Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? காவலாளி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

காவலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நவகரையில் திருமலைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் திருமலைசாமி அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திருமலைசாமி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருமலைசாமி யின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற இளம்பெண்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோவைபுதூரில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மீனா தனது ஸ்கூட்டரில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து மீனா காவல் நிலையத்தில் புகார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இந்த அட்ரெஸ் எங்க இருக்கு” மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியிடம் இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூரில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி தனது வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து மூதாட்டி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வனப்பகுதியில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

காட்டு யானை தாக்கியதால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெத்திக்குட்டை பிரிவு பவானிசாகர் அணை பகுதியில் ஆணின் சடலம் கிடப்பதை பார்த்த சில வனத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் ஓட்டுநரான நவீன்குமார் என்பது தெரியவந்துள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? இறந்து கிடந்த யானை…. வனத்துறையினரின் தகவல்…!!

வனப்பகுதியில் யானை இறந்து கிடந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கோடை காலம் காரணமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. இந்நிலையில் பில்லூர் அணை பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காட்டு யானை ஒன்று இறந்து கிடந்ததை பார்த்த வனத்துறையினர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“என் வண்டியை காணும்” காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்… போலீஸ் விசாரணை…!!

மொபட்டை திருடி சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அங்கலக்குறிச்சி பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆழியாறு வனத்துறை சோதனை சாவடி அருகே சர்பத் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் குணசேகரன் தனது கடைக்கு அருகில் மொபட்டை நிறுத்தி விட்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மொபட் காணாமல் போனதை கண்டு குணசேகரன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குணசேகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 29-ஆம் திடீரென காணாமல் போய்விட்டார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மகாலிங்கபுரத்தில் சேர்ந்த ஓட்டுநரான சிவக்குமார் பொள்ளாச்சியில் இருக்கும் ஒரு துணிக்கடைக்கு சென்ற போது அவருக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கிப்ட் கார்டுகளை வாங்கி அனுப்புங்க” இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண்ணிடம் இருந்து நூதன முறையில் பண மோசடி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுந்தராபுரத்தில் அனிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அணிதாவின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு லிங்க் வந்துள்ளது. அந்த லிங்கை கிளிக் செய்து பார்த்த போது அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியின் புகைப்படத்துடன் ஒரு செய்தி குறிப்பு இருந்துள்ளது. அதில் தனியார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

20 ரூபாயால் ஏற்பட்ட தகராறு….. ஹோட்டலை அடித்து உடைத்த நண்பர்கள்…. கோவையில் பரபரப்பு…!!

ஹோட்டலில் தகராறு செய்து பொருட்களை உடைத்த நண்பர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கே.என்.ஜி புதூர் பகுதியில் இருக்கும் ஹோட்டலுக்கு அதே பகுதியில் வசிக்கும் பிரதீப் என்பவர் மதுபோதையில் உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் 520 ரூபாய்க்கு சாப்பிட்ட பிரதீப் 500 ரூபாய் பணம் கொடுத்துள்ளார். அப்போது ஹோட்டல் ஊழியர் மீதமுள்ள 20 ரூபாய் பணம் எங்கே என கேட்டுள்ளார். இதற்குமேல் தன்னிடம் பணம் இல்லை என பிரதீப் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கேரளாவுக்கு கடத்த முயற்சி…. 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்… 3 பேர் கைது… போலீசார் அதிரடி…!!

கேரளாவுக்கு கடத்தி சென்ற 2 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல்  குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறையினருக்கு கோவையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த போவதாக ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் கேரளாவின் எல்லைப்பகுதியான வாளையாறு, வேலந்தாவளம் நெடுஞ்சாலையில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது வேலந்தாவளம் பாதையாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மூட்டை மூட்டையாக அரிசி இருந்தது. இதை பார்த்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி… தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்…!!

பொள்ளாச்சி நகராட்சியில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினார்கள். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம்  உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தியதால் சுகாதாரப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம்  36 வார்டுகள் இருக்கின்றது. அதில்  சாக்கடையை சுத்தம் செய்தல், குப்பைகளை அள்ளுதல் உட்பட பல பணிகளை தூய்மை பணியாளர்கள் செய்து வருகின்றனர். இந்தப் பணியை ஒப்பந்த அடிப்படையில் 267 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

போதிய பேருந்துகள் இல்ல…. சரியான நேரத்துக்கும் வரல…. போராட்டத்தில் இறங்கிய மக்கள்….!!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், தேவராயபுரம், நரசீபுரம் ஆகிய பகுதிகளில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அலுவலக பணிகளுக்கு அதிகளவில் மக்கள் சென்று வருகின்றனர். ஆனால் தொண்டாமுத்தூர் பகுதியில் காலை 7 மணி முதல் 9 மணி வரை இரண்டு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் அந்த பகுதியில் இரண்டு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 10 மணிக்கு மேல் சரியான சமயத்திற்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.  இதனால் பொதுமக்கள்  தினமும் பேருந்து நிலையத்தில் காத்திருந்து வீட்டிற்கு திரும்பிச் சென்றும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காவல்துறையின் தொடர் வேட்டை…. கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல்…. 2 பேர் கைது….!!

சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டு கிலோ கணக்கில் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஒரு மாதத்திற்கு ஆப்ரேஷன் கஞ்சா 2.0 வேட்டையை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் இரவு பகலாக கஞ்சா வேட்டையை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து வருகிறார்கள். அதேபோன்று ரயில்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மிகவும் சிரமப்படுகிறோம்…. எங்கள் பகுதியில் ஒரு ரேசன் கடை…. துணை ஆட்சியரிடம் மனு….!!

ஜமீன் ஊத்துக்களி பேரூராட்சியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சப் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதி கிராம மக்கள் நேற்று சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் 600க்கு அதிகமான ரேஷன் கார்டுதாரர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் வடுகபாளையம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

10 வருட காதல்…. திருமணமான 4 மாதத்தில் சந்தேகம்…. இறுதியில் நடந்த கொடூரம்….!!

போத்தனூர் பகுதியில் காதல் மனைவியை கணவர் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம், போத்தனூர் காமராஜ் நகரில் வசித்து வருபவர் ராமசாமி. இவருடைய மகன் 32 வயதுடைய நாகார்ஜுனன். இவர் அதே பகுதியில் வசித்து வந்த 27 வயதுடைய சர்மிளா என்ற பெண்ணை கடந்த பத்து வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையை பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் சுந்தராபுரம் காந்திநகரில் தனிக்குடித்தனம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

டீ குடிக்கப் போன வேளையில் பைக் திருட்டு…. சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பொள்ளாச்சியில் பைக்கை திருடிச் சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி வள்ளியம்மாள் லே-அவுட்யில் வசித்து வருபவர் 23 வயதுடைய தொழிலாளி அரவிந்த். இவர் பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம் பின்பக்கமாக உள்ள பேக்கரி முன் பைக்கை  நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றுள்ளார். அதன் பின் வெளியே வந்து பார்த்தபோது பைக் மற்றும் அதில் வைத்திருந்த செல்போன் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இந்த காரால் மீண்டும் விபத்து ஏற்படும்” அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

விபத்தில் சிக்கிய காரை அப்புறப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி-உடுமலை ரோடு வழியாக தூத்துக்குடி, திருச்செந்தூர், ஒட்டன்சத்திரம், மதுரை உள்பட பல்வேறு ஊர்களுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாக்கினாம்பட்டியில் இருக்கும் பி.ஏ.பி அலுவலகம் அருகே கார் ஒன்று விபத்தில் சிக்கியது. அந்த கார் இதுவரை அகற்றப்படாமல் சாலையோரத்தில் கிடப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அது குறுகிய சாலை என்பதால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஓரினசேர்க்கையாளரை நிர்வாணமாக்கிய வாலிபர்கள்…. வீடியோ எடுத்து மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஓரினசேர்க்கைக்கு வரவழைத்து சமையல்காரரை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாரணி நகரில் கங்காதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்திபுரத்தில் இருக்கும் ஒரு டாஸ்மாக் பாரில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார். ஓரினச்சேர்க்கையாளரான கங்காதரன் இது சம்பந்தமான சமூக வலைதள செயலியில் உறுப்பினராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த செயலியில் உறுப்பினராக இருக்கும் வாலிபர் கங்காதரனின் செல்போன் எண்ணை பார்த்து அவரை தொடர்பு கொண்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கருகிய நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. கோவையில் பரபரப்பு…!!

எரிந்த நிலையில் வாலிபரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள எஸ்.எஸ் குளம் வெள்ளானைப்பட்டி காட்டுப்பகுதியில் இரு சக்கர வாகனத்துடன் ஒரு ஆண் கருகிய நிலையில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது, அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருகிய நிலையில் கிடந்த வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு” இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் சக்தி எஸ்டேட் பகுதியில் மனோகரன் வசித்து வருகிறார். இவருக்கு கிருத்திகா என்ற மகள் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கிருத்திகா வீட்டிலிருந்து வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கிருத்திகாவின் குடும்பத்தினர் அவருக்கு திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் கிருத்திகா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. வனப்பகுதிக்குள் பாய்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்….!!

கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு வனப்பகுதிக்குள் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறைக்கு சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது மூன்று நண்பர்களுடன் காரில் சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் வால்பாறையை சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் வால்பாறை பொள்ளாச்சி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது 7-வது கொண்டை ஊசி வளைவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு வனப்பகுதியில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி கக்கன் வீதியில் கட்டிட தொழிலாளியான மோகன்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயகுமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விஜயகுமாரிக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் மோகன்ராஜ் இல்லாத நேரத்தில் விஜயகுமாரி அந்த வாலிபருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இது குறித்து அறிந்த மோகன்ராஜ் தனது மனைவியை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோடை கால சீசன்…. வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு….!!

வால்பாறையில் கோடை கால சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை கால சீசன் தொடங்கியுள்ளது.இதனால்  ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்து செல்கின்றனர். வால்பாறையில் கடந்த மாதம் 18 ஆம் தேதி முதல் பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில் நுங்கு, தர்பூசணி வியாபாரம் தற்பொழுது அதிகரித்துள்ளது. இந்தக் கோடை மழை சில நேரங்களில் கன மழையாகவும், மிதமான மழையாகவும் மாறி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“காதலனுடன் பேச முடியல” நீட் பயிற்சி மைய விடுதியில் மாணவி தற்கொலை…. கோவையில் பரபரப்பு…!!

காதலனுடன் பேச முடியாததால் பயிற்சி மைய விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொண்டையம்பாளையத்தில் வாரி மெடிக்கல் அகாடமி என்ற பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகளான ஸ்வேதா இந்த பயிற்சி மையத்தில் இருக்கும் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். அதே பயிற்சி மைய விடுதியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அழுகிய நிலையில் தொங்கிய தலை” அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. கோவையில் பரபரப்பு…!!

அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாலமநல்லூரில் இருக்கும் தனியார் தோட்டத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது தூக்கில் அழுகிய நிலையில் ஆணின் தலையும், உடல் தரையிலும் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் காவல்துறையினர் அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“வீடியோவை நேரில் வந்து பாருங்க” விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. 4 பேரை கைது செய்த போலீஸ்…!!

விவசாயியை காரில் கடத்தி சென்று பணம் பறித்த 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலையில் விவசாயியான அப்துல் ஹக்கீம் என்பவர் வசித்துவருகிறார். இவரது தோட்டத்தில் ராசுகுட்டி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராசுகுட்டி தனது நண்பரான அஜய் பிரகாஷ், கவின் மற்றும் சூரிய ஆகியோருடன் இணைந்து அப்துலை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி அப்துல்லை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ராசுக்குட்டி தோட்டத்தில் தேங்காய் திருடி செல்லும் நபர்கள் யார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதனால் தான் இறந்ததா…..? அழுகிய நிலையில் கிடந்த யானை….. வனத்துறையினரின் தகவல்…!!

அழுகிய நிலையில் காட்டு யானை இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மோதூர் பெத்திகுட்டை காப்புக்காடு மூலையூர் சரக வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அழுகிய நிலையில் பெண் யார் காட்டு யானை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை மருத்துவர் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் யானையின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளியில் காணாமல் போன பொருள்…. வசமாக சிக்கிய நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அரசு பள்ளியில் திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியரான கலைமணி என்பவர் கணினி இருந்த அறைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு 55 இன்ச் எல்.இ.டி டிவி, 2 புரஜெக்டர் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விடுதிக்கு வெளியே நின்ற மர்ம நபர்…. அச்சத்தில் மாணவிகள்…. வைரலாகும் வீடியோ…!!

பல்கலைக்கழக விடுதிக்கு வெளியே நின்று மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் தங்கும் விடுதியில் மர்ம அவர்களின் நடமாட்டம் இருப்பதாக பல்வேறு புகார்கள் வந்தது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்பு மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் பேச்சுவார்த்தை நடத்தி உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதற்கு அனுமதி இல்லை…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

அனுமதி இல்லாமல் கேரளாவிற்கு கற்களை கடத்தி சென்ற லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் சோதனைச்சாவடியில் கனிமவளம், புவியியல் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கேரளா நோக்கி சென்ற ஒரு லாரியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அனுமதி இல்லாமல் கற்களை கேரளாவிற்கு கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் லாரி மற்றும் அதன் ஓட்டுநரை ஆனைமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“வினோத செடி உரசிவிட்டது” வனப்பகுதிக்குள் வழிதவறி சென்ற பெண்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

வனப்பகுதிக்குள் வினோத செடி உரசியதால் வழிதவறி சென்ற பெண்ணை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் சந்திரா என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் தேயிலை பறிக்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சந்திரா விறகு எடுப்பதற்காக ஊசிமலை வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியுமாகியும் சந்திரா திரும்பி வராததால் வனத்துறையினர் அவரை தேடி பார்த்து உள்ளனர். அப்போது இருள் சூழ்ந்து விட்டதால் வனத்துறையினர் தேடும் பணியை கைவிட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரைகுறை ஆடையுடன் நுழையும் மர்ம நபர்கள்…. மாணவிகளின் திடீர் போராட்டம்….. கோவையில் பரபரப்பு…!!

விடுதியில் இரவு நேரத்தில் நுழையும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை  எடுக்காத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள  பாரதியார் பல்கலைக்கழகம் மருதமலை ரோட்டில்  இருக்கிறது. அங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் வெளியூரில் இருந்து படிக்க வரும் மாணவர்கள் அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கின்றனர். அங்குள்ள செல்லம்மா விடுதியில் 3000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அரைகுறை ஆடையுடன் இரு மர்மநபர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இத்தனை மாணவர்களா….? விதிமுறையை மீறிய ஆட்டோக்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

விதிமுறையை மீறி அதிகமாக மாணவர்களை ஏற்றி சென்ற 11 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் படித்த 2-ஆம் வகுப்பு மாணவன் பள்ளி வாகனம் மோதி உயிரிழந்துவிட்டான். இதனை தொடர்ந்து பள்ளி வாகனங்களில் சிறப்பு ஆய்வு நடத்த அதிரடியாக உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோவை ரோடு, மெயின் ரோடு, பல்லடம் ரோடு, உடுமலை ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“டாபு எங்க குழந்தை மாதிரி” நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

செல்லமாக வளர்க்கும் நாய்க்கு விவசாயியின் குடும்பத்தினர் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள திவான்சாபுதூரில் விவசாயியான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹரிஹரசுதன் என்ற மகனும், சுகன்யா என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் தங்கள் வீட்டில் டாபு என்ற பொமேரியன் வகை நாயை வளர்த்து வருகின்றனர். இந்த நாய் தற்போது கர்ப்பமாக இருக்கிறது. இந்நிலையில் சிவகுமாரின் குடும்பத்தினர் நாய்க்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

150 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 31-ஆம் தேதி உலக திருநங்கைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமை தாங்கியுள்ளார். இதில் திருநங்கைகள் கோலம், பேச்சு, நடனம், பாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 135 திருநங்கைகளுக்கு மாநில அடையாள […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நிச்சயம் செய்த பிறகு…. திருமணத்திற்கு மறுத்த பேஸ்புக் காதலன்…. இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணை…!!

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் உள்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு கேரள மாநிலத்தை சேர்ந்த வருண் என்பவருடன் பேஸ்புக் மூலம் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்துள்ளனர். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியதால் வருண் அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தேசிய அளவில் போட்டிகள் நடத்தும் வகையில்…. கூடுதல் வசதி வேண்டும்…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!

பொள்ளாச்சியில் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தும் வகையில் ஸ்கேட்டிங் மைதானத்தில் கூடுதல் வசதிகளை செய்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சர்வதேச அளவில் ஸ்கேட்டிங் மைதானம் அமைத்து தரவேண்டும் என்று மாவட்ட சறுக்கு விளையாட்டு சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கும் பணி பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சமத்தூர் ராம ஐயங்கார் நகராட்சி பள்ளி மைதானத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கேட்டிங் மைதானம் அமைக்க எம்.பி, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பி.ஏ.பி வாய்க்காலில்… தண்ணீர் திருடப்படுகிறதா?… ஆய்வு செய்த அதிகாரிகள்..!!

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் பி.ஏ.பி வாய்க்காலில் தண்ணீர் திருட்டு போகிறதா என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலம் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் மூலம் பாசனம் பெற்று வருகின்றன. இந்த தண்ணீரை விவசாயிகள் நலனுக்காக  4 மண்டலங்களாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்சமயம் முதலாம் மண்டல பாசனத்திற்காக 4-வது சுற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பி.ஏ.பி திட்டத்தின் மூலம் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 15, 600 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கேரளாவுக்கு கடத்த முயன்றபோது…. “19 டன் ரேஷன் அரிசி பறிமுதல்”.… டிரைவர் கைது… தலைமறைவான உரிமையாளர்கள்…. போலீசார் வலைவீச்சு…!!

பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு கடத்திச் சென்ற 19 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்போவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரத நேரு, காவல்துறையினர் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது அவர்கள் காலை 6 மணிக்கு பாலக்காடு ரோடு நல்லூர் வனத்துறை சோதனை சாவடி அருகில் வந்த லாரியை தடுத்து நிறுத்தி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அத்தியாவசிய தேவைக்குத்தான் லீவ் எடுக்குறோம்…. ஆப்சென்ட் போடாதீங்க… போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..!!

கோவை சுங்கத்தில் இருக்கின்ற அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக ஓட்டுனர், கண்டக்டர் உட்பட போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம், சுங்கத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக ஓட்டுனர், கண்டக்டர் உட்பட போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் சுங்க பணிமனையில் பணியாற்றும் போக்குவரத்து பணியாளர்கள் சுப நிகழ்ச்சி,குடும்ப நிகழ்ச்சி, இறப்பு உட்பட சொந்த நிகழ்ச்சிக்கு போவதற்கு விடுமுறை எடுத்தால் கூட ஆப்சென்ட் என்று பதிவு செய்யபடுகிறது. இப்படி பதிவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆரம்பத்திலேயே கண்டறியனும்…. “போதை பழக்கத்திலிருந்து மாணவர்களை மீட்க”…. ஆசிரியர்களுக்கு பயிற்சி..!!

பொள்ளாச்சியில் போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்க ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பாக அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் போதைப் பொருள் பயன்படுத்துவதை தடுக்க மாணவர்களுக்கு சிறப்பான திட்டம் தொடங்கப்பட்டன. மேலும் மனிதவள மேம்பாட்டுத்துறை “போசோ” என்கிற பயிற்சியில் இந்தத் திட்டம் குறித்து விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இதை அடுத்து பொள்ளாச்சி தெற்கு வட்டார வள மையத்தில் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாடகை கொடுக்கல …. “40 கடைகளுக்கு சீல்”…. உடனே செலுத்துங்க… அதிகாரிகள் அதிரடி!!

வால்பாறையில் வாடகை செலுத்தாத 40 கடைகளை அதிகாரிகள்  சீல் வைத்தனர் . கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையில் 350 கடைகள் நகராட்சிக்கு சொந்தமானது. இந்த கடைகள் அனைத்தும் மாதம்தோறும் தவறாமல் வாடகை செலுத்த வேண்டும். ஆனால் பல கடைகள் வாடகை செலுத்தாமல் இருந்துள்ளது. இந்நிலையில் வாடகை செலுத்தாதவர்களிடம் நகராட்சி நிர்வாகம் வாடகை செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. இதை அடுத்து 200க்கும் அதிகமான கடைக்காரர்கள் வாடகை செலுத்தியுள்ளார்கள். ஆனால் 100 கடைகள் வாடகை செலுத்தவில்லை. அதனால் வாடகை செலுத்தாத கடைகளுக்கு நோட்டீஸ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 நாள் வேலை நிறுத்தம்…. வங்கிகள் செயல்படவில்லை…. ஆனால் பொள்ளாச்சியில் 100% பஸ்கள் இயக்கம்….!!

இரண்டு நாளாக தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தியும் பொள்ளாச்சியில் 100% அரசு பேருந்துகள் இயங்கி வந்துள்ளன. தமிழகம் முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டு நாள்(27,28-ம் தேதி ) வேலைநிறுத்தப் போராட்டம் நடைப்பெற்றது. ஆனாலும் பொள்ளாச்சியில் அரசு, தனியார் பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள், வழக்கம் போல் இயங்கின. வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பேருந்தில் பயணம் செய்வோர் குறைவாகவே இருந்தனர். இதனால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டும் பயணிகள் இல்லாமல் பொள்ளாச்சி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. மேலும் பொள்ளாச்சியில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் குடிக்க வந்த யானை…. சேற்றில் மூழ்கி பலி…. வனத்துறையினர் கூறிய தகவல்….!!

தண்ணீர் குடிப்பதற்காக அணைப் பகுதிக்கு வந்த யானை சேற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளது. கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திலுள்ள பெத்திக்குட்டை, மயில் மொக்கை வனப்பகுதியில் பவானிசாகர் அணை அமைந்துள்ளது. இந்த அணைப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது ஆறு வயதிற்குட்பட்ட பெண் யானை தண்ணீருக்குள் இறந்து  கிடந்துள்ளது. இந்த தகவலறிந்த சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் மற்றும் வன அதிகாரிகள் நேரில் சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டனர். பின்னர்  யானையை  கரைக்கு மீட்டு வந்து  கால்நடை மருத்துவர் தியாகராஜன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு நீதிமன்றம் 5 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குமரன்குன்று பகுதியில் அனித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் உள் அலங்காரம் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு அனித் குமார் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துவிட்டார். அதன்பிறகு அனித் குமார் சிறுமியை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும், பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்….. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி 7-வது வீதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் இந்திராநகர் பகுதியில் வசிக்கும் கண்ணன் மற்றும் நந்தகுமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு திரும்பி வந்த மகன்…. ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய்…. கோவையில் பரபரப்பு சம்பவம்…!!

கணவர் தனது மனைவியை கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பொன்னுதாய் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மதன்குமார், அருண்குமார் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணேசனுக்கும், பொண்ணுதாய்க்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த 2 வாரமாக கணேசன் சரியாக வேலைக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேலை நிறுத்த போராட்டம்…. சிரமப்படும் மாணவர்கள்….. கோவையில் பரபரப்பு…!!

பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது என்பதை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் வால்பாறை பகுதியில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் எஸ்டேட் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் வால்பாறை பள்ளிக்கு மாணவ-மாணவிகள் வரவில்லை. இதனையடுத்து அருகில் இருக்கும் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு நடந்து சென்று மாலையில் நடந்தே வீடு திரும்பியுள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த ஆட்டோ ஓட்டுநர்…. கதறி அழுத சிறுமி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி ஆட்டோ ஓட்டுநரான முகமது தாரிக் என்பவருடன் பேசி வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் முகமது தாரிக் அங்கு சென்று அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவங்க மேல நடவடிக்கை எடுங்க….. இளம்பெண் தற்கொலை முயற்சி…. கோவையில் பரபரப்பு…!!

சப்-கலெக்டர் அலுவலகத்தில் வைத்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஒரு பெண் தனது 2 குழந்தைகளுடன் மொபட்டில் வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அந்த பெண் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக ஒரு குடத்தில் இருந்த தண்ணீரை எடுத்து பெண் […]

Categories

Tech |