Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்த வனத்துறையினர்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் கோவை குற்றால அருவி அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால் சோதனை சாவடியில் இருந்து வனத்துறையினர் வாகனங்களில் சுற்றுலா பயணிகளை அருவிக்கு அழைத்து செல்கின்றனர். கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் கோவை குற்றால அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதற்கு தடை விதித்தனர். மேலும் வனத்துறையினர் சோதனை சாவடி அருகே தீவிர கண்காணிப்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையை சேதப்படுத்தி….. அட்டகாசம் செய்த யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

ரேஷன் கடையை காட்டு யானைகள் உடைத்து அட்டகாசம் செய்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. இந்நிலையில் ஊசிமலை டாப் எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைந்த 3 காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து அட்டகாசம் செய்தது. இதனையடுத்து அங்கிருந்த அரிசியை தின்றும், சிதறியடித்தும் நாசம் செய்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிரபல நிறுவனத்தின் பெயரை கூறி…. ரூ. 8 1/2 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்…. தம்பதியின் பரபரப்பு புகார்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரத்தில் சுரேஷ்- அனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த சுரேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் ஆன்லைனில் பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை இருப்பதாக விளம்பரம் வந்தது. அதனை நம்பி அனிதா அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எதிர்முனையில் பேசிய நபர் பிரபல நிறுவனத்தின் பெயரை கூறி வேலை இருப்பதாக தெரிவித்தார். அந்த வேலையில் சேர்ந்தால் மாதம் 50 ஆயிரத்திற்கும் மேல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மலைப்பாதையில் கடும் பனிமூட்டம்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. போலீசாரின் அறிவுரை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் நேற்று காலை கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிர செய்தபடி வாகனங்களை ஓட்டி சென்றனர். இதனையடுத்து கடும் குளிரால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளையே முடங்கினர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, பொதுவாக கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் மட்டுமே பனிமூட்டம் நிலவும். ஆனால் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வால்பாறை-பொள்ளாச்சி மலை பாதையில் அதிகமாக பனிமூட்டம் காணப்படுகிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதுமையை மறந்து விளையாடிய “தாத்தா-பாட்டிகள்”….. தனியார் பள்ளியின் சிறப்பு விழா ஏற்பாடு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடை பகுதியில் எஸ்.வி.ஜி.வி மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் பழனிசாமி தலைமை வகித்துள்ளார். இந்நிலையில் பள்ளி செயலாளர் ராஜேந்திரன், நிர்வாக அதிகாரி சிவ சதீஷ்குமார், அறங்காவலர் தாரகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகிக்க, மாணவர் மாணவிகளின் தாத்தா, பாட்டிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த விழாவின் போது நடனம் மற்றும் விளையாட்டு உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றுள்ளது. பின்னர் வெற்றி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கன்று குட்டியை அடித்து கொன்ற விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் கண்காணிப்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்டியூர் காப்புக்காடு வன எல்லையை ஒட்டி நடேசன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில் நடேசன் ஒரு மரத்தில் கன்று குட்டியை கட்டி விட்டு தோட்ட வேலைகளை பார்ப்பதற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் கன்று குட்டி இறந்து கிடந்தது. இதுகுறித்து நடேசன் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த கால் தடயத்தை ஆய்வு செய்தபோது கன்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

68 பேரிடம் “ரூ.2 கோடியே 17 லட்சம் மோசடி”…. அ.தி.மு.க முன்னாள் பிரமுகர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் லட்சுமி நகரில் அ.தி.மு.க முன்னாள் பிரமுகரான ஆத்மா சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வ.உ.சி பேரவையின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். இந்நிலையில் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களுடன் தனக்கு நெருக்கமான பழக்கம் இருப்பதாகவும், அவர்களிடம் கூறி அரசு வேலை வாங்கி தருவதாகவும் பலரிடம் சிவக்குமார் கூறியுள்ளார். இதனை நம்பி ஒவ்வொருவரும் 8 லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரை சிவக்குமாரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் கூறியபடி அவர் வேலை வாங்கி கொடுக்காததால் ஈரோடு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விடிய, விடிய வெளுத்து வாங்கிய மழை…. வீடு இடிந்து மாணவி படுகாயம்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முழுக்க இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் லங்கா கார்னர் ரயில்வே பாலம், அவிநாசி ரோடு மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக ஸ்ரீபதி நகர், குனியமுத்தூர் அம்மன் கோவில் வீதி, தடாகம் ரோடு, போத்தனூர் ரோடு உள்ளிட்ட மாநகராட்சி சாலைகள் சேரும், சகதியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் பொம்மன்பாளையம் மதுரை வீரன் கோவில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் விளம்பரத்தை நம்பி…. 6 1/2 லட்ச ரூபாயை இழந்த ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!!

தனியார் நிறுவன ஊழியரிடம் இருந்து 6 1/2 லட்ச ரூபாய் பணம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீலிகோனாம்பாளையம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆன்லைனில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என குறிப்பிட்டு இருந்தது. இதனை பார்த்த பிரவீன்குமார் 1000 ரூபாய் முதலீடு செய்த சிறிது நேரத்தில் அவருக்கு 1200 ரூபாய் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குட்டிகளுடன் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்…. அச்சத்தில் தொழிலாளர்கள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!!

கேரள மாநிலத்தில் இருந்து இடம்பெயரும் காட்டு யானைகள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டுள்ளது. இந்த காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் அக்காமலை எஸ்டேட் 2-வது பிரிவு 10- ஆம் நம்பர் தேயிலை தோட்ட பகுதியில் 6 குட்டிகளுடன் 19 காட்டு யானைகள் முகாமிட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவம் இடத்திற்கு விரைந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசுமாடு…. துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்….. தோட்ட உரிமையாளருக்கு அறிவுரை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுள்ளிமேட்டுபதி பகுதியில் ஜெயந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக 50 அடி ஆழமுடைய கிணற்றில் பசுமாடு தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு கட்டி பசுமாட்டை பத்திரமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேருடன் பிடுங்கி மறுநடவு செய்யப்பட்ட மரங்கள்…. அதிகாரியின் தகவல்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி அலுவலகம் அருகே 43 அடி உயர கோபுரம் அமைக்கப்பட உள்ளது. இதனால் ஒரு மரத்தை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் மறு நடவு செய்துள்ளனர். இந்நிலையில் ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் பகுதி மீடியா ட்ரியை வாகனங்கள் சுற்றி செல்ல ரவுண்டானா அமைக்கப்பட உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த 4 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போனை பறித்த ஓட்டுநர்…. பின்தொடர்ந்து வந்த மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை பகுதியில் 15 வயதுடைய சிறுமி 10- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கும், அதே பகுதியில் வசிக்கும் வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஓட்டுனரான குணசேகரன் என்பவர் மாணவியை ஒருதலையாக காதலித்து அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது மாணவி வேறு ஒரு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. டன் கணக்கில் சிக்கிய பொருள்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மண்ணூர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் மண்ணூர் பெருமாள் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது மூட்டைக்குள் ரேஷன் அரிசி இருந்தது. இதனையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் மணிகண்டன் என்பவரை பிடித்து விசாரணை நடத்திய போது ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி அதனை அதிக விலைக்கு கேரளாவில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் தற்காலிக அனுமதி சான்று திட்டம்…. அதிகாரி ஆய்வு….!!!

போக்குவரத்து சோதனைசாவடிகளில் ஆன்லைன் தற்காலிக அனுமதிசான்று திட்டத்தை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். தமிழக அரசு சார்பாக மாநில எல்லையில் போக்குவரத்து சோதனைசாவடி அமைக்கப்பட்டிருக்கின்றது. வெளி மாநிலங்களுக்கு செல்பவர்கள் இந்த சோதனை சாவடிகளில் தற்காலிக அனுமதி சான்று வழங்கப்படுகின்றது. இதன் மூலம் வரி செலுத்தாத மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்படுகின்றது. இதற்கான தொகை நேரடியாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சோதனை சாவடிகளில் நேரடி பண பட்டுவாடா இல்லாத முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. தற்போது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் முதலீடு செய்த தனியார் நிறுவன ஊழியர்…. காத்திருந்த அதிர்ச்சி… போலீசார் விசாரணை…!!!!!

ஆன்லைனில் முதலீடு செய்த தனியார் நிறுவன ஊழியரிடம் 6 1/2லட்சம் மோசடி செய்யப்பட்டு இருக்கின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் நீலிக்கோணம்பாளையத்தை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் தனியார் நிறுவன ஊழியராக வேலை செய்து வருகின்றார். இவர் ஆன்லைனில் தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறப்பட்டதை நம்பி முதல் கட்டமாக ரூபாய் ஆயிரம் முதலீடு செய்து இருக்கின்றார். சில மணி நேரத்தில் அவருக்கு 1200 கிடைத்தது. இதன்பின் அந்நிறுவனத்தில் இருந்து பேசிய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாடகை காரை விற்பனை செய்து மோசடி…. பெண் உள்பட 4 பேர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆ.சங்கம்பாளையம் பகுதியில் முருகேசன்- கனகமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மதினாபேகம், பால்ராஜ் என்ற நண்பர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணம்பட்டியில் இருக்கும் தனியார் வங்கிக்கு பணம் வசூலிக்க செல்வதற்கு கார் தேவைப்படுகிறது. எனவே மாத வாடகைக்கு உங்களது காரை கொடுங்கள் என மதினா பேகமும், பால்ராஜும் கனகமணியிடம் கேட்டுள்ளனர். இதனை நம்பிய கனகமணி தனது காரை கொடுத்துள்ளார். கடந்த 3 மாதமாக காருக்கு வாடகை பணம் கொடுக்கவில்லை. இதுகுறித்து கனகமணி காவல் நிலையத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“யானைக்கால் நோய் தடுப்பு முகாம்” நகராட்சி நிர்வாகத்தின் ஏற்பாடு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை நகராட்சியில் இருக்கும் சிறுவர் பூங்கா, வாழைத்தோட்டம் ஆகிய இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் பொதுமக்களிடம் ரத்த மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 600 பேரிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கோவை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் இருக்கும் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையின் முடிவில் யானைக்கால் நோய் பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, நோயை பரப்பும் கொசுக்களை ஒழிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வட்டார […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Justin: கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் NIA திடீர் சோதனை…!!!!

கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு கோவையில் காரில் கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீட்டில் இந்த சோதனை நடந்து வருகிறது. கோட்டைமேடு, ரத்தினபுரி, உக்கடம் ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர், ரத்தினபுரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் ஊழியரின் “மர்மமான மரணம்”…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!!

டாஸ்மாக் ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செங்குட்டைபாளையம் பகுதியில் டாஸ்மாக் ஊழியரான மோகன்ராஜ்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வி(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நேற்று முன்தினம் நீண்ட நேரமாகியும் மோகன்ராஜ் வீட்டு […]

Categories
கோயம்புத்தூர் சினிமா தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

“சித்ஸ்ரீராமின் இன்னிசை மழையில் நனைய தயாரா….?” உடனே கிளம்புங்க…. டிக்கெட் புக்கிங் ஆரம்பம்….!!!!!

கோவையில் சித்ஸ்ரீராம் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான சித்ஸ்ரீராம் இசை நிகழ்ச்சி கோவையில் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி நடைபெறுகின்றது. இந்த நிகழ்ச்சியானது கோவை மாவட்டத்தில் உள்ள கொடிசியா மைதானத்தில் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகி மூன்று மணி நேரம் நடைபெற இருக்கின்றது. இந்நிகழ்ச்சியில் சித்ஸ்ரீராம் உடன் அவரின் இசைக்குழுவும் பங்கேற்க இருக்கின்றார்கள். பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் இடையே ரசிகர்களுடன் சித்ஸ்ரீ ராம் உரையாடலும் நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் PAYTM […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 மாதத்திற்குள்…. கோவை மாநகரில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள்…. போலீஸ் கமிஷனரின் தகவல்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், முக்கிய சாலை சந்திப்புகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். தற்போது பெரும்பாலான பகுதிகளில் இருக்கும் கேமராக்கள் பழுதடைந்து காணப்படுவதால் முக்கிய ஆதாரங்களை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை மாநகரில் 5400 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீரில் மூழ்கிய பாலம்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. இன்று முதல் படகு சவாரி தொடக்கம்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததோடு, அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது. இந்நிலையில் லிங்காபுரம்-காந்தவயல் கிராமங்களுக்கு இடையே இருக்கும் 20 அடி உயர் மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியது. மேலும் இணைப்பு சாலையும் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் பொதுமக்கள் சிரமப்பட்டு தண்ணீரில் வாகனத்தை இயக்கி செல்வதால் பழுதாகி இடையிலேயே நின்று விடுகிறது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலக ஊழியர் பணியிடை நீக்கம்…. இதான் காரணமா…? அதிரடி உத்தரவு…!!!

கோயம்புத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் சுபஹான் நிஷா என்பவர் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இவர் பத்திரப்பதிவு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தது. அந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின் படி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோர் விசாரணை நடத்தியதில் நிஷா மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் […]

Categories
கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட செய்திகள்

வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்கள் இருந்தால்…. இங்கே அனுப்பி வையுங்கள்… ஆட்சியர் தகவல்…!!!!!

வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை அனுப்பி வைக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரிக்கு எதிரே அரசு ஆவணங்களை பாதுகாக்கும் பெட்டகமாக கோவை மாவட்ட ஆவண காப்பகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு அரசுத்துறை மற்றும் உள்ளாட்சித் துறை நிறுவனங்களின் நிர்வாகம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டு வருகின்றது. மேலும் நமது நாட்டின் முழுமையான வரலாற்றை அறிவதற்காக அரசு ஆவணங்கள் மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விடாமல் துரத்தி சென்ற விலங்கு…. படுகாயமடைந்த அலறி துடித்த வாலிபர்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

காட்டெருமை தாக்கி வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவர்க்கல் மலைவாழ் கிராமத்தில் சிவபிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் சிவபிரகாஷ் குடியிருப்பு பகுதிக்கு அருகே இருக்கும் ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது வனப்பகுதியில் இருந்து ஓடி வந்த காட்டெருமை சிவபிரகாஷை விடாமல் துரத்தி சென்று முட்டி தாக்கியது. அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காட்டெருமையை விரட்டி சிவபிரகாஷை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரது தலை, கால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பப்ஜி விளையாட்டிற்கு அடிமை…. பெண்ணின் தங்க சங்கிலியை பறித்த வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடபுதூர் ராமர் கோவில் வீதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் சரோஜா மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் முகவரி கேட்பது போல் நடித்து சரோஜா அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சரோஜா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாமியார் வீட்டில் திடீர் சோதனை…. 300 கிலோ எடையுடைய சிலை மீட்பு…. போலீஸ் அதிரடி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் பேரூர் பைபாஸ் சாலையில் பாஸ்கர சுவாமிகள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஜோதிடம் பார்த்து வருகிறார். இவரது வீட்டில் முருகர் சிலை இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தி 4 அடி உயரமுள்ள முருகர் சிலையை மீட்டனர். இதனையடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முகத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்த தொழிலாளி…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்… போலீஸ் விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி ராஜ வீதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 14 வயதுடைய மகன் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான வெங்கடேஷ் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் போதையில் சாலையில் நடந்து செல்பவர்களிடமும் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் வெங்கடேஷின் மனைவி தனது மகனுடன் ராமநாதபுரத்தில் இருக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏன் என்னை காதலிக்க மாட்டாய்…?? மாணவியை தாக்கிய கல்லூரி மாணவர்…. போலீஸ் அதிரடி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னவேடம்பட்டியில் இருக்கும் கல்லூரியில் 20 வயதுடைய மாணவி படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் சூரிய பிரகாஷ் என்ற மாணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாணவியிடம் தனது காதலை வெளிப்படுத்தி தொந்தரவு செய்துள்ளார். ஆனால் மாணவி காதலை ஏற்காததால் சூரிய பிரகாஷ் அவரை பின்தொடர்ந்து சென்று காதலிக்குமாறு தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது சகோதரரிடம் கூறியுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக மாணவி நின்று கொண்டிருந்தார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய வழக்கு…. வருவாய் துணை ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை…. நீதிமன்றம் அதிரடி…!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் புதூரில் மகேந்திர பாபு என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு மகேந்திர பாபு தனது தந்தையின் நிலத்தை அளந்து வரைபடம் தர வேண்டும் என வடக்கு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் வருவாய் துணை ஆய்வாளரான பொன்னுசாமி என்பவர் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து மகேந்திர பாபு அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பணம் வாங்கும் போது பொன்னுசாமியை கையும், களவுமாக பிடித்தனர். இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக வங்கியிலிருந்து பெறப்பட்ட பணம்…. ரூ.1 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பாரதிநகரில் அன்பரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்கள் நிறுவனத்தில் பிரகாஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வங்கிகளுக்கு சென்று ஏ.டி.எம்-மில் நிரப்புவதற்காக பணத்தை வாங்கி வரும் வேலைகளை செய்து வந்துள்ளார். அந்த பணத்தை ஏ.டி.எம்-மில் நிரப்புவதற்காக ஊழியர்களுக்கு பிரித்து கொடுப்பது வழக்கம். இந்நிலையில் கணக்கு வழக்குகளை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலமாக விற்பனை…. கிளி வளர்ப்பது குற்றமா…? வனத்துறை அதிகாரியின் எச்சரிக்கை…!!!

வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1948-ன் படி அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்கள் பட்டியலில் பச்சைக்கிளிகள் 4-வது இடத்தில் இருக்கிறது. இந்த கிளிகளை வளர்ப்பது, விற்பது இரண்டுமே குற்றமாகும். ஆனால் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ கிளிகளை விற்பனை செய்கின்றனர். சிலர் கிளிகளை பிடித்து இறகுகளை வெட்டி துன்புறுத்தி வீட்டில் வைத்து வளர்க்கின்றனர். இதனை அடுத்து இனப்பெருக்கம் செய்து ஒரு ஜோடி கிளி 2 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மீண்டும்” மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்…. வனத்துறையினரின் சிறப்பு ஏற்பாடு…. என்ன தெரியுமா…..??

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருக்கும் 17 பழங்குடியின கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பழைய சர்க்கார்பதி என்ற பழங்குடி கிராமத்தில் வசிக்கும் குழந்தைகள் படிப்பதற்காக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 80-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். சுமார் 5 கிலோமீட்டர் தூரமுடைய சேத்துமடை பகுதிக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் மேல்படிப்புக்கு செல்லும் மாணவர்களை பெற்றோர் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

3 நாட்களாக வீட்டிற்கு வராத கணவர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசில் பரபரப்பு புகார்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் பிலால் நகரில் மரியம் சுபாஷினி(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, உக்கடத்தில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனரான முகமது என்பவருக்கும், சுபாஷினிக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. கடந்த 3 நாட்களாக முகமது வீட்டிற்கு செல்லாததால் சந்தேகமடைந்த மரியம் சுபாஷினி சிலரிடம் விசாரித்துள்ளார். அப்போது முகமதுவுக்கு வேறொரு பெண்ணுடன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தாயிடம் அடம்பிடித்த “மகன்”…. பெண்ணின் அவரச முடிவால்…. கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மகன் தகராறு செய்தால் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மோதிரபுரம் இளங்கோ வீதியில் எலக்ட்ரீசியனான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 18 வயதுடைய சஞ்சய்குமார் என்ற மகன் உள்ளார். இவர் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்கு சென்று வருவதற்கு புதிதாக மோட்டார் சைக்கிள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காரில் கடத்தி சென்று….”நிர்வாண புகைப்படம் எடுத்து மிரட்டல்”… வழக்கறிஞரின் பரபரப்பு புகார்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 61 வயதுடைய வழக்கறிஞர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, வழக்கறிஞரான நான் பெரிய வணிக நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கி வருகிறேன். தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தனியார் நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனை வழங்குமாறு கேட்டுள்ளார். இதனால் எனது வீட்டில் இருக்கும் அலுவலகத்திற்கு அந்த பெண்ணை வருமாறு கூறினேன். சம்பவம் நடைபெற்ற அன்று அந்த பெண்ணின் மகன் எனக்கூறி ஒருவர் செல்போன் மூலம் அழைத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இந்து சமய அறநிலைத்துறையின் திட்டப்படி…. தங்க நகைகளில் கற்களை பிரித்தெடுக்கும் பணி தொடக்கம்….. வெளியான தகவல்…!!!

தமிழகம் முழுவதும் இந்து அறநிலையைத் துறைக்கு சொந்தமான கோவில்கள் அமைந்துள்ளது. இங்கு பயன்படுத்தாமல் இருக்கும் தங்க நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி பாரத் ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த 2013-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 21 கிலோ 785 கிராம் தங்க நகைகள் இருக்கிறது. இந்த நகைகளில் இருக்கும் அரக்கு மற்றும் கற்களை பிரித்தெடுக்கும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுப்ரீம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மின்கம்பம் மீது மோதிய கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!!

மின்கம்பம் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து 2 பேர் காரில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள செம்மண் திட்டு என்ற பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக காரின் டயர் வெடித்தது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மின்கம்பம் உடைந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஜமேஷா முபினுக்கு வெடி மருந்து வாங்க பணம் கொடுத்தவர்கள் யார்…? உபா சட்டத்தில் கைதானவரிடம் விசாரிக்க NIA திட்டம்…!!!!!

கோவை கார் வெடிப்பு சம்பவம் பற்றி NIA விசாரிக்க திட்டமிட்டு இருப்பதால் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு விபத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் அவருக்கு துணையாக செயல்பட்டதாக முகமது ஆசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ் இஸ்மாயில் போன்ற 6 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதல் தகராறில் ஏற்பட்ட மோதல்…. அண்ணன்- தம்பியின் கொடூர செயல்…. போலீஸ் விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டில் சிக்கந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஓட்டுனரான சேக் முகமது(23) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சேக் முகமது அப்பகுதியில் இருக்கும் பள்ளிக்கூடம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சகோதரர்களான லட்சுமணன், நவீன் ஆகிய இருவரும் சேக் முகமது உடன் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தினர். இதனால் படுகாயமடைந்த சேக் முகமது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காதல் தகராறு காரணமாக இந்த மோதல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இறந்த மகன் சேர்த்து வைத்த பணம்…. 500, 1000 ரூபாய் நோட்டுகளுடன் கண்ணீர் மல்க மனு அளித்த மூதாட்டி….!!!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் உப்பிலிபாளையம் பகுதியில் வசிக்கும் மாரியம்மாள்(80) என்ற மூதாட்டியும் கலந்து கொண்டார். கடந்த 2016-ஆம் ஆண்டு செல்லாது என அறிவித்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கையில் வைத்தபடி மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனதில் கூறியிருப்பதாவது, எனது கணவர் சுந்தர்ராஜன், மகன் செந்தில்குமாரும் ஏற்கனவே இறந்துவிட்டனர். லாரி ஓட்டுநரான எனது மகன் கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பறவை காய்ச்சல் எதிரொலி”…. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..!!!!

பறவை காய்ச்சல் எதிரொளியால் கோழிப்பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தற்போது நடந்து வருகின்றது. கேரளாவில் தற்போது பறவை காய்ச்சல் பரவி வருவதால் தமிழக எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பறவை காய்ச்சல் வராமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் மூலம் கிருமிகள் பரவாமல் இருப்பதற்காக வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகின்றது. தற்போது கறிக்கோழி பண்ணைகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகின்றது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வால்பாறையில் விழிப்புணர்வு…. “சுற்றுலா பயணிகளுக்கு எடுத்துரைத்த போலீசார்”…!!!!!

வால்பாறையில் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை, காடம்பாறை, முடீஸ், சேக்கல்முடி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் சார்பாக போதை பொருள் தடுப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்து நாள்தோறும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றார்கள். இதனால் காவல்துறை சார்பாக சுற்றுலா பயணிகளிடையே கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு இன்ஸ்பெக்டர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள்… கோவை ரயில் நிலையத்தில் வாழ்க்கை வரலாறு கண்காட்சி…!!!!!

இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் நாளைய(31.10.2022) தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் தேசிய ஒருமைப்பாடு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரயில் நிலையங்களின் பிரதான நுழைவு வாயில் முன்பாக வல்லபாய் பட்டேலின் வாழ்க்கை வரலாறு பற்றிய கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் பட்டேல் பற்றிய 50க்கும் மேற்பட்ட படங்களுடன் கூடிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இதனை சுதந்திர போராட்ட வீரரின் வாரிசு ஆர் எஸ் சண்முகம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!!

வடகிழக்கு பருவமழை பற்றிய முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையாளருமான தாரேஸ் அகமது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை கார்வெடிப்பு சம்பவம்… 3 கோவில்களை தகர்க்க சதித்திட்டம்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து ஜமேசா முபினுடன் தொடர்பில் இருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜமீஷா முபின் வீட்டிலிருந்து 75 கிலோ வெடி மருந்து உட்பட 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் கோவையில் உள்ள மூன்று முக்கிய கோவில்களை தகர்க்க சதி செய்திருப்பது உட்பட பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது பலியான ஜமேஷா முபின் மற்றும் அவருடைய உறவினர்களான அசாருதீன், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பனிமூட்டத்தால் நடந்த விபத்து…. சர்க்கரை ஆலை முன்னாள் மேலாளர் பலி; மனைவி படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

பேருந்து மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் ஆனந்தகுமார்(73) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சர்க்கரை ஆலையில் மேலாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சாந்தி(64) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தென்சங்கம்பாளையம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் கரையாஞ்செட்டிபாளையம் பிரிவில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. கடைகளில் திடீர் சோதனை…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!!

விதிமுறையை மீறிய 6 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கோவை- பொள்ளாச்சி மெயின் ரோடு, ஆர்.எஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கடைகளில் நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விதிமுறைகளை மீறி சிகரெட் விற்பனை செய்த 6 கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் 1200 ரூபாய் அபராதம் விதித்தனர். […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: சிலிண்டர் குண்டுவெடிப்பு – புதிய பரபரப்பு தகவல்கள் …!!

கோவை கோட்டைமேடு பகுதியில் கார் வெடித்து வழக்கில் புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. கோவை ஐந்தாவது நடுவர் நீதிமன்றத்தில் உக்கடம் காவல் துறை தாக்கல் செய்த மனுவில் உள்ள தகவல்கள்  தற்போது வெளியாகியுள்ளது. அதில் கோவிலுக்கு அருகில் வசித்த அப்துல் மஷீத் என்பவர் வீட்டில் ஒரு மாதம் முன்பு வரை  ஜமேசா மொபின் வாடகைக்கு தங்கி உள்ளார். இந்த அப்துல் மாசித் என்பவர் அவர்தான் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். மேலும் 22 ஆம் தேதி வெடிபொருட்களை […]

Categories

Tech |