாதுகாப்பினை தொடர்ந்து வலியுறுத்திட  முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது உத்தரவிட்டிருப்பதாக செய்தி குறிப்பு வெளியாகி இருக்கிறது. கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், பொதுவான சட்ட ஒழுங்கு  நிலவரம் குறித்தும் தமிழக முதலமைச்சர் தலைமையில் இன்றைய தினம் தலைமைச் செயலகத்தில் விரிவான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பணம் கொடுக்க முடியுமா? முடியாதா?… கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!!

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாபுதூர் பகுதியில் தாமரைச்செல்வன்(44) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் தீனதயாளன்(22) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் தாமரைசெல்வன் நின்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த தீனதயாளன் தாமரை செல்வனிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு என்னிடம் பணம் இல்லை என தாமரைச்செல்வன் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த தீனதயாளன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING:தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை – முதல்வர் ஆலோசனை …!!

சென்னை தலைமைச் செயலகத்தில் கோவை சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தில் சட்ட ஒழுங்கு நிலை குறித்து ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு,  உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி,  பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன்,  டி.ஜி.பி சைலேந்திரபாபு மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், முதலமைச்சருடைய முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்கள். கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றது. அதற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

NIA – கோவை போலீஸ் ஆலோசனை …!!

NIA DIG வந்தனா, எஸ்.பி ஸ்ரீஜித் நேற்று  இரவு கோவை வந்துள்ளதாகவும்,  தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் கோவை வந்திருக்கக்கூடிய NIA அதிகாரிகள் அங்கு இருக்கக்கூடிய உள்ளூர் போலீசுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கோவையில் கடந்த 23ஆம் தேதி காரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த நிலையில் ஜமேசா முபீன் என்ற ஒரு நபர் உயிரிழந்திருக்கக்கூடிய நிலையில், 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரின் மீது உபா சட்டத்தின் கீழ் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

கொடநாடு வழக்கு… கோதாவில் இறங்கிய டிஜிபி.. நெருக்கடியில் AIDMK ..!!

கொடநாடு கொலை,  கொள்ளை வழக்கை விசாரிக்க சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் கோவை சென்று இருக்கிறார். கொடநாடு கொலை,  கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கை பெரிய அளவில் விசாரிப்பதற்காகவும், ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை நேரடியாக  விசாரிப்பதற்கு சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. அந்த வகையில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர்  கோவை விரைந்திருக்கிறார். நாளை வழக்கு சம்பந்தமாக நேரடியாக கொடநாடு சென்று அவர் விசாரிக்க இருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது. இன்று காலை 10:30 மணிக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் கார் வெடித்து சிதறிய சம்பவம் : 5 பேருக்கு நவம்பர் 8 வரை நீதிமன்ற காவல்..!!

கோவையில் கார் வெடித்து சிதறி சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு நவம்பர் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கோவை குற்றவியல் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. கோவை மாநகரத்தின் முக்கிய பகுதியான கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நேற்று அதிகாலை நேரத்தில் கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த சிலிண்டர் வெடிகுண்டு விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தமிழக காவல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING: கார் வெடிப்பு விவகாரம்…. உச்சகட்ட அலெர்ட்….!!!

கோவை உக்கடம் அருகே, ஒரு கோவில் முன்பாக நின்றிருந்த காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். இறந்தவரின் பெயர் ஜமேசா முபின் என்பதும் 2019ல் இவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கோவை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில்  இந்த சம்பவம் திட்டமிட்ட சதியா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசாருடன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகாரி என கூறி பல லட்ச ரூபாய் மோசடி…. நம்பி ஏமார்ந்த 3 பெண்கள்…. போலீஸ் விசாரணை….!!!

பணம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சவுரிபாளையம் கருணாநிதி நகரில் முகுந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காட்டூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, முகுந்தன் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்தபோது விஜயகுமார் என்பவர் அவருக்கு அறிமுகமானார். அந்த நபர் தான் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருவதாகவும், யாருக்காவது அரசு வேலை வேண்டுமென்றால் சொல்லுங்கள் வாங்கிக் கொடுக்கிறேன் எனவும் கூறியுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைப்பு – 6 தனிப்படைகள் அமைப்பு : டிஜிபி அறிவிப்பு ..!!

கோவை உக்கடத்தில் கார் வெடித்த இடத்திற்கு சென்றார் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு. கோவை உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். கார் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு நிலையில்,  சம்பவ இடத்திற்கு தமிழக காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் வருகை தந்து ஆய்வு நடத்தி வருகின்றார். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அவருடன் ஆய்வு மற்றும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் தடவியல் சோதனையும் நடைபெற்று வருகிறது. […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவை சென்றார் டிஜிபி சைலேந்திரபாபு ..!!

கோவை உக்கடத்தில் கார் வெடித்த இடத்திற்கு சென்றார் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு. கோவை உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். கார் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு நிலையில்,  சம்பவ இடத்திற்கு தமிழக காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் வருகை தந்து ஆய்வு நடத்தி வருகின்றார். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அவருடன் ஆய்வு மற்றும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் தடவியல் சோதனையும் நடைபெற்று வருகிறது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இரண்டாக வெடித்து சிதறிய கார்…. அதிகாலையிலேயே அதிர்ச்சி…. கோவையில் பெரும் பரபரப்பு….!!!!

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் மாருதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறி இருப்பது தெரியவந்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த கைரேகை நிபுணர்களும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் மோப்பனாயும் வரவழைக்கப்பட்ட விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆபாச படம் போட்டு காண்பித்த தாத்தா” சிறுமிகள் கூறிய அதிர்ச்சி தகவல்….. விழிப்புணர்வு நிகழ்ச்சியால் சிக்கிய சம்பவம்….!!!

முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாத்தாவும், அதே பகுதியில் வசிக்கும் திருமண புரோகரான பழனிசாமி(65) என்பவரும் ஒன்றாக அமர்ந்து டிவியில் படம் பார்ப்பது வழக்கம். தனது தாத்தாவோடு சிறுமி அடிக்கடி பழனிச்சாமியின் வீட்டிற்கு சென்ற டிவி பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கராத்தே மாஸ்டரிடம் ரூ.21 3/4 லட்சம் மோசடி… நண்பர்கள் மீது வழக்கு பதிவு…. போலீஸ் விசாரணை…!!!

கராத்தே மாஸ்டரிடம் 21 3/4 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் சாரதா மில் ரோட்டில் கராத்தே மாஸ்டரான சௌகத் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக தொழில் தொடங்குவதற்காக தனது வீட்டை 3 கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்து கடன் பெற முடிவு செய்தார். அப்போது சௌக்கத்துக்கு அறிமுகமான நாகூர் மீரான் என்பவர் வங்கியில் தனக்கு தெரிந்த அதிகாரிகள் மூலம் 3 கோடி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!!!

தொழிலாளியை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் இருக்கும் பழக்கடையில் குப்புசாமி என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டிற்கு முன்பு ரத்த காயங்களுடன் பிறந்த குப்புசாமியின் உடலை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் அருண்குமார் என்பவருடன் குப்புசாமி மது அருந்தியது தெரியவந்தது. இதனால் அருண்குமாரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொழிலதிபரிடம் 1 3/4 கோடி ரூபாய் மோசடி…. தம்பதி மீது வழக்கு பதிவு…. போலீஸ் விசாரணை…!!!

தொழிலதிபரிடம் 1 3/4 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையில் பசந்த் சோனி என்பவர் ஜவுளி நிறுவனம் நடத்தி வருகிறார் இவருக்கு கோவையை சேர்ந்த மனோகரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக மனோகரனும், பசந்த் சோனியும் வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தொழிலதிபர் மனோகரனை தொடர்பு கொண்டு தனக்கு ஜவுளி அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளார். அதன் முன்பணமாக பல்வேறு தவணைகளாக 1 கோடியே 86 லட்சத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து…. விபத்தில் சிக்கி 10 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!!

லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சேரிமலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சின்னேரிபாளையம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 10 பயணிகளை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குழந்தையை வீட்டிற்கு அனுப்ப சான்றிதழ்”லஞ்சம் வாங்கி தற்காலிக ஊழியர்கள்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!!

தற்காலிக ஊழியர்கள் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக பணி நீக்கம் செய்யப்பட்டனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பழைய கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினராக தனலட்சுமி, சட்ட உதவியாளர் கார்த்தி ஆகியோர் தற்காலிக அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இரண்டு பேரும் காப்பகத்தில் இருந்து ஒரு குழந்தையை வீட்டிற்கு அனுப்ப அனுமதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம்” விளம்பரத்தை நம்பி 7 3/4 லட்சத்தை இழந்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உடையாம்பாளையம் பகுதியில் வசிக்கும் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் பணம் கொடுத்தால் அழகான பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம் என ஒரு விளம்பரம் வந்ததை பார்த்து அந்த கல்லூரி மாணவர் அதிலிருந்து செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் முதலில் 2500 ரூபாய் செலுத்தினால் பெண்களின் புகைப்படத்தை அனுப்புவதாக தெரிவித்துள்ளார். பின்னர் நீங்கள் விருப்பப்பட்ட பெண்ணுடன் தனிமையில் இருக்கலாம் என அந்த நபர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மகன் இறந்த வேதனை”…. தம்பதி எடுத்த விபரீத முடிவு…. பரபரப்பு சம்பவம்…!!!

மகன் இறந்த துக்கத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நவாவூர் கணுவாய் ரோடு பகுதியில் சஞ்சீவ் சங்கர்- நந்தினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் ரவி கிருஷ்ணா நண்பர்களுடன் போரூர் அருகே இருக்கும் ரெசாரத்துக்கு ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக காரில் சென்றுள்ளார். அப்போது விபத்தில் சிக்கி ரவி கிருஷ்ணா உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஒரே மகனை இழந்த துக்கத்தில் இருந்த தம்பதி வாழ்க்கையை வெறுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரத்த காயங்களுடன் கிடந்த தொழிலாளி…. நடந்தது என்ன….?? பரபரப்பு சம்பவம்….!!!

தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் குப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை வீட்டிற்கு முன்பு ரத்த காயங்களுடன் குப்புசாமி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குப்புசாமியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தொடரும் அட்டகாசம்” முகாமிட்டுள்ள யானைகள்…. அச்சத்தில் தொழிலாளர்கள்….!!!

காட்டு யானைகள் அட்டகாசம் செய்வதால் தொழிலாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாய்முடி எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த யானைகள் ரேஷன் கடையை உடைத்து அரிசியை தின்றும் வீசியும் சேதப்படுத்தியது. இதனை பார்த்த தொழிலாளர்கள் நீண்ட நேரம் போராடி காட்டு யானைகளை விரட்டி அடித்தனர். நேற்று முன்தினம் மீண்டும் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்தியது. தொடர்ந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்வதால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 1/2 வயது பெண் குழந்தை கொலை…. கொடூர அரக்கனாக மாறிய வாலிபர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்திரவிட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு விளாங்குறிச்சி பகுதியில் ரகுநாதன்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 2 1/2 வயது பெண் குழந்தைக்கு ரகுநாதன் பாலியல் தொந்தரவு அளித்து பாழடைந்த கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ரகுநாதனை கைது செய்தனர். இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரே மகனை பறிகொடுத்த துக்கத்தில்…. தம்பதி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

மகன் இறந்ததுக்கத்தில் தம்பதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நவாவூர் கணுவாய் ரோடு பகுதியில் சஞ்சீவ் சங்கர்(46) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி(55) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரவி கிருஷ்ணா(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் காரில் ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக போரூர் அருகே இருக்கும் ரெசார்ட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கார் விபத்தில் சிக்கி ரவி கிருஷ்ணா உள்பட 3 பேர் இறந்தனர். இந்நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆட்டை கொன்ற விலங்கு…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் கண்காணிப்பு….!!!

ஆட்டை சிறுத்தை கடித்து கொன்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணுவாய் திருவள்ளுவர் நகரில் கூலி தொழிலாளியான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருவள்ளுவர் நகர் அடிவார பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த ஒரு ஆடு மட்டும் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த சுரேஷ் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அங்கு பதிவாகி இருந்த கால் தடயங்களை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING : இரவு 1 மணி வரை அனைத்து வியாபார தளங்களும் திறந்திருக்கும்…. கோவை காவல்துறை அறிவிப்பு..!!

கோவை மாநகரில் தீபாவளி பண்டிகை வரை அனைத்து வியாபார தளங்களும் இரவு 1 மணி வரை செயல்படும் என காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் உள்ள பல்வேறு ஜவுளி கடைகள், நகை கடைகள் மற்றும் இதர வியாபார கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் இருந்து…. மொத்தம் 240 சிறப்பு பேருந்துகள் இயக்கம்….. வெளியான தகவல்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து வருகிற 21-ஆம் தேதி முதல் மதுரை, திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது, கோவையிலிருந்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு 100 பேருந்துகளும், திருச்சி மற்றும் சேலத்திற்கு தலா 50 பேருந்துகளும், தேனிக்கு 40 பேருந்துகளும் என மொத்தம் 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் அனைத்தும் வெவ்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து இயக்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை: தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகள்… எந்தெந்த ஊருக்கு தெரியுமா….? இதோ முழு லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் வருகிற 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் தற்போதிருந்தே பொதுமக்கள் பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். அதன் பிறகு பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு ஆயத்தமாவார்கள். இதன் காரணமாக பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில்வே நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக பண்டிகை காலங்களில் தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் கோவை போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் குறித்து அறிவிப்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெண்ணை துரத்தி கடித்த விலங்கு…. அதிகாலையில் நடந்த சம்பவம்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!

கரடி தாக்கியதால் பெண் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இஞ்சிப்பாறை எஸ்டேட் மேல் பிரிவு பழைய பாடி பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபிதா குமாரி(19) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று சபிதாகுமாரி அதிகாலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த போது தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் பதுங்கி இருந்த கரடி திடீரென அவரை நோக்கி ஓடி சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சபிதா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வயது மூப்பினால் இறந்த மூதாட்டி….. உடலை சுமந்து சென்று தானமாக வழங்கிய பெண்கள்….!!!

மூதாட்டியின் உடலை பெண்கள் சுமந்து சென்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளியப்பன் கவுண்டன் புதூர் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காவேரியம்மாள்(82) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக சுப்பிரமணியன் உயிரிழந்தார் இந்நிலையில் நேற்று வயது மூப்பு காரணமாக காவேரியம்மாளும் உயிரிழந்தார். பொதுவாக இறந்தவர்களின் உடலை ஆண்கள் சுமந்து சென்று அடக்கம் செய்வது வழக்கம். இந்நிலையில் காவேரியம்மாவின் உடலை பெண்கள் சுமந்து ஊரை சுற்றி வந்து கோவை அரசு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெற்றோரிடம் லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்கள்….. கையும் களவுமாக பிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!!

லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தின் 2-வது மாடியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு கார்த்திக் பிரபு என்பவர் சட்ட உதவியாளராகவும், தனலட்சுமி என்பவர் குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினராகவும் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் காப்பகத்தில் இருக்கும் குழந்தையை வீட்டிற்கு அனுப்புவதற்கு இருவரும் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தையின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி புதிய சப்- கலெக்டர் பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவிக்கும் அதிகாரிகள்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி சப்-கலெக்டராக தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மத்திய அரசு பணியில் உதவி செயலாளராக வேலை பார்த்த எஸ். பிரியங்கா என்பவர் பொள்ளாச்சி சப்- கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து நேற்று புதிதாக பொறுப்பேற்ற சப்-கலெக்டர் எஸ்.பிரியங்காவிடம் சப்- தாக்கரே சுபம் தேவராஜ் பொறுப்புகளை ஒப்படைத்தார். இதனை அடுத்து புதிதாக பொறுப்பேற்ற சப் கலெக்டருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாலிபரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து….. பணம் மோசடி செய்யும் மர்ம கும்பல்…. போலீஸ் விசாரணை….!!!

கோவையைச் சேர்ந்த 33 வயதுடைய வாலிபர் சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்பை எடுத்து பேசிய போது மறுமுனையில் பேசிய நபர் உங்களது தொழில் சம்பந்தமான பொருட்கள் எங்களிடம் உள்ளது. அதனை குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என கூறியுள்ளார். அப்போது பொருட்களை நேரில் வந்து பார்த்துவிட்டு சொல்வதாக தெரிவித்துள்ளார். சிறிது நேரம் கழித்து வாலிபரின் செல்போனுக்கு வீடியோ கால் வந்தது. அதனை எடுத்து பார்த்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“முதல்வர் மீது நடவடிக்கை எடுங்க” கல்லூரியை முற்றுகையிட்டு போராடிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெட்டதாபுரத்தில் சக்தி இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு 320 மாணவர்களும், 70 மாணவிகளும் படித்து வருகின்றனர். நேற்று மதியம் மாணவர்கள் கல்லூரியை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது, கடந்த 10- ஆம் தேதி விடுதியில் மாணவர்களுக்கு சாப்பாடு வழங்கப்பட்டது. அப்போது தட்டப்பயறு குழம்பு இருந்ததை பார்த்த பிரசாந்த், காண்டியப்பன், யுவராஜ், அபிநவ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. பேசுவதற்கு அழைத்து வாலிபர் செய்த காரியம்….போலீஸ் அதிரடி….!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் மகேந்திரன் என்பவர் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவர் 16 வயதுடைய 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நான் உன்னிடம் தனியாக பேச வேண்டும் எனக் கூறி மகேந்திரன் மாணவியை அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நிலம் வாங்க முயன்ற தொழிலதிபர்…. பல லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை….!!!

தொழிலதிபரிடம் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலத்தில் தொழிலதிபரான நவாஸ்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நிலம் வாங்குவதற்கு முடிவு செய்தார். இந்நிலையில் தனக்கு அறிமுகமான குனியமுத்தூரில் வசிக்கும் அன்சாரி என்பவரிடம் நிலம் வாங்குவது குறித்து தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அப்போது அன்சாரி சிறுமுகை அருகே நிலம் இருப்பதாகவும் 15 லட்சம் ரூபாய் முன்பணமாக தர வேண்டும் எனவும் தொழிலதிபரிடம் கூறியுள்ளார். இதனை […]

Categories

Tech |