Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

10 நாட்களுக்கு ஒருமுறை வருது….. ஊராட்சி அலுவலகம் முற்றுகை…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொண்டாம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமிகாந்தன் பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கோபம் அடைந்த பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குவிந்து கிடக்கும் கழிவுகள்….. மர்ம நபர்களின் அட்டூழியம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிரியன் சர்ச் ரோட்டோரங்களில் காலியான ஊசிகள் மற்றும் மருத்துவப் கழிவுகள் அதிகமாகக் கிடைக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, இரவு 8 மணிக்கு மேல் அப்பகுதியில் நின்று மது குடித்துவிட்டு சிலர் பாட்டில்களை சாலையிலேயே போட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்கிருந்து தான் வந்துச்சோ….? அலறியடித்து ஓட்டம் பிடித்த தொழிலாளர்கள்…. கோவையில் பரபரப்பு…!!

தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்களை மலைத் தேனீக்கள் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் இருக்கின்றது. இந்நிலையில் வால்பாறை பகுதியில் இருக்கும் தேயிலை தோட்ட 23-வது பிரிவில் தொழிலாளர்கள் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் பறந்து வந்த மலைத் தேனீக்கள் தொழிலாளர்களை சுற்றி வளைத்து கொட்டத் தொடங்கியுள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அழகிகளுடன் உல்லாசமா….? வாட்சப்பில் வந்த புகைப்படம்…. போலீஸ் நடவடிக்கை…!!

அழகியை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாப்பநாயக்கன் கிராமத்தில் 30 வயது வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரின் வாட்சப் எண்ணிற்கு அழகிகளின் புகைப்படங்கள் வந்ததோடு, பணம் கொடுத்தால் ஹோட்டல் அறையில் அழகிகளுடன் தனிமையில் இருக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து அந்த வாலிபர் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் அழகிகளை விபசாரத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பணம் இல்லாமல் ஏன் வந்தீர்கள்….? தொழிலாளி கொலை வழக்கு…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

தொழிலாளியை குத்தி கொலை செய்த வழக்கில் நீதிபதி குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் தொழிலாளியான பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாபுவும், அவருடைய நண்பரான நெல்சன் என்பவரும் அப்பகுதியில் இருக்கும் காலனியில் நின்று கொண்டிருந்த போது மணி என்பவரின் தலைமையில் ஒரு ரவுடி கும்பல் அங்கு சென்றுள்ளது. இந்த ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் பாபு மற்றும் நெல்சனிடம் கத்திமுனையில் மிரட்டி பணம் கேட்ட போது, நண்பர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அம்மா-அப்பா நீங்கள் எதிர்பார்த்ததை என்னால் கொடுக்க முடியாது…. கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவன் மாயம்…. பரபரப்பு….!!!!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள நாயக்கன்பாளையம் விஜயலட்சுமி நகரில் மாதன் மற்றும் அம்பிகாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் விக்னேஷ் (19). இவர் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தான். கடந்த ஆண்டு எழுதிய நீட் தேர்வில் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் அந்தத் தேர்வில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாமல் மாணவன் இருந்துள்ளான். அதனால் கடந்த சில நாட்களாகவே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சட்டென மோதிய லாரி….. காரை சேதப்படுத்திய மரம்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய டிரைவர்…!!

லாரி மோதிய விபத்தில் முறிந்து விழுந்த மரம் காரை சேதப்படுத்தி விட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சீராபாளையம் பகுதியில் கால் டாக்சி டிரைவரான வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வெங்கடேஷ் வாடிக்கையாளரை கோவை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு கணபதி நோக்கி சென்றுள்ளார். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் பின்புறம் இருக்கும் சாலையோர மரத்தின் மீது பலமாக மோதி விட்டது. இதனால் அந்த மரம் முறிந்து வெங்கடேஷின் கார் மீது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இங்கு நிறுத்தக் கூடாது…. மீறினால் கடும் நடவடிக்கை…. எச்சரித்த போலீசார்….!!

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.  கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் கோயம்புத்தூர்-பொள்ளாச்சி  இருவழி சாலை இருந்துள்ளது. அதனை போக்குவரத்து தேவைக்காக  நான்குவழி சாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது கோயம்புத்தூர் – பொள்ளாச்சி சாலையில் கிணத்துக்கடவு பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு மேம்பாலத்திற்கு கீழ் சர்வீஸ் சாலையும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி பகுதிகளுக்கு சென்று வருபவர்கள் மேம்பாலத்தையும், கிணத்துக்கடவு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் சர்வீஸ் சாலையையும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீரில் மூழ்கிய பாலம்…. பிரசவ வலியில் துடித்த பெண்…. மருத்துவ பணியாளர்களின் நற்செயல்….!!

மலைக்கிராம பெண்ணிற்கு பரிசலில் சென்று பிரசவம் பார்த்த மருத்துவ பணியாளர்களை அனைவரும் பாராட்டியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைக்கட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான மாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். நிறைமாத கர்ப்பிணியான தீபாவை மாரி அவரது பெற்றோர் வசிக்கும் காந்தவயல் மலைக்கிராமத்திற்குப் பிரசவத்திற்காக அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென தீபாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதால் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 2 ஆம்புலன்சுகளில் மருத்துவ பணியாளர்கள் அங்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்…. ஓடையில் தேங்கிய குப்பை…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

குப்பைகளை பொது இடங்களிலில் கொட்டுவதை தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேலாண்டிபாளையம் பகுதியில் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் மக்கள் குப்பைகளை கொட்டி வருவதால், அப்பகுதி அசுத்தம் அடைந்து காணப்படுகிறது. மேலும் அங்கு குப்பைகள் தேங்கி இருப்பதால் ஓடை நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே குப்பைகளை அப்புறப்படுத்தி, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் பங்கில் தூங்கிய நபர்…. உடல் நசுங்கி பலியான சோகம்…. கோவையில் பரபரப்பு…!!

பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதால் பெட்ரோல் பங்கில் தூங்கிகொண்டிருந்த நபர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் பகுதியில், பேருந்து ஓட்டுநரான ஆறுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை லாலி ரோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தான் ஓட்டும் தனியார் பேருந்தை நிறுத்துவது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை காலை நேரத்தில் ஆறுச்சாமி பின்னோக்கி இயக்கியுள்ளார். அந்தசமயம்  பேருந்தின் பின் சக்கரம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தகவல் தெரிவிக்க முடியல…. அட்டகாசம் செய்த யானைகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

ரேஷன் கடைகளை யானைகள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநில காட்டுப்பகுதிகளில் உள்ள யானைகள் கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை வனப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. இந்த யானைகள் உணவிற்காக தேயிலைத்தோட்டத்தில் பணியாற்றிவரும் தொழிலாளர்களின் வீடுகள் மற்றும் ரேஷன் கடை போன்ற பகுதிகளை உடைத்து சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் முடீஸ் பஜார் பகுதியில் 5 யானைகள் புகுந்துள்ளன. இதனையடுத்து அப்பகுதியில் ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்தியதோடு அரிசியை தின்றுள்ளது. மேலும் காட்டுயானைகள் அங்கிருந்த  வீடுகளையும் சேதப்படுத்தி விட்டு வனப்பகுதிக்குள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதலித்த 16 வயது சிறுமி…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலிஸ்….!!

16 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவரை கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து காணவில்லை. இதுதொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நஞ்சேகவுண்டன்புதூரில் வசித்து வரும் ஓவியச்செல்வன் என்பவர் ஒரு சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாக பொதுமக்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி வந்து செல்லும் நபர்கள்…. சிக்கிய பீடா கடை உரிமையாளர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதைப்பொருள்கள் விற்பனை செய்த குற்றதிற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   கோயம்புத்தூர் மாவட்டத்தில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகமாக இருப்பதாகவும் அதனை ராஜவீதியில் உள்ள ஒரு கடையில்  விற்பனை செய்வதாகவும் தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி ஆர்.எஸ். புரம் உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் பூபதி, கார்த்திக், உமா, மாரிமுத்து ஆகியோர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள ஒரு கடைக்கு தொடர்ந்து வருகின்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் சென்ற பெண்…. தீடிரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள சண்முகம்நகரில் வெல்டிங் தொழிலாளியான ராஜேஷ் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்தப் பகுதிக்கு அருகில் இருக்கும் நொய்யல் ஆற்றில் அதிகமாக தண்ணீர் வருவதால் ராஜேஷ் தனது மனைவி மற்றும் நண்பர்களை அழைத்துக்கொண்டு சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது சரஸ்வதி ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தகவல் அறியாத உரிமையாளர்கள்….. குவிந்த சுற்றுலா பயணிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

வால்பாறை பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகளை தவிர கடைகளை திறப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இந்நிலையில் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா வந்த பொதுமக்களை காவல்துறையினர் ஆற்றில் இறங்கி குளிப்பதற்கு தடை விதித்து திருப்பி அனுப்பியுள்ளனர். இதையடுத்து வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்கும் தடை விதித்துள்ளனர். ஆனால் நீரார் அணைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அப்பகுதியில் திரண்டனர். இதனையடுத்து கட்டுப்பாடுகள் குறித்து சரியாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த சிறுமிகள்….. போர்வையை பிடித்து இழுத்த யானை…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

வீட்டை சேதப்படுத்திய காட்டு யானைகள் சிறுமிகளின் போர்வையை பிடித்து இழுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய் யானை தனது 2 குட்டிகளுடன் சங்கிலிரோடு, நல்லமுடி, பன்னிமேடு போன்ற எஸ்டேட் பகுதிகளில் நடமாடியுள்ளது. இந்த யானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் காட்டு யானைகள் நள்ளிரவு நேரத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறி ஈட்டியார் எஸ்டேட் பகுதிக்குள் புகுந்துவிட்டது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்று முழு ஊரடங்கு…. கடைகள் அனைத்தும் மூடல்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் பலனாக தமிழகத்தின் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் ஒருசில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று அத்தியாவசிய கடைகளான பால், மருந்து, காய்கறி மற்றும் மளிகை கடைகள் தவிர […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நாளை முழுஊரடங்கு…. இதற்கெல்லாம் தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் பலனாக தமிழகத்தின் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் ஒருசில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாளை அத்தியாவசிய கடைகளான பால், மருந்து, காய்கறி மற்றும் மளிகை கடைகள் தவிர […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெண்களுக்கு மாதந்தோறும் இலவச ‘சானிட்டரி நாப்கின்’…. அரசு அதிரடி….!!!

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, 12,000 இளம் பெண்களுக்கு மாதம்தோறும் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் நிகழ்ச்சியை, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் நேற்று தொடங்கி வைத்தார்.’கோவை மக்கள் சேவை மையம்’ மற்றும் ‘இதம்’ திட்டம் சார்பாக, காந்திபுரம் கமலம் துரைசாமி ஹாலில் நடந்த நிகழ்ச்சிக்கு, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, அக்டோபர் 7 ஆம் தேதி வரை மகளிரணி சார்பில், நாடுதோறும் மகளிர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காலவரையற்ற விடுமுறை… கல்லூரி மூடல்… தமிழகத்தில் பரபரப்பு!!

தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் 46 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கல்லூரிக்கு காலவரையறையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்ததை அடுத்து 9, 10, 11, 12 மற்றும் அனைத்து வகையான கல்லூரிகளும் திறக்கப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. இதற்கிடையே பள்ளி மாணவர்களுக்கு சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகின்றது.. இதனால் ஒரு சில பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டு வருகின்றன.. இந்த நிலையில் கோவை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

பூட்டியிருந்த வீட்டில் மர்மநபர்கள் 51 பவுன் தங்கநகைகளை கொள்ளையடித்து சென்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உடையாம்பாளையம் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் துணிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அருணாச்சலம் தனது குடும்பத்தோடு வால்பாறைக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அருணாச்சலம் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் உள்ளே சென்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நிரம்பி வழியும் ஆழியாறு அணை…. 11 மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு….!!!!

பொள்ளாச்சி அருகில் உள்ள ஆழியாறு அணை பி.ஏ.பி. திட்டத்தின் முக்கிய அணைகளின் ஒன்றாக இருக்கிறது. இந்த ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு 6400 ஏக்கர் மற்றும் புதிய ஆயக்கட்டு 44 ஆயிரம் ஏக்கர் நீர்பாசன வசதி பெறுகின்றன.ஆழியாறு அணை தென்மேற்கு பருவ காலங்களில் நிரம்பி விடுகின்றன. இதைப்போன்று இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு அணை கடந்த சில நாட்களுக்கு முன்பு நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் ஆழியாறு அணையில் 120 உயரத்தில் 119 அடிக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி…. இனி பொது இடங்களுக்கு செல்ல இது கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!`

கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை அடுத்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வந்தது. அதன் பலனாக கணிசமாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாகவே மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் 235 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அன்னூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை மற்றும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் உமத்சிங், ராணா சிங் மற்றும் கான் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் அப்பகுதியில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முறிந்து விழுந்த ராட்சத மரம்…. படுகாயமடைந்த 5 பேர்…. கோவையில் பரபரப்பு…!!

ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் இருக்கும் பத்திர பதிவு அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் டோக்கன்கள் அடிப்படையில் பத்திரப்பதிவு நடந்து கொண்டிருந்த போது சிலர் அங்கிருந்த நிழற்குடையின் கீழ் அமர்ந்துள்ளனர். அப்போது அருகிலுள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்த ராட்சத மரம் முறிந்து நிழற்குடையின் மீது விழுந்து விட்டது. இதனால் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டதோடு, அங்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு தண்டனை கொடுங்க” போதை வாலிபரின் அட்டூழியம்…. எச்சரித்து அனுப்பிய போலீஸ்…!!

குடிபோதையில் மரத்தின் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பழைய தாலுகா அலுவலகம் அருகில் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் அங்கு வழக்கறிஞர்கள் மற்றும் விசாரணைக்கு வந்தவர்கள் என பல பேர் நின்று கொண்டிருந்த போது ஒரு வாலிபர் வளாகத்தில் இருந்த வேப்ப மரத்தில் வேகமாக ஏறியுள்ளார். இதனையடுத்து மரத்தின் கிளையில் துண்டை கட்டி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அந்த வாலிபர் மிரட்டல் விடுத்ததோடு, தனக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வகுப்பறைக்குள் சென்ற மாணவி…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சிவ சுந்தரி என்ற மகளும், சபரிகிரி என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு செல்லதுரை இறந்து விட்டதால் மகாலட்சுமி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற சிவசுந்தரியின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பிறகு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மது போதையில் தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு…!!

வடமாநில தொழிலாளியை கடப்பாரையால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் கட்டிட என்ஜினீயரான முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் உறவினர்களான சிபு தாக்கூர், ராஜேஷ்குமார் என்ற இரு வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் கட்டிட வேலை நடைபெறும் வீட்டிற்கு அருகில் இருக்கும் தற்காலிக கூடாரத்தில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் இருவரும் வேலைக்கு வராததால் முத்துக்குமார் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விபத்தில் இறந்த மூதாட்டி…. மனித நேயத்துடன் செயல்பட்ட போலீஸ்…. பாராட்டிய சூப்பிரண்டு….!!

மனித நேயத்துடன் செயல்பட்ட போலீஸ் ஏட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்றாம்பாளையம் பிரிவு பகுதியில் கடந்த 2-ஆம் தேதி மூதாட்டி ஒருவர் நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த அந்த மூதாட்டியின் உடலை காவல் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து அந்த மூதாட்டிக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பதை அறிந்த கிணத்துக்கடவு போலீஸ் ஏட்டு செல்வகுமார் மூதாட்டியின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் இழப்பீடு…. அரசு பேருந்து ஜப்தி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

உத்தரவை நிறைவேற்றாததால் நீதிமன்ற ஊழியர்கள் அரசு பேருந்தை ஜப்தி செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிளியகவுண்டன்பாளையம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு இவரின் மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ராஜா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை அடுத்து ராஜாவின் குடும்பத்தை சேர்ந்த சுகந்தி, ரகுபதி, சிங்கராஜ் ஆகியோர் இழப்பீடு வழங்கக்கோரி மோட்டார் வாகன விபத்து விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ராஜாவின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய ஆட்டோ…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. கோவையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஆட்டோ டிரைவரான செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஆட்டோவில் சுந்தராபுரம் சந்திப்பு அருகில் சென்று கொண்டிருந்தபோது சடன் பிரேக் போட்டுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விட்டது. இதில் படுகாயமடைந்த செல்லத்துரையை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 நாட்களில் திருமணம்…. சகோதரருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு வரும் 9-ஆம் தேதி திருமணம் நடத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்றுள்ளது. இவருக்கு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணி புரியும் வேலுச்சாமி என்ற சகோதரர் இருந்துள்ளார். இந்நிலையில் சக்திவேல் வேலுச்சாமியுடன் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டுள்ளார். இதனையடுத்து தாமரை குளம் பகுதியில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மகளுக்கு பாலியல் தொந்தரவு…. 6 ஆண்டுகள் கொடுமைப்படுத்திய தந்தை…. போலீஸ் நடவடிக்கை…!!

கூலி தொழிலாளி தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடவள்ளி பகுதியில் நகை பட்டறை தொழிலாளி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். கடந்த சில ஆண்டுகளாக இவரது மனைவி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொழிலாளி தனது 15 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததோடு, யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனை அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதுகுறித்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு குற்ற வழக்குகள்….. குண்டர் சட்டத்தில் இருவர் கைது…. கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் 2 வாலிபர்களை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வ.உ.சி பூங்கா அருகில் சென்று கொண்டிருந்த போது 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி சுரேஷிடம் இருந்த 2000 ரூபாயை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இது குறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக விஜய், மணிகண்டன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சடன் பிரேக் போட்ட டிரைவர்…. சுற்று சுவரை இடித்து நின்ற லாரி…. கோவையில் பரபரப்பு…!!

விபத்துக்குள்ளான லாரி மருத்துவமனையின் சுற்று சுவர் மீது மோதி நின்று விட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து பஞ்சு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று  புறப்பட்டுள்ளது. இந்த லாரியை மாரிமுத்து என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சூலூர் அரசு மருத்துவமனை அருகில் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற கல்லூரி மாணவர் அவரது மோட்டார் சைக்கிளை நிறுத்தியதால் அவர் மீது மோதாமல் இருக்க மாரிமுத்து சடன் பிரேக் போட்டுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் நின்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“4 மாசமா வேலை பாக்குறேன்” தற்கொலைக்கு முயன்ற வாலிபர்…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென அந்த வாலிபர் தான் பாட்டிலில் கொண்டு சென்ற டீசலை உடல் முழுவதும் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெளியே நின்ற குடும்பத்தினர்…. வீட்டில் கேட்ட பயங்கர சத்தம்…. உடைந்து நாசமான பொருட்கள்…!!

தொழிலாளியின் வீட்டு மேற்கூரை ஓடுகள் நொறுங்கி விழுந்து விட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பகுதியில் மாற்றுத்திறனாளியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் முருகனின் குடும்பத்தினர் காலை 7 மணியளவில் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவரது வீட்டு மேற்கூரை ஓடுகள் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்து விட்டது. மேலும் வீட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசுக்கு கண்டனம்…. திருவோடு ஏந்தி போராட்டம்…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

திராவிடர் தமிழர் கட்சியினர் கையில் திருவோடு ஏந்தியவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திராவிடர் தமிழர் கட்சியினர் கையில் திருவோடு ஏந்தியவாறு சென்றுள்ளனர். அதன்பின் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அரசின் முடிவால் பல்வேறு மக்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது எனவும், அரசு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்தை கவனிக்க முடியல…. தூய்மை பணியாளர்களின் போராட்டம்…. கோவையில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட அலுவலகத்திற்கு சமூகநீதி தூய்மை பணியாளர் சங்கத்தினர் சென்றுள்ளனர். அதன்பிறகு தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, காலை 5.45 மணிக்கு வேலைக்கு வர வேண்டுமென்றால் 4 மணிக்கே எழுந்து புறப்பட வேண்டியுள்ளது. இதனால் குடும்பத்தை கவனிக்க இயலவில்லை. இந்நிலையில் பணி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மோசடி…. உரிமையாளருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

கோழி நிறுவன உரிமையாளருக்கு 40 லட்சம் ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பலவஞ்சிபாளையம் பகுதியில் ஏ.ஜி குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீ குபேரன் ஈமு பார்ம்ஸ் என்ற பெயரில் கடந்த 2011-ஆம் ஆண்டு கோழி நிறுவனம் தொடங்கியுள்ளார். இந்நிலையில் குமார் வி.ஐ.பி திட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 8 ஆயிரம் வீதம் 24 மாதங்களுக்கு வழங்கப்படும் என […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒர்க் ஷாப் கூரை மீது பாய்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. கோவையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி ஒர்க் ஷாப் மேற்கூரை மீது பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சின்னவேடம்பட்டி பகுதியில் வியாபாரியான ரகுவரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரில் கணபதி நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் தனியார் மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த ரகுவரனின் கார் சாலையில் தாறுமாறாக ஓடி உள்ளது. இதனையடுத்து அங்கிருந்த மரத்தின் மீது மோதி சுமார் 6 அடி பள்ளத்தில் இருந்து ஒர்க்ஷாப்பின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாமியார் மீது தாக்குதல்…. போதையில் இருந்த தொழிலாளி…. போலீஸ் நடவடிக்கை…!!

மாமியாரை தாக்கிய குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டி பகுதியில் தையல்நாயகி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மூத்த மகளான வினிதா என்பவர் அவரது கணவர் நேசமணியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒர்க்ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்க்கும் நேசமணிக்கும், வினிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாமியார் வீட்டிற்கு சென்ற நேசமணி குடும்ப பிரச்சினை குறித்து பேசும் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த நேசமணி தையல் நாயகியை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு குற்ற வழக்குகள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூர் பகுதியில் முஜிபர் ரஹ்மான் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முஜிபர் ரகுமான் கோவை அரசு மருத்துவமனைக்கு அருகில் பிரபாகரன் என்பவரை கத்திமுனையில் மிரட்டி பணம் பறித்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் முஜிபர் ரஹ்மானை கைது செய்துள்ளனர். மேலும் இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருக்கின்றது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுவனை மிரட்டிய வாலிபர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

சிறுவனை மிரட்டி வாலிபர்  3 1/2 லட்சம் ரூபாயை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் பகுதியில் தொழிலதிபரான ஜிதேந்தர் மேத்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் காமராஜர் நகரில் பிளைவுட் கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இரவு நேரத்தில் ஜிதேந்தர் மேத்தாவின் 10 வயது மகனான ரிஷப் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு சென்ற 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சிறுவனிடம் உனது அப்பா கடையின் லெட்டர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா…. நடைபெற்ற ஆலோசனை கூட்டம்…. விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…!!

விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவராஜ் தலைமை வகித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைத்து கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று, நீர் நிலைகளில் கரைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீடுகளிலேயே பண்டிகையை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகளின் வருகை…. திரும்பும் இயல்பு வாழ்க்கை…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை சுற்றுலா தளமானது ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதால் அங்கு கடை நடத்தி வருபவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். மேலும் வியாபாரத்தை நம்பி இருக்கும் கடைக்காரர்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் ஒரு கண்காணிப்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கூலி படையை ஏவிய தாத்தா…. பேரனுக்கு நடந்த கொடூரம்….. வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

கூலிப்படையை ஏவி தாத்தா தனது பேரனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிவானந்தா காலனியில் விஜயராகவன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி விஜயராகவன் அவரது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயராகவன் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் விஜயராகவன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடத்தல் வழக்கில் சம்மந்தமா….? போலீஸ்காரர் பணியிடை நீக்கம்…. கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

கடத்தல் வழக்கில் கைதான போலீஸ்காரரை கமிஷனர் தீபக் பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் கார் டிரைவரான மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த வாரம் சிலர் மகேஸ்வரனை காரில் கடத்தி சென்றுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக தங்க கடத்தலில் ஈடுபடும் கும்பல் மகேஸ்வரனை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் மகேஸ்வரனை மீட்டதோடு கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளனர். இதில் கோவை நகர […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இளைஞர்களை குறிவைத்து விற்பனை….. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

போதை மாத்திரைகள் விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூர் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் சல்மா நகரில் வசிக்கும் நிசாமுதீன் என்பதும், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நிசாமுதீனை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் அவரிடம் […]

Categories

Tech |